நெல்லை மேயருக்கு த.மு.மு.க. நகர தலைவரின் கோரிக்கை
பெறுநர்
உயர்திரு மேயர் அவர்கள்,
திருநெல்வேலி மாநகராட்சி.
பொருள் : பொது மக்களின் குடிநீர் இணைப்பை துண்டிப்பது சம்பந்தமாக.
உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக.
ஐயா,
திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், 29வது வார்டுக்கு உட்பட்ட ஹாமீம்புரம் 1 முதல் 12 தெரு வரை சுமார் 3000 க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்ட வறுமையில் வாடும் மக்களாவர். இப்பகுதி வீடுகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமான பொது நல்லிகள் இல்லை. ஒரு சில வீடுகளில் இருக்கும் குடிநீரை 10 வீட்டுக்காரர்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், புதியதாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு மாநகராட்சி வீட்டு தீர்வை போட்டு கொடுக்காததால், குடிநீர் இணைப்பு பெற முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
கடந்த 4 தினங்களுக்கு முன்பு மாநகராட்சி இளநிலை பொறியாளர் தலைமையில் ஃபிட்டர் மற்றும் சில மாநகராட்சி பணியாளர்கள் ஹாமீம்புரம் 5வது மற்றும் 6வது தெருவுக்கு வந்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஏழை, எளிய மக்களின் வீடுகளில் இருந்து வரக்கூடிய குடிநீர் இணைப்புகளை துண்டித்து விட்டார்கள். இதுபோல், சுமார் 20 இணைப்புகளை துண்டித்து விட்டார்கள். மேற்படி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம், பொது மக்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, மேற்படி இணைப்பு முறையாக எடுக்கவில்லை என்று காரணம் கூறுகிறார்கள்.
குடியிருப்புவாசிகளிடம் விளக்கம் தர அவகாசம் வழங்காமல் அவசர கதியில் பொது மக்களின் குடிநீர் உரிமையை பறித்துள்ளனர். இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இச்செயலை உடனே தாங்கள் தடுத்து நிறுத்தி துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும், இச்செயல் தொடராமல் பொது மக்களின் அடிப்படை குடிநீர் தேவை பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், குடிநீர் இணைப்புகளுக்கு முறையாக வரி விதிப்பு செய்து புதிய வீடுகளுக்கு வரி விதிப்பு செய்யவும் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு,
K.S.ரசூல் மைதீன்,
நகர தலைவர்
0091- 9943144666

Comments