மீண்டும் முபாஹலா பூச்சாண்டி.

                    பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                    16-03-2006
        
கண்ணியத்திற்குரிய சித்தீக் நூராணி அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. சம்சுத்தீன் காஸிமி அவர்களை திருவாளர் பி.ஜெ. முபாஹலாவுக்கு அழைத்துள்ளது  சம்பந்தமாக கேட்டீர்கள். 

இது பி.ஜெ.க்கும் சம்சுத்தீன் காஸிமி ஆகிய இருவருக்கும் மட்டும் உள்ள பிரச்சனை அல்ல. கோனிகா பஷீர் அஹ்மது தலைமையில் சென்ற மற்ற 11 பேர்களுக்கும் சம்சுத்தீன் காஸிமி அவர்களுக்கும் உள்ள பிரச்சனையாகும். அதனால்தான் இது விஷயமாக பி.ஜெ. டி.வி.யில் நடத்தி வரும் நாடக காட்சியில் கான் பாகவி, தர்வேஸ் ரஷாதி, கோனிகா பஷீர், திமு. அப்துல்காதர் என அந்த அணியில் உள்ள அனைவருமே தோன்றி இருக்கிறார்கள். 

அவருடன் எஞ்சியுள்ள 11 பேரையும் இழிவுபடுத்தத் தயங்கவில்லை.

எப்பொழுதுமே பி.ஜெ. தன்னை உயர்வுபடுத்துவதற்காக பிறரை கொச்சைப்படுத்த தயங்க மாட்டார். சம்சுத்தீன் காஸிமி அவர்களை நோக்கி முபாஹலா பூச்சாண்டிக் காட்டி பேசியுள்ள பேச்சை மீண்டும் கேளுங்கள். அதில் கூட பி.ஜெ. தன்னை உயர்வுபடுத்துவதற்காக அவருடன் எஞ்சியுள்ள 11 பேரையும் இழிவுபடுத்தத் தயங்கவில்லை.  இந்த புதிய முபாஹலா பூச்சாண்டி பற்றி பார்க்கும் முன் அவருடன் உள்ள 11 பேரையும் எப்படியெல்லாம் இழிவுபடுத்தியுள்ளார் என்பதை பாருங்கள். 

மற்றவர்களெல்லாம் சாப்பிட்டார்கள்

பிரஸிடெண்ட் ஹோட்டலில் வகை வகையாக உணவு இருக்கும். அங்கே கூட்டம் போட்டால் அதிபர் அபூ சாப்பாடு போட்டு விடுவார். எல்லாருக்கும் நல்ல சாப்பாடு தருவார். அந்த அடிப்படையில் அங்கே கூட்டம் போட முடிவு எடுத்தோம். (அதாவது பி.ஜெ.யுடன் அணி சேர்ந்துள்ள எல்லாரையும் சாப்பாட்டு ராமன்கள், சோத்துப் பட்டாளங்கள்.) என்கிறார். இந்த வகை வகையான உணவை பி.ஜெ.யும் அவரது கட்சிக்காரர் பாக்கரும்தான் சாப்பிடவில்லை. மற்றவர்களெல்லாம் சாப்பிட்டார்கள் என்றும் கூறுகிறார். 

பி.ஜெ. பொய்யர் என்பதை பி.ஜெ.யின் அந்த உரையே நிரூபிக்கிறது.

முதலில் வெளியில் சாப்பிட்டோம் என்கிறார். பிறகு அன்று இரவு சாப்பிடவே இல்லை என்றும் கூறுகிறார். இந்த முரண்பாட்டின்படியும், முரண்பாடு பற்றி பி.ஜெ. அதில் வைக்கும் வாதப்படியும் பி.ஜெ. பொய்யர் என்பதை பி.ஜெ.யின் அந்த உரையே நிரூபிக்கிறது. அடுத்து “எதுக்கு பிரசிடெண்ட் ஹோட்டலில் வந்து திங்கிறதுக்கு வந்தீங்க” என்று தெளிவாகவே கேட்கிறார். அல்லாமாவுக்கு அளவுகோல் சட்டி சோறு திண்பான் என்று தவ்ஹீது மேடைகளில் பேசியவர் பி.ஜெ. அவரது அந்த பேச்சுக்கு ஆதாரமாக, விளக்கமாக இந்த நிகழ்ச்சியை சொல்லி காட்டி உள்ளார் என தெரிகிறது.

