ததஜ அறிஞர் குழு, பீ.ஜே. கூற்றுக்களில் எது சரி? பிரிதலா? கலைதலா? ஏழு பேரா? ஏழு சாரார்களா?
புகாரியில்
1869வதாக இடம் பெற்றுள்ள ஹதீஸை அல்லாஹ் தனது அர்ஷின் (அரியணையின்) நிழலைத் தவிர வேறு
நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது அர்ஷின் நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான் என்று
மொழி பெயர்த்தார்கள். ஏழு பேருக்கு என்பதைவிட ஏழு சாரார்களுக்கு அல்லது ஏழு கூட்டத்தார்களுக்கு
என்று மொழி பெயர்ப்பதே பொருத்தமாக இருக்கும் என்பது அரபி படிக்காத அல்லாஹ்வின் அருளுக்குரிய
அவாம்கள் அன்றே கூறிய கருத்தாகும்.
அந்த
ஹதீஸில் 4வது கூட்டத்தினராக குறிப்பிடப்பட்டுள்ள இரு ஆண்கள் அல்லாஹ்விற்காகவே நேசித்து
ஒன்று சேர்ந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள் என்று மொழி பெயர்த்துள்ளார்கள். இந்த
நேரடி மொழி பெயர்ப்பு தவறான கருத்தை விளக்கத்தைத் தருகிறது.
அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று கூடி (ஒன்று சேர்ந்து)
அல்லாஹ்விற்காகவே கலைந்தார்கள் - கலைந்து சென்றார்கள் என்று மொழி பெயர்ப்பு செய்வதே
சரியான கருத்தை விளக்கத்தைத் தரும் என்பது அரபி படிக்காத அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களின்
கருத்தாகும்.
நேரடி
மொழி பெயர்ப்பு என்பதை விட அந்தந்த மொழியினர் விளங்கும் வகையில் பொருத்தமான வார்த்தைகளை இடம் பெறச் செய்து மொழி பெயர்ப்பு
செய்வதே சிறந்தது.
இல்லை எனில் கருத்துக்கள் சிதைந்து விடும் என்று ஆலிம் அல்லாத அபு அப்துல்லாஹ், காயல் S.K, நக்க சேலம் நாஸர் அலிகான் போன்ற சிலர் 20 ஆண்டுகளுக்கு
முன்பும் சிலர் 15 ஆண்டுகளுக்கு முன்பும் இது போன்றவற்றை சுட்டிக் காட்டினார்கள்.
அந்தக்
கருத்தை அன்று நிராகரித்த அறிஞர்கள் குழு இன்று அதே கருத்துக்கு வந்துள்ளார்கள். இதை
இந்த ஹதீஸ் விஷயத்தில் அல்லாஹ்வுக்காக
பிரிதல் சேர்தல் என்பதற்குரிய விளக்கம் என்ன ? என்ற தலைப்பில் ததஜவுக்கும் பீ.ஜே.க்கும் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் உண்மைப்படுத்தி
உள்ளது. https://www.youtube.com/watch?v=TzgPYn-0jYc&t=513s
Comments