இந்த சவாலை சந்திக்க பி.ஜெ. தயாராக இல்லை.

தலை தப்பியதே தப்புரான் புண்ணியம் என்பார்களே அது போல் மலேசியாவிலிருந்து பி.ஜெ, பாக்கர் வகையறாக்கள் தலைவிரி கோலத்தில் சென்னை வந்து சேர்ந்தனர். பி.ஜெ. தொப்பி போட்டு இருந்தார். அதனால் அவரது பரட்டை நிலை வெளியில் தெரியவில்லை. விமான நிலையத்தில் 15 பெண்களும் 80க்கும் மேற்பட்ட ஆண்களுமாக 100 பேருக்குள் த.த.ஜ.க்கள் வந்திருந்தனர். பொதுவாக விமான நிலையத்தில் எப்பொழுதும் கூட்டமாகவே இருக்கும். மற்ற பயணிகளை வரவேற்க வந்தவர்களையெல்லாம் த.த.ஜ.க்களாக கணக்கு காட்டி நூற்றுக் கணக்கான பெண்களும் ஆயிரக் கணக்கான ஆண்களும் வந்ததாக செய்தி கொடுத்தனர்.

மனைவி மக்களிடம் வந்து சேர வைத்தது முன்னாள் சகாக்கள்தான்.

இந்திய வெளியுறவுத்துறையின் பெரு முயற்சியாலும் விண் டி.வி. தேவநாதன் உதவியாலும்தான் எங்களால் இந்தியா வர முடிந்தது. இல்லா விட்டால் வந்திருக்க முடியாது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று விமான நிலையத்தில் வைத்து பாக்கர் கூறினார். இதே பாணியில் பி.ஜெ.யும் டி.வி.யில் நன்றி கூறியுள்ளார். உண்மையிலேயே அவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டியது அவர்களது முன்னாள் சகாக்களுக்குத்தான். இவர்கள் மீது வழக்கு தொடர விரும்புகிறீர்களா? என இஸ்லாமிய சமய விவகாரத்துறை கேட்டது. அப்பொழுது பி.ஜெ.யை எதிர்த்து வேலை செய்த அணியினரை சமாதானம் செய்தது வழக்கு தொடராமல் ஆக்கியது. பி.ஜெ, பாக்கர் வகையறாக்களை மனைவி மக்களிடம் வந்து சேர வைத்தது முன்னாள் சகாக்கள்தான்.

6 என்றால் மலேசியாவில் மணி 8.30.

புp.ஜெ.யை கைது செய்யவில்லை என்றார்கள் த.த.ஜ.வினர். கைது செய்ய முயற்சித்தார்கள் என்று செய்தி போட்டார்கள் த.த.ஜ. சைட்டில். ஆர்ப்பாட்டம் செய்ததால் மத்திய மாநில அதிகாரிகள் மலேசிய மத்திய அரசை அணுகினார்கள். அதனால் விடுதலை செய்யப்பட்டோம் என்கிறார் பி.ஜெ. இந்தியாவில் காலை மணி 6 என்றால் மலேசியாவில் மணி 8.30.; த.த.ஜ.வினர் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது 22ஆம் தேதி மாலை 4 மணிக்குத்தான். பி.ஜெ.யை எதிர்த்து வேலை செய்தவர்கள் 21ஆம் தேதியே வழக்கு போட வேண்டாம் நாடு கடத்தி விடுங்கள் என்று கூறி விட்டார்கள். இந்த தகவலை அன்றைய தினமே தந்து விட்டோம்.

விழி பிதுங்கி தலையை பிய்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

22ஆம் தேதி காலை 7 மணிக்கு குவாங் சிறையிலிருந்து கொண்டு வரப்பட்ட பி.ஜெ.யை அன்றைய தினமே நாடு கடத்திட நீதிபதி உத்தரவிட்டார். இந்தச் செய்தியை காலை 10 மணிக்கே மெயிலாக அனுப்பினோம். ஆர்ப்பாட்டம் செய்ததால் விடுதலையாகி விட்டதாக இப்பொழுது கதை அடிக்கிறார்கள். பி.ஜெ.யை ஏர்போர்ட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என்ற செய்தியை 22ஆம் தேதி மதியம் 2.30மணிக்கு நம் மூலம்தான் ஊர்ஜிதம் செய்தார்கள். அந்த நிமிடம் வரை மலேசிய நேரம் 5 மணி வரை மலேசியாவில் உள்ள பி.ஜெ.யானிகளும் தமிழக பி.ஜெ.யானி தலைமையினரும் பி.ஜெ. எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் விழி பிதுங்கி தலையை பிய்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

பணம் கொடுத்து கைது செய்ய வைத்தார்கள்.

