Posts

Showing posts from May, 2015

முஃமின்பில்லாஹ் weds ஆலியா

Image
முஃமின்பில்லாஹ் weds ஆலியா -1   முஃமின்பில்லாஹ் weds ஆலியா - 2  முஃமின்பில்லாஹ் weds ஆலியா - 3 முஃமின்பில்லாஹ் weds ஆலியா - 4 முஃமின்பில்லாஹ் weds ஆலியா - 5  

மார்க்க தீர்ப்பு யாருக்கு நெருடலான விஷயமாக இருக்கும்

Image
தஞ்சை சகோதரர் ஒருவர் நம்மை பார்க்க வந்தார் . அந்த ஜமாத்தைச் சார்ந்த தங்கள் குடும்பத்தார் திருமணம் மண்டபத்தில் வைத்தார்கள் . அதனால் அந்த ஜமாத்தினர் தஃப்தர் உண்டு ! தாயீ இல்லை ! என்று சொல்லி பிறகு தாஹியையும் அனுப்ப மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள் என்றார் . அந்த ஜமாத்தினரின் அந்த தீர்ப்பு சரி இல்லை . நன்கு ஆய்ந்து உங்கள் மனசாட்சிப்படி முடிவு செய்யுங்கள். யாரும் யாரையும் கண் மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வார்கள். தங்களை கண் மூடித்தனமாக பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திப்பார்கள்.   அவர்களது தீர்ப்பு முன்னுக்கு பின் முரணான தீர்ப்பு என்று கூறினேன் . அவர்கள் சொல்லி உள்ள தீர்ப்பையே எடுத்து படித்துக் காட்டினேன். தீர்ப்பில் உள்ள முன்னுக்கு பின் முரணானவற்றையும் மார்க்க விரோத நிலையையும் சொல்லிக் காட்டினேன். “ திருமண விருந்தான வலீமாவைப் பொறுத்த வரையில் மார்க்கத்தில் ஒரு வரையறை  இல்லை . அவ்வாறு ஒரு வரையறை வைக்க   முடியாத நெருடலான விஷயம் திருமண விருந்து”   என்று அந்த தீர்ப்பின் ஆரம்பத்தில் சொல்லி உள்ளார்கள் .

தங்களுக்கு தாங்களே முரண்படுவதே அதிகம்.

Image
முன்னுக்கு பின் முரணான தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தீர்ப்புகள் முன்னுக்கு பின் முரணாக வருவது புதிய விஷயமல்ல. ஒரு தீர்ப்புக்கு முரணாக   இன்னொரு தீர்ப்பு வர முன்பு 10 ஆண்டுகள் 15 ஆண்டுகள் என ஆனது ஒரு காலம். இப்பொழுது காலையில் ஒரு தீர்ப்பு மாலையில் ஒரு தீர்ப்பு என்று முன்னுக்கு பின் முரணாக தீர்ப்புகள் விரைவாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான நிலையில் எந்த தீர்ப்பு சரி என்று மனசாட்சிப்படி முடிவு செய்ய வேண்டும் என்கிறார்கள் ஒரு சாரார். அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி மக்கள் அரங்கத்திற்கு வராது அவன் சாட்சி என்கிறார்கள் இன்னொரு சாரார். இஸ்தப்ஸி கல்பக்க என்றார்கள் இறைத்துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். தீர்ப்புகள் என்ற உடன் இன்றைய அரசியலை - கனம் கோர்ட்டார் அவர்களின் தீர்ப்புகளை பேசுவதாக   எண்ணி விடாதீர்கள். நான் மார்க்க தீர்ப்புகளைப் பற்றித்தான் பேசுகிறேன். கோர்ட்டுகளில் ஒருவரின் தீர்ப்புக்குத்தான் இன்னொருவரின் தீர்ப்பு முரண்படுகிறது மாறுபடுகிறது. மார்க்க தீர்ப்புகளில் ஒரு அறிஞரின் தீர்ப்புக்கு இன்னொரு அறிஞரின் தீர்ப்பு முரண்படுவது குறைவு. மார்க்க அறிஞர்களில் த

பைலா பைலா நீ இல்லாமல் எங்கள் இயக்கம் இல்லை. நீதானே எங்கள் இயக்க எல்லை.

Image
from: kadirkani misc < kadirkanimisc@gmail.com > to: Adiyar Nanban <adiyar999@gmail.com> bcc: fazlulilahi@gmail.com date: Mon, May 18, 2015 at 7:55 PM subject: ராஜினாமா செய்வாரா? நடவடிக்கை எடுக்கப்படுமா? mailed-by: gmail.com signed-by: gmail.com பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். ....                    அன்புள்ள சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....               யாரையும் நாங்கள் தயவு தாட்சணை பார்க்கமாட்டோம்.அது எவ்வளவு பெரிய நிர்வாகியாக இருந்தாலும் தூக்கி எறிந்துவிடும் ஒரு உன்னதமான இயக்கம்தான் இந்த ததஜா. ,அல்லாஹ் ரசூல் வழியில் முழுமையாக எங்களின் நிர்வாகிகள் நடப்பார்கள்.அத்துடன் நாங்கள் ஏற்படுத்தியிருக்கும் பைலாவின் பிரகாரம் தங்களின் பணிகளை செய்வார்கள்,எல்லா இயக்கங்களையும் எமது இயக்கத்தையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் நூறு சதவீதம் (குர்ஆன்,ஹதீசுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல) தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்களைக் கொண்டதுதான் என்பதை புரிந்துகொள்வீர்கள். இதற்கு மாறாக செயல்பட்ட எத்தனையோ நிர்வாகிகளை எல்லாம் தூக்கியெறிந்திருக்கிறோம்,இப் படி சொல்வது யா

கல்யாண நிகழ்வு மட்டும் அல்ல ஒரு புரட்சி மேடையாக காட்சியளித்தது

Image
Dominic Antony  added  2 new photos  —  feeling proud. May 17 at 12:08pm  ·  Be a man: Not a beggar to ask!! இச்சை தணித்திடும் எச்சில் பரத்தைக்கு இலட்சம் கொடுப்பதுண்டு . புவி மெச்ச மணக்கும் ஒர் பச்சை கிழியிடம் பிச்சை கேட்பதுண்டோ !!!! கேட்பாயா???? என்னை நமது தமுமுக நண்பர்கள திருமண அழைப்பிதழ் தானே கொடுத்து அழைத்தார்கள் அங்கு சென்று வியப்படைந்தேன்.  இது கல்யாண நிகழ்வு மட்டும் அல்ல பல நல்ல கருத்துகள், கொள்கைகள் அடங்கிய ஒரு புரட்சி மேடையாக காட்சியளித்தது.  அனைவரின வாழ்த்து உரையிலும், சத்தத்திலும் ஏக்கம் இருந்தது இனி வரும் காலங்களிலும் இதுபோல் நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்று!!  முதலில் என்னைப் போன்றவர்களின் முதல் வாழ்த்துக்கள் மற்றும் கௌரவப்படுத்துவது தம்பதியரை வழிநடத்தி செல்கின்ற, இக்கல்யாணத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்மகனின் தலையாய கடமை எது என்பதை விளங்க வைத்த பெற்றோர்களுக்கு (முகம்மது பஸ்லுல் இலாகி மற்றும் முகம்மது காஜா) அவர்களுக்கு நன்றி!! எனது மணமார்ந்த பிரார்த்தனைகள் வாழ்த்துக்கள் புதுமண தம்பதியினர் எல

மஹரை நுள்ளி, கிள்ளி கொடுக்காதீர்கள் தகுதிக்கு ஏற்ப அள்ளி கொடுங்கள் .

Image
மேலப்பாளையம் த . மு . மு . க . ஏற்பாடு செய்த இலட்சிய திருமணம் த . மு . மு . க . தலைவர் மவுலவி J. S. ரிபாஈ ரஷாதி தலைமையில் இனிதே நடைபெற்றது .    மஹரை நுள்ளி, கிள்ளி கொடுக்காதீர்கள்  தகுதிக்கு ஏற்ப அள்ளி கொடுங்கள். த . மு . மு . கவின் இலட்சிய வேண்டுகோளை ஏற்று   மாப்பிள்ளை பெண்ணுக்கு மூன்று லட்சம் வரதட்சணை  கொடுத்தார். மணமகன் மணமகளுக்கு வழங்கிய   மஹர் எனும் வரதட்ணை மொத்தம் ரூபாய் மூன்று இலட்சம். ரூபாய் 1,25,000(ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம்) பெறுமானமுள்ள 50கிராம் தங்க ஜெயின். . மேலும் 5ஆண்டுகளுக்குள் மாநகர எல்கைக்குள்   தரமான வீடு ஒன்றை கட்டியோ வாங்கியோ மணமகள் பெயரில் எழுதி கொடுக்க வேண்டும்     என எழுதப்பட்ட காஜா நாயகம் தெரு வெள்ளை மீரான் ஜும்ஆ பள்ளி திருமண பதிவேட்டில்   மணமகன் மணமகள் கையெழுத்திட்டார்கள்.    அதன் பின்   மணமகளின் அண்ணன் மசூது திருமணம் செய்து வைத்தார்.   தி . மு . க . தலைவர்   கருணாநிதி அனுப்பிய வாழ்த்து மடலை தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் அவர்களும்   தமிழ் மாநில காங்ரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அனுப்பிய வாழ்த்து மடலை மண்டல தலை