ஏழு வசனங்கள் எவை? அலீ (ரலி) அவர்களின் பதில்
அல் குர்ஆன் அத்தியாயங்களின் துவக்கத்தில் உள்ள பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது அந்த அத்தியாயங்களின் ஒரு பகுதியா? ஒரு அத்தியாயம் முடிவு பெற்று விட்டது. அடுத்த அத்தியாயம் துவங்குகின்றது என்பதற்கான அடையாளமா? பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது மொத்த குர்ஆனுக்கும் ஒரு தடவை எழுதப்படவில்லை . ஒவ்வொரு அத்தியாயத்தின் மேலேயும் எழுதப்பட்டு இருக்கின்றது . குர்ஆனில் உள்ள எல்லா வசனங்களுக்கும் நம்பர் போடப்பட்டிருக்கின்றது . ஆனால் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதில் மட்டும் நம்பர் போடப்படவில்லை . நம்பர் போடாமல் காலியாகவே இருக்கின்றன. எல்லா அத்தியாயங்களிலும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கு அடுத்து வரக் கூடிய ஆயத்களிலிருந்துதான் ஒன்று இரண்டு என்று வரிசையாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம்பர் போடப்பட்டுள்ளது . பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது குர்ஆனில் உள்ள ஆயத்தாக இருந்தால் அதற்கும் வசன எண் போட்டு இருக்க வேண்டுமே . பிஸ்மில்லாஹிர்ரஹ்மானி...