வெப் சைட்டில் போடப்பட்டுள்ள சந்தி சிரித்த சவால்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
அன்புள்ள அண்ணன் ரபி அஹ்மது அவர்கட்கு கா.அ.மு.வின் அஸ்ஸலாமு அலைக்கும். இரண்டு தரப்புகளுக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சனைகளை எழுதுவதை இரண்டு தரப்பும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் முதலில் என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தினீர்கள்.

உங்களிடம் பேசுவதற்கு முன்பாகவே கள்ள வெப் சைட் என விமர்சிக்கப்பட்டதால் இளையவன் உடைய இணைய தளத்திலிருந்து எமது கடிதங்களை எடுத்து விடும்படி அக்டோபர் 2004லேயே கூறி விட்டோம். அதையொட்டி அவர்கள் எல்லார் கடிதங்களையும் எடுத்து விட்டார்கள்.

நீங்கள் என்னிடம் பேசும்போது ஆடியோ கேஸட்டை வெளியிடவில்லை வெளியிட மாட்டார்கள் என்றீர்கள். எனது தரப்புக்கு பாதகம் ஏற்படும் வகையில் எடிட் செய்யப்பட்டு திருவாரூர் கொடிக்கால்பாளையம் புலி வலம் பகுதிகளில் வினியோகிக்கப்பட்டுள்ளது.

வெப் சைட்டில் போடப்பட்டுள்ள சந்தி சிரித்த சவால் என்பதை எடுத்துவிட சொல்கிறேன் என்றீர்கள். இன்று வரை இந்த நிமிடம் வரை அது எடுக்கப்படவில்லை.
பி.ஜே. தரப்பிலிருந்து வெளிவரும் ஆதம் என்ற மொட்டைக் கடிதக்காரர் நிறுத்தி விட்டதாகக் கூறிக் கொண்டு திரும்பத் திரும்ப அவருக்கு நான் பதில் அளிக் முடியவில்லை என்ற அடிப்படையில் பலருக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார்.

ஒரு வாரத்திற்கு முன்பு கூட துபையில் உள்ள ஜே.டி. மாற்று அணியினருக்கு அனுப்பி இருந்தார். அதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவில்லை. இப்பொழுது சவூதியில் உள்ள அப்துல் றஹ்மான் என்பவருக்கு 29 ஆம் தேதி மெயில் அனுப்பி உள்ளார் ஆதம். அதை அவர் எனக்கு 31 ஆம் தேதி பார்வேடு பண்ணி உள்ளார் என்பதை உங்கள் கவனத்திற்குத் தருகிகிறேன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?