சாப்பாடு விஷயத்தில் பன்மையாகவே கூப்பாடு போடுகிறார்.

ஒன்றரை மணி நேரம் உட்கார்ந்து சாப்பிட்டீர்களா? இல்லையா? என்றும் கேட்கிறார். காஸிமி அவர்களை நோக்கி ஒருமையில் பேசியவர் இங்கே சாப்பாடு விஷயத்தில் பன்மையாகவே கூப்பாடு போடுகிறார். ஒன்றரை மணி நேரம் உட்கார்ந்து சாப்பிட்டவர்களில் கான் பாகவி ஆலிம்,  தர்வேஸ் ரஷhதி ஆலிம் என எல்லாருமே அடக்கம்தான். “எதுக்கு பிரசிடெண்ட் ஹோட்டலில் வந்து திங்கிறதுக்கு வந்தீங்க” என்ற கேள்வி எல்லாருக்கும் பொதுவானதுதான். பி.ஜெ.யுடன் அணி சேர்ந்தவர்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். 

அவருடன் சென்றவர்கள் நிலையை மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார்.

“முதல்வரை சந்திக்கப் போகிறது பெரிய பாக்கியமா? முன்னாடி உட்கார்ந்து படம் காட்டனும் போஸ் கொடுக்கனும் என்றெல்லாம் எனக்கு எந்தக் காலத்திலும் ஆர்வம் கிடையாது. முதல்வரை பார்க்கப் போன இடத்தில் முண்டுகிற ஆட்கள் முண்டுங்கள் என நான்பாட்டுக்கு சாதாரணமாக வருகிறேன்” என்கிறார். இவர் மட்டும்தான் சாராணமாக வந்துள்ளார். மற்றவர்களெல்லாம் முன்டியுள்ளார்கள். படம் காட்டனும் போஸ் கொடுக்கனும் என்றிருந்துள்ளார்கள். இப்படித்தான் அவரது பேச்சு மூலம் அவருடன் சென்றவர்கள் நிலையை மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார். அவர்களை இழிவு படுத்தியுள்ளார். 

உடன் வந்தவர்களை ஆடு, மாடு அளவுக்கு தாழ்த்தியா கேவலப்படுத்துவது.

கும்பகோணத்தில் பேரணி நடத்தினார்களே த.த.ஜ. அவர்களைத்தான் கூப்பிட்டு வரணும் முதல்வர் சொன்னார்கள். நாங்கதான் உங்களையெல்லாம் இழுத்துக்கிட்டு போனோம் என்கிறார். “இழுத்துக்கிட்டு போனோம்“ என்கிற அகறினை எவற்றுக்கு பயன்படுத்தும் வார்த்தை? ஆடு, மாடு போன்ற மிருகங்களுக்கு பயன்படுத்தும் வார்த்தை அல்லவா. ஆடு, மாடு போன்ற மிருகங்களுக்கு பயன்படுத்தும் வார்த்தையையல்லவா இந்த ஆலிம்களுக்கு பயன்படுத்தியுள்ளார். கான் பாகவி ஆலிம்,  தர்வேஸ் ரஷhதி ஆலிம், கோனிகா பஷீர், திமு. அப்துல்காதர் போன்றவர்களை இழுத்துக் கொண்டு போனோம் என்கிறார். உடன் வந்தவர்களை ஆடு, மாடு அளவுக்கு தாழ்த்தியா கேவலப்படுத்துவது. 

அவருடன் சென்ற அமைப்புகளுக்கு மானமிருந்தால் இனியும் அவருடன் இருப்பார்களா?

முதல்வர் த.த.ஜ. வைத்தான் சந்திக்க கூப்பிட்டார். நாங்கள்தான் மற்ற அமைப்புகளை இழுத்துக்கிட்டு போனோம் என்பதன் மூலம் என்ன சொல்கிறார். மற்ற அமைப்புகளெல்லாம் செல்லாக் காசு என்று கூறி மானத்தை வாங்குகிறார். அதுவும் டி.வி.யில் போட்டு மானத்தை வாங்குகிறார். மானங்கெட்டுப் போய் அவருடன் சென்ற அமைப்புகளுக்கு மானமிருந்தால் இனியும் அவருடன் இருப்பார்களா? அவருடன் சென்றவர்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்தியுள்ளார் என்பதை இன்னும் எழுதுவதாக இருந்தால் நீண்டு கொண்டே போகும். டி.வி.யில் போட்டு மானத்தை வாங்குகிய பிறகும் அவருடன் உள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம். புரிந்து கொள்ளுங்கள். 

நான் நான் என்பதை நிலை நாட்டுவது இதுதான் அவரது நிலை.

முதல்வர் த.த.ஜ.வைத்தான் சந்திக்க கூப்பிட்டார் என்பதை விட தன்னைத்தான் கூப்பிட்டார் என்பதை திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்து கூறுகிறார். நீங்கள் வந்தால்தான் சந்திப்போம் என்று சொன்னதாக சொல்கிறார். இவர் போகாவிட்டால் அந்த சந்திப்பே நடந்திருக்காது என்கிறார். மற்ற அமைப்புகளோடு ஒப்பிடும்போது தானிருக்கும் அமைப்பை உயர்வாக கூறுவது. தானிருக்கும் அமைப்பு என வந்து விட்டால் நான் நான் என்பதை நிலை நாட்டுவது இதுதான் அவரது நிலை. அவரது உரையின் ஆரம்பத்தில் 2 ஆலிம்கள் சொல்வது உண்மையாக இருக்குமா? குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு ஆலிம் சொல்வது உண்மையாக இருக்குமா? என்ற அபத்த வாதம் வைத்துள்ளார். 

தர்ஜுமாவிலே அடுத்தவன் மனைவிக்கு காதல் கடிதம் கொடுத்தவர்.

ஷிர்க், பித்அத்களை அடையாளம் காட்டி எதிர்துள்ள ஆலிம்கள் குறைவு. ஆதரித்துள்ள ஆலிம்கள்தான் அதிகம். எனவே பி.ஜெ.யின் இந்த அபத்த வாதத்தை ஏற்றால் எல்லாரும் பழைய நிலைக்கு திரும்ப  வேண்டியதுதான். ஷிர்க், பித்அத்களை விமர்சித்த பி.ஜெ. நாத்திகராகப் போனவர். குர்ஆன் தர்ஜுமாவிலே அடுத்தவன் மனைவிக்கு காதல் கடிதம் கொடுத்தவர். இது மட்டுமன்றி இது மாதிரியான ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். எனவே அவர் அடையாளம் காட்டிய ஷிர்க், பித்அத்களை இஸ்லாத்தில் உண்டு என கூறி விட முடியுமா? 

கொள்ளை அடித்த கொள்ளைக் கூட்டம் எது?

