ChengisKhan - Tholugai illatha PJ(arcottar) தொழுகை இல்லாத பீ.ஜே
பீஜே அவர்களின் தொழுகை
அன்பிற்கினிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் பீஜே அவர்கள் தொழுவது இல்லை என்பதைப் பற்றி நாம் மண்ணடி பொதுக் கூட்டத்தில் பேசியதை சில சகோதரர்கள் விமர்சித்துள்ளார்கள். அவர்களின் விமர்சனத்திற்கான விளக்கங்களை கீழே தந்துள்ளோம்.
முதலாவதாக,
பீஜே அவர்களின் தொழுகை பற்றி நாம் முதன் முதலாக விமர்சிக்கவில்லை! அபு அப்துல்லா தொடங்கி பாக்கர் வரை அவரோடு நெருங்கிப் பழகிய, அவரோடு பல பயணங்களில் பங்கேற்ற அனைத்து சகோதரர்களுக்கும் இது தெரியும்.
ஒரு முஃமின் தொழுகைக்கான நேரத்தை, வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும். ஆனால் சகோதரர் பீஜே வாய்ப்பு கிடைத்தால், தொழுவாரே தவிர வலிந்து தொழ மாட்டார்.
மக்கள் நிறைந்திருக்கும் சபைகளில் வேறு வழியின்றி தொழுவாரேயன்றி விரும்பித் தொழ மாட்டார்.
பிரயாணங்களில் பெரும்பாலும் தொழமாட்டார் என்பதையும் அவருடன் பல நேரங்களில் பயணித்த ஒளிப் பதிவுக் குழுவினரான யூசுப் கான், யாஸிர், ரஃபிக் போன்றோர் கூறுகின்றனர்.

மற்றவர்கள் சொல்வதை வைத்து மட்டும் நாம் கூறவில்லை!
கடந்த 2008-2009ல் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் ஷரீயத் பஞ்சாயத்து பிரிவில் பணியாற்றியதால் பெரும்பாலான நேரங்களை தலைமையகத்தில் தான் கழிப்பேன்.
காலையில் என் மனை வியை களஞ்சியம் மதரஸாவிற்கு ஆலிமா கோர்ஸ் படிப்பதற்காக அழைத்து வரும் நான், மாலை திரும்ப அழைத்துச் செல்லும் வரையிலும், பின்னர் மஃரீபுக்கு பிறகு ஷரீயத் அமர்வு என பெரும்பாலான நேரம் தலைமையகத்தில் தான் இருப்பேன். இந்த ஓராண்டு காலமும் பீஜே அவர்களை ஒருமுறை கூட தலைமையகத்தில் தொழுது நான் பார்த்ததில்லை.

மற்ற பள்ளிகளில் தொழுவது கூடாது என்பவர், மற்ற இமாம்களை பின்பற்றித் தொழக் கூடாது என்பவர், மண்ணடியில் வேறு எந்த தௌகீத் பள்ளியும் இல்லாத நிலையில் எங்கே தொழுகிறார் என்பது எனக்குள் மிகப் பெரிய கேள்வியாக இருந்து வந்தது.
இவ்வளவுக்கும் கூப்பிடு தூரத்தில்தான் அவருடைய எடிட்டிங் அலுவலகம் உள்ளது. காலையில் 10 மணியளவிற்கு அங்கே வரும் அவர் இரவு தான் வீடு திரும்புவார்
இவ்வளவுக்கும் கூப்பிடு தூரத்தில்தான் அவருடைய எடிட்டிங் அலுவலகம் உள்ளது. காலையில் 10 மணியளவிற்கு அங்கே வரும் அவர் இரவு தான் வீடு திரும்புவார்
இவ்வளவு அருகில் இருந்தும் ஏன் தலைமையகத்திற்கு தொழ வருவதில்லை என்ற கேள்விக்கு விடை தேடிய போது அவரின் தொழுகை நிலை புரிந்தது. மாநில நிர்வாகிகளிடம் கேட்டபோது, பதில் மழுப்பலாகவே இருந்தது.
""அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ளது'' என்று சப்பைக் கட்டு கட்டினார்களே தவிர, அவர் எங்களோடு தொழுகின்றார் என சாட்சி சொல்ல முன்னாள் மாநில நிர்வாகிகளும சரி, இன்றைய மாநில நிர்வாகிகளும் சரி. உள்பட யாரும் சொல்லத் தயாரில்லை என்பதில் இருந்தே உண்மை நிலையை புரிந்து கொள்ளலாம்.

""அவர் தனித்து தொழுதிருக்கக் கூடும்'' என்ற கேள்வி எழலாம். அப்படி தனித்துத் தொழுவதையும் யாரும் பார்த்ததாகத் தெரிய வில்லை. பலர் முன்னிலையிலேயே பஜ்ருக்கு எழுப்பியும் தொழாதவர், தொழுகையில் பொடுபோக்கு உடையவர் தனியாக தொழுவார் என்ற வாதமும் அடிபட்டுப் போகிறது.
அப்படியே தனித்துத் தொழுகின்றார் என்பதை வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் மார்க்க அடிப்படையில் அது மாபெரும் தவறு என்பதையும், நய வஞ்சகத் தனத்தின் அடையாளம் என்பதையும் முஸ்லிம் 651, 654 ஹதீஸ்கள் மூலமாக அறிகின்றோம்.
கண் தெரியாத சஹாபிக்குக் கூட தனியே தொழ அனுமதி இல்லை! பாங்கு சத்தம் கேட்டால் பள்ளி சென்று தொழுவது கடமை என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையை முஸ்லிம் 653ன் மூலமாக அறிகின்றோம். மேலும் அயராத எழுத்துப் பணி, வந்தால் சுற்றி நின்று கேள்வி கேட்கின்றார்கள், பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளால் பள்ளிக்கு வருவதில்லை என்ற வாதமும் சரியானதல்ல.
அண்ணனை விட அதிகம் ஆட்சிப் பணி, குடும்பப் பணி, மார்க்கப் பணி கொண்ட அண்ணனிடம் கேள்வி கேட்பதை விட அதிகமதிகம் கேள்வி கேட்கும் தோழர்களைக் கொண்ட, அண்ணனுக்கு உள்ள அச்சுறுத்தலை விட அதிகமதிகம் எதிரிகளின் அச்சுறுத்தலை உடைய அண்ணல் நபி (ஸல்) அவர்களே கடைசி மூச்சு வரை கால் இழுபட ஜமாஅத் தொழுகைக்கு வந்து கலந்து கொண்டு நடைமுறைப்படுத்தியுள்ளதால் நபி வழியைப் பின்பற்றுவதில் நாங்கள் தான் சிறந்தவர்கள் என்று கூறும் நம்மிடம் இருக்க கூடாத பண்பாடு அல்லவா?
மேலும் ரமளான் சொற்பொழிவு நேரங்களில் பயானுக்கு வருவாரே தவிர தொழுகைக்கு வர மாட்டார். மேலே அலுவலகத்தில் இருந்து கொண்டும் தொழ மாட்டார்! இது மற்றவருக்கு தெரியக் கூடாது என்பதற்காக அறையின் உள்ளே வைத்து பீஜேவை பூட்டி விட்டு சாவியை கையில் வைத்திருந்த பணியாளரை கதவிடுக்கில் கசியும் ஏசியை வைத்து கண்டுபிடித்து கண்டித்த சம்பவங்கள் உண்டு.
எல்லாவற்றுக்கும் மேலாக ஜும்மா அன்று தொழாத முஸ்லிமை நாம் பார்க்க முடியுமா? ஆனால் அலுவலகத்தில் இருந்து கொண்டு பீஜே ஜும்மா தொழாமல் இருந்ததாக ரஃபீக் கூறுகின்றார். எவ்வளவு கைசேதத்திற்குரிய நிலைமை?
மார்க்கத்தை அறிந்தவர், புரிந்தவர் அதை மக்களுக்கு போதிக்கக் கூடியவர் இந்த நிலையில் இருந்தால் சாதாரண மக்களின் நிலை என்ன? மற்றவர்களுக்கு போதித்து விட்டு தான் கடைபிடிக்காமல், தன் குடலை கையிலேந்தும் (புகாரி) ஹதீஸ் பற்றியும், மக்களுக்கு நன்மையை ஏவி விட்டு உங்களை மறந்து விடுகின்றீர்களா? வேதத்தைப் படித்துக் கொண்டே இதை செய்கின்றீர்களா? என்ற குர்ஆன் (2:44) வசனத்தையும் நமக்கு எடுத்துச் சொல்லிவிட்டு அவரே அதை மறந்து நடப்பது நியாயமா?
மறுமையின் முதல் கேள்வி தொழுகை பற்றியது தானே? (திர்மிதி 413) ஈமானுக்கும், ஷிர்க்கிற்கும் உள்ள வேறுபாடு தொழுகையல்லவா? (முஸ்லிம்-82), முஸ்லிமுக்கும் காபிருக்கும் உள்ள வேறுபாடு தொழுகையல்லவா? (திர்மிதி 2621) தொழுகையை விடுவது குப்ர் (திர்மிதி 2622) என்ற நபிமொழிகள் எல்லாம் நமக்கு சொல்லிவிட்டு நமக்கு நேர்வழி காட்டி விட்டு சகோதரர் பீஜே வழிகேட்டில் சென்று விடக் கூடாது என்பது தான் நம் கவலை.
இதை நாம் சுட்டிக் காட்டும்போது சிலர் தவறு என்று கூறுகின்றனர். தொழுகையில் ஏற்படும் தவறுகளையே சுட்டிக்காட்ட மார்க்கம் அனுமதிக்கும்போது தொழுகையையே தவற விடுபவரை சுட்டிக்காட்டக் கூடாதா? ""ருகூவையும், சுஜுதையும் சரியாகப் பேணாதவர் தொழுகைத் திருடர்'' என நபி (ஸல்) சுட்டிக் காட்டும்போது முழுத் தொழுகையையும் திருடுபவரை சுட்டிக் காட்டக் கூடாதா?
நீங்கள் அதை தனிப்பட்ட முறையில் தான் சுட்டிக்காட்ட வேண்டும். பொது மேடையில் சுட்டிக்காட்டி புண்படுத்தலாமா என்று கேட்கின்றனர்.
மவ்லீது, ஹத்தம், பாத்திஹா, தகடு, தட்டு, தாயத்து போன்ற ஷிர்க், பித்அத்தில் உள்ளவர்களை நாம் தனிப்பட்ட முறையில் தான் சுட்டிக் காட்டினோமா?
மேலும் சமுதாயத் தலைவர்களின் இயக்க சகோதரர்களின் குற்றங் குறைகளை பீஜே அவர்கள் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டினாரா? பொது மேடைகளில் விமர்சித்தாரா?
மற்றவர்களின் தவறுகளை எல்லாம் "சுட்டிக் காட்டும்போது, சத்தியத்தை போட்டு உடைக்க வேண்டும்' எனக் கூறி பொது மேடைகளில் மட்டுமின்றி, தொலைக்காட்சி, பத்திரிகை, இணைய தளம் என நாறடிக்கும் இவர்கள் இதைப் பற்றி பேசலாமா?
மீலாது விழா கொண்டாடும் தலைவர்களை பற்றி பேசும்போது ""அஸர் போகும், மஃரிப் போகும் ஆனால் மீலாது ஊர்வலம் போய்க் கொண்டே இருக்கும் ஒரு பயலும் தொழ மாட்டான். இவர்கள் நபிகளாரை புகழ்கிறார்க ளாம்'' என பீஜே மற்ற தலைவர் தொழுகை நிலையை சுட்டிக்காட்டி பேசியது சரியென்றால், நாங்கள் பேசியது எவ்வாறு தவறாகும்?

இப்போது சொல்லும் நீங்கள் அங்கிருக்கும் வரை ஏன் சொல்லவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இதற்கு தமுமுக பிரிவின் போது பீஜேவே பதில் சொல்லியிருக்கிறார். உள்ளே இருந்து சொல்வதெற்கென்று ஒரு நிலை உள்ளது! அது முடியாத போது வெளியே வந்து சொல்லும் நிலை ஏற்படுகிறது என்ற நிலைதான் நமக்கும்! நாம் நம்முடைய அளவிலே, நாம் பேசக் கூடிய தலைவர்களிடத்திலே சொல்லி காட்டியிருக்கிறோம். இயக்க கட்டுப்பாடு கருதி வெளியில் பேச முடியாது! இப்போது அந்த கட்டுப்பாடு இல்லையென்பதால் வெளியே பேசுகிறோம்.
மேலும் இப்போது ஏன் சொல்கின்றீர்கள்? என்ற கேள்வியே தவறாகும். எப்போது சொன்னால் என்ன? தவறு என்று தெரிந்தால் சுட்டிக் காட்டலாமா கூடாதா? என்பதுதான் நமது கேள்வி! நாம் ஷிர்க் பித்அத்தில் இருந்தோம் தவறு எனத் தெரிந்த பின் ஷிர்க், பித்அத் பற்றி பேசினால் நீ ஏன் அப்போது பேசவில்லை என்ற கேள்வி சரியா?
மவ்லீத் தவறு என்று சங்கரன் பந்தல் மதரஸôவில் பணியாற்றிய போது பேசத் தெரியவில்லையா? மவ்லீது ஓதிய நீங்கள் மவ்லீது பற்றி இப்போது பேசலாமா? என்று பீஜேவிடம் கேட்டால் அது அறிவுடைமையா? வரதட்சணை தவறு என்று இப்போது புரிந்து அதை வாங்கு பவரிடம் போய் சொன்னால், நீ வாங்கும் போது தெரியவில்லையா? என்பது போலத்தான் இதுவும்! பிரிந்த பின் பேசலாமா? என்ற கேள்விக்கு சத்தியம் தெரிந்த பின் பேசலாமா? கூடாதா? என்பது தான் பதிலாக இருக்க முடியும்.

ஆக அன்பிற்குரிய சகோதரர் களே மற்ற மார்க்க கடமைகளை சுட்டிக் காட்டுவது போல தொழுகையையும் சுட்டிக்காட்டி, அண்ணனை தொழச் செய்வோம்! அவருக்கு சப்பைக் கட்டு கட்டினால் அவரை நாமே வழி கெடுக்கிறோம். அதன் மூலம் ""இஸ்லாம் எளிய மார்க்க அல்ல'' அது பின்பற்றுபவராலேயே கடைபிடிக்க முடியாத சிரம மார்க்கம் என உலகத்திற்கு எடுத்துச் சொல்வது போன்றதாகும் என்பதை கூறிக் கொள்கிறேன்.
அல்லாஹ் மிக அறிந்தவன். நாம் அனைவரும் நேர்வழி பெற போதுமானவன்!
Comments