தங்களுக்கு தாங்களே முரண்படுவதே அதிகம்.

முன்னுக்கு பின் முரணான தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தீர்ப்புகள் முன்னுக்கு பின் முரணாக வருவது புதிய விஷயமல்ல. ஒரு தீர்ப்புக்கு முரணாக  இன்னொரு தீர்ப்பு வர முன்பு 10 ஆண்டுகள் 15 ஆண்டுகள் என ஆனது ஒரு காலம். இப்பொழுது காலையில் ஒரு தீர்ப்பு மாலையில் ஒரு தீர்ப்பு என்று முன்னுக்கு பின் முரணாக தீர்ப்புகள் விரைவாக வந்து கொண்டிருக்கின்றன.




இந்த மாதிரியான நிலையில் எந்த தீர்ப்பு சரி என்று மனசாட்சிப்படி முடிவு செய்ய வேண்டும் என்கிறார்கள் ஒரு சாரார். அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி மக்கள் அரங்கத்திற்கு வராது அவன் சாட்சி என்கிறார்கள் இன்னொரு சாரார். இஸ்தப்ஸி கல்பக்க என்றார்கள் இறைத்துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.

தீர்ப்புகள் என்ற உடன் இன்றைய அரசியலை- கனம் கோர்ட்டார் அவர்களின் தீர்ப்புகளை பேசுவதாக  எண்ணி விடாதீர்கள். நான் மார்க்க தீர்ப்புகளைப் பற்றித்தான் பேசுகிறேன். கோர்ட்டுகளில் ஒருவரின் தீர்ப்புக்குத்தான் இன்னொருவரின் தீர்ப்பு முரண்படுகிறது மாறுபடுகிறது. மார்க்க தீர்ப்புகளில் ஒரு அறிஞரின் தீர்ப்புக்கு இன்னொரு அறிஞரின் தீர்ப்பு முரண்படுவது குறைவு. மார்க்க அறிஞர்களில் தங்களை பேரறிஞர் என கூற வைத்துள்ளவர்கள் தங்களுக்கு தாங்களே முரண்படுவதே அதிகம்.

மார்க்க அறிஞர்களின் தீர்ப்புகள் முன்னுக்கு பின் முரணாக இருந்தால். ஒரு அறிஞரின் தீர்ப்பே முன்னுக்கு பின் முரணாக இருந்தால். நாம் எதை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கும் ஆய்வு செய்கிற கடமை இருக்கிறது. இறைத்துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொன்னபடி நமது கல்பை – உள்ளத்தை, மனசாட்சியை கேட்க வேண்டும். யாரும் யாரையும் கண் மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

இங்கே வீடியோ கேமரா வைக்கப்பட்டுள்ளது. யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒரு காலத்தில் இதை அகற்றினால்தான் பேசுவோம் என்று சொன்னவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு இன்று வீடியோ இல்லை என்றால் பேச்சு வருவதில்லை.

சமீபத்திலே ஒரு மவுலவியின் திருமணத்திலே கலந்து கொண்டேன். பெரும்பாலான மவுலவிகளின் கைகளிலே செல்போன் கேமராக்கள் அதன் பணிகளை  செய்து கொண்டிருந்தன. எனது உள்ளத்திலே ஒரு எண்ண ஓட்டம். நான் என்ன எண்ணினேனோ அதை மவுலவி இஸ்யாஸ் உஸ்மானி அவர்கள் தங்கள் உரையிலே சொல்லிக் காட்டினார்கள்.
காலம் மாறுகிறது அதற்கு தகுந்தவாறு தீர்ப்புகளும் மாறுகின்றன. குர்ஆன் ஹதீஸ்கள் மாறுவதில்லை. அதன் அடிப்படையில் தீர்ப்பு அளிப்பவர்களின் தீர்ப்புகள்தான் மாறுகின்றன.

மு.லீக் தலைவர்களாக இருந்த ஸமது சாகிப் லத்தீப் சாகிப் போன்றோர் நிகழ்சிக்கு இரு வண்ணத்தில் போஸ்ட்டர் ஒட்டினால், சுவரில் எழுதினால் இஸ்ராப் என்றார்கள்.

