சொந்த வீட்டுக்காக போகாத பிள்ளைகள் சொந்தக்காரர்களுக்காக போகுமா?
அன்றைய வியாபாரம் என்பது ஒவ்வொருவரும் தனித் தனியாக செல்வது என்ற நிலையில் உள்ளது அல்ல . ஒரு ஊரில் உள்ள அத்தனை பேருடைய பொருளையும் வியாபாரத்துக்கு கொண்டு போவார்கள் . குடும்பத்துக்கு ஒருவர் என உடன் செல்வார்கள் . வீட்டுக்கு ஒருவர் அல்ல குடும்பத்துக்கு ஒருவர். 10 குடும்பத்திலிருந்து பத்துப் பேர் . இருபது குடும்பத்திலிருந்து 20 பேர் என்றுதான் போவார்கள் . அவர்களில் ஒருவர் தலைவராக இருப்பார் . எல்லாருமாக போய் விட்டால் ஊரில் ஒன்றும் செய்ய முடியாது . எல்லாருமாகப் போவது அந்தக் காலத்தில் தேவையற்றதும் கூட . சுமைகளை , வியாபாரப் பொருள்களை வாகனங்கள்தான் சுமக்கும் . எனவே 10 ஒட்டகங்களுக்கு ஒரு ஆள் . 20 ஒட்டகங்களுக்கு ஒரு ஆள் என்றுதான் போவார்கள் . ஒட்டகங்களை கட்டுப்படுத்தி வழி நடத்த தெரிந்த ஆட்கள் . வியாபாரம் செய்வதற்கு வியாபார திறமை உடையவர்கள். இப்படித்தான் போவார்கள் . அவரவர் பொருள்களுக்கு அவரவர் போக வேண்டும் என்ற நிலை அன்று கிடையாது . பண்டமாற்று வியாபாரம் என்பதால் இதுதான் யதார்த்தம் . 50 வயதை தாண்டிய முந்தைய தலை முறையினருக்கு இது புரியும் . ரேடியோ , டேப், டி . வி , ஸ...