முஸ்லிம் அமைப்புகளை பயங்கரவாத அமைப்பு என்று சொன்ன ததஜ
திருவிடைச்சேரி படுகொலையை முன்னிட்டு 19 அமைப்புகள் சார்பாக, பிரச்சினையில் தொடர்புடைய ததஜ அமைப்பினர் மீது நடவடிக்கை கோரும் போஸ்டர் ஒட்டப்பட்டதை அனைவரும் அறிவோம். அந்த போஸ்டர் ஒட்டப்பட்ட மாத்திரமே பொங்கிஎழுந்த தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத்தினர் கீழ்கண்ட போஸ்டரை ஒட்டினர்;
அந்த போஸ்டரில் சகோதர்கள் பாக்கர் மற்றும் ஜவாஹிருல்லாஹ்வை தீவிரவாதிகள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சக முஸ்லிம் அமைப்பான பாப்புலர் பிரன்ட் ஐ பயங்கரவாத அமைப்பாகவும் சித்தரித்து தங்களின் வெறியை காட்டியிருந் தனர்.
இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு கொஞ்ச நாள் கழிந்துவிட்டதால் மக்கள் இதை மறந்திருப்பார்கள் என்று கருதிய பீஜேயின் தக்லீதுகள் புதுக்கதை ஒன்றை உணர்வில் ''நாடும் நடப்பும்'' பகுதியில் எழுதியுள்ளார்கள்;
'' நான் என்ன சொல்ல வருகிறேன்னா அந்த 19 அமைப்புகளில் ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்புன்னு ஒரு பேப்பர்ல போட்டிருக்காங்க என்ற பாருக்,
எந்த இயக்கமாக இருந்தாலும் அவை செய்யும் தவறுகளை தவ்ஹீத் ஜமாத்தினர் சுட்டிக்காட்டுவார்கள். முஸ்லிம் இயக்கம் என்று பெயரை வைத்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கு துரோகம் செய்வதை சொல்லி மக்களிடத்தில் அவர்களை அடையாளம் காட்டுவார்கள். ஆனால் அது பயங்கரவாத அமைப்பு என்றோ அந்த அமைப்புகளால் நாட்டுக்கு கேடு என்றோ அவர்களை கைது செய் என்றோ அவர்கள் சொன்னதில்லை.
[உணர்வு 24 -30 பக்கம் 20 ]
இவர்கள் உணர்வில் சொல்லியுள்ளது போன்று உண்மையாளர்களா என்பதை கீழே உள்ள போஸ்டரை பார்த்து 'இறையச்சத்து டன்' முடிவு செய்யுங்கள்;
Comments