'குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல! முற்றுப்புள்ளி வைப்பீர்!!

60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் கழிப்பறை கட்டியதில் தான் முஸ்லிம்கள் முன்னேறி இருக்கிறார்கள். தலித்களைவிட கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு போன்றவற்றில் மிக, மிக பின் தங்கி உள்ளனர். இதற்கு காரணம் தகுதியற்ற தலைமைத்தனம் என்ற பிரண்ட்லைன் கூற்றை மறந்துவிட முடியாது. முஸ்லிம் லீக்கை குறை சொல்லி உரிமை, உணர்வு என வார்த்தைகளில் உஷ்ணத்தை ஏற்றி ஆர்ப்பாட்டம், போராட்டம், என போலி வேஷம் போட்டு ஆரவாரத்தோடு புறப்பட்ட த.மு.மு.க விழலுக்கு இறைத்த நீராய் 60 ஆண்டு முஸ்லிம் லீக்கின் ஏமாற்றும் வேலையை கச்சிதமாய் செய்து இருக்கிறது. ஆம் 2 சீட்டுக்கு திராவிட கட்சிகளிடம் அடகு வைக்கும் சாதனையை வெற்றிகரமாய் நிகழ்த்தி இருக்கிறது. கோவை 19 உயிர்கள் பலி, கப்ருஸ்தான் இடிப்பு, பள்ளி உடைப்பு, மீரட், மண்டைக்காடு, கான்பூர், குஜராத், என சமூகத்தின் அவலங்களை காட்சி பொருளாய் கடை விரித்து, இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் சென்றவர்கள்....

இன்று அரசியல் சூழ்ச்சிக்காரர்களின் சூது வலையில் சிக்கி, உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து அரசியல் இல்லை, தேர்தல் ஆதரவு, புறக்கணிப்பு, அந்தர்பல்டி, இட ஒதுக்கீட்டு துரோகத்திற்கு பாராட்டு, அரசியல் ஹராம், ஈடுபட மாட்டோம் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மேடைதோறும் விளம்பிய காட்சி, நடிப்பதில் நடிகர்களை மிஞ்சிய மாட்சி, லட்சியத்தை மாற்றி, மாற்றி பேசுவதிலும் தன்னை நம்பி வரும் தொண்டர்களை முட்டாளாக்கி வைத்துக் கொள்வதில் அரசியல்வாதிகளை விஞ்சிய அரசியல் வியாதிகள் த.மு.மு.க என்றால் மிகையில்லை. இளைஞர்களே சிந்தியுங்கள்.

சமுதாயத்தை மேய்ப்பவர்கள் போல் காட்டிக் கொண்டு சமூகத்தை ஏய்த்தவர்கள், ஒற்றுமையை உடைத்து இமாலய சாதனையைச் செய்தவர்கள், மற்றவர்களின் பார்வைகளில் இஸ்லாமிய சமூகத்தை சர்க்கஸ் கோமாளிகளாக காட்சி அளிக்க வைத்தவர்கள். இவர்களின் குழப்பத்தின் உச்சகட்டத்தை கண்டு நம்மை ஏமாற்றும் அரசியல் கட்சிகளில் இளைஞர்கள் தஞ்சம் புக வேண்டிய நிலையை ஏற்படுத்தியவர்கள். இன்று எங்கே நம் த.மு.மு.க கூடாரம் கலைந்து விடுமோ! என அஞ்சி அற்புதமான வாய்ப்புகளை விட்டு விட்டு அரசியலைப் புறக்கணித்த துறவிகள், இந்திய தேசிய மக்கள் கட்சியை (ஐனுஆமு) ஆரம்பித்த பிறகு முன்னேற்றம் என சமுதாயத்தை பின்னேற்ற அரசியல் குழப்பத்தை மீண்டும் துவக்கி இருக்கின்றனர். தி.மு.க.விற்கே எங்கள் ஆதரவு என நஞ்சு வைக்கும் வஞ்சகர்களின் வாயில் கதவைத் தட்டி இருக்கிறார்கள். வாழ்க என சொல்ல இதயம் வலிக்கிறது. இளைஞர்களே சிந்தியுங்கள்.

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுத்திட, சட்டம் இயற்றும் சபைகளில் சங்கமித்திட சமூகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பிட, நம்மைக் கருவருக்கும் அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்து வஞ்சம் செய்யும் சமுதாயத் தலைவர்கள் (ளழசசல) துரோகிகளின் தூக்கு கயிற்றை அறுத்து எரிந்திட சமுதாயத்து எண்ணங்கள், உணர்வுகள், கனவுகள், இவற்றிற்கு வடிவம் கொடுத்திட கடந்த இரண்டு ஆண்டுகளாக களப்பணியாற்றி தலித், கிருஸ்துவ, முஸ்லிம்களை அரவணைத்துச் சென்றிட முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சியைத் துவக்கி சென்னையில் தலைமையகம் அமைத்து, தேர்தல் கமிஷன் அங்கீகாரத்திற்கான வேலையை முடித்து, துண்டு பிரசுரம், சி.டி.க்கள், கலந்துரையாடல், பொதுக்கூட்டம், கருத்து பரிமாற்றம், உலமாக்கள், அறிவு ஜீவிகள் சந்திப்பு, என சமூகத்தின் சிந்தனையைத் தூண்டி அரசியல் சார்பற்ற அமைப்புகளை எல்லாம் ஒன்றினைத்து எதிர்கால பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நம் அரசியல் பலத்தை காட்டிய களத்தில் நிற்கும்போது ஆம் கனிபறிக்க மரம் ஏறும் போது கருநாகம் காலைச் சுற்றுமாம்.

அதுபோன்று தேர்தல் வரும்போது எல்லாம் சில்லரைகளுக்காக குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி கொள்கையை கோடிக்கு விற்றவர்கள், வாய்ப்பைத் தவற விட்டு விட்டு, மீண்டும் சமூகத்தின் வாக்கு வலிமையை சிதைக்க அன்று மார்க்கத்தில் குழப்பம், இன்று அரசியலில் குழப்பம் செய்ய வருகின்றனர். இளைஞர்களே எச்சரிக்கை. ஜமாத்தார்களே, சமுதாயப் பெரியவர்களே, ஆலிம் பெருமக்களே, ஆன்றோர்களே, குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர். சாட்டையடியில் குழப்பவாதிகளின் கொட்டம் அடங்கட்டும். குள்ள நரி செயல்கள் ஒடுங்கட்டும். அதன்மூலம் நம் அரசியல் வலிமை பிறக்கட்டும், மற்றவர்கள் நம் அரசியல் வலிமையை உணரட்டும். நம் தனித் தன்மை தமிழ்த் தரணியில் சிறக்கட்டும், வருங்கால சந்ததிகள் நம்மைப் போற்றட்டும்.


குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல முற்றுப்புள்ளி வைப்போம். வாரீர்! வாரீர்.


இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.