பொருளாதார குற்றச்சாட்டுக்கு ஆளானவர். அதனால் ஏற்கக் கூடாது என்கிறார். அவரின் இந்த வாதப்படியும் இவர்களது கூற்றதை;தான் ஏற்கக் கூடாது. ஒருவன் பொருளை ஒருவன் எடுத்துச் சென்று விட்டால் அது திருட்டு. அவனுக்குப் பெயர் திருடன். திருட்டுக்கு இஸ்லாமிய சட்டப்படி ஒரு கையில் மணிக்கட்டுக்கு கீழ் வெட்டப்பட வேண்டும். ஒரு கூட்டத்தினர் பொருளை ஒரு கூட்டத்தினர் எடுத்துச் சென்று விட்டால் அதற்குப் பெயர் கொள்ளை. த.மு.மு.க. எனும் கூட்டத்தினருக்கு சொந்தமான டிரஸ்டுகளையும், பத்திரிக்கைகளையும் எடுத்துச் சென்று விட்டவர்களுக்கு என்ன பெயர். கொள்ளையர்கள். இதை கொள்ளை அடித்த கொள்ளைக் கூட்டம் எது? பி.ஜெ.  அன்கோ. அல்லவா. இஸ்லாத்தின் சட்டப்படி கொள்ளையர்களின் மாறு கால், மாறு கை வெட்டப்பட வேண்டும் அல்லவா இந்த தண்டனைக்குரிய கொள்ளையர்களான பி.ஜெ அன்கோ. ஊரறிந்த கொள்ளையர்கள் அல்லவா. இவர்கள் கூற்றை நம்பலாமா?

இந்த 9 பேரும் பி.ஜெ.க்கு எதிராக சாட்சி சொல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

9 பேர் சொல்வது உண்மையாக இருக்குமா? ஒருவர் சொல்வது உண்மையாக இருக்குமா? என்றும் வாதிக்கிறார். இது புதிய வாதம் அல்ல. 1986இல் அபூஅப்துல்லாஹ்விடம் துவங்கி இந்த வாதம்தான் வைத்து வருகிறார். ஒவ்வொரு நேரத்திலும் அவருடன் இருப்பவர்கள் அவரது கூற்றை உண்மைப்படுத்துவது போல் மவுனியாக இருப்பதும், பிறகு பி.ஜெ. என்ற இந்த முஸீபத்து அவர்கள் மீது இறங்கும் போது பி.ஜெ.தான் பொய்யர் என சொல்வதும்தான் வரலாறு கண்ட உண்மை. எனவே அடுத்த ஒரு ஆண்டுக்குள்ளோ முன்னோ பின்னோ இந்த 9 பேரும் பி.ஜெ.க்கு எதிராக சாட்சி சொல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 

எம்.பி. பதவிக்கு ஆசைப்பட்டு பி.ஜெ. செய்த முயற்சி தோழ்வியுற்றது.

இவர்கள் சாட்சி சொல்ல வரும்போது மறைக்கப்பட்ட பல உண்மைகள் வரும். பதவிக்கு ஆசைப்படாதவர் என்று தன்னைப் பற்றி விளம்பரம் செய்து வரும் பி.ஜெ. எம்.பி. பதவிக்கு ஆசைப்பட்டார். எம்.பி. பதவிக்கு ஆசைப்பட்டதால்தான் த.மு.மு.க. தலைமையை கைப்பற்ற முயற்சி செய்தார். த.மு.மு.க. தலைமையை கைப்பற்றினால் உங்களுக்கு எம்.பி. சீட் என பி.ஜெ.யிடம் பேரம் பேசி வாக்களிக்கப்பட்டது. ஸைபுல்லாஹ்வை தலைவர் போல் காட்டி இறுதியாக இவர் தலைவர் ஆனார் அல்லவா. அது போல பாக்கரை தலைவர் போல் காட்டி த.மு.மு.க. தலைமையை கைப்பற்றி விட்டு இறுதியில் பி.ஜெ. தலைவராக வர முடிவு செய்து இருந்தார். எம்.பி. பதவிக்கு ஆசைப்பட்டு பி.ஜெ. செய்த முயற்சி தோழ்வியுற்றது. 

அந்த 9 பேரில் ஒருவராவே வருங்காலத்தில் சொல்லுவார்.

