மறைந்த கடாபியின் இரு பக்கங்கள்


ஒரு பக்கம்.
1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்ற வரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .

4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.

5. லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.

6. எந்த ஒரு லிபியனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.

7. லிபியர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.

8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.

9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.

10. லிபியா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது.

11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.

12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.

13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்.

14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.

15. 25% லிபியர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.

16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு.
மேற்கண்டவை  91 89031 89157 வாட்ஸப்பில் வந்தது.
மறுபக்கம்


இஸ்லாத்திற்கெதிரான கடாபியின் கொள்கைகள்

கடாபியைப்பொருத்த வரை சிறுவயது முதலே அவருக்கு உண்டான கம்யூனிஸத்தின் தாக்கம் அவரின் இறுதிவரை பிரதிபலித்தது அதனால் தான் கம்யூனிஸத்தின் சில கொள்கைகளை இஸ்லாத்திற்க்குள் நுழைக்க முயன்றார் அதுபோல் குர்ஆன் வசனங்களுக்கு  தன்இஷ்டப்படி வியாக்கியானம் செய்தார் குர்ஆனில் பல வார்த்தைகளை நீக்கவேண்டும் என்று சொன்னார் லிபியாவில் தான் வைத்ததுதான் சட்டம் என்பதுடன் தான் சொல்வதுதான் இஸ்லாம் என்ற நிலையையும் உண்டாக்க நினைத்தார் அதற்கெதிராக குரல் கொடுத்த பல ஆலிம்களை தூக்குமேடைக்கு அனுப்பினார் பலருக்கு உடல் உறுப்புக்களை வெட்டி ஊனமாக்கினார் 1970 ல் ஹிஸ்புத்தஹ்ரீர் இயக்கத்தவர்கள் பலைரைக் கொன்றார் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தவர்களைக் கொன்று குவித்த இஸ்லாத்திற்கெதிராக பலசட்டங்களை இயற்றிய அப்போதைய எகிப்து அதிபர் கமால்நாசரின் தீவிர ஆதரவாளராகவே கடாபி விளங்கினார் ஆனால் இஸ்ரேல் விஷயத்தில் கமால்நாசரைப் போலவோ அவரைத்தொடர்ந்து வந்த அன்வர்சதாத் போலவோ கடாபி முஸ்லீம்களை வஞ்சிக்கவில்லை அவர் எப்பொழுதுமே இஸ்ரேலை எதிர்க்கக்கூடியவராகவும் இஸ்ரேல் விஷயத்தில் முஸ்லீம்கள் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமளிக்கக்கூடாது என்ற கொள்கையுள்ளவராகவே கடாபி இருந்தார் அதனால் தான் அன்றைய அமெரிக்க வெளியுறவுச்செயலாளராக இருந்த கான்டலிசரைஸ் தன்னைச் சந்திக்க லிபியா வந்தபோது இஸ்ரேல் என்ற நாடு இருக்கககூடாது பாலஸ்தீன் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்
கிரீன்புக் எனும் லிபியாவின் தலையெழுத்து
அல்லாஹ் மூமின்களைப் பற்றி அவர்களுக்கு வாய்ப்பழித்தால் பூமியில் இறையாட்சியை நிலைநாட்டுவார்கள் என்று கூறுகின்றான் ஆனால் கடாபியைப் பொருத்தவரை அல்லாஹ் அவருக்கு நாற்பதாண்டுகளுக்கு மேல் லிபியவின் அதிகாரத்தைக் கொடுத்தான் ஆனால் கடாபி அங்கே இஸ்லாமிய ஆட்சியை நிறுவவில்லை மதுபானம் வட்டி போன்ற சிலவற்றை ஒழித்ததைத் தவிர வேறோன்றும் கடாபி செய்யவில்லை செய்யாதது மட்டுமல்ல 1975 ம் ஆண்டு கிரீன்புக் என்ற ஒன்றை  எழுதிவைத்துக்கொண்டு அதுதான் லிபியாவின் சட்டப்புத்தகம் அரசியல்சாசனம் என்று எல்லாமாக அதை ஆக்கினார் தனி ஒருமனிதரால் எழுதப்பட்டு பல்லாண்டுகளாக ஒருநாட்டின் தலையெழுத்தையே தீர்மானித்து என்று சொன்னால் அது கடாபி எழுதிய கிரீன்புக்காகத்தான் இருக்கும்

ஹதீஸை நிராகரித்த கடாபி

நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின்படி ஒருகாலம் வரும் அப்போது வயிறுபுடைக்க உண்ட ஒருவன் (திமிர்பிடித்தவன்) ஒருவன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு நம்மிடம் அல்லாஹ்வின் வேதம் இருக்கின்றது அதுவே போதும் என்பான் என்ற நபிமொழி கடாபிக்குத்தான் பொருந்துமோ என்று என்னத்தோன்றுகிறது ஆம் கடாபி குர்ஆன் மட்டும் போதும் ஹதிஸ் தேவையில்லை என்ற கொள்கையுடையவராக இருந்துள்ளார் அதுபோல் முஹம்மது நபி அவர்களின் பேரைக்கேட்கும்போது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் என்று கூறுவது ஷிர்க் என்று கூறினார் அதுபோல் மக்காவில் உள்ள கஃபாவை அல்லாஹ் மனிதர்களுக்குப் பொதுவானதாக ஆக்கியிருக்கின்றான் என்று கூறி முஸ்லீமல்லாதவர்களையும் கஃபாவில் அனுமதிக்கவேண்டும் என்று சொன்னார் பின்னர் வந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இவ்வாண்டுக்குப்பின் இனைவைப்பாளர்கள் யாரும் கஃபாவை நெருங்கக்கூடாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கின்றான் அதனால் முஸ்லீம்களைத் தவிர வேறுயாரும் மக்காவில் பிரவேசிக்கககூடாது என்று மாற்றிச்சொன்னார் இப்படி இஸ்லாத்தையும் குர்ஆனையும் தான்தோன்றித்தனமாக வியாக்கியானம் செய்தார் அதனால்தான் அரபுலகமும் உலக முஸ்லீம்களும் அவரை எதிர்த்தனர்
நன்றி

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.