கனிமொழி சந்திப்பும்; கள்ளபெயரில் பீஜேயின் உளறலும்!

கனிமொழி சந்திப்பும்; கள்ளபெயரில் பீஜேயின் உளறலும்!



அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்...

''அறுபத்தி ஆறு கேள்விகளுக்கு பதில் என்ற பெயரில் அர்ச்சனையை தொடங்கிய அண்ணன் அதையும் முழுமையாக்கவில்லை.

இலங்கை தவ்ஹீத் மவ்லவி  முஜாஹித் விஷயத்தில் செய்த தாதாயிசம் குறித்து எங்கள் சகோதரர் அப்துல் முஹைமின் வைத்த குற்றச்சாட்டு பற்றி மூச்சுவிடவில்லை.

''கமிஷனர் அலுவலகத்தில் கள்ளச்சங்கம் சார்பாக கொடுக்கப்பட்ட புகார் மனு பற்றியும் அதையொட்டி வைக்கப்பட்ட வாதத்திற்கும்  [மனுவை தமிழாக்கம் செய்து வெளியிட்ட பின்னாலும்] வாய் திறக்கவில்லை.

 ''எனது வண்டவாளத்தை  வெளியிடு, நான் உணர்வு அலுவலகத்திற்கே வந்து நிரூபிக்கிறேன்'' என்று வாய்மையோடு சவால்விட்ட  அபூபைசல் விஷயத்தில் ஆப்பசைத்த குரங்காகவும்  இருந்து வரும் அண்ணன் வழக்கம்போல மற்றொரு கள்ளப்பெயரில், பொய்யன் [பீஜே] டிஜே எனும் கள்ள தளத்தில் கனிமொழியுடன் எங்கள் அமைப்பு நிர்வாகிகள் நடத்திய சந்திப்பு குறித்து கருவுகிறார். கதறுகிறார். அதுபற்றிய சிறு விளக்கம்; 


இயக்கம் நடத்துபவர்கள் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கோரிக்கை வைப்பதும் எல்லா இயக்கங்களிலும் உள்ள நடைமுறைதான். அதை யாரும் குறை கூற முடியாது. ஆனால் பொய்யன் பாக்கர் ட்ரஸ்டின் உறுப்பினரான முனீர் கனிமொழி அவர்களைச் சந்தித்து இட ஒதுக்கீடு குறித்து கோரிக்கை வைத்ததாக ஒரு செய்தியை பொய்யன் இணயதளம் துணுக்குச் செய்தியை வெளியிட்டுள்ளது

அந்தச் செய்தி இது தான்
இடஓதுக்கீடு சம்பந்தமாக தமிழக முதல்வர் அவர்களின் மகளும், பாராளுமன்ற மாநிலவை உறுப்பினர் கனிமொழி அவர்களை சந்தித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் சந்தித்து கோரிக்கை வைத்தார்

அத்துடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. என்று எழுதியுள்ளார் பொய்யர் பீஜே. 


எங்களது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இவ்வாறு மட்டும் சுருக்கமாக உள்ளது உண்மைதான். அதை நாங்கள்  மறுக்கவில்லை. ஆனால் பொய்யர் பீஜே அடுத்தவர் அந்தரங்கத்தை அறிவதற்காக ஆயிரம் தளங்களுக்கு செல்வதில் காட்டும் கவனத்தில் இருந்து கடுகளவு இந்த செய்தியின் உண்மை நிலையை அறிவதில் செலுத்தியிருந்தால்  முழு செய்தியும் கிடைத்திருக்கும். 

அவர் நோக்கம் செய்தி அறிவதில்லையே! எதிரியை செல்லாக் காசாக்குவதுதானே! இப்ப விஷயத்திற்கு வருவோம். எங்கள் மாநிலச்செயலாளர் செங்கிஸ்கான் அவர்களின் இணையதளத்தில் கனிமொழி சந்திப்பு குறித்த விபரங்கள் உள்ளன. அது கீழே;


இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் முஹம்மத் முனீர் மற்றும் ,மாநில செயலாளர் வேளச்சேரி சிராஜ் ஆகியோர் , மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும் ,முதல்வரின் மகளுமாகிய கனிமொழி எம்.பி.யை சந்தித்து சமுதாயத்திற்கான பல் வேறு  கோரிக்கைகளை   வலியுறுத்தினர்.

முக்கியமாக மத்தியில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு குறித்து இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது! மேலும் வேளச்சேரி முஸ்லிம்களின் கோரிக்கையான அடக்கஸ்தலம் பற்றியும் வலியுறுத்தினர். கவனமாக அனைத்தையும் கேட்ட கனி மொழி தந்தையும் ,தமிழக முதல்வருமான கலைஞரிடத்தில் இது குறித்து பேசுவதாக கூறினார்.

சுமார் முப்பது நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு நம்பிக்கை அளித்ததாக வேளச்சேரி கபர்ஸ்தான் கூட்டுக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், இணையதளத்தில் சுருக்கமான தகவலை தந்த நாம், கனிமொழியுடனான சந்திப்பு குறித்த பொய்யரின் அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவு கிடைக்கும் வகையில், எமது சமுதாய மக்கள் ரிப்போர்ட்டரில் தலைப்பு செய்தியாகவே வெளியிட்டுள்ளோம். பார்க்க இங்கே கிளிக் செய்க; http://4.bp.blogspot.com/_m25dsPmYwkI/TRRv_6Pn8YI/AAAAAAAAAGc/H-UfvHK0sgk/s1600/page-1.ஜபக் 


இணைய தளங்களில் சுருக்கமாக போடுவதும்,  பத்திரிக்கையில் விரிவாக போடுவதும் 
பொய்யர் பீஜேயும் செய்துவரும் வழமைதான். இதில் ஏதோ பாராதூரமாக கண்டுபிடித்தது  போன்று ஃபில்டப் காட்டுவதும் அவரது வழமைதானே!

அடுத்து 

ஒரு இயக்கத்தின் சார்பில் சந்திப்பது என்றால் அந்த இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் இடம் பெற வேண்டும். நிர்வாகிகள் அல்லாதவர்கள் இது போன்ற சந்திப்புகளில் அழைக்கப்படக் கூடாது. என்கிறார் பொய்யர் பீஜே. 


நாம் அவரிடம் கேட்பது,  இட ஒதுக்கீடு தொடர்பாக, அப்போது ததஜவில் மாநில நிர்வாகியாக இருந்த இதே முனீர் அவர்கள், இதே கனிமொழியை சந்தித்து மனு கொடுத்தபோது, முனீருடன் சென்றவர்கள் அத்தனை பேரும் மாநில நிர்வாகிகள்தான் என்று பீஜே நிரூபிக்கத் தயாரா? 


இந்த புகைப்படத்தில் இருக்கும் முதியவர் யார்? என்று மில்லியன் டாலர்[?] கேள்வியை கேட்டு மிடறு விழுங்குகிறார் பீஜே.
 
அந்த முதியவர் யார் என்றால் உங்களால் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்ட வேளச்சேரி மையவாடி பிரச்சினை தொடர்பாக மனு அளிக்க வந்த பரியல்கிரவுண்டு கமிட்டியை சேர்ந்த சகோதரர் ஆவார்.

பாதி வெட்டப்பட்டுள்ள இன்னொருவர் யார்? என்று விளங்காமல் கேட்கிறார் பீஜே. இவர் யார் என்றால் எங்கள் அமைப்பின் மாநிலச்செயலாளர் வேளச்சேரி சிராஜ் ஆவார். 


அடுத்து 
மத்தியில் இட ஒதுக்கீடு என்றால் பிரத்யேகமாக கனி மொழியை சந்திக்கும் அவசியம் என்ன? என்று கேட்டு தனது ஆற்றாமையை  வெளிப்படுத்துகிறார் அண்ணன். 


மத்தியில் இடஒதுக்கீடு குறித்து கனிமொழியை சந்தித்ததற்கு காரணம், அவர் மாநிலங்களவை உறுப்பினர். இடஒதுக்கீடு  குறித்து பாராளுமன்றத்தில் பேசும் இடத்தில் இருக்கிறார். எனவே அவர் மூலம் பாராளுமன்றத்தில்  இடஒதுக்கீடு தொடர்பாக குரல் எழுப்ப கேட்டுக்கொண்டோம். 


அதெல்லாம் சரிண்ணே! நீங்க அன்றைக்கு  முனீரை அனுப்பி கனிமொழியை சந்திச்சு பேச வைச்சீங்களே! அப்ப மட்டும் கனிமொழி தமிழக முதல்வராக இருந்தாங்களாக்கும்? 


அன்பான சமுதயாமே! அண்ணனின் சமீபத்திய உளறல்கள், மலை உச்சியிலிருந்து விழுபவன் தன் கைக்கு கிடைத்த கிளையை  பிடித்தவுடன் நினைத்தானாம் நாம் பிழைத்துக் கொள்வோம் என்று! ஐயோ பாவம்! அவன் பிடித்தது முருங்கை கிளை என்று பின்னர் தான்  தெரிந்ததாம். அதுபோல் அண்ணன் கண்டதைப்  பிடித்து கரையேறப் பார்க்கிறார். அது கனவிலும் நடக்காது இன்ஷா அல்லாஹ். 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.