ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையில் ஆனது.

கீழ் காணும் நமது பதிலை குழுமங்கள் வெளியிடவில்லை. ஆகவே பிளாக்கரில் பதிகிறோம்.

அல்லாஹ்வின் துாதா்  முஹம்மது நபி(ஸல்) அவா்கள் சொன்னாலும் நபி என்ற முறையில் சொன்னதைத்தான்  ஏற்றுக் கொள்வோம்.  முஹம்மது நபி(ஸல்) அவா்கள்   மனிதன் முறையில் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இப்படி அல்லாஹ்வின் துாதா்  முஹம்மது நபி(ஸல்) அவா்களுக்கே வரைமுறை வகுத்து செயல்படுவதாக இமேஜ் உண்டுபண்ணிக் கொண்டவா்கள்தான் த.த.ஜ.வினா். 
அப்படிப்படட்டவா்கள் அற்பமான மனிதனின் பாலிஸியை குா்ஆன் ஹதீஸுக்கு மேலாக காட்டுகிறார்கள். மார்கப் பிரச்சனையை மார்க்கப் பிரச்சனையாக அணுக வேண்டும். இல்லையேல் யாராக இருந்தாலும் அல்லாஹ்விடமிருந்து வரும் பேரழிவை சந்தித்தே ஆக வேண்டும். 

வெளிநாட்டவா்களிடம் இருந்தோ, ெளிநாட்டு இருந்தோ,நிறுவனங்களிடம்   இருந்தோ,வெளிநாட்டு அரசுகளிடம் இருந்தோ,  நிதி உதவி பெறமாட்டோம் என்று பேறிஞர் பீ.ஜைனுல் அவர்களின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பைலா வைத்துள்ளது. இது ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையில் ஆனது. 
அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எழுதுகிறேன். இதனை மறுப்பவா்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுத்தான் மறுக்க வேண்டும். சும்மா மறுத்து விட்டு போவது பொய்யா்களின் செயல். எனவே யாராவது சும்மா மறுக்க வந்தால் அவா்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
1996ஆம் ஆண்டு பீ.ஜைனுலாப்தீன் செய்து வரும் மார்க்க மற்றும் சமுதாய பணிகளை குறித்து எழுதி அதற்காக பொருளாதார உதவி செய்யுமாறு அஹ்மது அல் அஹ்மது சுலைமான் குனைனி போன்ற அரபிகளுக்கு லுஹா  கடிதம் எழுதி அனுப்பினார். 

2001ஆம் ஆண்டு பீ.ஜை.யின் ஆலோசனைப்படி ஹாமித் பக்ரி, ஸைபுல்லாஹ் ஹாஜா ஆகியோர் கல்விச் சங்கம் பெயரால் குவைத் சென்றார்கள்.  இஹ்யாத் துராஸ் என்ற குவைத் நிறுவனத்தில் பீ.ஜை.யின் பெருமைகளை எடுத்து வைத்தார்கள். அல்முபீன் ஆக்கங்களை காட்டினார்கள்.  பீ.ஜை.செய்வதாகக் கூறிய தஃவாப் பணி பற்றி தயாரித்து சென்ற ஆவணங்களைக் காட்டினார்கள். எங்கள் மூலம் அதாவது பீ.ஜை.யின் இஸ்லாமிய கல்விச் சங்கம் மூலம் தமிழ் நாட்டில் பள்ளிகள், மதரஸாக்கள் கட்ட தஃவாவில் ஈடுபடும் தாயி-களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள். 
பி.ஜெ. மொழி பெயர்த்து இஸ்லாமிய கல்விச் சங்கம் பெயரால் வெளியிடப்பட்டது திர்மிதி தமிழ் மொழி பெயா்ப்பு. அதில் அணிந்துரைகள் அரபியில் இடம் பெற்றிருக்கும். தமிழ் பேசும் மவுலவிகளிடம் அரபியில் அணிந்துரைகள் வாங்கியது எதற்காக. வெளிநாட்டு பணத்துக்குத் தான். என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?
அரபுநாட்டவா்களிடம் இருந்தோ, அரபுநாட்டு நிறுவனங்களிடம்   இருந்தோ, அரபுநாட்டு அரசுகளிடம் இருந்தோ,  நிதி உதவி பெறமாட்டோம் என்று பேறிஞர் பீ.ஜைனுல் அவர்களின் த.த.ஜ.பைலா வைத்துள்ளது ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையில் ஆனதுதான். இதற்கு பீ.ஜையின் திர்மிதி தமிழ் மொழி பெயா்ப்பில் உள்ள அரபி அணிந்துரைகள்தான் மிகப் பெரிய ஆதாரமாகும். 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு