தமிழக முஸ்லிம் பேரவைக் கூட்டம் D பிளாக்

கண்ணியதிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களான அருமைச் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 

காயல்பட்டணம் ஷேக் தாவூதாகிய நான் தலைவராகவும் திருப்பணந்தாள் தாஹா அவர்கள் செயலாளராகவும் இளையான்குடி அபுதாஹிர் பொருளாளரகாவும் ஜாவித் ஒருங்கிணைப்பாளராகவும்  பொறுப் பேற்றப்   பின் தமிழக முஸ்லிம் பேரவை சார்பில் இன்று(27-12-2002) நடைபெறும் முதல் பொதுகூட்டம்    இது.      

கடந்த 1992 டிசம்பரில் பாபரி  மஸ்ஜ்pத்  இடிப்புக்குப்பின்  பாதிப்புக்குள்ளான நமது  சமுதாயத்தவர்களே தடாக் கைதிகளாக சிறையில் தள்ளப்பட்டு அநியாயமாக பாதிப்புக்குள்ளானார்கள். 

இந்த சமயத்தில்தான் 1995ல் தமிழக முஸ்லிம் பேரவை உருவாக்கப்பட்டு அதே வருடம் 1995ல் மேலப்பாளையத்தில் நடந்த தடா எதிர்ர்பு மாநாடு பேரணி நடத்துவதற்கு நமது தமிழகம் முஸ்லிம் பேரவைதான் பெரும் துணiயாக இருந்தது என்பது மறக்க முடியாத சம்பவம் என்பது தாங்கள் அனைவர்களும்  அறிந்ததே. 

நமது பணியை மேலும் விரிவாக்கச்  செய்வதற்க்கு 96 ஜனவரி முதல் தேதியன்று பார்துபை பிளாசா சினிமா தியேட்டரில் பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த  சமயத்தில் ஏதோ ஒரு சூழ் நிலையால் இறுதி நேரத்தில் தடைப் பட்டாலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நடத்துவதற்கு போர்க் கால நடவடிக்கை எடுத்து மதிப்பிற்குரிய குத்தாலம் அஸ்ரப் அலி தங்கி இருந்த ரசிதியா வில்லாவில் பொதுக் கூட்டத்தை நடத்தி வெற்றிகண்டோம். 

இந்த மமைப்பு தமிழக முஸ்லிம்களின் நலனின் அக்கறை கொண்டு தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளுடனும் அதன் தலைவர்களுடனும் தொடர்பு  கொண்டது. 

அதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்தில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னைகளின் போதும் தந்தி பேக்ஸ் மற்றும் .ஈ-மெயில்களின் மூலமும் ஆட்சியாளர்கள் கவனத்தை நமது பிரச்னைகள் பக்கம் திருப்பச் செய்து அரசாங்கம் நல்ல நடவடிக்கைகள் எடுப்பதற்கு காரணகர்த்தாவாக  இருந்து வருகின்றோம்.

முக்கியமாக தடாக் கைதிகளின் விடுதலைக்காக  குறிப்பிட்ட ஒரு முஸ்லிம் அமைப்பு மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதர்க்கு  முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். 

இன்ஷா அல்லாஹ் அதனின் பலன் கூடிய விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு உள்ளோம் இப்போது கிடைத்த தகவல்படி நல்ல செய்தி இருப்பதாக நம்பப் படுகிறது. சிறிது நேரத்தில் தகவல் வந்த பின் எனக்குப் பின் பேசக் கூடியவர்கள் தெரிவிப்பார்கள்.

மேலும் யு.ஏ.இ க்கு வருகை தரும் மத்திய மாநில ஆட்சியாளர்கள் இடத்தில் வருகை தரும் நேரத்தில்லாம் தமிழக முஸ்லிம்கள் பிரச்னைகள் எடுத்து கூறியுள்ளோம்.

தடா கைதிகள் ஒரு சிலருக்கு விடுதலை கிடைக்காது என்ற நிலை இருந்தபோதிலும் நமது முயற்சிக்கு அல்லாஹ் கிருபையால் நல்ல பலன்கிடைக்கும் விடுதலை  செய்யப்பட்டுள்ளார்கள் அல்ஹம்துலில்லா 

இன்று தமிழகத்தில் அப்பாவி இளைஞர்கள் ஆலிம்கள் அநியாயமாக கைது செய்யப் பட்டுள்ளார்கள் அவர்ககுக்காக குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை நம்மவர்களே அவர்களை தீவிரவாதிகள் என்று  பத்திரிகைகளிலும் பிரச்சாரக் கூட்டங்களிலும்  பேசுவது வண்மையாக ஒருமித்த  குரலில் கண்டிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்

அப்பாவிகள் அனைவரும் விடுதலையாக அல்லாஹ் உதவி புரிவானாக எனது ஆக் கேட்டுக் கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன் அடுத்தபடியாக பெரம்பலுர் நாசர்அலிகான் அநியாயமாக பாதிகப்பட்டுள்ள அப்பாவி இளைநர்கள் என்ற தலைப்பில் சிறப்புறை வழங்குவார்கள் அஸ்ஸலாமுஅலைக்கும்.
  
    


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு