பணம் வாங்கவில்லை என்று பி.ஜே. சொல்வது பொய்யா? பி.ஜே. பணம் வாங்கினார் என்றுள்ள லுஹா கணக்கு பொய்யா?

முபாஹலா சம்பந்தமாகப் பேசிய பி.ஜே.  மேடைகளில் பேசி விட்டு பணம் வாங்கவில்லை என்று பொய் சொல்கிறார். இவ்வளவு பேர் இருக்கிறார்களே என்று புதிய தம்பிகளை சாட்சிக்கு அழைக்கிறார். 

ஆயிரம் பேர் கூடினால் ரகசியமாக பணம் தருகின்றவன் ஒருவனாகத்தான் இருப்பான். நானே ரகசியமாக தந்தபோது இப்படித்தான் மேடையில் சொல்வார். நான் வாய் மூடி இருப்பேன்.

தேவை இல்லாமல் சத்தியம் செய்து பணம் வாங்கவில்லை என்று சொன்னதாலும் தன்னை மனிதப் புனிதராகக் காட்ட பிறர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை புனைந்ததாலும் தான் அடையாளம் காட்டினோம்.

அவரின் புதிய கண்டுபிடிப்பு. போக்கு வரத்து செலவு என்ற பெயரால் கூட்டம் நடத்தும் கிளையிடமிருந்து தலைமை வாங்கி விட வேண்டும். 

தலைமையிலிருந்து பேச்சாளருக்கு பணம் கொடுக்க வேண்டும். அப்படி செய்யும்பொழுது அவர் பேசி விட்டு பணம் வாங்கினார் என யாரும் சொல்ல முடியாது என்று கூறி செயல்படுத்தி வருகிறார்.

த.மு.மு.க.வின் முஸ்லிம் டிரஸ்ட்டின் ரமழான் நிகழ்ச்சிக்கு லட்சக் கணக்கில் வாங்கினார் என்பதெல்லாம் பெரிய இடத்து விஷயம்.


மேடைகளில் பேசி விட்டு பழுலுல் இலாஹியிடம் ஐயாயிரம் பத்தாயிரம் பணம் வாங்கியதாக கூறி வருகிறார். அதற்கு இதுவரை பழுலுல் இலாஹி ஆதாரம் தரவில்லை என்று கூறி உள்ளார் இல்லையா அதற்கு நான் நேரடியாகக் கொடுத்ததை விட்டுவிடுவோம். லுஹா மூலம் கொடுத்ததை மட்டும் பாருங்கள்.


இதோ ஆதாரம். இது ஷம்சுல் லுஹா எனக்கு அனுப்பிய கணக்குகளிலிருந்து ஒரு பகுதி. 



இந்த கணக்குகளையும் லுஹா கைப்பட எழுதிய கடிதங்களையும் பார்த்து விட்டு அப்பொழுது 2002ல் துபையிலிருந்தவர்கள் கடிதம் எழுதினார்கள். அதில் 

(2002ல்  பி.ஜே. சொன்ன கணக்குப்படி ) பி.ஜே. 20 வருட காலமாக மேடையில் பேசியதற்கு காசு வாங்கியதே இல்லை என்று ஒவ்வொரு மேடையிலும் கூறி வருகிறார். ஆனால் ஷம்சுல் - லுஹா அவர்களோ மேலப்பாளையத்தில் பி.ஜே. பேசியதற்கு 5000 ஐயாயிரம், 10,000 பத்தாயிரம் ரூபாய் கொடுத்ததாக கணக்கு எழுதி உள்ளார். 

பி.ஜே. 20 வருட காலமாக மேடையில் பேசியதற்கு காசு வாங்கியதே இல்லை என்று கூறி வருவது பொய்யா? பி.ஜே. பேசியதற்கு 5000 ஐயாயிரம், 10,000 பத்தாயிரம் ரூபாய் கொடுத்ததாக லுஹா கணக்கு எழுதி உள்ளது பொய்யா என்று கேட்டு 30க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்து போட்டு அனுப்பினார்கள். இதற்கு பதிலே கிடையாது.
  


பி.ஜே. பணம் வாங்கினார் என்பதற்கு லுஹா எழுதிய கணக்கு ஆதாரங்களை  2002லேயே வெளியிட்டு விட்டோம். கடிதங்கள் அனுப்பி விட்டோம். அதன் பிறகும் பொய்களை தொடர்ந்து சொல்லி வரும் பி.ஜே. யார்?  தெரிந்து கொள்ளுங்கள். .





Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?