பி.ஜே. திருடிய முஸ்லிம் டிரஸ்டு பணம்.

06-04-2002 கடிதத்திற்கு பதில் கூற முடியாத பி.ஜே.யின் விருப்பப்படி பழுலுல் இலாஹியை களங்கப்படுத்தி வெளியிடப்பட்ட முஸ்லிம் டிரஸ்டு செயல்பாடுகள் என்ற பிரசுரம்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் 03.05.2002

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மேலே காணும் முஸ்லிம் டிரஸ்ட் செயல்பாடுகள் என்ற பிரசுரம் 14.04.2002 அன்று யு.ஏ.இ. முழுவதுமுள்ளவர்களுக்கு ஈ.மெயிலாக வந்தது. டிரஸ்ட் தலைவரான பி.ஜெ.யின் ஏற்பாட்டில் வந்த அந்த மெயில் யு.ஏ.இ. முழுக்க 16.04.2002 பிரசுரமாகவும் வினியோகித்தார்கள். இது பற்றி 03.05.2002 வெள்ளியன்று நாம் பதில் அளித்துப் பேசினோம். அதன் கருத்துச் சுருக்கம் இதோ.

பி.ஜெ.யின் விருப்பப்படியும் திட்டப்படியும்தான் வெளியிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் டிரஸ்ட் செயல்பாடுகள் என்ற பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள செயல்பாடுகள் முஸ்லிம் டிரஸ்ட் துவக்கியதும் அல்ல. முஸ்லிம் டிரஸ்ட் அதற்காக துவங்கப்படதும் அல்ல. தலைப்புத்தான் முஸ்லிம் டிரஸ்ட்டின் செயல்பாடுகள் என்று போட்டுள்ளார்கள். அது முஸ்லிம் டிரஸ்ட்டின் செயல்பாட்டை விளக்குவதற்காக வெளியிடப்பட்டது அல்ல. அது முழுக்க முழுக்க டிரஸ்ட் தலைவர் பி.ஜெ.யின் சுய ரூபத்தை அடையாளம் காட்டி தட்டிக் கேட்க முயன்ற என்னை களங்கப் படுத்திட வேண்டும். அதன் மூலம் என்னை யு.ஏ.இ. தலைமைப் பொறுப்பில் இருந்து ஓரங்கட்ட வேண்டும். இந்த உள் நோக்கத்துடன்தான் வெளியிடப்பட்டுள்ளது. டிரஸ்ட் தலைவர் பி.ஜெ.யின் விருப்பப்படியும் திட்டப்படியும்தான் இது நடந்துள்ளது.

சாமான்யர்களாலும் இதன் உள் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

செயல்பாட்டை விளக்கும் பிரசுரத்தில் நன்கொடை கேட்டிருப்பார்கள். செயல்பாட்டை விளக்கும் நோக்குடன் வெளியிடப்படும் எந்தப் பிரசுரங்களிலும் நன்கொடை தருபவர், தராதவர் பற்றி குறிப்பிட மாட்டார்கள். வரவு செலவு பற்றிய விபரம் என்றாலும் கூட, அது எல்லா நன்கொடையாளர்களின் விபரங்களும் இடம் பெற்றிருக்கும். அதிலும் கூட நன்கொடை தந்த விபரம்தான் இருக்கும். இவ்வளவு காலம் தந்த இவர் இவ்வளவு காலம் தரவில்லை என்று இருக்காது. இந்த பிரசுரத்தைக் காணும் சாமான்யர்களாலும் இதன் உள் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

ரசீதுகள் வரும் வராமலும் இருக்கும்.

முஸ்லிம் டிரஸ்ட்டின் வாடகை வகைக்காக சகோதரர் அப்துல்ரவூப் மூலம் ஏற்பாடு செய்தோம்.. அப்துல் ரவூப் அவர்கள் மூலம் பணம் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் நாள் முதல் இன்று வரை அவர் ரசீது கேட்டதும் கிடையாது. நான் கொடுத்ததும் கிடையாது. முடிந்த வரை முன்னதாகவே முஸ்லிம் டிரஸ்ட்டு பொறுப்பாளர்களிடம் பணத்தை கொடுத்து விடுவேன். ரசீதுகள் வரும் வராமலும் இருக்கும். வந்தால் நான் வைத்துக் கொள்ளமாட்டேன். ஐ.ஏ.ஸி. பொறுப்பாளர்களிடம் கொடுத்து விடுவேன். என்னிடம் எந்த ஆதாரமும் இருக்காது. இதை உறுதி செய்து கொள்கிறார்கள்.

வரவே இல்லை என்று எழுதச் செய்திருப்பார் டிரஸ்ட் தலைவர் பி.ஜே.

அதன் பிறகுதான், 2002 மார்ச் மாத வரையிலான வாடகையை நேரில் பெற்றிருந்தும், 05.04.2002 அன்று எனக்கு எழுதிய கடிதத்தில் ''முஸ்லிம் ட்ரஸ்ட் வாடகை மட்டுமே தங்களிடமிருந்து பெற்று வருகிறோம்'' என்று குறிப்பிட்டு எழுதியிருந்தும், 12.04.2002ல் துபையில் நடந்த ஐ.ஏ.ஸி. அமர்வின் மூலம் எந்த ரசீதுகளும் என்னிடம் இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்து கொள்கிறார்கள். இதற்குப் பிறகுதான் 14ம் தேதி அனுப்பிய மெயிலில் அதுவும் சில மாதங்களாக வரவில்லை என்ற வாசகத்தைச் அமைத்துள்ளார்கள். அதுவும் 05.04.2002ல் எழுதிய கடிதத்தில் அது மட்டும்தான் வருகிறது என்று குறிப்பிட்டு விட்ட காரணத்தால். இல்லை என்றால் வரவே இல்லை என்று எழுதச் செய்திருப்பார் டிரஸ்ட் தலைவர் பி.ஜே.

அப்துல் ரவூப் பெயரும் போட்டுள்ளார்கள்.

வாடகைப் பணத்தைப் பெற்றவர்கள் கொடுத்த ரசீதுகள் என் கைக்கு கிடைத்தது. அதை துபை ஐ.ஏ.ஸி. கிளைச் செயலாளாளிடம் கொடுக்கும்போது ''அவர் பெயர் போடக் கூடாது என்று சொல்லி இருக்கிறார். பழ்லுல் இலாஹி மூலம் கா.அ.மு. மூலம் என்றுதான் ரசீதுகள் போட்டு வரும். இனி என் மூலம் எந்த நன்கொடையும் வந்ததாக ரிக்கார்டு ஆகக் கூடாது என்பதற்காக அப்துல் ரவூப் பெயரும் போட்டுள்ளார்கள்.'' என்று வருத்தத்துடன் சொன்னேன்.

ஆதாரமாக கொண்டுதான் சொல்கிறேன்.

என் மீது உள்ள வெறுப்பில் அப்துல் ரவூப் பெயரையும் போட்டதில் அல்லாஹ் நன்மையை வைத்து விட்டான். வழக்கம் போல் இலாஹி மூலம் என்று போட்டு இருந்தால். அதுவும் சில மாதங்களாக வரவில்லை என்று பிரசுரம் போட்டவர்கள். அப்துல் ரவூப் இதை ஆதாரமாக காட்டும்போது, இந்த ரசீது உங்களுடையது அல்ல என்று மறுத்தும் இருப்பார்கள். இது கற்பனை அல்ல இதற்கு முந்தைய பிந்தைய அவர்களின் நடவடிக்கைகளை ஆதாரமாக கொண்டுதான் சொல்கிறேன்.

இன்னும் சில மாதங்களுக்கு அட்வான்ஸாக கொடுத்து இருப்பேன்.

முஸ்லிம் டிரஸ்ட் செயல்பாடுகள் என்ற பிரசுரம் வெளியானதை அறிந்ததும். நான் தான் செயலாளருக்கு போன் போட்டு இப்படி ஒரு பிரசுரம் வெளியாகி உள்ளது. நடப்பதோ ஏப்ரல் மாதம். தேதியோ 16. மார்ச் மாதம் முடிய கொடுக்கப் பட்டதற்குரிய ரசீதுகளை உங்களிடம் தந்து உள்ளேன். சில காரணங்களுக்காக ஏப்ரலில் இருந்து நேரில் கொடுத்து விடுகிறோம் என்று சம்பந்தப் பட்டவர்கள் சொன்னதால் ஏப்ரல் மாதத்திற்குரியதை கொடுக்கவில்லை. இல்லை எனில் ஏப்ரல் உட்பட இன்னும் சில மாதங்களுக்கு அட்வான்ஸாக கொடுத்து இருப்பேன்.

இதைப் பற்றி எந்த விமர்சனமும் செய்ய வேண்டாம்.

இந்தப் பிரசுரம் அவர் கைக்கு கிடைக்கும் முன் தயவு செய்து ரசீது காப்பிகளை அவருக்கு அனுப்பி விடுங்கள். பிரசுரம் கிடைத்து விட்டால் மனிதன் என்ற முறையில் அவர்; மனதிலும்; என்னைப் பற்றி தப்பான எண்ணம் ஏற்பட்டு விடலாம். எனவே உடன் ரசீது காப்பிகளை அனுப்பி விட்டு இதைப் பற்றி எந்த விமர்சனமும் செய்ய வேண்டாம் என்று சொல்லி விடுங்கள் என்றேன்.

கூறிய பொய்யை மறைப்பதற்கு கூறும் இன்னொரு பொய் ஆகும்.

டிரஸ்ட் தலைவர் பி.ஜே, பாக்கர், அலாவுத்தீன் உட்பட ஐவர் கையெழுத்திட்டு 20.04.2002 அன்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்கள். அதில் ''தங்களின் உதவி அலுவலகத்தில் பெறப்பட்டு அதற்கு முறையான ரசீதும் அளிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது அலுவலக ஊழியர்கள் பெற்ற மாதிரி காட்டி உள்ளார்கள். பி.ஜெ.யின் திட்டப்படி என்னை மோசடியாளனாக சித்தரிக்க அதுவும் சில மாதங்களாக வரவில்லை என்று கூறிய பொய்யை மறைப்பதற்கு கூறும் இன்னொரு பொய் ஆகும்.