த.த.ஜ. தலைவர் பதவியைக் காட்டி எம்.பி. பதவி கேட்டார். வாக்களித்தவர்கள் தெளிவாகச் சொல்லி விட்டார்கள். த.மு.மு.க. தலைமையை கைப்பற்றினால்தான் உங்களுக்கு எம்.பி. சீட் என்றுதான் கூறி இருந்தோம். புதிய அமைப்புக்கு தலைவராக ஆனால் தருவோம் என கூறவில்லை என கூறி விட்டனர். வாக்களித்தவர்களின் நோக்கம் பி.ஜெ.க்கு எம்பி பதவி அளிக்க வேண்டும் என்பது அல்ல. வலுவான முஸ்லிம்களின் அமைப்பாக உருவாகி விட்டதோடு மேலும் வளர்ந்து வரும் முஸ்லிம்களின் அமைப்பான த.மு.மு.க.வை வலு இழக்கச் செய்ய வேண்டும் என்பதுதான். எம்.பி. சீட்டுக்கு ஆசைப்பட்டு த.மு.மு.க. தலைமையை கைப்பற்ற முடியாமல் போனது. அதன் பிறகுதான் வேறு ஒரு பேரத்தின் அடிப்படையில் அடுத்த முயற்சியாக உடைக்கும் பணியில் ஈடு பட்டார். இதை அந்த 9 பேரில் ஒருவராவே வருங்காலத்தில் சொல்லுவார் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 

பி.ஜெ. அணியில் உள்ள அனைவரும் வர வேண்டும்.

கண்ணியத்திற்குரிய சித்தீக் நூராணி அவர்களே நீங்கள் கேட்டுள்ள முபாஹலா விஷயத்திற்கு வருவொம். முதல்வரை சந்திக்கச் சென்றவர்களில் சம்சுத்தீன் காஸிமி மட்டும் தனியாகவும் மற்றவர்கள் யாவரும் ஒரு அணியாகவும் உள்ளனர். தனியாக உள்ள ஒருவர் முபாஹலாவுக்கு அழைத்தால் அது அவரை மட்டுமே கட்டுப்படுத்தும். ஒரு அணியில் உள்ளவர் முபாஹலாவுக்கு அழைத்தால் அந்த அணியையே கட்டுப்படுத்தும். பி.ஜெ. அணியில் உள்ள அனைவரும் வர வேண்டும். சமுதாயத்திடம் பொய் சொல்லி ஏமாற்றுபவர்கள் யார் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். முபாஹலாவுக்கு நானும் என் மனைவி மக்களுடன் வருகிறேன்.

 சம்சுத்தீன் காஸிமி அவர்களை முபாஹலாவுக்கு அழைத்து வருவது எனது பொறுப்பு.

1986இல் இருந்து வரிசையாக ஒவ்வொன்றுக்கும் முபாஹலா நடக்க வேண்டும். கோனிகா பஷPர், கவிஞர் அப்துல் காதர், கான் பாகவி உட்பட இப்பொழுது பி.ஜெ.யுடன் உள்ளவர்கள் பற்றி பி.ஜெ. ஏற்கனவே என்ன என்ன குற்றச்சாட்டுக்கள் கூறி உள்ளார் என்பது பற்றியெல்லாம் கூறி முபாஹலா பண்ணுவேன். கோனிகா பஷீர் தொழில் பற்றி பி.ஜெ. என்ன சொல்லி உள்ளார் என்பது உட்பட அனைத்தையும் சொல்லி முபாஹலா பண்ணுவேன். பி.ஜெ.யும் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்களும் மறுத்து முபாலஹா பண்ண வேண்டும். பி.ஜெ. அணியில் உள்ளவர்கள் அனைவரும் வருவதாக ஓப்புக் கொண்ட விபரம் அவர்களது கையெழுத்துடன் உணர்வு பத்திரிக்கையில் வரவேண்டும். வந்து விட்டால் சம்சுத்தீன் காஸிமி அவர்களை முபாஹலாவுக்கு அழைத்து வருவது எனது பொறுப்பு.

திட்டமிட்டே ஒளிபரப்பி உள்ளார்கள்.

பி.ஜெ. சம்சுத்தீன் காஸிமி அவர்களை நோக்கி ”நீ சொல்வது உண்மையாக இருந்தால் உன் பொட்டாட்டி புள்ளைகளுடன் வரனும் நானும் என் மனைவி மக்களுடன் வருகிறேன்|| என்று பேசி இருக்கிறார். உன் பொட்டாட்டி புள்ளைகளுடன் வரனும் நானும் என் பொட்டாட்டி புள்ளைகளுடன் வருகிறேன் என்று சொல்லவில்லை. என் மனைவி என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். பொட்டாட்டி என்பதற்கு தனிமையில் இருக்கும் பி.ஜெ. கொடுக்கும் விளக்கமே வேறு. புண்டைக் காட்டி என்பதுதான் பொண்டாட்டி என ஆகியது என்பார். இதை திட்டமிட்டே பயன்படுத்தியுள்ளார். 

இது அவசரத்தில் வந்த வார்த்தை என்றால் எடிட் செய்து இருப்பார்கள். திட்டமிட்டே ஒளிபரப்பி உள்ளார்கள். எனவே அவர்கள் மண்டையில் பட வேண்டும். அதனால் அதே வார்த்தையை நானும் பயன்படுத்துகிறேன். “கான் பாகவியே! நீ சொல்வது உண்மையாக இருந்தால் நீ உன் பொட்டாட்டி புள்ளைகளுடன் வரனும் நானும் என் மனைவி மக்களுடன் வருகிறேன். தர்வேஷ் ரஷாதியே! நீ சொல்வது உண்மையாக இருந்தால் நீ உன் பொட்டாட்டி புள்ளைகளுடன் வரனும் நானும் என் மனைவி மக்களுடன் வருகிறேன்”  இப்படி அந்த 11 பேர் பெயரையும் பயன்படுத்தி படித்துக் கொள்ளுங்கள். 

எனவே பி.ஜெ.யுடன் உள்ளவர்களை நம்ப மாட்டோம்.

கோனிகா பஷீர், தி.மு. அப்துல் காதர் விமானம் மூலம் நேற்று கோவை வந்து மதானி, அன்சாரியை சந்தித்துள்ளனர். வழக்கை விரைவாக முடிக்க ஒத்துழைக்கும்படி முதல்வர் சொன்னதாக கூறி உள்ளனர். தவ்ஹீத் தவ்ஹீத் என்று சொல்லிக் கொள்ளும் பி.ஜெய்னுல் ஆப்தீன்தான் எங்களை இந்த கதிக்கு ஆளாக்கினார். போலீஸ் தரப்புக்கு ஆதரவாக சாட்சி சொன்னார். இவர் சாட்சி கூறியதும் போலீஸ் அதிகாரிகளெல்லாம் பி.ஜே.யிடம் கை குலுக்கி நன்றி கூறினர். எங்கள் ஸலாத்திற்கு கூட பதில் சொல்லவில்லை.  போலீஸ் படை புடை சூழ போய் விட்டார். கும்பகோணம் மாநாட்டில் தீர்மானம் போட மறுத்து விட்டார். எனவே பி.ஜெ.யுடன் உள்ளவர்களை நம்ப மாட்டோம் என சிறைவாசிகள் கூறி விட்டனர் அறியவும்.

10 இலட்சமா? ஒரு லட்சம் கூட கூடவில்லையா?

சம்சுத்தீன் காஸிமி அவர்களின் கூற்றுக்கு எதிராக உள்ள 11 பேரும் பொண்டாட்டி புள்ளைகளுடன் வர வேண்டும். இதற்கு ஒப்புக் கொண்டு 11பேர் கையெழுத்துடன் உணர்வு பத்திரிக்கையில் வரவேண்டும். வந்து விட்டால் சம்சுத்தீன் காஸிமி அவர்களை முபாஹலாவுக்கு அழைத்து வருவது எனது பொறுப்பு என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். 1986ல் இருந்து உள்ள விவகாரங்களை ஏற்கனவே எழுதி விட்டேன். 10 இலட்சமா? ஒரு லட்சம் கூட கூடவில்லையா என்பது உட்பட அனைத்திற்கும் முபாஹலா செய்வோம். வஸ்ஸலாம்.
அன்புடன்: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி, துபை


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு