அண்ணன் ஜமாஅத் தினமலரை புறக்கணிக்கிறதா? அரவணைக்கிறதா?
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
ஒரு ஆலிம்சா மாட்டு சாணத்தில் உருவாக்கப்படும் எருவாட்டியை கொண்டு அடுப்பு மூட்டக் கூடாது என பயான் செய்ய, அதைக் கேட்ட அவரது மனைவி சமையல் செய்யாமல் இருக்க, பயான் முடித்து பசியோடு வந்த ஆலிம்ஷா அடியே! சாப்பாடு எடுத்து வை எனக் கூற, சமையல் செய்யவில்லை என மனைவி பதிலளிக்க, ஏன் என ஆலிம்ஷா கோபத்துடன் கேட்க, நீங்கதான எருவாட்டியை வைத்து சமையல் செய்யக்கூடாதுன்னு பயான் பண்ணுனீங்க. நம்ம வீட்டுல எருவாட்டிய வச்சுத்தான வழக்கமா சமையல் பண்ணுவோம். இன்னைக்கு உங்க பயான கேட்டவுடனே நம்ம வீட்டுக்காரர் சொல்லிட்டாரேன்னு நான் சமையல் பண்ணலன்னு மனைவி விளக்கமளிக்க, அடியே! அறிவு கெட்டவளே! அதெல்லாம் ஊருக்குத் தாண்டி. நமக்கில்லடி'ன்னு ஆலிம்ஷா கொந்தளிச்சு சொன்னதாக ஒரு கதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த கதை கற்பனையாக கூட இருக்கலாம். ஆனால் நிஜத்தில் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் அண்ணனும் அவரை பின்பற்றும் தம்பிகளும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அதற்கு சமீபத்திய சான்றையே நாம் காட்டுவோம். அதற்கு முன்பாக தினமலர் குறித்து அண்ணன் அபரித்துக் கொண்டுவந்த வார இதழில் வந்துள்ள விமர்சனங்களை படிப்போமா?
முஸ்லிம்கள் மனதை நோகடித்து அதன் மூலம் சிற்றின்பம் காணக்கூடிய சில பத்திரிக்கைகளில் முதன்மையானதாக இருப்பது தினமலர்.
கொஞ்சம் கூட திருந்தாத தினமலர் இஸ்லாமியர்களை சீண்டும் போக்கை கொஞ்சம் கூட கைவிடவில்லை என்பதற்கு 7 ஆம் தேதி முஹர்ரம் தீமிதி குறித்த செய்தியைக் குறிப்பிடலாம். இவ்வளவு கேடுகெட்ட செயலை எந்த முட்டாளும் செய்ய மாட்டான். இப்படி அரைவேக்காட்டுத் தனமாக எழுதுபவர்கள் எப்படி பத்திரிக்கைத் துறையில் இருக்கிறார்கள்?
இஸ்லாம் என்ற பெயரால் ஈனச் செயல் புரியும் இழி பிறவிகளின் கேவலச் செயலை இஸ்லாத்தின் பெயரால் செய்தியாக்கும் அனைத்து பத்திரிக்கைகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து விட்டது தினமலர்.
பாபர் மஸ்ஜித் பற்றி தினமலரில் செய்தி வெளியிடும்போது பாபர் மஸ்ஜித் என்றோ, பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடம் என்றோ செய்தி போடாமல் அயோத்தி கோவில் என்றோ, சர்ச்சைக்குரிய பகுதி என்றோ தான் போடுவார்கள். தொடர்ந்து திட்டமிட்டே இதை செய்து கொண்டிருக்கிறது தினமலர் .
தனது வெப்சைட்டில் 360ரி டிகிரி கோணத்தில் மசூதிகளின் முழுமையான தரிசனம் என்று தர்காக்களின் போட்டோக்களை போட்டிருக்கிறது தினமலர். காசு சம்பாதிப்பதற்காகவும், சமூக விரோத செயல்கள் செய்வதற்காகவும் சிலர் ஏற்படுத்தி வைத்த கூடாரம் தான் தர்கா. அதை முஸ்லிம்கள் தொழுகை நடத்தக்கூடிய பள்ளிவாசல்களோடு ஒப்பிடுகிறது தினமலர்.
முஸ்லிம்கள் என்றாலே குண்டு வைப்பவர்கள்
தீவிரவாதிகள் என்று சொல்லி சொல்லியே பழகிப்போன தினமலரின் மதத் துவேஷத்தை உணர்ந்து மிக விரைவிலேயே மக்கள் தினமலரை புறக்கணிப்பார்கள்.
மேற்கண்டவாறு தினமலரை கடுமையாக சாடிய அபகரிக் கப்பட்ட வார இதழ், தன்னை மறந்து அதே எடிஷனில் எட்டாம் பக்கத்தில் போட்டுள்ள படத்தை பாருங்கள்;
எழாம் தேதி செய்திக்காக தினமலரை எட்டிக்காயாய் கருத்துக் கொட்டி புறக்கணிக்க வேண்டும் என்று சொன்ன அண்ணன் ஜமாஅத், பதினோராம் தேதி நெல்லையில் தாங்கள் நடத்திய 'குபுரா பல்ஸ்' பார்க்கும் பொதுக்குழுவை தினமலர் வெளியிட்டதாம். அதை உடனே அபகரிக்கப்பட்ட வார இதழில் மட்டுமல்லாது அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிட்டு ஆனந்தம் அடைந்துள்ளார்கள். இதன் மூலம் எங்களைப்பற்றிய செய்தி வந்தால் தினமலர் என்ன, பால்தாக்கரேயின் சாம்னா'வும் எங்களுக்கு சம்மதமே என்று காட்டியுள்ளது அண்ணன் ஜமாத். தினமலரை புறக்கணிக்க வேண்டும் என்று பக்கம் பக்கமாக எழுதியது எங்களுக்கல்ல. ஊருக்குத்தான் இந்த உபதேசம் என்று காட்டி, எருவாட்டி ஆலிம்ஷா கதையை உண்மைப்படுத்தும் இந்த அண்ணனும், அவரது தம்பிகளும் பச்சோந்திகள் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
நன்றி http://sengiskhan.blogspot.in/2011/12/blog-post_9304.html
Comments