கடையநல்லூரில் கவன ஈர்ப்பு பொதுக் கூட்டம்.




, , கடையநல்லூரில் கவன ஈர்ப்பு
, , பொதுக் கூட்டம். ,
, ,
, ,
, , 7 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் தப்லீக் பணியில்
, , ஈடுபட்டிருந்த புளியங்குடி சகோதரர் அப்துல் ரஷீது பள்ளியில் வைத்து வெடிகுண்டு வீசியும்
, , வெட்டியும் கொல்லப்பட்டார். இதில் புலன் விசாரணை செய்த நெல்லை மாவட்ட காவல்துறை,
, , அப்துல் ரஷீது மகன் மைதீன் பிச்சை அவருடைய நண்பருடன் சேர்ந்து தனது தந்தையை படுகொலை
, , செய்ததாக கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட
, , கருணைத் தொகை ரூ.2,00,000ஃ- திரும்ப பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்த த.மு.மு.க.சிறைநிரப்பும் போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து

- ளூழற ஙரழவநன வநஒவ -

, , ஊ.டீ.ஊ.ஐ.னு.ளு.ஐ.வு. பிரிவிற்கு மாற்றப்பட்டது. ளு.ஐ.வு. யின் விசாரணையில் மைதீன்
, , பிச்சை குற்றவாளி இல்லை என நிருபணம் ஆகியுள்ளது.
, ,
, , உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவருக்கு வழங்கப்பட்டு திரும்ப
, , பெறப்பட்ட கருணைத் தொகையை அவரது குடும்பத்திற்கு கிடைத்திட வலியுறுத்தியும், அரசின்
, , கவனத்தை ஈர்க்கும் முகமாக நெல்லை மாவட்ட த.மு.மு.க. 16.03.2008 ஞாயிறு அன்று
, , கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாபெரும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடத்தியது.
, ,
, ,
, , இதில் உரையாற்றிய மாநில துணைப் பொதுச் செயலாளர் மௌலவி J.S.ரிபாயி ரஷாதி
, , த.மு.மு.க.அனைத்து தரப்பு முஸ்லிம்களுக்கும் பொதுவானதாக எவ்வாறு செயல்படுகிறது என
, , விளக்கிப் பேசினார். இறுதியாக சிறப்புரையாற்றிய மாநிலத் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ்,
, , மேற்கூறப்பட்ட இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற அரசிற்கு இரண்டு மாத கால அவகாசம்
, , அளிப்பதாகவும், தவறினால் நெல்லை மாவட்டம் ஸ்தம்பிக்க கூடிய அளவிற்கு போராட்டம்
, , நடைபெறும் என எச்சரித்தார்.
, ,
, , மேலும், அவர் குறிப்பிடுகையில் கடந்த 2004 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில்
, , காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கல்வி, வேலை வாய்ப்பில்
, , முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து
, , அக்கூட்டணியின் வெற்றிக்காக தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் த.மு.மு.க.சுழன்று சுழன்று
, , களப்பணி ஆற்றியது.
, ,
, , ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்ட குறைந்தபட்ச செயல் திட்டத்திலும்
, , சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதுகுறித்து
, , விரிவான அறிக்கை அளிப்பதற்காக தேசிய மதம் மற்றும் மொழி சிறுபான்மை ஆணையம்
, , ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இட ஒதுக்கீடு
, , கமிஷன் அமைத்தது. இந்த ஆணையம் 22.05.2007 அன்று தனது அறிக்கையை பிரதமரிடம்
, , சமர்ப்பித்தது.
, ,
, , அந்த அறிக்கையில் சிறுபான்மையினருக்கான 15 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10 சதவிகிதம்
, , முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகி
, , இருக்கின்றன. ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் இன்னும்
, , பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே, நடப்பு பட்ஜெட் கூட்டத்
, , தொடரிலேயே இவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதை நடைமுறைப் படுத்த
, , வேண்டும் என அவர் குறிப்பிட்டதோடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து
, , எம்.பிக்களுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதப்படும் என்றும் குறிப்பிட்;டார்.
, ,
, , மேலும், அவர் பேசுகையில் தமிழகத்தில் தி.மு.க.தலைமையிலான அரசு அறிவித்த
, , முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக முஸ்லிம்களுக்கு சென்;றடையாமல் உள்ளதை முதல்வரை
, , சந்தித்து பேசியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் இப்பிரச்சினை தீர்வு
, , செய்யப்படும் என்று நம்புவதாக குறிப்பிட்ட அவர் மேலும் பேசுகையில் தென்காசி
, , ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 8 பேர் தவிர,
, , இதற்கான சதித் திட்டத்திற்கு பின்னணியாக செயல்பட்ட முக்கிய தலைவர்கள்
, , விசாரிக்கப்பட வேண்டும், இராம கோபாலன் உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட
, , வேண்டும் எனக்குறிப்பிட்டதோடு, கடையநல்லூரில் ஆர்ப்பாட்;டம் செய்ய முயன்ற மனித
, , நீதி பாசறை அமைப்பினர் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.
, , இறுதியாக நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக மேலப்பாளையம், தென்காசி,
, , செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பாஸ்போர்ட்டுக்கு
, , விண்ணப்பித்தால் சில அதிகாரிகள் அதைக் கிடைக்க விடாமல் செய்துள்ளனர்.
, , பாஸ்போர்ட் பெறுவது என்பது ஒரு இந்திய குடிமகனின் உரிமையாகும். தடை செய்யப்பட்ட
, , இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கு
, , மட்டும் மறுக்கப்படுவது சட்ட விரோதம் ஆகும். இந்த நிலை தொடர்நதால், சம்பந்தப்பட்ட
, , அதிகாரிகளை நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டார்.
, ,
, , இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல்
, , ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்.
, ,
செய்தி:

நெல்லை உஸ்மான்.ழூ

Comments

Anonymous said…
http://youtube.com/watch?v=E9cc3QzeszY
watch full video on up giving website

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.