கானல் நீராகிப்போன அண்ணனின் அரசியல் ஆசை!
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு விட்டு பதவி ஆசையால் அரசியல் சாக்கடையில் இறங்கி விட்டார்கள் . தடம் புரண்டு விட்டார்கள். அரசியலுக்காக இஸ்லாத்தை இரண்டாம் பட்சமாக்கி விட்டார்கள் என்றெல்லாம் மமகவை விமர்சித்து வந்த அண்ணனின் கண்களை உறுத்தியது மமகவினர் எம்.எல். ஏக்கள் ஆகி சட்டமன்றம் சென்றது.
உடனே அண்ணனுக்கும் அரசியல் ஆசை லேசாக துளிர் விட்டது. அண்ணன் ஜமாஅத் அரசியலில் இறங்கும் என்று சொன்னால் கூடராம் காலியாகிவிடும். ஏனென்றால் நாங்கள் எங்களுக்காக ஓட்டுக் கேட்டு உங்களிடம் வரமாட்டோம் என்று ஓராயிரம் முறை மேடைகளில் ஒப்பாரி வைத்துத் தான் இந்த தக்லீது கூட்டம் உருவாகியுள்ளது . எனவே என்ன செய்வது என்று மூளையை கசக்கிய அண்ணனுக்கு உதித்ததுதான் உறுப்பினர்களை களமிறக்கும் யோசனை.
உடனடியாக பைலாவில் உள்ள ஒரு பாராவை தனக்கே உரித்தான வார்த்தை ஜாலத்தால் வளைத்து வியாக்கினம் தந்து உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்றார். எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக உறுப்பினர் தேர்தலில் போட்டியிடலாம் என்று பொதுச்செயலாளர் மூலம் அதிகாரப் பூர்வ அங்கீகாரம் அளித்து அறிக்கை வெளியிடச் செய்தார். ஆனாலும் அண்ணனைப் பின்பற்றும் தம்பிகள் இந்த அரசியல் விசயத்தில் அண்ணன் சொல்லியும் கேட்கத் தயாரில்லை. யாரும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தலில் நிற்கவில்லை. ஒரே ஒரு ஏமாளியைத் தவிர. அந்த ஏமாளியும் வெறும் 47 வாக்குகள் பெற்று படு தோல்வியடைந்தார். யாரிடம் தெரியுமா? எந்த மமகவை மண்ணைக் கவ்வவைப்பேன் என்று அண்ணன் தூக்கத்தில் கூட புலம்புகிறாரோ அந்த மமக வேட்பாளரிடத்தில் என்பதுதான் கூடுதல் தகவல்.
இந்த தம்பியின் தோல்வியையடுத்து நாம் எழுதிய உள்ளாட்சியில் மண்ணைக் கவ்விய அண்ணன் ஜமாஅத் என்ற கட்டுரையில்,
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று அண்ணன் அடிக்கடி சொல்லுவார். அந்த அடிப்படையில் அண்ணன் ஜமாஅத்தின் அரசியல் ஆசைக்கு இந்த ஒரு சோற்றை பதமாக எடுத்துக்கொண்டு ஆகவேண்டிய வேலையைப் பார்ப்பது அண்ணனுக்கு நல்லது. இல்லையென்றால் அண்ணனுக்கு துணிவிருந்தால் நேரடி அரசியலுக்கு வந்து சாதித்துக் காட்டட்டும். அதை விடுத்து அரசியல் சாக்கடை என்று சொல்லிக்கொண்டு மறைமுக அரசியலில் ஈட்பட்டால் மானம் போகும் என்பதற்கு இந்த தோல்வி ஒரு பாடமாகும்'' என்று எழுதியிருந்தோம்.
அண்ணன் நம்முடைய அறிவுரையை ஏற்று,
11 . 12 . 11 அன்று நெல்லையில் நடந்த பொதுக்குழுவில்,
உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் இந்த ஜமாஅத்தின் உறுப்பினர்கள்போட்டியிடலாம் என்று இருந்த விதியை முழுமையாக மாற்றி, இனி
டி.என்.டி.ஜே உறுப்பினர்களும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எந்த
தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் தனது அரசியல் ஆசை கானல்நீராகி விட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இனிமேலாவது மண்ணைக் கவ்வ வைப்பேன்., மலையைகவ்வவைப்பேன் என்பது போன் ற வெற்று
ஸ்லோகங்களை அண்ணனும் அவரது தம்பிகளும் மூட்டை கட்டுவது அவர்களுக்கு நல்லது.
--அப்துல்முஹைமீன்.
Comments