பி.ஜெ. சொன்ன தேதியில் கணக்கை சமர்ப்பித்தது
சுனாமி கணக்குகளை காட்டத் தயாரா? என்று தமுமுகவுக்கு சவால் விட்டார் பீ. ஜெய்னுலாப்தீன்.
அந்த சவாலை ஏற்று பி.ஜெ. சொன்ன தேதியில் கணக்கை சமர்ப்பித்தது. வரவு, செலவு மற்றும் பாக்கி தொகை என அனைத்து கணக்குகளையும் பத்திரிகையாளர் சோலை, ஐஏஎஸ் அதிகாரி கருப்பன், உயர்நீதிமன்ற வக்கீல் சிராஜுதீன், காயிதே மில்லத் கல்லூரி தாளாளர் தாவூத் மியாகான் ஆகியோரின் முன்னிலையில் 10-12-2005 அன்று பொது மக்களிடத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
ஆனால், சவால் விட்ட பீ. ஜெய்னுலாபிதீனோ நாட்கள் அல்ல பல மாதங்களைக் கடந்து முழுக்க முழுக்க தனது ஆதரவாளர்கள் உள்ளடங்கிய கூட்டத்தில் சமர்ப்பித்ததாகக் கூறிவிட்டு இந்த வார உணர்வில் அதனை வெளியிட்டுள்ளார்.
அதிலும் பிழை 1, 2, 3 என்று போய்க் கொண்டே இருக்கிறது. அதேபோல் தவறு 1, தவறு 2, தவறு 3, தவறு 4 என தொடர்................ந்து தவறு 12ல் முடிகிறது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மக்கள் உரிமையில் தெரிவித்தபடி 68 லட்சம் ரூபாய்க்கு வரவு, செலவு, மீதம் தொகையை பட்டியலிட்டது.
ஆனால் பீ. ஜெய்னுலாபிதீனோ பொதுக்கூட்ட மேடைகளில் சுமார் 1 கோடி ரூபாயை சுனாமி நிதி வசூலித்ததாக பீற்றிக் கொண்டார். ஆயினும் உணர்வில் 83 லட்ச ரூபாய்க்கு வரவு காட்டினார். ஆனால் இன்றோ 8 லட்சத்தை கள்ளக் கணக்கு காட்டி, 75 லட்ச ரூபாய் மட்டும் வரவு என்று கூறுகிறார். இது ஒருபுறமிருக்க, செலவு விபரங்களைப் பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது.
சுனாமியில் பாதிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் ரூபாயாம்.
சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடித்த வகையில் கேமரா வாடகை 60,000 ரூபாயாம்.
அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும், அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 ரூபாயாம்.
விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 ரூபாயாம்.
அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 ரூபாயாம்.
கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு 60,000 ரூபாயாம்.
பாதிப்பே இல்லாத இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 30,000 ரூபாயாம்
சுனாமி பாதிப்பிற்கு 8 மாத காலத்திற்குப் பின் போடப்பட்ட பனியன், தொப்பிக்கு 20,000 ரூபாயாம்
இப்படியாக நீண்டுக் கொண்டே போகிறது கள்ளக் கணக்கு. இவர்களை நம்பி நிதி அனுப்பிய சமுதாய சொந்தங்களே... பாருங்கள் மேற்கண்ட பட்டியலை. இந்த செலவினங்களுக்காகத்தான் உங்கள் வியர்வையை சிந்தி சிறுகச் சிறுகச் சேமித்த உங்களது பணத்தை அனுப்பி வைத்தீர்களா? இனியும் இவர்களை நம்பி ஏமாறப் போகிறீர்களா?
சிந்திப்பீர்! செயல்படுவீர்!
Comments