நன்றி அறிவிப்பு மாநாட்டில் மன நிறைவைத் தந்த குறைகள்.
அசத்தி விட்டது, கலக்கி விட்டது கோவை த.மு.மு.க. த.மு.மு.க. நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு சிறப்பாகவும் மன நிறைவாகவும் நடைபெற்று முடிந்தது. அது பற்றிய உள்ளும் புறமும் நிறைந்த நிறைவான செய்திகள் பலவற்றை பல வழிகளில் தெரிந்து இருக்கிறீர்கள். எனவே நிறைவான செய்திகள் பற்றி எழுதாமல் குறைகள் பற்றி எழுத உள்ளோம். 100க்கு 100 அல்ல 100க்கு 200 என்ற அளவில் டபுள் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஒரே ஆதாரம் மாநாட்டுக்குப் பிறகு விண் டி.வி.யில் தோன்றிய நந்தினி நாயகர்கள் 3 நாட்களாக கொட்டிய வயிற்றெரிச்சல் வார்த்தைகளே. மனப் பால் குடித்துக் கொண்டிருந்தார்கள். மாநாடு பிசு பிசுத்து விடும் என நந்தினி நாயகர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். கோரிக்கை வைக்காகத்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். நன்றி தெரிவிக்க யார்தான் வருவார்கள் என்று அவர்களுக்கு அவர்களே ஆறுதல் கூறி மனப் பால் குடித்துக் கொண்டிருந்தார்கள். முனீர் என்பவர் அவ்வப்போது தகவல் சொல்லிக் கொண்டே இருந்துள்ளார். மாநாடு அன்று திருவாளர் பி.ஜெ. கும்பகோணத்தில் இருந்துள்ளார். அவ்வப்போது மாநாடு பற்றிய லைவு - நேரடி தகவல்களை கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். மாநில செயலாள...