நேரில் கடிதம் எழுதவும் இல்லை.

மார்ச் 2002 வரையிலான வாடகைப் பணத்தை நேரில் பெற்றது. வழக்கத்திற்கு மாற்றமாக அப்துல் ரவூப் பெயரில் ரசீது போடு;ம்படி அலுவலக ஊழியரிடம் கூறியது. பணத்தை கொண்டு போய் கொடுத்தவரிடம் நேரில் ரசீதை கொடுத்தது யாவும் செய்தது டிரஸ்ட் மெம்பர்தான். மேலும் 20.04.2002 தேதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் ரசீதுகளை அப்துர் ரவூபுக்கு அவர்கள் நேரில் அனுப்பவும் இல்லை. சில மாதங்களாக வாடகை வரவில்லை என்று அவருக்கு நேரில் கடிதம் எழுதவும் இல்லை.

நீங்கள் எந்த விமர்சனமும் செய்யாதீர்கள்.

தங்கள் தவறை மறைப்பதற்காக இந்த வாசகத்தையும் அமைத்துள்ளார்கள். என்னை களங்கப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் டிரஸ்ட் செயல்பாடுகள் என்று வினியோகித்த அந்த பிரசுரத்தைத்தான், ரசீதுகள் பாதுகாப்பாக இருக்கிறது என்பது தெரியாமல் அவருக்கு அனுப்பிய பதில் கடிதத்துடன் இணைத்து விட்டார்கள். இந்த பிரசுரத்தை ஒட்டி நீங்கள் எந்த விமர்சனமும் செய்யாதீர்கள் என்று நானும் போன் போட்டு அப்துல் ரவூப் அவர்களிடம் கூறினேன்.

அநியாயமாக ஒரு நிரபராதி பாதிக்கப்பட்டு விடக்கூடாது.

இந்தப் பிரசுரத்தை பார்ப்பதற்கு முன்பு வரை, நீங்கள் ஏன் உங்களை நியாயப் படுத்த ஒவ்வோரு விளக்கமாக கூறுகிறீர்கள். அமைதியாக இருங்களேன் என்றுள்ள கருத்தை என்னிடம் கூறியவர்தான் அப்துல் ரவூப். இந்தப் பிரசுரத்தை கண்ட பிறகுதான் அநியாயமாக ஒரு நிரபராதி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக உண்மையை எழுதுகிறார்.

ஆய்ந்து எழுதுவதாக கூறுவதை எப்படி நம்ப முடியும்?

இதன் விபரங்கள் பற்றி முன் பின் நியாயவான்கள் அவர்கள் வெளியிட்டுள்ள பிரசுரங்களையும் கடிதங்களையும் பார்த்து விட்டு, அதில் உள்ள முரண்பாடுகள் தவறுகள் பற்றி பகிரங்கமாக பேசினார்கள். எதையும் அலசி ஆராய்ந்து ஆதாரம் இல்லாமல் எழுத மாட்டார்கள். அது அல் ஹதீஸ்களாக இருந்தாலும் சரி, அமெரிக்க பண்டங்கள் பற்றிய செய்திகளாக இருந்தாலும் சரி. இப்படி மக்களால் நம்பப்படும் மாபெரும் அறிஞர் பி.ஜே. தன் தலைமையிலான அமைப்பின் சென்னைத் தகவலையே சரியாகத் தர முடியவில்லையே. இவர்கள் உலக அளவில் நடப்பதை ஆய்ந்து எழுதுவதாக கூறுவதை எப்படி நம்ப முடியும்? என நடு நிலையாளர்கள் கேட்கிறார்கள்.

மீதம் உள்ளவை சரியான தகவல் என்ற ஒப்புதலும் அதில் உள்ளது.

முஸ்லிம் டிரஸ்ட் செயல்பாடுகள் பிரசுரம் வந்து இன்றுடன் (03.05.2002
வெள்ளியுடன்) 19 நாள் ஆகிவிட்டது. சில மாதங்களாக வாடகை வரவில்லை என்பதுதான் கவனக்குறைவான தகவலில் ஏற்பட்ட தவறு. இப்படி டிரஸ்ட் தலைவர் பி.ஜே, பாக்கர், அலாவுத்தீன் உட்பட கையெழுத்திட்டு 20.04.2002 தேதி அப்துல் ரவூப் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்கள். எனவே மீதம் உள்ளவை சரியான தகவல் என்ற ஒப்புதலும் அதில் உள்ளது.

ஆவணங்கள் அனைத்தையும் பார்த்து முடிவு செய்துதான் எழுதி இருக்கிறார்கள்.

அதற்கு பிறகு முஸ்லிம் டிரஸ்ட் செயல்பாடுகள் பிரசுரம் பற்றி வேறு மறுப்போ திருத்தமோ இன்று வரை அவர்கள் வெளியிடவில்லை. பிரசுரத்தில் உள்ள மீதிச் செய்திகள் அனைத்தும் உண்மையானதுதான். இதை அனைவரும் சென்னையில் இருந்துதான். முஸ்லிம் டிரஸ்ட் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் பார்த்து முடிவு செய்துதான் எழுதி இருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிவிட்டது.

