அண்ணனின் குடும்பச் சொத்தான முஸ்லிம் டிரஸ்ட்- முஸ்லிம் மீடியா டிரஸ்ட்.
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
'டிரஸ்டு' விசயத்தில் தனக்கொரு பாதையும், மற்றவர்களுக்கு ஒரு பாதையும் காட்டுபவர் அண்ணன் என்பது அனைவருக்கும் தெரியும். டிரஸ்டு அமைத்து சொத்து வாங்கினால் ஆபத்து என்று பக்கம் பக்கமாக எழுதுவார். பலமணி நேரம் தண்ணி குடிக்காமல் பேசுவார். ஆனால் தமுமுகவின் நிரந்தர வருவாய்க்காக வாங்கப்பட்ட சொத்துக்கள் பாதுகாப்பிற்க்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் டிரஸ்ட், மற்றும் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் ஆகிய இரண்டு டிரஸ்டுகள் விசயத்தில், தமுமுகவில் இருந்து வெளியேறிய பின்னும் தனது ஆதிக்கத்தில் வைத்திருக்கிறார். இந்த சொத்துக்களை தமுமுகவிடம் ஒப்படைப்பதுதானே நியாயம் என்றால்,
''தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பிப்பதற்கு முன் நான் தமுமுகவில் இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட ட்ரஸ்ட்கள் தொடர்பாக தனியாக மாநில செயற்குழு சென்னையில் கூடியது. முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட்டிலும், முஸ்லிம் ட்ரஸ்டிலும் தவ்ஹீத் சகோதரர்களும் அதற்கு எதிரானவர்களும் இருப்பதால் அதில் உறுப்பினராக நீடிப்பதா அனைவரும் விலகிவிடுவதா என்று செயற்குழுவில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த
இரண்டு ட்ரஸ்ட்களிலும் தவ்ஹீத் சகொதரர்கள் தான் அதிக நிதி அளித்துள்ளனர். எனவே அதில் இருந்து விலகினால் உணர்வு வார இதழும் இன்ன பிற சொத்துக்களும் தவ்ஹீதுக்கு எதிராகப் போய் விடும் என்று செயற்குழு ஒட்டு மொத்தமாகத் தீர்மானம் செய்தது.
இரண்டு ட்ரஸ்ட்களிலும் தவ்ஹீத் சகொதரர்கள் தான் அதிக நிதி அளித்துள்ளனர். எனவே அதில் இருந்து விலகினால் உணர்வு வார இதழும் இன்ன பிற சொத்துக்களும் தவ்ஹீதுக்கு எதிராகப் போய் விடும் என்று செயற்குழு ஒட்டு மொத்தமாகத் தீர்மானம் செய்தது.
அதன் அடிப்படையில் தான் அந்த இரண்டு ட்ரஸ்டுகளிலும் தவ்ஹீத் சகோதரர்கள் உறுப்பினராக இருந்து சொத்தைக் காப்பாற்றி வருகிறார்கள். நானும் அந்த அடிப்படையில் தான் அதில் இருந்து வருகிறேன்'' என்று வெட்டி நியாயம் பேசுகிறார்.
அமானிதங்களை பராமரிக்கும் ஒருவர், அந்த அமானிதத்தை, உரிய வயது வந்து விட்டால் சம்மந்தப்பட்டவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுதான் மார்க்கத்தின் கட்டளையே தவிர, அந்த சொத்துக்களை அந்த அமானிதத்திற்கு உரிமையாளர் எந்த வகையில் பயன்படுத்துவார் என்றெல்லாம் பார்க்குமாறு இஸ்லாம் சொல்லவில்லை. ஆனால் இவரோ சொத்துக்களை இப்படித்தான் கையாளுவார்கள் என்று எதிர்கால ஆரூடம் கூறி ஒரே அமுக்காக அமுக்கி வைத்துள்ளார். இவர் மரணத்திற்கு பின்பாவது அந்த சொத்துக்கள் தமுமுகவிற்கு கிடைக்குமா என்று பார்த்தால் அதிலும் இப்போது இடி விழுந்து விட்டது.
மதுரையில் அண்ணன் ஜமாஅத் நடத்திய தாயிகளுக்கான தர்பியா[?]வில் பேசிய அண்ணன் ஜமாத்தின் மாநில நிர்வாகி தவுபீக் என்பவர் ''டிரஸ்ட்- சங்கம் வேறுபாடு'' என்ற தலைப்பில் பேசும்போது, டிரஸ்டாக பதிவு செய்தால் அது அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் மட்டுமே சேரும் என்று பேசியுள்ளார். இவரின் பேச்சின்படி பார்த்தால் முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட் சொத்துக்கள் அண்ணன் ஆயுட்கால சேர்மன் எனபதால், அந்த சொத்துக்கள் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் தான் சொந்தமாகிவிடும். அண்ணனை நம்பி தமுமுக சொத்திற்கு காவலராக நியமனம் செய்தவர்களும், அள்ளிக்கொடுத்தவர்களும், தலையில் துண்டை போட்டுக்கொண்டு போக வேண்டியது தான்.
யா அல்லாஹ்! உன் பெயரைக் கூறி, உன் அடியார்களின் பெயரைக் கூறி, அவர்களின் சொத்துகளைப் பெற்று, உனக்கு உவப்பான செயல்களில் ஈடுபட்டுள்ளோருக்கு கண்ணியத் தா! எவர் இத்தகைய செல்வங்களை சமுதாய நலன் இன்றி, தங்களுடைய வளர்ச்சிக்கும் தங்களின் இயக்கங்களின் வளர்ச்சிக்கும் பயன்படுத்துகிறாரோ அவர்களுக்கு இவ்வுலகிலேயே இழிவை அளித்துவிடு. அத்தகையவர்களை இந்தச் சமுதாயத்திற்கு அடையாளம்
காட்டிவிடு! [தமுமுகவுக்காக இந்த சொத்து பயன்படும் என்ற நம்பிக்கையில் காசு கொடுத்த ஒரு சகோதரரின் குமுறலான துஆ] இந்த துஆவுக்கு அண்ணன் அஞ்சினால் சொத்துக்களை தமுமுகவிடம் ஒப்படைத்து அமானிதம் பேணட்டும்.
காட்டிவிடு! [தமுமுகவுக்காக இந்த சொத்து பயன்படும் என்ற நம்பிக்கையில் காசு கொடுத்த ஒரு சகோதரரின் குமுறலான துஆ] இந்த துஆவுக்கு அண்ணன் அஞ்சினால் சொத்துக்களை தமுமுகவிடம் ஒப்படைத்து அமானிதம் பேணட்டும்.
இல்லையேல், வாழ்க அண்ணன். வளரட்டும் அவரது அமானித நெறி[?].
-அப்துல் முஹைமீன்
Comments