இஸ்லாத்தில் மிகைத்து இருப்பது எது? தண்டிப்பா? மன்னிப்பா?
நாம் உபதேசங்களை செய்த பிறகும் அவர் திருந்தவில்லையே! நேர் வழி பெறவில்லையே ! நம்மால் முடிந்த உதவிகளை செய்த பின்னரும் அவர் அந்த சிரமத்தில் இருந்து மீளவில்லையே . இப்படி கவலை படக் கூடாது . இப்படி கவலைப் படுவது முஃமினுக்குரிய தகுதி அல்ல . அல்லாஹ்வின் துாதர் ( ஸல் ) அவர்களிடமே அல்லாஹ் அப்படித்தான் கூறுகின்றான் . ( நபியே ) நிச்சயமாக நீங்கள் விரும்பியோரை நேர் வழியில் செலுத்த உம்மால் முடியாது . ( திரு குர்ஆன் 28;56) யார் விரும்பியோரை நேர் வழியில் செலுத்துவான் ? தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். நேர் வழியில் செலுத்துவதை அவனுடைய கைவசம் வைத்துள்ளான் . யாரை நேர் வழியில் செலுத்த வேண்டும் . யாரை அப்படியே வழி கேட்டில் விட்டு விட வேண்டும் . இது அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது . இறைத் துாதருக்கே இந்த பொறுப்பு இல்லை என்றால் . நாம் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும் . உலகத்தில் வாழக் கூடிய ஒவ்வொரு முஃமினும் நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம் . நம்மை பற்றிய விசாரணைக்கு நாம் பதில் சொல்ல வேண்டும் . அதற்கு நம்மை நாமே தயார் படுத்திக் கொள்ள வேண்டும் . பரீட்சையிலே நட...