முஸ்லிம் டிரஸ்ட்டுக்கென சென்னை ராயப்பேட்டையில் இடம் வாங்க சவூதியில் இருந்துதான் பணம் வந்தது. இப்படி குறிப்பிட்டவர்கள். கத்தர், குவைத், பஹ்ரைன், ஒமான் போன்ற இடங்களிலிருந்து பணம் வரவில்லை என்று குறிப்பிட வில்லை. யு.ஏ.இல் உள்ள சகோதரர்களிடமிருந்து எந்த பணமும் வரவில்லை என்று மட்டும்தான் குறிப்பிட்டு உள்ளார்கள். இனியும் இதன் உள் நோக்கத்தை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

இதையும் பி.ஜெ. மறுத்தால் ஆதாரம் சமர்ப்பிப்பேன்.

உங்கள் எல்லோருக்கும் தெரியும் நான் முஸ்லிம் டிரஸ்டுக்கு உண்டி மூலமே பணம் அனுப்புவேன். பணம் அனுப்பினால் போனில் பணம் கிடைத்ததா என்று கேட்பேன். கிடைத்தது என்பார்கள். அத்துடன் சரி. பில் என்று கேட்கமாட்டேன். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் விபரம் கூறி கடிதம் எழுதுவேன் பணம் கிடைத்தது என்று கடிதம் அனுப்புவார்கள். பில் வேண்டும் என்று வலியுறுத்தினால்தான் பில் வரும். இது அவர்களும் ஒப்புக் கொண்ட உண்மை. இதையும் பி.ஜெ. மறுத்தால் ஆதாரம் சமர்ப்பிப்பேன். இன்ஷh அல்லாஹ்.

திட்டத்தை விளக்கி தனி தனியாக கடிதம் எழுதுவேன்.

1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிளாட் வாங்க ரூபாய் ஒரு கோடி திட்டத்தை சவூதி வாழ் சகோதரர்கள் கொண்டு வந்தார்கள். கால் கோடிக்கு யு.ஏ.இ த.மு.மு.க. பொறுப்பு ஏற்றுக் கொண்டது. த.மு.மு.க. துவங்கப்பட்ட நாள் முதல் அது நிதி வேண்டி அறிவிக்கும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் உடனடியாக 500 பேரில் இருந்து 1000க்கும் மேற்பட்டோருக்கு திட்டத்தை விளக்கி தனி தனியாக கடிதம் எழுதுவேன். இதுபோல் இந்த ஒரு கோடி ரூபாய் பிளாட் திட்டத்திற்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.

அல்லாஹ் நாடியபடி அது நடந்துள்ளது.

1997 இல் இந்த வகைக்கு உதவிய நமது துபை ஐ.ஏ.ஸி. ஜமாத் மூலம் மட்டும் 1999ல் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுத்து இருக்கிறோம். நாள் நெருங்கி விட்டது என்பதால் விரட்டி விரட்டி வசூலித்தோம். எழுதியவர்களிடமிருந்து முழுமையாகப் பணம் வராத நிலையிலும் எழுதப்பட்ட பணத்தை அனுப்ப முடிவு செய்தோம். ரிஜிஸ்டர் செய்யப்படும் நாளுக்கு முன்பாக கிடைக்க வேண்டும். உண்டியில் என்றால் சில நேரங்களில் காலை வாரி விடும் என்பதற்காக உண்டி பார்ட்டியிடம் கடன் கொண்டு பேங்கில் அபுப்பினேன். பிற்காலத்தில் இப்படி ஒரு நிலை உருவாகும் குறைந்த பட்ச ஆதாரமாக இது இருக்கட்டும் என்று அல்லாஹ் நாடியபடி அது நடந்துள்ளது.

முஸ்லிம் டிரஸ்ட்டுக்கு கட்டிடம் வாங்கும் வகைக்காக 12.04.1999ல் துபை ஐ.ஏ.ஸி. சார்பாக டி.டி. ரூபாய் ஒரு இலட்சத்தி இருபது ஆயிரத்திற்கு உரிய பேங் ஆதாரம். யார் யாரெல்லாம் நன்கொடை எழுதி உள்ளார்கள் என்று நான் அப்பொழுது கைப்பட எழுதிய விபரம். நான் எழுதிய விபரப்படி டி.டி.1,20,000 பெற்றதாக முஸ்லிம் டிரஸ்ட் லட்டர் பேடில் அவர்கள் எழுதிய பதில் கடிதம்.

என்ன தைரியத்தில் துணிந்து எழுதியுள்ளார்கள்

இப்படி டி.டி.யாக அனுப்பபட்டதை, பெற்றுக் கொண்டதாக அவர்கள் எழுத்து மூலமாக பெயர் வாரியாக பதில் தந்துள்ளதை, அதுவும் ரிஜிஸ்ட்டர் நடக்க வேண்டிய அவசர காலத்தில் அனுப்பியதை, சிறிய தொகை அல்ல. 1,20,000த்தை எப்படி மறந்தார்கள். பி.ஜெ.யிடம் கோடி கோடியாக புரள்கிறது என்று சிறைவாசிக் குடும்பங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்படி, அந்தக் கோடிகளுக்கு முன் இந்த இலட்சம் அற்பம்தானே என்பதாலா?. யு.எ.இ. ல். இருந்து பணம் எதுவுமே வரவில்லை என்று என்ன தைரியத்தில் துணிந்து எழுதியுள்ளார்கள் தெரியுமா?
தெளிவாக அறிந்து விட்ட தைரியத்தில்தான் துணிந்து எழுதியுள்ளார்கள்.

பி.ஜெ. அவர்கள் சட்ட விரோதமாக வரும் பணத்தை திருப்பி அனுப்பி விடுவோம் என்று பகிரங்கமாக அறிவித்த காலத்திலும். அனுபவப்பட்டப் பின் வேறு வழியில் அனுப்புங்கள் என்று ரகசிய அறிவிப்பு செய்த காலத்திலும். நீங்கள் தான் பில் கேட்பது இல்லை. சவூதி உட்பட எல்லோரும் பில் கேட்கிறார்கள். அன் அபீஷpயலான செலவுகள் செய்ய முடிவதில்லை நீங்கள் அனுப்புவது தான் அன் அபீஷpயலான செலவுகளுக்கு பயன் படுகிறது என்று சொன்ன காலத்திலும். நான் உண்டி மூலமே பணம் அனுப்பி உள்ளேன். எனவே எந்த ஆதாரமும் என்னிடம் இருக்காது. தப்பித் தவறி ரசீது அனுப்பி இருந்தாலும் அதை பாதுகாப்பாக நானே வைத்திருக்க மாட்டேன் என்பதை தெளிவாக அறிந்து விட்ட தைரியத்தில்தான் துணிந்து எழுதியுள்ளார்கள்.
அந்த ரசீது பற்றியும் குறிப்பிட்டு எழுதினேன்.

தமீமுல் அன்சாரி என்ற யு.ஏ.இ.ல் உள்ள சகோதரர். பத்தாயிரம், இருபதாயிரம் முப்பதாயிரம் என்று 1997-ல் இருந்து முஸ்லிம் டிரஸ்ட் கட்டிட வகைக்காக பல தடவையாக பணம் தந்து இருக்கிறார். அவர் கொடுத்துள்ள பணம் மட்டும் லட்சத்தைத் தாண்டும். கட்டிடம் வாங்கும் நேரத்தில் அவசர வசூலின் போது மட்டும் முப்பது ஆயிரம் கொடுத்தார். எங்கள் ஊர் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் றஹ்மான் தவைர் பதவியையும் ஜாக் அமீர் பதவியைiயும் கேட்டுப் பெற்ற மவுலவி எம். ஷம்சுல் லுஹா றஹ்மானி அவர்கள் மூலமும் பல தொகைகளை நான் அனுப்பி இருக்கிறேன். இதையும் அவர் மூலம் உடனடியாக முஸ்லிம் ட்ரஸ்ட்டில் சேர்த்தேன். அவருக்கு ரசீது அனுப்பவில்லை. இப்பொழுது ஏற்பட்டுத்தியுள்ள மாதிரி மோசடி புகார் வாழ்வுரிமை மாநாட்டுக்கு பிறகும் ஏற்படுத்தினார்கள். அதை ஒட்டி தமீமுக்கு ரசீது அனுப்பாதது பற்றியும் எழுதினேன். லேட்டாக அனுப்பி வைத்தார்கள் அதிலும் வில்லங்கம். 1999க்குப் பதில் 1998 என்று போட்டு அனுப்பி விட்டார்கள். இது போன்ற விவகாரங்களை கடிதம் எழுதும் போது அந்த ரசீது பற்றியும் குறிப்பிட்டு எழுதினேன்.
இதற்கு நாம் உள் நோக்கம் கற்பிக்க மாட்டோம்.

அதில் வளர்ச்சி நிதி என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார். தமீம் 30 ஆயிரம் கொடுத்தது 4ம் மாதம் 28ம் தேதி. நோக்கம் பிளாட் வாங்க. கவனக் குறைவுக்கு வருந்தி 11ம் மாதம் பதில் எழுதி இருப்பதால். கவனக் குறைவாக அறியாமல் வளர்ச்சி நிதி என்று போட்டு உள்ளார். இதற்கு நாம் உள் நோக்கம் கற்பிக்க மாட்டோம்.

இதே முஸ்லிம் டிரஸ்ட் வகைக்காக த.மு.மு.க. இளைஞர் அணி சார்பில் மதுக்கூர் ராவுத்தர்ஷh முயற்சியில் 2 அல்லது 3தடவையாக என் மூலம் பணம் அனுப்பி உள்;ளார். அதற்குரிய டி.டி.காப்பி அவரிடம் உள்ளது. இப்படி ஆதாரங்கள் உள்ளவற்றையே துணிந்து மறுத்தவர்கள், மறைத்தவர்கள் ஆதாரங்கள் இல்லாத-ஆதாரங்கள் சமர்ப்பிக்க முடியாத உண்டி மூலம் அனுப்பப்பட்ட பணத்தை எப்படி ஒப்புக் கொள்வார்கள்.

பி.ஜெ. கையெழுத்திட்டு அனுப்பியுள்ள ரசீது இது முஸ்லிம். டிரஸ்டுக்கு பணம் வரவே இல்லை என்றால் இதை திருடியது யார்?

பல நாடுகளிலிருந்தும் பி.ஜே. மூலம் உதவிகள் சென்றுள்ளன.

இது அல்லாமல் த.மு.மு.க.வுக்கும் த.மு.மு.க.அறிவித்த போராட்டங்களுக்கும் அது உருவாக்கிய முஸ்லிம் டிரஸ்ட் போன்ற துணை அமைப்புகளான, முஸ்லிம் மீடியா டிரஸ்ட், ஐ.ஐ.எம், லட்டர் பேடு மற்றும் பேனர்கள் இல்லாது இயங்கிய தஃவா குழுக்களுக்கும். யு.ஏ.இ.ல் இருந்து பணம் சென்றுள்ளது. மற்றுமுள்ள வளைகுடா நாடுகளிலருந்தும் அமெரிக்கா, லண்டன். ஜாப்பான் போன்ற பல நாடுகளிலிருந்தும் பி.ஜே. மூலம் உதவிகள் சென்றுள்ளன.

நமக்காக ஒரு டூப்ளிக் கேட் பில் வைத்திருக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

1997 இல் இருந்தே வாடகைப் பணம் கொடுத்துக் கொண்டிருப்பதை அப்துல் ரவூப் அவர்கள் கடிதத்தில் சுட்டிக் காட்டி உள்ளார்கள். இதை அதாவது 1997ல் இருந்தே வாடகைப் பெற்றுக் கொண்டிருப்பதை அவர்கள் இப்பொழுது அப்துல் ரவூப் அவர்களுக்கு எழுதிய பதில் கடிதத்தில் மறுக்க வில்லை. ஆனால் 1997ல் இருந்தே வாடகையைப் பெற்றுக்கொண்டே வாடகை கட்ட முடியவில்லை என்று பி.ஜெ.யும் பாக்கரும் சேர்ந்து பொது மக்களிடமும் வாடகை வசூல் செய்துள்ளார்கள். இதை என்னால் நிரூபிக்க முடியும். இது பற்றி சுட்டிக் காட்டி எழுதியதற்கு பதில் கிடையாது. இப்பொழுது வெளியிட்டுள்ள பிரசுரத்தில் கூட திட்டமிட்டு வாடகை என்ற வார்த்தையை தவிர்த்து உள்ளனர். இங்கிருந்து கொடுக்கப்பட்டதை அவர்கள் கணக்கில் வரவு வைப்பதே இல்லை. நமக்காக ஒரு டூப்ளிக் கேட் பில் வைத்திருக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

அப்துர் ரவூப் மூலம் ஏற்பாடு செய்தேன்.

குர்ஆன் கிளாஸ் மட்டும் நடைபெற்று வந்த முஸ்லிம் டிரஸ்ட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால் குர்ஆன் கிளாஸ் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டது. இதை ஒட்டி மவுலவி எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி எனக்கு போன் போட்டார். இதற்கு ஏதாவது வழி பண்ண முடியுமா? என்று கேட்டார். தப்ஸீர் நிகழ்ச்சி அருமையான நிகழ்ச்சி! அது நின்று விடக்கூடாது என்ற நன்நோக்கில் சரி என்று ஒப்புக் கொண்டேன். ஒரு சில மாதங்கள் அங்கும் இங்குமாக சமாளித்துக் கொண்டிருந்தேன். பிறகுதான் சகோதரர் அப்துர் ரவூப் மூலம் ஏற்பாடு செய்தேன்.

பி.ஜெ. அணி எந்த அளவுக்கு அறிந்து வைத்துள்ளது

என் முயற்சியில் நடந்ததை மறைக்க வேண்டும். என் முயற்சியில் எதுவும் நடக்கவில்லை என்று காட்ட வேண்டும் என்பதற்காக ஷhர்ஜாவில் பணியாற்றும் தமிழக முஸ்லிம் சகோதரர் அப்துர் ரவூப் முஸ்லிம் டிரஸ்டின் சேவைகளை நேரில் பார்த்து விட்டு முஸ்லிம் டிரஸ்டிற்கு மாதம் 5000 ரூபாய் நன்கொடை அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். இப்படி ஒரு வாசகத்தை பிரசுரத்தில் அமைத்துள்ளனர். இந்த வாசகத்தின் ஆரம்பத்தில் அபுதாபியில் பணியாற்றும் அப்துர் ரவூப் அவர்களை ஷhர்ஜாவில் பணியாற்றும் அப்துர் ரவூப் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதுவே அப்துர் ரவூப் அவர்களைப் பற்றி பி.ஜெ. அணி எந்த அளவுக்கு அறிந்து வைத்துள்ளது என்று காட்டுகிறது.

இந்த உண்மை நிலையையும் நியாய உணர்வுடன் அப்துர் ரவூப் அவர்கள் எழுதி உள்ளார். முஸ்லிம் டிரஸ்ட்டையோ, அதன் செயல்பாடுகளையோ நான் நேரில் பார்க்கவில்லை. பழ்லுல்-இலாஹி தான் 'தப்ஸீர்' பணி நின்று விடா வண்ணம் உதவ வேண்டினார். என்ற எதார்த்தத்தை எழுதியுள்ளார்.

கொச்சைப் படுத்தியுள்ளனர்.

இதற்கு பதில் எழுதிய பி.ஜெ. அணி தவறை சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொண்டு வருத்தம் தெரிவிக்கும் மனப் பக்குவம் எங்களுக்கு உண்டு என்று எழுதி உள்ளனர். இதிலும் பி.ஜெ. தரப்பினர் உண்மையாளர்களாக இருந்தால், பழ்லுல்-இலாஹி மூலம் வரும் மாதந்திர உதவி வரவில்லை என்று தவறான தகவல் தந்தமைக்கு வருந்துகிறோம் என்று ஒரே வார்த்தையில் முடித்திருக்க வேண்டும். இப்படி முடிக்காமல், இது கவனக் குறைவான தகவலில் ஏற்பட்ட தவறு என்று நினைத்திருக்க வேண்டும். அவ்வாறு நினைக்காமல் உங்களைத் தடுத்தது எது என்பது உங்களுக்கும் இறைவனுக்கும் தெரிந்த விஷயமாகும் என்று காரணம் கற்பித்து உள்ளார்கள். ஒருவருடன் தாங்கள் வைத்துள்ள தனிப்பட்ட நட்பின் காரணமாகத்தான் உதவுவதாகவும் கொச்சைப் படுத்தியுள்ளனர்.

இதற்கு காரணம் என் மீது அவர்கள் கூறிய மோசடி குற்றச்சாட்டுகள் பொய் என்று ஆதாரத்துடன் நிரூபித்ததுதான். நியாயத்தை தட்டிக் கேட்டவர்களுக்கு பி.ஜெ. தரப்பினர் அளித்த பரிசு மோசடியாளர்கள் என்ற பட்டம்தான்.

பி.ஜெ. அணியினரை தட்டிக் கேட்கத் துணியக் கூடாது.

அவர் நன்கொடை தரக் கூடியவராக இருந்ததார். அதனால்தான் இந்த மாதிரியான விமர்சனத்தோடு விட்டு விட்டார்கள். அவரும் என்னை மாதிரி நன் கொடை வாங்கித் தருபவராக இருந்து. தவறை சுட்டிக் காட்டி இருந்தால். அவரையும் நன் கொடை வாங்கி தரவில்லை என்று கூறி மோசடியாளராக பி.ஜெ. தரப்பினர் சித்தரித்து இருப்பார்கள். பி.ஜெ. தரப்பினரது இந்த அநியாயங்களை நியாய உணர்வுடன் தட்டிக் கேட்பவர்களை இப்படி களங்கப் படுத்துவதன் நோக்கம் இனி எவரும் பி.ஜெ. அணியினரை தட்டிக் கேட்கத் துணியக் கூடாது என்பதே.

இதை உணர்ந்து தான் பி.ஜே.க்கு எழுதிய 25 பக்க கடிதம் எழுதுவதற்கு முன்பு.மவுலவி ஷம்சுல் லுஹா ரஹ்மானி யு.ஏ.இயில் இருந்த போது 25.1.2002.அன்று ஷhர்ஜா வில் ஒரு கூட்டத்தை கூட்டினேன். அமைப்பு ரீதியாக அல்ல. அமைப்பு ரீதியான முத்திரை குத்தி பிரைச்சனை பண்ணி விடக்கூடாது என்பதற்காக. அமைப்புகளில் தலைவர்களாக உள்ளவர்களை தவிர்த்து. தவ்ஹீது வாதிகளில் சிலரை அழைத்து எல்லா விபரங்களையும் கூறினேன்.

தனிக் கூட்டம் நடத்தினேன்.

ஹாமித் பக்ரியை பி.ஜே. விடிய விடிய பேசி அழ வைத்தது. ஷம்சுல் லுஹாவை ஆள் வைத்து கேவலமாக பேசியது உட்பட 25 பக்க கடிதத்தில் உள்ளவற்றை யெல்லாம் கூறினேன். ஏன் என்றால் மறை முகமாக எழுதியதற்கே உறவை முறித்தவர்கள். நேரடியாக எழுதும் போது அதன் ரியாக்ஷன் மோசடி குற்றச்சாட்டாகத் தான் இருக்கும். இந்த முன்னெச்சரிக்கை யோடுதான் கடிதம் எழுதுவதற்கு முன்பே தனிக் கூட்டம் நடத்தினேன்.

06.04.2002. அன்று அனுப்பினேன்.

பி.ஜே.க்கு எழுதிய 25 பக்க கடித்தை 25.03.2002 அன்றே எழுதி முடித்து விட்டேன். 31.03.2002. தென்காசி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், 07.04.2002. அதிராம்பட்டிணம் நிகழ்ச்சிகளுக்கு பின் அனுப்ப வேண்டும். என்று கடிதம் அனுப்புவதை பிற்படுத்தினேன். ஏனெனில் நோன்பில் பாக்கர் பி.ஜே.க்கு ராயல்டி கொடுப்பதாக திருச்சி அப்துர் ரஹ்மான் தந்த கடிதம் அனுப்பப்பட்டதும். (காபி ரைட் பிரைச்சனை வந்ததும்) நான் இனி எங்கும் பேச மாட்டேன். ராஜ் T.V ஜெயா T.V நிகழ்ச்சிகள் உட்பட எதிலும் பேச மாட்டேன் என்று பி.ஜே. கூறி இருக்கிறார். இதை அன்வர்பாய் மூலம் அறிந்தேன். அது மாதிரி இந்தக் கடிதம் கண்டபின் ஒதுங்கிகிறேன் என்று சொல்லி விடக் கூடாது என்பதற்காக 06.04.2002. அன்று அனுப்பினேன்.

தவறை சுட்டிக் காட்டினால்

நீங்கள் நிதி அனுப்பினால் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அப்துர் ரவூப் அவர்களுக்கு எழுதி கசப்புணர்வை காட்டிவிட்டு கசப்புணர்வு இல்லை என்று எழுதி உள்ளனர். முஸ்லிம் டிரஸ்ட்டை வாடகை கொடுக்க முடியாமல் மூடப் போகும் நிலையயில். அன்று முதல் மூடி விடாமல் தொடராக உதவி வரும் அப்துர் ரவூபின் உதவி தேவை இல்லை. இப்படி எழுதும் அளவுக்கு பொருளாதார வசதியை பெற்று விட்டார்கள். பொது நிறுவனத்தை நடத்துபவர்கள் தவறை சுட்டிக் காட்டினால் எந்த ஒன்றையும் வாங்க மாட்டேன் என்று கூறுவதுதான் இஸ்லாமா?

மார்க்க முரணாக ஒன்றும் நடக்கவில்லை.

'சங்கராச் சாரியாரை விமர்சிக்கக் கூடாது என்று கூறுவோரிடம் நாங்கள் நிதி உதவி பெறுவதை நிறுத்திக் கொண்டுள்ளோம்' என்று எழுதி உள்ளார்கள். அந்த செல்வந்தர், விருந்து வைத்து, சங்கராச் சாரியார் வந்து-போன வீடியோ கேஸட்டை போட்டு காட்டியுள்ளார், பி.ஜே.யும் அவருடன் சென்றவர்களும் பார்த்துவிட்டு, குற்றம், குறை எதுவும் கூறவில்லை. மார்க்க முரணாக ஒன்றும் நடக்கவில்லை என்று மட்டும் கூறிவிட்டு வந்து விட்டார்கள்.

உதவியை நிறுத்தினார்.

உணர்வில் இது பற்றி கண்டித்து எழுதாதது குறித்து பொது மக்களின் எதிர்ப்புகள் அதிகமானது. இந்த எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டும். செல்வந்தரின் கோபத்திற்கும் ஆளாகி விடக்கூடாது யோசித்தார்கள். எனவே நேரடியாக உணர்வின் சார்பில் கண்டிக்கவில்லை. வந்த வாசகர் விமர்சனங்களிலிருந்து மிகவும் குறைந்த விமர்சனம் உடைய விமர்சனத்தை தேர்வு செய்து உணர்வில் போட்டார். இதனால் கோபங் கொண்ட அந்த செல்வந்தர்தான் உடனே உதவியை நிறுத்தினார்.

இவர்கள் கடிதத்தில் குறிப்பட்டது போல், இவர்களாக 'வேண்டாம் என்று நிறுத்தவில்லை. இதனால், விஜய்-டிவி புரோகிராம் நிறுத்துகின்ற மாதிரி நிலை ஏற்பட்டது. இந்த உண்மையை பாக்கர் வீடியோவில் சொல்லிக் காட்டுகிறார். வெளிநாட்டு அரசிடமிருந்தும், வெளிநாட்டு நிறுவனங்களிட மிருந்தும் உதவிகள் வாங்குவதில்லை என்ற கொள்கை உள்ளதாக கூறி உள்ளதும், உண்மை அல்ல. இப்படிப் பட்ட இவர்களது இந்த அநியாயங்களை நியாய உணர்வுடன் தட்டிக் கேட்கத் தவறினால். இன்று நான் அடுத்து அப்துல் ரவூப், நாளை நீங்கள். அது மட்டும் அல்ல நாளை அல்லாஹ் கியாம நாளில் விசரிப்பான் நீதியை நிலை நாட்டத் தவறியவர்களாக நீங்கள் நிற்க நேரிடும். இத்தக் குல்லாஹ்.

அன்புடன்:-

கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி.03.05.2002

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.