லுஹாவின் மோசடிகள் பற்றி ஜாக் தலைமைக்கு அனுப்பப்பட்ட கடிதம்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 07-11-2005
J.A.Q.H. மாநில தலைமைக்கு, மேலப்பாளையம் கிளைச் செயலாளர் M.A.S.. செய்யது அஹமது ஸலபி எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
மேலப்பாளையம் J.A.Q.H. கிளை அழைப்பாளராகவும் மஸ்ஜிதுர் றஹ்மான் கட்டிட பொறுப்பாளராகவும் பணியில் அமர்த்தப்பட்ட சம்சுல் லுஹா றஹ்மானி என்பவர். அவர் சுய நல நோக்கோடு அமைப்புக்கும் அமைப்பின் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு பல்வேறு ஊழல்கள் செய்துள்ளார்.
இதை நமது கிளையின் முந்தைய நிர்வாகிகள் மாநில தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். மாநில தலைமையின் அனுமதியோடு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க முந்தைய நிர்வாகிகள் முயற்சிகள் செய்த போதெல்லாம் சமாதான பேச்சு வார்த்தை எனும் பெயரால் திறமையான முறையில் ஏமாற்றி காலத்தை கடத்தி வந்துள்ளார் சம்சுல் லுஹா.
எனவே, நான் கிளைச் செயலாளராக பொறுப்பேற்ற பின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் இனியும் சமாதான பேச்சு வார்த்தைகள் எனும் பெயரால் சம்சுல் லுஹா காலம் கடத்த முயற்சிக்கும் சதி வலையில் வீழ்ந்து ஏமாந்து விடக் கூடாது என்றும் J.A.Q.H. மேலப்பாளையம் கிளையினர் வற்புறுத்தியுள்ளார்கள்.
மேலும் சம்சுல் லுஹா செய்துள்ள பல்வேறு மோசடிகள், சதிகள் எனது கவனத்திற்கு வந்துள்ளன. மஸ்ஜிதுர்றஹ்மான் பவுண்டேஷன் கமிட்டி என்ற கணக்கை தனது சதி திட்டத்தால் குளோஸ் செய்துள்ளார். சம்சுல் லுஹா. பள்ளி கட்டிடப் பணிக்காக மாநில தலைமை அவ்வப்போது வசூலித்து சம்சுல் லுஹாவிடம் பணம் கொடுத்து வந்தது. சம்சுல் லுஹாவிடம் கொடுத்த பணத்திற்கு அவரிடம் எழுதி வாங்கப்பட்ட வவுச்சர்களை முந்தைய நிர்வாகிகள் பயில்களில் சேர்த்து வைத்து வந்துள்ளார்கள்.
அந்த பைல் பள்ளியில் இருந்துள்ளது. மாநில தலைமையிடமிருந்து சம்சுல் லுஹா பெற்ற பணத்திற்குரிய ஆதாரங்களை இல்லாமல் ஆக்கும் நோக்குடன் பள்ளியிலிருந்த அந்த வவுச்சர்களை சம்சுல் லுஹா திருடிச் சென்றுள்ளார்.
மஸ்ஜிதுர்றஹ்மான் கட்டிடப் பணிக்கான முழுமையான பணத்தையும் மாநில தலைமையே வசூலித்து கொடுத்து வந்திருக்கவே MASJIDUR RAHMAN EXECUTIVE COMMITTEE எனும் பெயரிலும் போலி கமிட்டி அமைத்தும் பள்ளி கட்டட நிதி என வசூலித்து மோசடி செய்து வந்துள்ளார். இந்த போலி கமிட்டி பெயரால் சம்சுல் லுஹா வெளிநாட்டில் ரூபாய் 10 இலட்சத்துக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிகிறோம்.
சம்சுல் லுஹா வெளிநாட்டில வசூல் செய்ததற்குரிய ஆதார ரசீதுகளில் சில நமக்கு கிடைத்துள்ளன. அவரது வெளிநாட்டு வசூல் மோசடிக்கு அவரது தம்பி காஜா என்பவர் துணை நின்றுள்ளார். வெளி நாட்டில் உள்ளவர்கள் அவரது தம்பி காஜா இடமே நமது பள்ளி பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்தை கொடுத்துள்ளனர். உள் நாட்டவர்கள் அனுப்பிய பணத்திற்கு ரசீது அனுப்பாமல் பணம் பெற்றுக் கொண்டதாக லட்டர் பேடில் சம்சுல் லுஹா பதில் அனுப்பியுள்ள ஆதாரங்களும் நமக்கு கிடைத்துள்ளன.
THAWHEED JAMATH என்ற பெயரிலும் பேங்கில் கணக்கு துவங்கி அதற்கும் நமது மர்க்கஸ் முகவரியையே பயன்படுத்தி வருகிறார். இது மாதிரி இன்னும் பல வகைகளிலும் வசூல் செய்து மோசடி செய்து வந்துள்ளார்.
மேலப்பாளையம் ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் ((M.J.A.Q.H) ) என்ற குழப்பமான பெயரிலும் அமைப்பு ஏற்படுத்தி வசூலித்து வந்துள்ளதற்குரிய லட்டர் பேடு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மஸ்ஜிதுர்-றஹ்மான் கட்டட வளர்ச்சி நிதி ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ், 20 அத்தியடி கீழத் தெரு எனும் பெயரில் வசூலித்துள்ளதற்கும் ஆதாரம் கிடைத்துள்ளது.
1994 டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் நமது J.A.Q.H. சார்பில் நடத்த இருந்த மாநாட்டைத்தான் 1995 ஜனவரி 21,22 ஆகிய தேதிகளில் நடத்தினோம். 1994 டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் 'தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா' சார்பில் மாநாடு நடத்த இருப்பதாகக் கூறி 14. பஷீர் அப்பா தெரு என்ற அவரது வீட்டு முகவரியை பயன்படுத்தி சம்சுல் லுஹா நன்கொடை கேட்டு கடிதம் எழுதியள்ள ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
அதில் பொறுப்பாளர்களாக போடப்பட்டுள்ள மவுலவிகளை அணுகி கேட்டபொழுது ”அப்படி ஒரு அமைப்பு இருந்ததே தங்களுக்குத் தெரியாது” என்றும் ”அப்படி ஒரு மாநாடு நடக்கவில்லை” என்றும் கூறி விட்டனர். இதன் மூலம் சம்சுல் லுஹா அப்பொழுதே போர்ஜரியாக இருந்துள்ளார் என்று விளங்க முடிகிறது. மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து ஆதாரங்களையும் இத்துடன் இணைத்துள்ளோம். எனவே சம்சுல்லுஹாவை அழைத்து விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வஸ்ஸலாம்.
இப்படிக்கு:
M.A.S. செய்யது அஹமது ஸலபி
Comments