பொதுக்குழுவில் பேசப்பட்ட பீஜேயின் மெயிலில் உள்ள மேட்டர் இதுதான்
(15 லட்சம் கடனாகப் பெற்றவர் நோய்வாய்பட்டிருந்தால் அவர் நலம் பெற துஆச் செய்வோம். அதே நேரத்தில் உண்மையை மூடி மறைக்கத் தேவை இல்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு பீ.ஜே. மெயிலில் உள்ளதை படியுங்கள்)
அந்த ஒருவருக்கு 15 லட்சம் கடனாகக் கொடுத்த பின்னணி உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அந்த ஒருவருக்கு 15 லட்சம் கடனாகக் கொடுத்த பின்னணி உங்கள் அனைவருக்கும் தெரியும்.
வங்கியில் இல்லாத இருப்புகளைப் பாதுகாப்பாக வைக்க ஒரு இடம் வேண்டும் என்று நாம் ஆலோசித்த போது அவரைத் தான் தேர்வு செய்தோம். ரொம்பவும் பாதிப்பை ஏற்படுத்தும் இப்பணியை அவர் ஏற்றுக் கொண்டார்.
ஒரு கிளை
மர்கஸுக்காக உள்ள அமானிதம் + அந்த ஒருவரின் கடன் ஆக மொத்தம் 29 லட்சம்
ரூபாய்கள் என்னிடம் உள்ளது.
14 லட்சத்தை எந்த நிமிடமும் என் மைத்துனர்
சம்சுவிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று முன்னரே சொல்லி விட்டேன். நீங்கள் தான்
வாங்காமல் இருக்கிறீர்கள். (அந்த அளவுக்கு தவ்ஹீது பெயரால் வசூலிக்கப்பட்ட பணம் மித மிஞ்சி கிடக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்)
கலீல் ரசூல்
பொருளாளராகவும் இருந்த போது நாகூரைச் சேர்ந்த ஒருவருக்கு நான்கு லட்சம் ரூபாய்
கடனாகக் கொடுக்கப்பட்டது.
http://mdfazlulilahi.blogspot.com/2018/08/blog-post_8.html
http://mdfazlulilahi.blogspot.com/2018/08/blog-post_8.html
இந்த மாதிரி செய்திகள் உள்ள மெயிலை ஜுலை 12 ஆம் தேதி பீஜே மாநில நிர்வாகத்துக்கு அனுப்பி
உள்ளார்.
இதில் இருந்து
உண்மைகளை மக்கள் அறிந்து கொள்ளுங்கள்! தேவைப்பட்டால் பரப்புவேன் என்று பீஜே இதில்
சொல்லி இருக்கிறார். அந்த தேவையை பொதுக்குழுவில் பேசி ஏற்படுத்தியதால் சிலருக்கு
அந்த மெயிலை அனுப்பி உள்ளார். அதில் நானும் ஒருவன் (அந்த நானும் ஒருவன் வழியாக நமக்கு வந்ததை மக்கள் பார்வைக்கு வைக்கிறேன்)
_________________________________________
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொருளாளருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
நான்
தலைவராகவும், சாதிக் ஆகிய
நீங்கள் பொருளாளராகவும் இருந்த போது ஜமாஅத் பணத்தில் ஒருவருக்கு பதினைந்து லட்சம்
ரூபாய் கடனாகக் கொடுத்தோம். அந்தப் பணத்தை என்னிடம் கேட்குமாறு எனது மைத்துனர்
சம்சுல் ஹுதாவிடம் சொல்லி அனுப்பியுள்ளீர்கள்.
இது குறித்து
சில விளக்கங்களை உங்களுக்கும், உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கும்
தெரிவிக்கிறேன்.
நம் ஜமாஅத்
நிர்வாகத்துக்கு ஒரு நடைமுறை உள்ளது. நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கும் கடன்கள்
நிர்வாகியின் தனிப்பட்ட பொறுப்பு அல்ல.
