ததஜ தாஇகளுக்கு மாத சம்பளம் எவ்வளவு? பகிரங்கப்படுத்த வேண்டும்-அன்வர் பாஷா ஆத்மா
இறந்து
விட்ட ததஜ அன்வர் பாஷா அவர்கள் முஸ்லிம் என்ற அடிப்படையில் அவரது மறுமைக்கு துஆச் செய்வோம். மற்றவர்களையெல்லாம் அவர் முஸ்லிம்களாக ஏற்று
இருந்தாரா? ததஜ கொள்கைப்படி முஷ்ரிக் என்று முடிவு செய்திருந்தாரா?
அல்லாஹ்வே அறிந்தவன்.
இருந்தாலும் நமது கொள்கைப்படி
அவருக்காக பொதுவாக துஆச் செய்வோம். பீ.ஜே.யின் துாண்டுதல்படி செயல்பட்ட அன்வர் பாஷாவால் பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து
துஆச் செய்யலாம். அல்லது அவரது குடும்பத்தார் அவரால் பாதிக்கப்பட்வர்களிடம்
மன்னிப்புக் கேட்டு துஆச் செய்ய சொல்லலாம்.
அன்வர்
பாஷா ஒரு வெள்ளாந்தி அவரை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்கிறார்கள் சிலர். நன்கு கவனித்தால் விமர்சிக்கப்படுவது அன்வர்
பாஷா அல்ல என்பதை புரிவார்கள்.
ததஜ
பொருளாளராக இருந்த அன்வர் பாஷா பி.ஜே.முன்னாலேயே சிகரட் பிடிக்கக் கூடியவர். அந்த அளவுக்கு பீ.ஜே.யின் பொருளாதார
பினாமியாகத்தான் அவர் இருந்தார்.
26.9.2000. அன்று சென்னையில் தவ்ஹீது ஜமாஅத் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் மதுரை மாநாட்டு கன்வீனராக இருந்த பஸ்லுல் இலாஹியாகிய நான் கணக்குகளை ஒப்படைத்தேன். என்னிடம் ரொக்கமாக இருந்த மீதிப் பணம் ஒருலட்சத்தி எண்பத்தேழாயிரம் (1,87,000) ரூ க்குரிய செக்கை அன்வர்பாஷாவிடம் ஓப்படைத்தேன். அது 03.10.2000 அன்று அன்வர்பாஷாவுக்கு பாஸாகி உள்ளது.
அதற்குப் பிறகு அல்முபீன் (இன்றைய ஏகத்துவம்) கணக்கில் இருந்த மாநாட்டு பணம் சிலோனிலிருந்து வந்த 50ஆயிரம், மாநாட்டு திடல் அட்வான்ஸ் 25 ஆயிரம். இப்படி மாநாட்டு மீதிப் பணம் இரண்டரை லட்சத்திற்கு அன்வர்பாஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
2000 டிசம்பரில் அமைப்புச் செலவுக்கு பணம் வேண்டும் என்று போன் வந்தது. போன் செய்த அன்வர்பாஷா அவர்களிடம் கேட்டேன். இரண்டரை லட்சத்திற்கு மேல் தந்து விட்டு வந்தேனே என்ன ஆயிற்று என்று கேட்டேன். செலவு ஆகி விட்டது என்றார் அன்வர்பாஷா.
என்ன செலவு என்று கேட்டேன். நீங்கள் கொடுத்து விட்டு போன பணத்தை எல்லாம் ”தாஇ”களுக்கு (மவுலவிகளுக்கு) என்று வாங்கிப் போய் விட்டார்கள். செலவுக்கு பணம் இல்லை ஏற்பாடு செய்து அனுப்புங்கள் என்றார்.
2 மாதத்திற்குள் இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்யும் அளவுக்கு எத்தனை தாஇகள் கூட்டமைப்பில் உள்ளனர் .யார்? யார்? தாஇகள். எந்த எந்த தாஇகளுக்கு எவ்வளவு எவ்வளவு கொடுக்கப்பட்டது. அவர்கள் இதுவரை என்ன என்ன பணிகள் செய்து உள்ளனர். தவ்ஹீது ஜமாஅத் 2 மாதத்தில் என்ன செய்திருக்கிறது, இனி என்ன செய்ய இருக்கிறது. மேலாண்மைக் குழு உறுப்பினராகிய எனக்கே தெரியாத நிலையில் இனி வசூல் செய்து அனுப்ப முடியாது என்றேன்.
2 மாதத்தில் இரண்டரை இலட்சம் ரூபாய் எப்படி செலவு ஆனது. எந்த எந்த மவுலவிகளுக்கு எவ்வளவு எவ்வளவு கொடுக்கப்பட்டது. வாங்கிப் போனது யார்? இந்த கேள்விகளுக்கு கடைசி வரை பதில் சொல்ல முடியாமல் அன்வர் பாஷா திணறினார்.
அப்பொழுது நான் மேலாண்மை குழுவில் இருந்தேன். கேள்வி கேட்டேன். ஓரங்கட்டப்பட்டேன். கேள்வி கேட்க தெம்பில்லாத ஆண்மையற்றவர்களே ததஜவில் மேலாண்மை என்ற பெயரில் இருக்க முடியும்.
அன்வர் பாஷா அவர்கள் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய 2 மாதத்தில் இரண்டரை இலட்சம் ரூபாயை ஆட்டை போட்ட தவ்ஹீது ஆலிம்கள் யார் யார்? எவ்வளவு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதையும் வெளியிட வேண்டும்.
ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் என எல்லாருக்கும் எவ்வளவு சம்பளம் என்பது பகிரங்கமானது
லுஹா, எம்.எஸ். சுலைமான் உட்பட ததஜ தாஇகள் ஒவ்வொருவருக்கும் மாதச் சம்பளம் எவ்வளவு? எத்தனை நிறுவனத்தில் சம்பளம் வாங்குகிறார்கள்.
பள்ளிவாசலில் எவ்வளவு சம்பளம்?
மதரஸாவில் எவ்வளவு சம்பளம்?
ஸ்கூலில் எவ்வளவு சம்பளம்?
ஏகத்துவத்தில் எவ்வளவு சம்பளம்?
உணர்வில் எழுதினால் கை மணி எவ்வளவு?
மேடையில் பேசினால் ஹிக்மத்தாக வாங்கும் பணம் எவ்வளவு?
எல்லாமே மர்மதேசமாகவே உள்ளது.
அன்வர் பாஷா மறுமை வாழ்வு நன்றாக அமைய ததஜ தாஇகளுக்கு மாத சம்பளம் எவ்வளவு? என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் செய்வார்களா?
அன்வர்பாஷாவை பினாமியாக வைத்து ஏழைகளுக்காக வழங்கப்பட்ட பித்ரா நிதியில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தொகையை சுருட்டி
ஜகாத் நிதியில் சேர்த்தது முதல் பலவற்றை முன்பே எழுதி இருக்கிறோம்.
Comments