முஸ்லிம்களுக்கு ஏன் இந்தப் பாராட்டு? எதற்காக இந்தப் பாராட்டு?

ஷரீஆ மற்றும் பள்ளி நிர்வாகக் குழுமத்தில் பச்சை டூமை வைத்துள்ள 9994848514 என்ற நம்பரை உடையவர் யார் என்று தெரியவில்லை. குர்ஆன் ஹதீஸுக்கு எதிரானவரானவர் போல் தெரிகிறது. அதனால்தான் மவுலவி இல்யாஸ் உஸ்மானி அவர்கள் குர்ஆன் ஹதீஸ் உடையவர்களுக்கு எதிராகப் பேசி உள்ள வீடியோவை போட்டு விட்டுள்ளார்.  

மவுலவி இல்யாஸ் உஸ்மானி அவர்கள் நமக்கு நல்ல நண்பர். விபச்சாரத்திற்கு எதிராக தவ்ஹீது மவுலவிகளே ஒத்துழைக்காமல் ஓடி ஒதுங்கிய நேரத்தில் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டவர். அதனால் அவர் சொல்லை ஏற்று ஹாரூன் (அலை) அவர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்ல மாட்டோம்.
மூஸா(அலை) அவர்களுக்கு பயந்த ஹாரூன் (அலை) அவர்கள், நிரந்தர நரகத்துக்குரிய ஷிர்க்கை எதிர்த்து உண்மையைச் சொல்லாமல் ஒற்றுமையை நிலை நாட்டினார்கள். 

அது போல் நாமும் ஷிர்க்கை எதிர்த்து உண்மையைச் சொல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அவரது வாதத்தை நீங்கள் (பச்சை டூம்) ஏற்கலாம். நாம் ஏற்க மாட்டோம்.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான தேர்வு செய்யப்பட்ட மிகச் சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று குர்ஆனில் அல்லாஹ்  நம்மைப் பாராட்டி இருக்கின்கிறான். ஏன் இந்த பாராட்டு? எதனால் இந்தப் பாராட்டு அதையும் அல்லாஹ்வே சொல்கிறான்.

நன்மையை ஏவுகிறீர்கள், தீமையை தடுக்கிறீர்கள்அல்லாஹ்வை  நம்புகிறீர்கள்.  (3:11) அதற்குத்தான்  இந்த பாராட்டு

ஆக அல்லாஹ்வை நம்பக் கூடியவர்கள் அல்லாஹ்வின் பாராட்டுக்குரியவர்கள் உண்மைகளைச் சொல்ல தயங்கக் கூடாது. பொய்யர்களிடம் உண்மையைச் சொன்னால் பொய்யர்கள் பிரிந்து போவார்கள். அல்லது உண்மையைச் சொன்னவர்களை பிரித்து விடுவார்கள். குழுமங்களிலும் அதுதான் நடக்கிறது.

குர்ஆன் ஹதீஸ் குழுமத்தில் அதற்கு எதிரான கொள்கையை ஊடுருவச் செய்த சகோதரரே! அவ்ஸ் கஜ்ரச் இடையே ஒற்றுமையை ஏற்படுத்திய முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கடைசி வரை ஷிர்க்கை எதிர்க்காமலும் இஸ்லாத்தை சொல்லாமலுமா இருந்தார்கள்?

ஒன்றாக, ஒரே ஒரு சமுதாயமாக, ஒரே ஒரு கூட்டத்தினராக, ஒரே ஒரு இனத்தவராக ஒற்றுமையுடன் இருந்தவர்களிடம் அல்லாஹ் நபிமார்களை அனுப்பியபோதெல்லாம் அவர்கள் பிரிந்துதான் போய் இருக்கிறார். 

நபிமார்கள் என்ன பிரிவினையையா போதித்தார்கள்? திருடர்களின் திருட்டை கண்டித்தார்கள். அளவு நிறுவையில் மோசடி செய்த அயோக்கியர்களை அடையாளம் காட்டினார்கள். ஒற்றுமை குலைந்து பிரிவினைகள் ஏற்பட்டன.  இதற்குத்தான் குர்ஆன் வசனங்கள் ஆதாரமாக உள்ளன.

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் வழங்கப்பட்டவர்கள் அதற்கு முரண்பட்டனர்....... 2:213.

உண்மைக்கு எதிராக முரண்படுவார்கள். அதனால் ஒற்றுமை குலையும் பிரிவினை ஏற்படும். இதற்குத்தான் இந்த வசனம் ஆதாரமாக உள்ளது.

நவாப் காலத்திலிருந்த உள்ள பள்ளிக்கு எதிராகவும் போட்டியாகவும் உருவாக்கப்பட்ட பள்ளியில்தான் உங்கள் மவுலவி இமாமாகவும் கதீபாகவும் உள்ளார். பத்தடி துாரத்தில் ஒரு பிரிவு பள்ளியா? தனிப் பள்ளியா என அந்தக்கால உள்ளூர் ஆலிம்கள் எதிர்த்து நின்றனர்

இரண்டு பள்ளிக்கும் இடையில் ஒரு சாக்கடை ஓடுகிறது என்று சில வெளியூர் --- ஆலிம்கள்(?) பத்வா கொடுத்தனர். பிரிவுப் பள்ளி உருவானது.

1989ல் வக்பு வாரிய தலைவராக இருந்த அப்துல் லத்தீப் அவர்களைக் கொண்டு வந்து பிரிவுப் பள்ளியை மதரஸாவாகவும் பூர்வீகப் பள்ளியையே தொழும் இடமாகவும் ஆக்க முயற்சி செய்த முக்கியமானவர்களில் முதன்மையானவன் நான். 

ஜான் நிக்கல்சன் என்ற அதிகாரி தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டது ஒற்றுமையை ஏற்படுத்த. ஒரு முழம் ஓடை இடைவெளியில் பள்ளியை உருவாக்கியவர்கள் ஒத்து வரவில்லை. இன்றும் ஒரே பள்ளியாக ஆக்கவில்லை. அவ்வளவு ஒற்றுமை அவர்களிடம் உள்ளது. அவர்களைப் பார்த்து அவர்களது ஒற்றுமை பற்றி நாம் கேட்கவில்லை.

குர்ஆன் ஹதீஸ் குழுமத்தில் ஊடுருவி உள்ள பச்சை டூமைத்தான் கேட்கிறோம். உங்கள் ஒற்றுமையின் லட்சணம் இதுதான். பச்சை டூம் அவர்களே நீங்கள் முதலில் ஒரு முழம் இடைவெளியில் உள்ள அந்த இரண்டு பள்ளியையும் இழுத்துக் கட்டி ஒரே கட்டிடமாக பள்ளியை இணைத்து உங்கள் ஒற்றுமையை காட்டுங்கள் பார்ப்போம்.

விபச்சார குற்றத்துக்கு ஆளானவர்கள். அதற்கு துணை நின்றவர்கள் பள்ளிவாசலை திருடியவர்கள் பள்ளியில் கள்ளக் கணக்கு எழுதியவர்கள் இப்படியான பல சாராரை நாம் எதிர்க்கிறோம். அதனால் அவர்கள் சொன்ன குர்ஆன் ஹதீஸ்களையும் எதிர்க்கிறோம் என்று விளங்கி விட்டீர்களா? .

எவன் எது வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும் ஒற்றுமையாக இருங்கள் என்று இஸ்லாம் சொல்லவில்லை. அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனைப் பற்றி பிடியுங்கள். குர்ஆனை விட்டும் பிரிந்து விடாதீர்கள் என்றுதான் அல்லாஹ் குர்ஆனில்  சொல்லி உள்ளான் 3: 103



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு