அன்புள்ள மேலப்பாளையம் வாழ் மக்களுக்கு -மன்னர் ஷம்சுத்தீன்

நமது தெருவில் இரண்டு பக்கமும் வீடுகள் இருக்கும், நடுவில் ஓடை மரங்கள் நட பட்டு இருக்கும். இரண்டு சக்கர வண்டி ஆட்டோ வாகனங்கள் இரண்டு பக்கமும் செல்வது வழக்கம். 



மேலப்பாளையம்  மன்னர் ஷம்சுத்தீன்

தற்போது சமீப காலமாக பெரும்பாலான தெருக்களில் ஒரு பக்கத்தை கார், ஆட்டோ வண்டிகள் வைதிருப்பவர்கள் ஓடைக்கும் தங்கள் வீட்டின் நடுவில் நிறுத்தி விட்டு ஒரு சைடைய் முழுவதுமாக அடைத்து விட்டனர். 


தற்போது அனைத்து வாகனங்களும் ஒரே பக்கமாகதான் செல்கிறது. இதனால் எந்த பக்கம் வண்டிகள் செல்கிறதோ அந்த வீட்டிற்கு உள் சகட்டு மேனிக்கு தூசிகள் அடைகின்றன. 

நமது ஊரில் குழந்தைகள் தெருவில் விளையாடுவது வழக்கம், தற்போது குழந்தைகள் வெளியே இறங்கினாலே வண்டிகள் வர வேகத்திற்கு அடித்து சென்று விடுவார்கள் போல். இரண்டு பக்கமும் வண்டிகள் சென்றால் ஒன்றும் தெரியாது. ஒரே பக்கமாக செல்வதால் மிகவும் சிரமமாக உள்ளது. 


இந்த சிரமத்தை குறைக்க வழிகள் என்ன ?


கார் ஆட்டோ வைத்து இருப்பவர்கள் ஓடையின் நடுவில் விடுங்கள், மிகவும் பெரிய வண்டியாக இருந்தால் வெட்டையில் கொண்டு விடுங்கள். நபிகள் நாயகத்தின் ஹதீஸ் மிகவும் தெளிவாக வருகிறது பொது பாதையில் இடையூறு செய்கிறவர்கள் விசியத்தில். மிகவும் கடுமையாக கண்டித்தும் உள்ளார்கள். அது போக தெருவில் செல்லும் இளைஞர்கள் மிகவும் வேகமாக செல்கிறார்கள். தெரு ஜமாஅத் இதில் தலை இட வேண்டும்.


தெருவை எப்படி சுத்தாமாக வைக்க முடியும் ? யார் குப்பை போடுகிறார்கள்? 

நாம் தான். வண்டி விடுபவர்களும் நாம்தான். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் இதை பின்பற்றவேண்டும். வண்டியை எந்த இடத்தில விட வேண்டும். எப்படி விட கூடாது என்று அனைத்து தெரு இளைஞர்களும் இதனை நீங்கள் பின்பற்றுவதூடு மட்டுமலாமல் அனைவரயும் பின்பற்றுமாறு வழியுருத்தவும். 

✖✖✖✖✖முற்றும்✖✖✖✖✖

அனைத்து குரூப்களிலும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். 
வாட்ஸப்பில்
மன்னர் ஷம்சுத்தீன் 

உண்மைதான் ஊரில் ஒரு வண்டி போனால் அதன் பின்னால் ஒரு லாரி துாசி போகிறது. http://mdfazlulilahi.blogspot.ae/2017/10/blog-post_68.html 

இது போன்ற  கருத்துடைய   நமது ஆக்கத்தைக் காண கீழே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.
நீ என்ன மயிறு சொல்ற்றது நான் அப்படி தான் நிப்பாட்டுவேன் என்று சொல்பவர்களுக்கு. கீழ் உள்ள பதிவு. 

ஆனால் வெகு சிலர் நீ சொல்றது சரி தான் ஆனால் அவனை பாரு எப்படி விட்டு இருக்கான் அவன்ட்ட சொல்லிட்டு எங்கிட்ட வா. இது என்னடா பதில்? 

நாளைக்கே மண்டைய போட்டுட்ட அல்லாஹ் கேட்ப்பான் எதுக்காக பொது மக்களுக்கு இடையூறாக இருந்தாய் என்றால்? என்னைய மட்டும் கேட்க்குற இந்தா அவனையும் கேளு என்பீர்களா? 

இது எங்க வீட்டு வாசல் நான் இங்க தான் விடுவேன் என்பவர்கள். எங்க வீட்டிற்கு முன்னால தான விட்டு இருக்கேன் என்று முட்டாள் தனமான வாதம் வைக்காதிர்கள். ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் இதை போல் சொன்னால் தெருவில் வண்டிகள் எப்படி போகும். 

காலை வேளையில் பள்ளிக்கூடம் போகும் ஆட்டோ மற்றும் கார்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அது என்ன உங்க அப்பன் வீட்டு இடமா? பொது மக்கள் நடை பாதை ஒரு இன்ச் கூட உனக்கு சொந்தமானது கிடையாது. 

ஒன்று இரண்டு மாதங்கள் அவர்களுக்கு நேரம் கொடுக்க்போம், நான் அப்படி தாண்டா நிப்பாடுவேன் என்று இடும்பு செய்தால், காவல்துறை மற்றும் முன்சிபாலிட்டிக்கு கம்பளயிண்ட் செய்வோம். இன்ஷா அல்லாஹ்.
அதிகமாக பகிருங்கள் நமதூர் மக்கள் அனைவருக்கும் சென்றடையும் வரை.





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு