பாளையங்கோட்டைத் தொகுதியில் போட்டியிட உள்ளேன்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
கண்ணியத்திற்குரியத்திற்குரியீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நலம், நலம் பல சூழ்க.
சிறு வயதில் தி.மு.க. தொண்டனாகவும் பிறகு அ.தி.மு.க. பிரமுகனாகவும் இருந்தேன். மீனாட்சிபுரம் ரஹ்மத் நகராக மாறியது. அப்பொழுது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அதை விமர்சித்தார். அதனால் முஸ்லிம் லீக்கில் இணைந்தேன். 1987இல் மு.லீக்கின் அன்றைய தலைவர் ஆ.கா.அ. அப்துஸ்ஸமது துபை வந்தார். அப்பொழுது அடுத்து வரும் தேர்தலில் பாளையங்கோட்டைத் தொகுதியில் மு.லீக் சார்பில் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். 1988இல் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் என்னை வேட்பாளராக முடிவு செய்து வலியுறுத்தினார்.
அப்பொழுது பி.ஜெ. அவர்களிடமும் ஷம்சுல் லுஹா அவர்களிடமும் இது பற்றி ஆலோசனை கேட்டேன். தேர்தலில் ஓட்டுப் போடுவதே ஹராம். எனவே போட்டி போடாதீர்கள் என்றார்கள். எனவே அரசியலை விட்டு முற்றிலுமாக விலகினேன். பிறகு பி.ஜெ. அவர்களே 1995க்குப் பிறகு அரசியலுக்கு வந்தார்கள். 1996 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் களப்பணி ஆற்றினார்கள். ஓட்டுக் கேட்டார்கள், ஓட்டுப் போட்டார்கள்.
2004 ஏப்ரல் ஏகத்துவத்தில் தேர்தலில் களப்பணி ஆற்றுவது ஹராம் என்பது போல் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் காட்டினார். தேர்தலில் களப்பணியாற்றினால் ஈமான் போய் விடும். எனவே பி.ஜெ.பிக்கு எதிராக உள்ள அணிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய போகக் கூடாது என்று எழுதினார்கள். இப்படி எழுதி ஈராண்டுகள் முடியவில்லை. இப்பொழுது தேர்தலில் களப்பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளார்கள். அதுவும் யாருக்கு?
டான்ஸ் ஆட என்ற பெயரால் வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்புவதை தொழிலாகக் கொண்டவருக்கு. (டான்ஸ் ஆட என்ற பெயரால் வரும் பெண்கள் விபச்சாரத்தில்தான் ஈடுபடுகிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே) இவரது இந்த தொழிலை அடையாளம் காட்டி இவனெல்லாம் சமுதாயத் தலைவன் என்று பல முறை விமர்சித்தவர்தான் பி.ஜெ. இந்த தொழில் அதிபருக்குத்தான் சீட்டு வாங்கிக் கொடுத்து ஓட்டும் கேட்கப் போகிறார் பி.ஜெ. எனவே ஓட்டுப் போடுவது ஹராம்.. தேர்தலில் களப்பணியாற்றினால் ஈமான் போய் விடும். என்று மார்க்கத்தின் தீர்ப்பாக பி.ஜெ. சொன்னதெல்லாம் மார்க்கம் அல்ல. சந்தர்ப்ப வாதம் என்று விளங்கி விட்டோம்.
உமர்(ரலி) அவர்கள் ஆட்சியாளராக இருந்த போது கிறிஸ்தவ ஆலயம் சென்றார்கள். அங்குள்ள பாதிரிகளுடன் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் புநப்பட்டார்கள். பாதிரிகளோ அவர்கள் இடத்திலேயே தொழும்படி சொன்னார்கள். நான் இன்று தொழுது விடுவேன். நாளை எங்கள் சமுதாயம் இது உமர் தொழுத இடம் என்று உரிமை கொண்டாட வந்து விடக் கூடும் என அஞ்சுகிறேன் என்றார்கள். இந்த சம்பவத்தின் மூலம் ஒரு ஆட்சியாளன் என்ற முறையில் உமர்(ரலி) கிறிஸ்தவ ஆலயம் சென்றதை அறிகிறோம்.
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சி புரிந்தார்கள். அப்பொழுது அவர்களது ஆட்சியின் கீழ் யூதர்களும் கிறிஸ்துவர்களும் இருந்துள்ளார்கள். ஹரம் எல்கைக்குள் வர மட்டும்தான் அவர்களுக்கு தடை விதித்தார்களே தவிர அவர்களின் உரிமைகளை மறுக்கவில்லை. இஸ்லாத்தை பிரச்சாரத்தின் மூலம்தான் அவர்களுக்கு எத்தி வைத்தார்கள். எனவே மார்க்கத்தில் உள்ளதுதான் அரசியல். இஸ்லாத்தின் ஒரு அங்கமே அரசியல் என்று தெளிவு பெற்று விட்டோம். அரசியல் சாக்கடை என எல்லாரும் ஒதுங்கினால் அதை என்றுதான் துப்புரவு செய்வது.
இஸ்லாமிய பிரச்சாரங்களில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் என கூறுகிறார்கள். இதன் மூலம் இஸ்லாம் களங்கப்பட்டுள்ளது என்றுதான் கூறுகிறார்கள். இஸ்லாத்தில் நுழைந்து விட்ட சடங்கு சம்பிரதாயங்களை களையத்தான் பாடுபடுகிறோமே தவிர இஸ்லாத்தை விட்டே ஒதுங்கவில்லை. அது போல்தான் அரசியலும். அரசியலை விட்டே ஒதுங்கியதால்தான் நம் சமுதாயம் உரிமை இழந்ததாக ஆகி விட்டது. இதை கருத்தில் கொண்டு வரக்கூடிய சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட உள்ளேன்.
தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக் வேட்பாளராக த.மு.மு.க.வின் பேராதரவுடன் பாளையங்கோட்டைத் தொகுதியில் போட்டியிட உள்ளேன். எனது முயற்சி வெற்றி பெற துஆச் செய்யுங்கள். பாளைத் தொகுதியில் உள்ள உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க கூறுங்கள். வஸ்ஸலாம்.
அன்புடன்:
கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி.
55. சமாயினா Nஷக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம்,திருநெல்வேலி. 627005.
fazlulilahi@gmail.com, mdfazlulilahi@hotmail.com, fazlulelahee@yahoo.com

Comments