அல்தாபி
தலைவராகவும், யூசுப் பொதுச்
செயலாளராகவும், கலீல் ரசூல்
பொருளாளராகவும் இருந்த போது நாகூரைச் சேர்ந்த ஒருவருக்கு நான்கு லட்சம் ரூபாய்
கடனாகக் கொடுக்கப்பட்டது. எந்த அடைமானமும் பெறாமல் கொடுக்கப்பட்டது. கொடுப்பதற்கு
பிரத்தியேக காரணம் கூட இருக்கவில்லை. இப்படி யாருக்கும் நாம் கொடுத்ததும் இல்லை.
அல்தாபி
நீக்கத்துக்குப் பின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற போது அந்தக் கடனை அல்தாபியிடம்
கேட்க வேண்டும்; கலீல் ரசூலிடம்
கேட்க வேண்டும் என்று நாம் முடிவு செய்யவில்லை. எந்த நியாயமும் இல்லாமல் கேடுகெட்ட
ஒருவனுக்கு நான்கு லட்சம் கடனாகக் கொடுத்ததை அல்தாபியிடம் கேட்க வேண்டும் என்று
நாம் முடிவு செய்யவில்லை.
(கடன் வாங்கிய கேடுகெட்ட அவன் அல்தாபி திருச்சி சங்கமத்தில் கலந்து கொண்டவன்)
இப்படிப்பட்டவனுக்கு
கொடுத்த கடனுக்கு அல்தாபியைப் பொறுப்பாக்காமல் நாகூரைச் சேர்ந்த அந்தக்
கேடுகெட்டவனிடம் நாம் தான் கேட்டு வருகிறோம்.
இதுதான் முந்தைய
நிர்வாக நடைமுறை என்பதால் தான் இப்படிச் செய்தோம். இல்லாவிட்டால் அல்தாபியும், கலீல் ரசூலும்
தான் பொறுப்பு என்று முடிவு செய்து அவர்களிடமே கேட்டு இருப்போம்.
அந்த 15 லட்சத்துக்கும்
இது போல் தான் முடிவு செய்திருக்க வேண்டும்.
அந்தக்
கேடுகெட்டவனுக்கு அல்தாபி கொடுத்ததில் நியாயம் இல்லை.
ஆனால் அந்த
ஒருவருக்குக் கொடுத்ததில் நியாயங்கள் உள்ளன.
இதை நான் கலீல்
ரசூலிடமும், சாதிக்கிடமும்
விளக்கிய பிறகும் நான் தான் அந்தக் கடனைத் தர வேண்டும் என்று மீண்டும் நேற்று என்
மைத்துனரிடம் கேட்டுள்ளீர்கள்.
அந்த ஒருவருக்கு
15 லட்சம் கடனாகக்
கொடுத்த பின்னணி உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் தெரிந்து கொண்டே தலைவர்
என்ற முறையில் பொருளாளர் வழியாக அவருக்குக் கொடுத்த கடனை என்னிடம்
கேட்டுள்ளீர்கள்.
தமுமுகவைத்
துவக்கிய போது அதற்கான உதவிகளைச் செய்ய யாரும் இல்லாத நேரத்தில் எல்.எம்.சேக்
அவர்களும், அந்த ஒருவரும்
தான் பெரிய பங்களிப்பை மாதம் தோறும் செய்தார்கள்.
(என்று இதில் பீ.ஜே. எழுதி உள்ளார். P.J.யும் அவருடன் உள்ள லுஹா, M.S.சுலைமான் போன்ற தவ்ஹீது மவுலவிகளெல்லாம் சந்தர்ப்பத்துக்கு தக்கவாறு பொய் சொல்லக் கூடியவர்கள் என்று பல முறை ஆதாரங்களை தந்துள்ளேன்.
இதில் எல்.எம்.சேக் அவர்களும், அந்த 15 லட்ச பேர்வழியும் தான் பெரிய பங்களிப்பை மாதம் தோறும் செய்தார்கள் என்று எழுதி உள்ளதை பார்த்தீர்கள்.
த.மு.மு.க.விலிருந்து வெளியேறிய பின் 20.04.2004ல் திருச்சியில் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் மாநில செயற்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டி பலரையும் பொய் சொல்ல வைத்தார் பீ.ஜே. அதில் பீ.ஜே. அன்று என்ன சொன்ன பொய் ஜின்னா, அன்வர் ஆகிய இருவர்தான் த.மு.மு.க.வுக்கு உதவினார்கள் என்ற பொய்யை சொன்னார் வீடியோ ஆதாரத்தைப் பாருங்கள். https://www.youtube.com/watch?v=tc_vYWzPjtM
இன்று எல் எம். ஷேக்கும் 15லட்சமும் உதவினார்கள் என்ற பொய்யை எழுதி உள்ளதைப் பார்த்தீர்கள். த.மு.மு.க. ஆரம்பித்ததிலிருந்து யு.ஏ.இ.யிலிருந்து லுஹா மூலம் பீ.ஜே.க்குதான் பணம் அனுப்பி வைக்கப்பட்டது. அதே மாதிரி சவூதி உட்பட பல வளைகுடா நாடுகளிலிருந்து பணம் அனுப்பி இருக்கிறார்கள். அவற்றை பீ.ஜே.தான் மோசடி செய்து ஏமாற்றி இருக்கிறார் என்பது தெளிவு. தொடரும் பீ.ஜே.யின் மெயிலைப் பாருங்கள்)
தமுமுகவில்
இருந்து நாம் வெளியேறியபின் திக்கற்று நின்ற போதும்
தவ்ஹீத் ஜமாஅத்துக்கு உதவியவர்களில் அதிக
பங்கு அந்த ஒருவருக்கே உண்டு. இப்போதுள்ள செழிப்பு அப்போது ஜமாஅத்தில்
இருக்கவில்லை.
அவருக்கு நாம்
கொடுத்த கடனை விட அவர் ஜமாஅத்துக்கு வழங்கியது அதிகம். இதை கடன் கொடுத்ததற்கான
நியாயத்துக்காக சொல்லவில்லை. கேடுகெட்டவனுக்கு நான்கு லட்சம் கொடுத்தது போன்றது
அல்ல என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
ஜமாஅத்
நிதியாதாரம் குறித்து அல்தாபி லைவில் பேசிய பின்னர் வங்கியில் இல்லாத இருப்புகளைப்
பாதுகாப்பாக வைக்க ஒரு இடம் வேண்டும் என்று நாம் ஆலோசித்த போது அவரைத் தான் தேர்வு
செய்தோம். ரொம்பவும் பாதிப்பை ஏற்படுத்தும் இப்பணியை அவர் ஏற்றுக் கொண்டார்.
இதனால் ஏற்படும்
விளைவுகளையும் எதிர்கொள்ள முன் வந்தார். அப்படி ஒப்படைத்த போது தான் அவருக்கு
ஏற்பட்டு இருந்த சிரமம் காரணமாக 15 லட்சம் கடனாகக் கேட்டார். ஜி.எஸ்.டி
பாதிப்பால் ஏற்பட்ட திடீர் நெருக்கடியே இதற்குக் காரணம்.
அவர் செய்த
உதவிக்கு கடனாக அல்ல அன்பளிப்பாகவே இதைக் கொடுத்தாலும் போதாது. அவர் செய்த
உதவியைக் கவனத்தில் கொண்டு தான் கடனாகக் கொடுத்தோம். நான் அறிந்த வரை பண
விஷயத்தில் அவர் மிக நேர்மையானவர். அவருக்கு நாம் அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அவர்
வாங்க மாட்டார். ஜமாஅத்துக்காக எந்த தியாகமும் செய்யக் கூடியவர்.
இப்படியான
நேரத்தில் இது கடனாகக் கொடுக்கப்பட்டது என்பதை நான் விளக்கிச் சொன்ன பிறகும்
என்னிடம் அந்தக் கடனைக் கேட்டுள்ளீர்கள்.
அந்த ஒருவர் இரு
மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆஞ்சயோ பிளாஸ்ட்
செய்யப்பட்டு தினமும் டயாலிஸ் செய்யப்பட்டு பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி
தற்போது கால் விரல்களை வெட்டி எடுத்து மேலும் சிகிச்சையில் உள்ளார். இது அனைத்தும்
உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இப்போது அவரிடம்
கேட்க முடியாத நிலை உள்ளது என்பதை நன்றாக அறிந்திருந்தும் அந்தப் பணத்தை என்னிடம்
கேட்டுள்ளீர்கள்.
நிர்வாகத்தின்
அரிச்சுவடி தெரிந்த யாரும் நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட கடனை பொறுப்பில்
இருந்த நிர்வாகியிடம் கேட்க மாட்டார்கள்.
என் விஷயத்தில்
நீங்கள் கேட்பது எனக்கு வியப்பாக இல்லை.
நீங்கள்
காழ்ப்புணர்வு காரணமாக இப்படி என்னிடம் கேட்ட பின் உங்களுக்கு பதில் சொல்லக்
கடமைப்பட்டவனாக நான் இருக்க விரும்பவில்லை.
இன்ஷா அல்லாஹ்
சில நாட்களில் நானே அவரது கடனைத் தந்து விடுகிறேன். அதிக பட்சம் இம்மாத
இறுதிக்குள் அந்த 15 லட்சத்தை நானே தந்து விடுகிறேன்.
ஜமாஅத்துக்கும், எனக்கும் எந்தக்
கொடுக்கல் வாங்கலும் இல்லை. ஒரு கிளை மர்கஸுக்காக உள்ள அமானிதம் + அந்த ஒருவரின்
கடன் ஆக மொத்தம் 29 லட்சம் ரூபாய்கள் என்னிடம் உள்ளது.
14 லட்சத்தை எந்த நிமிடமும் என் மைத்துனர்
சம்சுவிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று முன்னரே சொல்லி விட்டேன். நீங்கள் தான்
வாங்காமல் இருக்கிறீர்கள்.
அந்த
ஒருவருக்குக் கொடுத்த கடன் தொகையை இம்மாத இறுதிக்குள் நான் புரட்டித் தந்து
விடுவேன்.
இதைத் தவிர
ஜமாஅத்துக்கு நான் ஏதும் தர வேண்டியது இல்லை. எனக்குத் தெரியாமல் ஏதும் இருந்தால்
தெரிவிக்கவும்.
குறிப்பு :
அவரிடம் உள்ளதை உங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ளவும். அவர் எனக்காகவே அதைச்
சுமந்து கொண்டார். இனியும் அவர் சுமப்பது நல்லதல்ல.
குறிப்பு : நான்
ஜமாஅத்துக்கு பணம் தர வேண்டும் என்று பரப்பப்பட்டு சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.
அப்படி கேட்பவர்களுக்கு மட்டும் இந்தப் பதிலை அனுப்புவேன்.
அன்புடன்
பீ. ஜைனுல்
ஆபிதீன்
------------------------------------------------------------------------------------------------------------------
அந்த ஒருவர் நோய்வாய்பட்டிருந்தால் அவர் நலம் பெற துஆச் செய்வோம். அதே நேரத்தில் உண்மையை மூடி மறைக்கத் தேவை இல்லை.
சபையில் பொய் சத்தியம்
செய்து பொய் சாட்சியம் சொன்னவர்.
1994ல் இருந்தே ரியல் எஸ்டேட் பெயரால் தவ்ஹீதுவாதிகளிடம் பி.ஜே. மூலம் பணம் வாங்கி
இழுத்தடித்த அன்வர் பாஷா தான் இந்த அயோக்கியத்தனம்
செய்த 15 லட்சம் கள்ளர் என்று நான் நம்புகிறேன்.
அந்த அன்வர் பாஷா பற்றி லுஹா சொன்னவை.
கள்ளக் கணக்கு எழுதியவர்.
பழனி பாபா இறந்ததும் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசூலிக்கப்பட்ட பணத்தில் இருந்து பி.ஜே. சொன்ன பணக்காரனுக்கு 2 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்தவர்.
பிறகு பி.ஜே. விருப்பப்படி தள்ளுபடி செய்தவர்.
Comments