ஒரு பிரமுகர் வீட்டில் வைத்து நடந்த விருந்துக்கு வந்த பெண்களிடம் இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு. முத்தலாக் என்பதெல்லாம் கிடையாது என்று சொன்னதால் கைது செய்து விட்டார்கள் என விண் டி.வி.யில் சொல்ல வைத்திருப்பதும் பொய். மலேசியாவில் உள்ள எதிர் தரப்பினர் பணம் கொடுத்து கைது செய்ய வைத்தார்கள் என்று பி.ஜெ. சொல்லி உள்ளதும் பொய்.

சவூதி வரட்டும் என சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பி.ஜெ.யை எதிர்த்து வேலை செய்தவர்கள் பி.ஜெ. மீது வழக்கு தொடர்ந்து இருந்தால் வழக்கு முடியும் வரை மட்டுமல்ல வழக்கு முடிந்த பின்னரும் தண்டனைக் கைதிகாளாக மலேசிய சிறையில் கிடந்து இருப்பார்கள். விண் டி.வி. தேவநாதன் தலை கீழாக நின்றாலும் இந்திய வெளியுறவுத்துறை எவ்வளவு பெரிய முயற்சி செய்தாலும் அவர்களை காப்பாற்றி இருக்க முடியாது. இந்த விபரத்தை பிறகு பார்ப்போம்.. பி.ஜெ. வகையறாக்கள் ஆண்பிள்ளைகளாக இருந்தால் சவூதி வரட்டும் என சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் சவூதியில் உள்ள தமிழர்கள். 2004லிருந்து விடப்பட்டுள்ள இந்த சவாலை சந்திக்க பி.ஜெ. தயாராக இல்லை என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

பி.ஜெ.யை கை விலங்குடன் பார்த்தவர்களில் ஒருவரும்,

பாக்கர், தொண்டியப்பா, கோவை ஜாபர் என படை பட்டாளத்துடன் மலேசியா சென்ற பி.ஜெ.யை 20.8.07 அன்று மலேசிய போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட பி.ஜெ. உட்பட அனைவருக்கும் கை விலங்கு மாட்டிது மலேசிய போலீஸ். மலேசிய போலீஸ் ஸ்டேஷனில் பி.ஜெ.யை கை விலங்குடன் பார்த்தவர்களில் ஒருவரும், இதை அறிந்தவர்களில் சிலரும், இப்பொழுது உங்களுக்கு சந்தோஷம்தானே என கேட்டிருந்தனர். மலேசிய அரசு பி.ஜெ.யை நாடு கடத்த உத்தரவு இட்ட செய்தியை பார்த்த சிலர், அவர் எதற்காகச் சென்றார். இஸ்லாமிய பிரச்சாரம் செய்யத்தானே சென்றார் என்று எழுதி எம்மை விமர்சித்திருந்தனர்.

பி.ஜெ. துபையிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டபொழுதும், இலங்கை அரசால் நாடு கடத்தப்பட்டபொழுதும், வெளியான விஸாவை ரத்து செய்து கத்தாருக்குள் நுழையவேக் கூடாது என கத்தர் அரசு தடை விதித்தபொழுதும் இது மாதிரி விமர்சனங்கள் வந்தன. அப்பொழுது விமர்சனங்கள் எழுதியவர்களும் புதியவர்களே. இப்பொழுது எழுதியுள்ளவர்களும் புதியவர்களே அப்பொழுதும் பதில் எழுதி இருக்கிறோம்.. இப்பொழுது மலேசியா, கத்தர், இலங்கை, துபை என வெளிநாடுகளில் பி.ஜெ.க்கு பிரச்சனை ஏற்படுவது ஏன்? என்பதை மீண்டும் தெளிவாக எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.