இன்ன நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது ஒரு செய்தி. அதை தெரிவிக்க கலர் கிளாஸ் கலர் ஓ போன்ற பேப்பர்களில் அச்சிட்டு ஒட்டினாலும் உயர் ரக பேப்பர்களில் ஒட்டினாலும் செய்தி ஒன்றுதான். உயர் ரக பேப்பர்களில் போஸ்ட்டர் ஒட்டுவதும் சுவர்களை ஆக்கிமித்து எழுதுவதும் யாருடைய பணம். பொது மக்களிடம் வசூலித்த பணம். எனவே வீண் விரயம் செய்வது ஹராம் என்று தீர்ப்பு அளித்தார்கள்.

அப்படி தீர்ப்பு அளித்தவர்களின் இன்றைய நிகழ்ச்சிகள் வித விதமான வால்போஸ்ட்டர்களாக மட்டுமல்ல  வால் முளைத்த வால்போஸ்ட்டர்ர்ர்களாக. ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் 9 வித விதமான போஸ்ட்டர்கள் ஒட்டுகிறார்கள்.

ஒரு கக்கூஸ் சுவர்  கூட விடாமல் அவர் பெயரை எழுதி விளம்பரங்கள் செய்கிறார்கள். டிஜிட்டல் பேனர்கள் என குன்காவுக்கு குன்காவே முரண்பட்டுள்ளார் என்று சொன்னால் நன்கு புரியும். செய்தி ஒன்றுதான்.

பொது மக்களிடம் வசூலித்த பணம். எனவே வீண் விரயம் செய்வது ஹராம் என்று  அன்று அளித்த தீர்ப்பு சரியா? இன்றைய அவர்களின் செயல்பாடு சரியா? உங்கள் மனசாட்சிப்படி முடிவு செய்யுங்கள்.

இந்த தீர்ப்புகள் வழங்கப்பட்டவையா வாங்கப்பட்டவையா என்று நாம் கேட்க மாட்டோம். ஆய்வுகள் காலத்துக்கு தக்கவாறு மாறுபடும். ஒரு அறிஞர் தான் வழங்கிய தீர்ப்புக்கு மாற்றமாக செயல்படுகிறார் என்றால் முந்தைய அவரது தீர்ப்பு தப்பானது. அதுதான் சரி என்று கூறி பிறரை அவர் விமர்சித்தது எல்லாம் தப்பு என்பதுதான் உண்மை. 

குர்ஆன் ஹதீஸ்கள் மாறுவதில்லை. அதன் அடிப்படையில் தீர்ப்பு அளிப்பவர்களின் தீர்ப்புகள்தான் மாறுகின்றன. காலம் மாறுகிறது அதற்கு தகுந்தவாறு அவர்களது தீர்ப்புகளும் மாறுகின்றன.

ஒரு கூட்டம் நடத்த ஆயிரம் ரூபாயா? நாங்கள் வந்து பேச பந்தல் போட தேவை இல்லை. டியூப் லைட்கள் கட்ட 2 கம்பம் போதும். மேடை போட தேவை இல்லை. தரையில் நின்றே பேசுவோம். மேடை தோரணம் யாவும் வீண் விரயம். இருநுாறு ரூபாய் போதும் எங்களை வைத்து கூட்டம் நடத்த என்றார்கள்.

இருநுாறு ரூபாய் போதும் என்றவர்களை வைத்து கூட்டம் போட இரண்டு லட்சம் காணாது. ஐந்து லட்சம் தேவை என அறிவித்துள்ளார்கள். காலம் மாறியதால் அவர்களது கோலம் மாறியது. அதற்கு தகுந்தவாறு அவர்களது தீர்ப்புகளும் மாறி விட்டன. அன்று அளித்த தீர்ப்பு சரியா? இன்றைய அவர்களின் செயல்பாடு சரியா?

அரபி கல்லுாரிகள் நடத்திய பட்டமளிப்பு விழாக்களை கேலி செய்தார்கள், கிண்டல் செய்தார்கள், கேலி கிண்டல் சித்திரங்களை புத்தமாக வெளியிட துணை நின்றார்கள். அப்படிப்பட்டவர்களே இன்று பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டு பட்டமளிக்கிறார்கள்.

தஞ்சை சகோதரர் ஒருவர் வந்தார் (தொடரும்)


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு