'தண்ணி' அடிச்சா மன்னிப்புண்டு; தவ்ஹீத் பேசினால் 'கல்தா'; அண்ணன் ஜமாத்தின் மதரசா அலங்கோலம்

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஃபதக்' நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் 
வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் இப்னு 
அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள் - இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. - அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) 'அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலு}ல்' இருந்தார். -அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது. - அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணைவைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் இப்னு உபை தன்னுடைய மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, 'எங்களின் மீது புழுதி கிளப்பாதீர்' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவையோருக்கு ஸலாம் (முகமன்) கூறினார்கள். பிறகு தம் வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள்.' என்று புஹாரியில் ஒரு பிரபலமான ஹதீஸ் இருக்கிறது. 

இந்த ஹதீஸ் சொல்வது என்ன? இறைத்தூதர் ஸல்.. அவர்கள், நோய் விசாரிக்கும் நோக்கில் பயணம் மேற்கொண்டபோது, முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர் என கலந்து அமர்ந்திருந்த ஒரு கூட்டத்தைக் கண்டதும் அங்கே தனது அழைப்புப் பணியை மேற்கொள்கிறார்கள்.அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றும் எவரும் இதை முன்மாதிரியாக கொண்டு, எந்த இடமாக இருந்தாலும், எந்த மேடையாக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பை  பயன்படுத்தி சத்தியத்தை சொல்ல வேண்டும். ஆனால் குர்ஆன் -ஹதீஸ் பேசும் சிலர், பிறர் மேடை ஏறமாட்டோம்; பிறரை மேடை ஏற்ற மாட்டோம் என்று பிரித்தாளும் வேலையை செய்கிறார்கள்.[பிரதமரை சந்திக்க கால்ஷீட் வாங்கித்தந்தால் கப்ரு வாதியையும் மேடை ஏற்றுவார்கள் என்பது தனிக் கதை] இவர்களின் இந்த பிரித்தாளும் போக்கு, தவ்ஹீத் பள்ளியில் கூட சத்தியத்தை சொல்ல தடையை ஏற்படுத்தும் மனநிலைக்கு இவர்களை தள்ளிவிடுகிறது என்பதற்கு ஒரு சான்று;


லெப்பைக்குடிக்காட்டில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் தவ்ஹீத் மஸ்ஜித், அண்ணன் ஜமாத்தின் பள்ளி அபகரிப்புக் கொள்கை எனும் முதலை வாயிலிருந்து தப்பித்த கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அந்த பள்ளியை நிர்மாணிப்பதில் முக்கிய பங்காற்றிய லெப்பைக்குடிகாடு சம்சுதீன் அவர்களின் மகன், அண்ணன் ஜமாஅத்தின் கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரியில் பயின்று வந்தார். பின்பு அந்த கல்லூரி மேலப்பாளையத்தில் மாறிய பின்பும் தனது கல்வியை தொடர்ந்தார்.


இந்நிலையில், லெப்பைக்குடிகாடு தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளி அண்ணன் ஜமாத்தால் தலாக் விடப்பட, அந்த பள்ளியில் ஒரு முறை ஜும்மா உரையாற்றினார் என்பதற்காக இந்த மாணவனை இஸ்லாமியக் கல்லூரியில் இருந்து நீக்கியுள்ளது அண்ணன் ஜமாஅத். அதை அந்த மாணவனின் வார்த்தைகளில் இந்த வீடியோவில் பாருங்கள்.


மேலும், கொள்கை குன்றான அண்ணன் ஜமாத்தின் இந்த கல்லூரி மது அருந்திய மாணவர்களை மன்னித்து அரவணைத்துள்ளது. ஆனால் தவ்ஹீத் பள்ளியில் தவ்ஹீதை பேசிய மாணவனுக்கு மன்னிப்பில்லை. உடனடி நீக்கமாம். மது எனும் பெரும்பாவத்திற்கு மன்னிப்பாம். மகத்தான தவ்ஹீதை பேசினால் கல்தா'வாம். ஒரு மதுவுக்கு தரும் மதிப்பைக் கூட தவ்ஹீதுக்கு தராத இவர்கள் தான் தவ்ஹீதின் ஏகபோக குத்தகைதார்களாக காட்டிக்கொள்கிறார்கள். இவர்கள் வெட்கப்பட வேண்டாமா? இவர்கள் தான் தவ்ஹீதின் பாதுகாவலர்கள் என அள்ளிக் கொடுப்பவர்கள் இனியாவது சிந்திப்பார்களா?
நன்றி http://iyakkangal.blogspot.ae/2012/03/blog-post_7880.html

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு