நாமே அயோக்கியர்கள்... நாமே பைத்தியக்காரர்கள் ! - வாக்குமூலம் தரும் அண்ணன்&கோவினர்
அன்பிற்குரிய இணையத்தள வாசகர்களே .... அஸ்ஸலாமு அலைக்கும்
பூனைக்குட்டி வெளியில் வந்தது - கிழிபடும் மோசடிக்காரர்களின் பொய்முகம் என்ற தலைப்பில் நாம் வைத்த வாதங்களுக்கு உளறுவதைத் தவிர அண்ணன் & கோவினரிடம் பதில் இல்லை என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதனை அவர்களது வாதத்தை படிப்பவர்களே புரிந்து கொள்வார்கள். இவர்கள் எழுதும் பதிலில் என்ன தவறு உள்ளது என்று சொல்லவேண்டுமாம்!.அதைத்தானே நாம் இத்தனை நாட்களாக சொல்லி வந்திருக்கிறோம் .மீண்டும் நமது வாதங்களை எடுத்துப் பார்க்கட்டும்.கடைசி வரை நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாத அவர்களை அயோக்கியர்கள் என்று நாம் நிருபித்து இருக்கிறோம் என்பதை வாசகர்கள் நீங்கள் அறிவீர்கள்.
கள்ள ஜமாத்தின் சங்கப்பதிவிலும் இல்லாமல் தன்னைத்தானே பொதுச்செயலாளர் என்று அறிவித்துக்கொண்ட ஜாபார் என்பவர் பெயரில் அண்ணன் வைத்த வாதத்தில், நம்மை மாநில நிர்வாகி என்று முட்டாள்தனமாக குறிப்பிட்டிருந்தார்.அதற்கு நாம்,
"நாம் எப்போது கள்ள ஜமாத்தில் நிர்வாகியாக இருந்தோம்" எனக் கேட்டதற்கு நிசார் அஹமத் பெயரில் மீண்டும் வந்து சூப்பர் விளக்கம் தந்து அசத்தி இருக்கிறார்.
" தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தும் கள்ள சங்கமும் ஒன்று தானாம்.கள்ள சங்கத்தின் நடவடிக்கைகளில் டிஎன் டிஜே விற்கு உடன்பாடு உண்டாம்.ஆகவே நம்மை மாநில நிர்வாகி என்றது சரிதான்" என சூப்பர் விளக்கம் தருகிறார்கள்.இவர்கள் நினைப்பது போல் மக்கள் ஏமாளிகளல்ல.
ஒரு உதாரணம் சொல்லி இந்த சூப்பர் பார்ட்டிகளுக்கு புரிய வைப்போமா?
தமிழ் நாடு தறுதலை ஜமாஅத்(tntj) அல்லது தமிழ் நாடு துப்பாக்கி ஜமாஅத்(tntj) என்று ஒரு ஜமாஅத் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம்.கள்ளத்தனமான பதிவு ஜமாஅத்(ktpj)என்று இன்னொரு அமைப்பு இருக்கிறதென்று வைத்க்கொள்வோம். கேடிபிஜே ஜமாத்திற்கு நான் தான் பொதுச்செயலாளர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர், நாம் மேற்சொன்ன தறுதலை ஜமாத்தில் ஏற்கனவே நிர்வாகியாக இருந்த ஒருவரைப்பார்த்து, "நீ எங்கள் ஜமாத்தின் மாநில நிர்வாகியாக இருந்தாய்" என்று சொல்கிறார்.இப்படிச் சொல்பவரை பற்றி என்ன நினைக்கத் தோன்றும்?பைத்தியக்காரன் என்றுதானே சொல்வோம்.! இப்படித்தான் அண்ணன் &கோவினர் உளறிக்கொட்டிவிட்டு நம்மை விமர்சனம் பண்ணுகிறார்கள்.
கள்ள சங்கத்தின் நடவடிக்கைகளில் டிஎன்டிஜே விற்கு உடன்பாடு உண்டாம்.அப்படியானால் கள்ள சங்கத்தினர் தான் நமது கேள்விகளை எதிர்கொள்ளாமல் பின் வாங்கி ஓடி ஒளிகிறார்களே...அவர்களின் மானம்,மரியாதையை காப்பாற்றும் வகையில் டி என் டி ஜே வினராவது நமது சவாலை ஏற்று இருக்கலாம்.மிஸ் பண்ணிவிட்டார்கள்.நாம் காவல் துறையில் அவர்கள் கொடுத்த புகார் மனுவின் நகலை வெளியிட்டு அவர்களை அயோக்கியர்கள் என்று நிருபித்துவிட்டோம்.(வாசகர்கள் அந்த புகார் மனுவை பார்வையிட www.makkalreport-e-paper.blogspot.com
என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம்)
இப்பொழுது டி என் டி ஜே வினர் வந்து விளக்கம் என்ற பெயரில் உளறினாலும் வாசகர்களே டூ லேட் என்று சொல்லி விடுவார்கள்.
மேலும், நாங்கள் பைத்தியக்காரர்கள்; அப்படித்தான் முரண்பட்டு பேசுவோம்;வாயில் வருவதை எல்லாம் வாதம்,விமர்சனம் என்று உளறுவோம் என்று அவர்கள் சொல்வதை வாசகர்களாகிய உங்களுக்கு அவர்களின் வாதத்தை வைத்தே அழகாக புரிய வைக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.,
நாம் மேற்கண்ட( பூனைக்குட்டி)தலைப்பில் வைத்திருந்த வாதத்தில்....
"போகிற போக்கில் நம்மை அவர்கள் மிரட்டவும் செய்கிறார்கள்."நீ மௌனமாக இருந்துவிடு.இல்லை என்றால் இன்னும் உன்னைப்பற்றி நான் அறிந்து வைத்துள்ள,உணர்வு அலுவலகத்தில் பணியாற்றியதுவரை உள்ள வண்டவாளங்களை அவிழ்த்துவிடுவேன்" என்கிறார்கள் அண்ணனுக்கும், அவரது சீட கோடிகளுக்கும் சொல்லிக்கொள்கிறேன்.
அந்த வண்டவாளங்களை உணர்வில் வெளியிடத் தயாரா? வெளியிட்டால் நீங்கள் யோக்கியர்கள் என்று ஒப்புக்கொள்கிறேன்.இல்லையென்றால் உங்களை என்ன சொல்லி அழைப்பது?நீங்கள் வெளியிடுங்கள் இன்ஷா அல்லாஹ் நாம் நேரில் உணர்வு அலுவலகத்துக்கு வந்து நீங்கள் சொல்வது பொய் என்பதை நிரூபிக்கிறோம் " என்று கேட்டிருந்தோம். இதற்கு அவர்கள் அளித்த பதில்.....
"உணர்வு அலுவலகம் வந்து நிரூபிக்க தயார் என்று சவால் விட்டுள்ளீர்கள்.இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.நாங்கள் இதுவரை கேட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்து உங்கள் மன்மதக்கூட்டத்தின் தூய்மையை நிரூபியுங்கள்"
நாம் என்ன வாதம் வைத்திருக்கிறோம்? உணர்வில் நாம் இருந்த காலத்தின்(என்னுடைய )வண்டவாளங்களை வெளியிடுங்கள்.அப்படி வெளியிட்டால் நீங்கள் யோக்கியர்கள் என்று ஒப்புக்கொள்கிறோம்.
அதோடு உணர்வு அலுவலகம் வந்து நிரூபிக்கிறோம்.-இது தான் நமது வாதத்தின் சாரம்.இதற்கு சரி...நாங்கள் உங்களின் வண்டவாளங்களை உணர்வில் வெளியிடுகிறோம் நீங்கள் வந்து நிரூபியுங்கள் என்று சொல்ல வேண்டும்.இது தான் சவாலை ஏற்றுக்கொள்ளும் முறை.அதை விட்டு விட்டு பட்டுக்கோட்டைக்கு ஏன் வழி சொல்ல வேண்டும் ?
ஏனெனில் என்னைப்பற்றி வெளியிடுவேன் என்று மிரட்டியது இவர்கள் தான்.அதை எதிர்கொள்கிறோம் என்று சவால் விடுத்தது நாம்..அவர்கள் யோக்கியர்கள் என்றால் சொன்னபடி நடந்துகொள்ள வேண்டுமா இல்லையா? அடடா மாட்டிக்கொண்டோமே...என்று நினைத்தால் குறைந்த பட்சம்...
அதையெல்லாம் உணர்வில் வெளியிட முடியாது.அது அவதூறாக ஆகிவிட்டால் நீங்கள் வழக்கு தொடுத்தால் மாட்டிக்கொள்வோம்.அல்லது மறுப்பு வெளிடிடச் சொல்லி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாலும் மாட்டிக்கொள்வோம்.அதுவுமில்லாமல் உணர்வு பத்திரிகைக்கு ஒரிஜினல் சர்டிபிகேட் வேறு இல்லை என்று சொல்லி தப்பித்திருக்க வேண்டும்.
இந்த இரண்டில் எதுவும் இல்லாமல் உளறினால் நீங்கள் பைத்தியம் தான்.,நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது.
அன்புடன்
அபு பைசல்
Comments