Posts

Showing posts from March, 2009

திருந்தட்டும்

Image
"ஹராமுக்கும் ஹலாலுக்கும் மத்தியில் வித்தியாசமாகிறது தப் (தாயிரா) அடிப்பதும் சப்தமிடுவதும் (பகிரங்கப்படுத்துவதும்) ஆகும்" என்று இறைத் தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ஆறிவிப்பவர் முஹம்மது இப்னு ஹாதிப்(ரலி) நூல் திர்மிதி, அஹ்மது, நஸயீ, இப்னுமாஜா, ஹாகிம். இந்த ஹதீஸை மொழி பெயர்த்து தந்தவர் சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்த உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவுலவி கே.எப். ஜலீல் அஹ்மது உஸ்மானி என்ன ஒரு சமுதாயப்பணி. வெறிச்சோடிக்கிடக்கும் …............... நிரபப் போகிறவர்களின் (அரசியல்வாதிகளின் ) செயல்பாடுகளின் தொடக்கம்.fromMohideen Sahib Yakath Ameen Thanks and Best Regards Abu Abdullah 8 mameen@gulfmaid.com // ஒருவரை நீங்கள் கண்டிப்பதானால் அதை கண்ணியமான முறையில் தெரியப்படுத்தவேண்டுமே தவிர தரக்குறைவாக பேசுவதோ திட்டுவதோ கூடாது அது மூமினின் பண்புமல்ல. அப்படி அறியாமல் பேசுபவர்களை மற்ற சகோதரர்கள் (அமீன்) ஊக்கப்படுத்துவது கூடாது. ஒரு முஸ்லிமின் தவறை அவர் மனம் புண்படாத முறையில் சுட்டிகாட்டினால் அவர் அதை ஏற்றுகொள்ளலாம். அதை விட்டுவிட்டு வசை பாடினால் வரம்பு மீறி பேசியதற்காக இ

ம.ம.க. பற்றி பத்திரிக்கைச் செய்திகள்

Image
பேச்சு ஒன்று பேட்டி ஒன்று செய்திகள் பலவிதம். தி.மு.க. விடம் பேசி விட்டோம். பாளையங்கோட்டையையும் வாணியம்பாடியையும் தர மாட்டார்கள் என்று முஸ்லிம் லீக் கூறியது. பாளையங்கோட்டையையும் வாணியம்பாடியையும் த.மு.மு.க. பெற்றுக் கொடுத்தது. மு.லீக் வாக்குறுதியை மீறியதால் பாளையங்கோட்டையை தி.மு.க. திரும்ப எடுத்துக் கொண்டது என்றார். இததைத்தான் தினமணியில் தவறாக எழுதியுள்ளது.

இறையச்சம்தான் ஒரு மனிதனை நேர்வழிபடுத்தும்.

Image
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். கண்ணியத்திற்குரியவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முதல் முகவரி மனித நேய இல்லம். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டிருக்கும் அரசியல் கட்சியின் பெயர் மனித நேய மக்கள் கட்சி. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனர் குணங்குடி ஹனீபா. மனித நேய இல்லம் என்பதும் குணங்குடி ஹனீபா அவர்களது இல்லம்தான். குணங்குடி ஹனீபா. 1995 ஜனவரியில் மேலப்பாளையத்தில் தடாவுக்கு எதிராக ஜாக் சார்பில் நடத்தப்பட்டது மனித நேயப் பேரணி. மனித நேய மாநாடு. அப்பொழுதுதான் குணங்குடி ஹனீபா அவர்கள் மேலப்பாளையம் வந்தார்கள். அதன் பிறகு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனித நேய மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சி துவங்கிய பின் மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் காஞ்சி அப்துஸ்ஸமது கலந்து கொள்ளும் இந்த திருமணத்துக்கு வந்துள்ளார்கள். கட்சி பாகுபாடு இன்றி. 1995ஆண்டு குணங்குடி ஹனீபா அவர்கள் கலந்து கொண்ட ஜாக் சார்பில் மேலப்பாளையத்தில் நடத்தப்பட்ட மனித நேயப் பேரணி. மற்றும் மனித நேய மாநாட்டில்

மனித நேய மக்கள் கட்சி முதல் பொதுக் கூட்டம்

Image
மனித நேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் பாளை ரபீக் எழுச்சி உரை.

முதல் தேர்தல் நிலை விளக்கப் பொதுக் கூட்டம்

Image
ம.ம.க. நெல்லை மாவட்ட பொருளாளர் புளியங்குடி செய்யது அலி ஆவேச உரை த.மு.மு.க. நெல்லை மாவட்ட தலைவர் பாளை பாரூக் கர்ஜிக்கிறார். த.மு.மு.க. பொதுச் செயலாளரும் வக்பு வாரிய தலைவருமான எஸ். ஹைதர் அலி த.மு.மு.க. கூட்டத்தின் ஒரு பகுதி

மனித நேய மக்கள் கட்சிக்கு முதல் தேர்தல் நிதி

Image
த.மு.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ பாஸி, ரஸாதி அனைத்து மவுலவிகளின் பேராதரவும் மனித நேய மக்கள் கட்சிக்கே என்பதை விளக்கிப் பேசினார். மனித நேய மக்கள் கட்சிக்கு வழங்கப்படும் முதல் தேர்தல் நிதி இதுவாகத்தான் இருக்கும் என்று கூறி கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி ரூபாய் மூவாயிரம் ரொக்கமாக வழங்கினார். அதைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல் நிதியாக குவைத் கிளை சார்பில் ரூபாய் பத்தாயிரத்துக்கான காசோலையை மேலப்பாளையம் அச்சப்பா வழங்க ம.ம.க. மாநில பொதுச் செயலாளர் காஞ்சி அப்துஸ்ஸமது ஸாஹிப் பெற்றுக் கொண்டார்.

ம.ம.க. மனித நேய பேரணி

Image
மாலையில் மேலப்பாளையம் பசார் திடல் என்றழைக்கப்படும் அல்லாமா இக்பால் திடலில் நடந்த முதல் ம.ம.க. பொதுக் கூட்டத்தில் த.மு.மு.க. பொதுச் செயலாளரும் வக்பு வாரிய தலைவருமான எஸ். ஹைதர் அலி அவர்கள் எழுச்சிப் பேருரையாற்றினார். அப்பொழுது 1995இல் மேலப்பாளையத்தில் நடந்த மனித நேய பேரணி மற்றும் மனித நேய மாநாட்டுக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கும் தொடர்பு உண்டா என்பதை விளக்கிப் பேசினார். கா.அ. முஹம்ம்மது பஸ்லுல் இலாஹி இல்லத் திருமணத்தில் த.மு.மு.க. பொதுச் செயலாளரும் வக்பு வாரிய தலைவருமான எஸ். ஹைதர் அலி அவர்கள் தலைமை உரையாற்றினார். த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி ஹனீபாதான் வன்னியர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க மூல காரணமாக இருந்தவர் என்பதை விளக்கிப் பேசினார்.

பொதுக் கூட்டம்

Image
ம.ம.க. பொதுச் செயலாளர் காஞ்சி அப்துஸ்ஸமது ஸாஹிப் சிறப்புரை த.மு.மு.க. மாநில செயலாளர் மைதீன் சேட் கான் உணர்ச்சி உரை

இலட்சிய திருமணம்

Image
http://mdfazlulilahi.blogspot.com/2009/01/blog-post_30.html http://mdfazlulilahi.blogspot.com/2009/01/8-10.html

பெண் வீட்டார் திருமண விருந்து வைக்கவில்லை.

Image
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அவனது தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி இல்லத் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. திருமணத்திற்கு வந்த மாண்புமிகு வக்ஃபு வாரிய தலைவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான S. ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் P. அப்துஸ் ஸமது மாண்புமிகு சுற்றுச் சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர். T.P.M. மைதீன் கான் மற்றும் பிரமுகர்கள் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஒண்ணேகால் மணி நேரம் தாமதமாக வந்தது. காலை 8.30க்கு நெல்லை வந்து சேர வேண்டிய ரயில் மழையின் காரணமாக 9.45க்கு வந்து சேர்ந்தது. எனவே 10.30க்கு நடைபெற வேண்டிய திருமண நிகழ்ச்சி 11.30க்கு துவங்கியது. திருமண நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநில துணைத் தலைவர் S.கோதர் மைதீன்Ex M.L.A. L.K.S.மீரான் மைதீன், ஹாபீஸ் மைதீன் அப்துல் காதர் M.C. மற்றும் மு.லீக் தொண்டர்கள். தக்வா பள்ளி சார்பில் தலைவர் இனாயதுல்லாஹ், பொருளாளர் அன்வர், செய்யது அலி, சாகுல்ஹமீது மற்றும் நிர்வாகிகள். மேல