மேலப்பாளையம் த.மு.மு.க.வின் இலட்சிய திருமணம். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி ஜி.கே.வாசன் வாழ்த்து

from:Kaja Kaja tmmkmpm627005@gmail.com
to:fazlulilahi@gmail.com
date:Wed, May 13, 2015 at 10:21 PM
subject:உங்கள் பார்வைக்கும் அனுப்பியுள்ளோம்
mailed-by:gmail.com
signed-by:gmail.com




 
மாப்பிள்ளை பெண்ணிடம் வாங்கிடும் வரதட்சணைக்கு  எதிராக பிரச்சார பொதுக் கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தி வந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரதட்சணை ஒழிப்பு திருமணங்களையும் நடத்தி வந்தது.


இஸ்லாமிய முறைப்படி முஸ்லிம்கள் திருமணத்தின்போது மணப் பெண்ணுக்கு மஹர் எனும் மணக்கொடை கொடுக்க வேண்டும் என்றும்  பிரச்சாரம் செய்தது. அந்த அடிப்படையில் த.மு.மு.. தொண்டர்கள் மணமகளுக்கு ஆயிரம் முதல் இலட்சங்கள் வரை
பணமாகவோ, நகையாகவோ மணக்கொடைகளை
கொடுத்து திருமணம் செய்து வந்தனர்.


பெரிய பெரிய தோட்டங்கள் மற்றும் தங்க கட்டிகள் போன்றவற்றை தகுதிக்கு ஏற்ப இறைத்துாதர் முஹம்மது நபி(ஸல்)அவர்களும் அவரது தோழர்களும் மஹராக- மணக்கொடையாக வழங்கியுள்ளனர் என ஹதீஸ்கள் எனும் வரலாறுகள் கூறுகின்றன


மஹர் எவ்வளவு என தீர்மானிப்பதும், விட்டுக் கொடுப்பதும், கடனாகப் பெற்றுக் கொள்வதும் பெண்ணின் உரிமையாகும். ஒரு குவியலையே மணப் பெண்ணுக்கு மணமகன் கொடுக்கலாம் என்று திரு குர்ஆன் கூறுகிறது.


இறைமறை இறைத்துாதர் வழிமுறைப்படி வளரும் நாட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமணத்தின் போது பெரிய தொகையோ, சொத்தோ கொடுக்காவிட்டால் குர்ஆனில் கூறியுள்ள அறிவுரைப்படி கடன் பத்திரம் எழுதிக் கொள்வார்கள். இதனால் திருமணத்திற்கு பிறகு வாலிபர்கள் கடினமாக உழைத்து சம்பாதித்து வளர்ச்சியடைகிறார்கள். நாடும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைகிறது.


நம் நாடும் பொருளாதாரத்தில் முன்னேற இதனை நம் நாட்டிலும் நடைமுறைபடுத்த வேண்டும். மஹரை நுள்ளி, கிள்ளி கொடுக்காதீர்கள்  தகுதிக்கு ஏற்ப அள்ளி கொடுங்கள் என்பது த.மு.மு.கவின் இலட்சிய வேண்டுகோளாகும் .


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வளைகுடா முன்னாள் அமைப்பாளர் கா..முஹம்மது பஸ்லுல் இலாஹி மகன் முஃமின் பில்லாஹ் பி.எஸ்ஸி. இவருக்கும் ஆர்.எஸ்.முஹம்மது காஜா மகள் ஆலியா பி.எஸ்ஸிக்கும் திருமணம் நடைபெற உள்ளது.


.மு.மு.கவின் இலட்சிய வேண்டுகோளை நடைமுறைபடுத்தும் வண்ணம் மணமகன் மணமகளுக்கு அட்வான்ஸ் மஹராக ரூபாய் இரண்டு இலட்சம் கொடுத்துள்ளார். திருமணத்தின் போது ரூபாய் ஒரு லட்சம் ரொக்கமாகவும் ரூபாய் 1,25,000(ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம்) பெறுமானமுள்ள தங்க ஜெயினையும் கொடுக்க வேண்டும். மேலும் 5ஆண்டுகளுக்குள் மாநகர எல்கைக்குள்  தரமான வீடு ஒன்றை கட்டியோ வாங்கியோ மணமகள் பெயரில் எழுதி கொடுக்க வேண்டும்.   என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


.மு.மு..வின் இந்த இலட்சிய திருமணத்திற்கு  தி.மு.. தலைவர்  கலைஞர் கருணாநிதி, ஜி.கே.வாசன், .மு.மு..  மாநில பொருளாளர் P.M.R. ஷம்சுத்தீன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


16-05-2015   சனி மாலை 8 மணிக்கு நடைபெறும் இந்த இலட்சிய திருமணத்திற்கு  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் மவுலவி J. S. ரிபாஈ ரஷாதி தலைமை ஏற்கிறார். மாண்புமிகு முன்னாள் அமைச்சர் T.P.M. மைதீன் கான் M.L.A. த.மு.மு.க மாநில துணைத் தலைவர்  குணங்குடி R.M. ஹனீபா மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மில்லத் இஸ்மாயில் தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் த.மு.மு.க மாவட்ட செயலாளர் அப்பாஸ்ஹில்மி பொருளாளர் அலிப் மீரான் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.


இது போன்ற இலட்சிய திருமணங்களை த.மு.மு.க தொடர்ந்து நடத்துவதற்கு ஆர்வம் ஊட்டும் வகையில் நிகழ்ச்சிகளில் அனைவரும் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.


இப்படிக்கு
மவுதலி காஜா
செயலாளர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மேலப்பாளையம்
மண்டலம்.
அலைபேசி 9843149469,
8124014877

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு