நட்ட கல்லை தெய்வமென்று...நட்டகல்லும் பேசுமோ? - கலைஞர்
1986களில் நாம் வினியோகித்த தவ்ஹீது பிரச்சார கேஸட்களை சும்மா கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள். வாங்கினாலும் கேட்க மாட்டார்கள். ஆகவே பெரியார், அண்ணா, கலைஞர், மதுரை ஆதீனம், ஆவடி மனோகர், முரசொலி அடியார் என்ற அப்துல்லாஹ் அடியார் போன்றவர்களின் உரைகளை ஆரம்பத்தில் பதிந்து இடையிலே தவ்ஹீது பேச்சாளர்களின் உரைகளை போட்டு கேட்க கொடுப்பேன். அவற்றில் ஒன்று கலைஞர் பேசிய வீடியோ நட்டகல்லும் பேசுமோ என்ற தலைப்பில் வெளியிட்டேன். அதில் கலைஞர் பேசியது.
நட்ட கல்லை
தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே!
நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே!
மொணமொணவென்று சொல்லு மந்திரம் ஏதடா?
முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
நட்டகல்லும் பேசுமோ?
என்றுதான் சிவவாக்கிய சித்தரும் பாடி உள்ளார் என்று கூறி இஸ்லாமிய ஏகத்துவம் பற்றி கலைஞர் பேசியது. அந்தப் பேச்சின் வீடியோ என்னிடமிருந்து பெற்றவர்கள் வைத்து இருந்தால் அப்லோடு செய்ய வேண்டுகிறேன்.
மேலப்பாளையத்தில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர் .
மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில், முன்னாள் நகர் மன்றத் தலைவர் M.A.S.
.அபூபக்கர் ஸாஹிப் அவர்கள் தலைமையில் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 22.07.1993
அன்று கலைமாமணி இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் சமூக, இலக்கிய
இசைப்பணியினை பாராட்டு விழா நடத்தி இசைமுரசுக்கு பொற்கிழியும் வழங்கப்பட்டது.
தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர், தமிழ் மாநில முஸ்லிம் லீக்
தலைவர் சிராஜுல் மில்லத் A.K.A. அப்துஸ் சமத் ஸாஹிப், லிஸானுல் மில்லத் M.A. அப்துல்
லத்தீப் ஸாஹிப், கஞைரின் போர்வாள் வைக்கோ, தினகரன் கே.பி.கந்தசாமி..மெஜெஸ்டிக்
கரீம் காகா, பத்ஹூர் ரப்பானி ஸாஹிப் A.K. ரிபாயி ஸாஹிப், பீட்டர் அல்போன்ஸ்
Comments