முழுத் தொழுகைகளையும் திருடுபவரை சுட்டிக்காட்டக்கூடாதா?
முஸ்லிமாக முதலில் தொழட்டும் பிறகு முஸ்லிம்களை அழைக்கட்டும்
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர் மாநாடு என்ற பெயரில் மக்களை அழைக்கின்றனர். அழைக்கட்டும் தவறில்லை ஆனால் அழைக்கும் போதே பொய்யை சொல்லி அழைக்கின்றனர்.
தீவுத் திடலில் 15 லட்சம் முஸ்லிம்கள் என்ற மாபெரும் பொய்யை கூறி அழைக்கின்றனர். இவர்களது பொய்யை பார்த்து உளவுத்துறை வட்டாரம் சிரிக்கிறது.
15,000 பேரை தாங்காத தீவுத்திடலில் 15 லட்சம் பேரை கூட்டுவதாக இருந்தால் ஒருவருக்குமேல் ஒருவராக 100 பேரை அடுக்கினால் தான் உண்டு. தீவுத்திடலில் கூடிய பெரிய கூட்டம் சோனியா கலைஞர் பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் 15,000 சேர் போடப்பட்ட ஒரே கூட்டம்.
ஆனால் மக்களை மடையர்களாக்க, பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற தத்துவத்தின்படி, 15 லட்சம் என்று மக்கள் மனதில் பதியவைத்து பின்னர் அறியாத மக்களிடம் அதையே 15 லட்சமாக்கும் வித்தை அண்ணணுக்கு
கை வந்த கலை மற்றவர்கள் மாநாடுகளில் மக்கள் எண்ணிக்கையை குறைத்தும் தங்கள் மாநாட்டில் மக்கள் எண்ணிக்கையை கூட்டியும் காட்டும் கணக்கை எங்கே கற்றாறோ தெரியவில்லை.
கடந்த 2008 அக்டோபர் 13 அன்று சென்னையில் நடந்த பேரணியில் மூவாயிரம் பேரை தாண்டாத (மாநிலம் முழுவதும் இருந்து) மக்களை உணர்வில் லட்சக்கணக்கான மக்கள் என்று எழுதினார்கள்.
மார்க்கத்திற்காக கூட பொய் சொல்லக்கூடாது. எனும்போது, குருடர்கள் பார்க்கிறார்கள் செவிடர்கள் கேட்கிறார்கள் என்பதை நாம் விமர்சிக்கும் போது, கேவலம் அரசியல் வாதிகளை ஈர்ப்பதற்கும் அதன் மூலம் தேர்தல் ஆதாயம் பெறுவதற்கும் ஏன் பொய் சொல்லுகின்றீர்கள்.
இட ஒதுக்கீடு எனும் பொதுப்பிரச்சனைக்காக மக்களை கூட்டிவிட்டு அதை வைத்து தங்கள் பக்கம் தான் முஸ்லிம்கள் உள்ளனர் என்று காட்டி, வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னைiயும் தன் இயக்கத்தையும் வளர்த்துக் கொள்ள மக்களை மடையர்காளக்குவதா?
15 லட்சம் முஸ்லிம்கள் கூட வேண்டும் என்றால் 30,000 பஸ்களில் 40 பேர்வீதம் வந்தால் கூட 12 லட்சம் தான் வருகிறது. 30,000 பஸ் என்றால் எத்தனை கிலோமீட்டருக்கு நிறுத்த வேண்டும் தெரியுமா ?
இதைச் சொன்னால் சில சகோதரர்கள், கோரிக்கையை முன்வைத்து போராடும் போது எண்ணிக்கை பற்றி பேசி நம்மை நாமே குறைத்து காட்டுவது அந்த கோரிக்கையை பாதிக்காதா? என கேட்கின்றனர்.
இதே கேள்வியை அவர்களிடம் நாம் கேட்கிறோம் டிசம்பர் 6 அன்று ப.சிதம்பரம் வீடு முற்றுகையிட்டு கைதான போது நாமும் கோரிக்கையை முன்வைத்து தான் போராடினோம்.
தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அமைப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து உணர்வைக்காட்டி நம்விடுதலைக்கு போராடிய நேரத்தில் இவர் என்ன சொன்னார் ஆயிரக்கணக்கானோர் கைது என்றால் சில ஆயிரம் பேராவது இருக்க வேண்டும்.
வீடியோவை ஓடவிட்டு இவர்களின் தலைகளை எண்ணிவிடலாம். இவர்களை அடைத்து வைத்துள்ள மண்டபத்தின் அளவு எவ்வளவு சதுரடி? என்றெல்லாம் கொச்சைப்படுத்தினார்கள். இப்போது தனக்கு எனும் போது வலிக்கிறது.
மேலும் இடஒதுக்கீடு பொதுவான கோரிக்கை முஸ்லிம்கள் எங்கள் பின்னால் வந்தே தீரவேண்டும் வேறு வழியில்லை. என்றெல்லாம் கூறுகின்றீர்களே ! நீங்கள் எத்தனை பொதுவான கோரிக்கைகளுக்காக மற்ற மாநாடுகளில் பங்கேற்றீர்கள் நீங்கள் செய்யாத ஒன்றை பிறருக்கு ஏன் சொல்லுகின்றீர்கள் இது அல்லாஹ்விடத்தில் வெறுப்புக்குரியதாகும். என்பது உங்களுக்கு தெரியாதா?
பீஸ் போன்ற மார்க்க மாநாடுகளுக்கே மற்றவர்கள் அழைத்தால் யாரும் போக கூடாது நீங்கள் அழைத்தால் அரசியல் மாநாட்டுக்கு அனைவரும் வரவேண்டும் என்பது என்ன நியாயம். பொதுவான கோரிக்கை என்று இப்போது பேசும் நீங்கள் இந்த கோரிக்கைக்காக மற்ற இயக்கங்களை அழைத்து எத்தனை முறை பேசியுள்ளிர்கள் !
பேச வேண்டாம் மற்ற அமைப்புகளுக்கு அழைப்பாவது விட்டீர்களா ? சுன்னத் ஜமாஅத் மக்களை வரவேண்டும் என கூறும் நீங்கள் முஸ்லிம் லீக், தமுமுக, இதஜ, எஸ்டிபிஐ உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்காதது ஏன் ?
மற்ற நேரங்களில் மற்ற முஸ்லிம்களை முஸ்லிம் இல்லை நாங்கள் மட்டுமே பரிசுத்த முஸ்லிம்கள் என பிராமணியம் பேசி, மற்ற பள்ளிகளில் தொழக்கூடாது மற்ற முஸ்லிம்களின் பின்னால் தொழக்கூடாது மற்றவர்கள் நடத்தும் பொதுக்கூட்டம் மாநாடுகளுக்கு பேசக்கூடாது என இஸ்லாத்தில் இல்லாத தீண்டாமையை கடைபிடிக்கும் நீங்கள் இப்போது மட்டும் முஸ்லிம்களை வாருங்கள் என அழைப்பது ஏன் ?
என்று கேட்டால் உலக கணக்கில் அவர்கள் முஸ்லிம்கள் மறுமைகணக்கில் அவர்கள் முஸ்லிம்களா ? என்று கேட்கின்றீர்களே மறுமை கணக்கில் அவர்கள் முஸ்லிம்கள் இல்லையா என்பது அல்லாஹ் அறிந்த விஷயம் அல்லாஹ்வின் அதிகாரத்தை நீங்கள் ஏன் கையில் எடுக்கிறீர்கள் ?
உங்கள் கொள்கைப்படி உங்கள் இயக்கத்தினர் தவிர யாரும் முஸ்லிம் இல்லை! இஸ்லாமிய கொள்கைப்படி நீங்களும் முஸ்லிம் இல்லை! ஏனென்றால் உங்களிடம் தொழுகை இல்லை பின் எப்படி 15 லட்சம் முஸ்லிம்கள் தீவுத்திடலில்,
இதைச் சொன்னால் தொழுகையை பற்றி பேசாதீர்கள். அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ளது. என்று சப்பைக்கட்டு கட்டுகின்றீர்கள். தொழுகை அவருக்கும் அல்லாஹ்விக்கும் உள்ளது என்றால் ஷிர்க், பித்அத், வரதட்சனை, வட்டியை பற்றி பேசுகிறீர்கள் அது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் என்று அவர்கள் கூறமாட்டார்களா?
மார்க்க ரீதியில் ஒருவனின் தொழுகையை பற்றி சுட்டிக் காட்டலாமா ? என்று கேட்கின்றீர்களே ருக்கூவையும் சுஜூதையும் சரியாக செய்யாதவன் தொழுகை திருடன் என நபி (ஸல்...) சுட்டி காட்டும் போது முழுத் தொழுகைகளையும் திருடுபவரை சுட்டிக்காட்டக்கூடாதா?
சுப்ஹூ தொழ வராதவர்களை வீட்டோடு எரிக்க நினைத்ததுண்டு என நபி (ஸல்...) சுட்டிக்காட்டவில்லையா?
சுப்ஹூ தொழுகையும், இஷாவையும் விடுவது முனாபிக்கின் அடையாளம் என இப்படிப்பட்டவர்களை நபி (ஸல்...) அவர்கள் அடையாளம் காட்டவில்லையா ?
கண் தெரியாத சஹாபாவிற்கே பாங்கு சத்தம் கேட்டால் பள்ளியில் தொழுவது கட்டாயம் என்று நபிகள் எடுத்து சொல்லவில்லையா ?
கடைசி மூச்சுவரை கால் தரையில் இழுபட நபி (ஸல்...) தொழ வந்தார்கள். என்ற ஹதிஸ் எல்லாம் மக்களுக்குத்தானா ! மவ்லவிகளுக்கு இல்லையா ?
உங்களை மறந்துவிட்டு மக்களை நன்மை செய்ய ஏவுகின்றீர்களா? இவ்வளவு ஏன் மீலாது விழா நடத்து பவர்கள் ஊர்வலத்தில் உட்கார்ந்து கொண்டு தொழமாட்டார்கள்.
அஸர் போகும், மஃரிப் போகும் ஆனால் ஊர்வலம் போகும் என இவர் மற்றவர்களை விமர்சித்தாரா இல்லையா
ஆகையால் வக்காலத்து வாங்குவதை விட்டுவிட்டு இயக்கநிர்வாகிகள் அவரை ஜமாஅத்தோடு தொழச்சொல்லுங்கள் நபி ஸல் கூறுவது போன்று ஷிர்க் மற்றும் குப்ரிலிருந்து காப்பாற்றுங்கள் முஸ்ஸிமாக அவர் முதலில் தொழுகட்டும் பிறகு முஸ்லிம்களை அழைக்கட்டும் ஏனெனில் தொழுகையில்லாதவனுக்கு இஸ்லாத்தில் எந்த பங்கும் இல்லை என்பது நபி ஸல் அவர்களின் வாக்கு !
Comments