நீங்கள் காட்டிக் கொடுக்கும் வேலை செய்துள்ளீர்கள்.
அந்த அளவுக்கு தாக்குதலும் துதி பாடலும் இருந்தது.
காமாலுத்தீன் சொல்லிக் காட்டிது ஏன்? முதன் முதலில் சொல்லிக் காட்ட ஆரம்பித்தது யார்? முஸ்லிம் ட்ரஸ்டில் தற்பெருமை பேசிய மாதிரி! 2000 ஆகஸ்ட் 19,20.மதுரை மாநாட்டின் போது ஒரு கட்டளை பிறப்பித்தீர்கள். தமிழ்நாட்டின் தவ்ஹீது எழுச்சிக்கு காரணம் மதனிகள் இல்லை என்பதை பேச வேண்டும். இப்படி தெளிவாகவே கட்டளை பிறப்பித்தீர்கள். அந்த கட்டளையின் உள்ளர்த்தப்படிதான் முதல் நாள் இறுதி அமர்வு கமாலுத்தீன் மதனி மீதான சாடலும். பி.ஜே. புகழ் பாடலுமாக ஆனது. எம்.ஐ.சுலைமானும் அப்துல்ரஹ்மான் பிர்தவ்ஸியும் கடுமையாகவே கமாலுத்தீன் மதனியை தாக்கிப் பேசினர். எந்த அளவுக்கு என்றால் பொதக்குடிவாசி கொடுத்த தகவலின்படி இதை விமர்சித்து 2ம் நாள் காலையிலேயே முதல் அமர்வுக்கு முன்பாகவே துபையிலிருந்து கண்டித்து போன் வந்தது. அந்த அளவுக்கு தாக்குதலும் துதி பாடலும் இருந்தது.
அதைப் போட்டது யார்?
அடப் பாவிகளா! உங்கள் அக்கிரமத்திற்கு அளவில்லையா?' என்ற தலைப்பில் ஒரு நோட்டீஸ் 1995-ல் வெளியானது. 16 தடா கைதிகளின் சார்பில் வெளியிட்ட மாதிரி போடப்பட்ட அந்த நோட்டீஸ் என்ன? சுய புகழ் பாடல் தானே! அதைப் போட்டது யார்? அது உளவுத்துறை அளவிலே விவகாரம் ஆகி பிரச்சனை ஏற்பட்டதும், 'பழ்லுல்-இலாஹிதான் போட்டார். என்று நீங்கள் சொல்லி விட்டீர்கள். நான் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. இதுவே அளவுக்கு அதிகமான விவகாரம் ஆகி, சதா இது பற்றியே வீரப் புலி காஜா உட்பட எல்லோரும் விமர்சிக்கும் நிலை வந்தது, நான் செய்துவிட்ட முட்டாள் தனமான செய்கையால் தான் பிரச்சனை என்கின்ற மாதிரி கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
'அல்-ஜன்னத்' ஆபீஸில் வைத்து பி.ஜே.தான் போடச் சொன்னார்.
துபை ஜமாஅத்தின் ஒவ்வொரு ஆலோசனை அமர்விலும் இது விபரமாகவும். விவகாரமாகவும் பேசப்பட்டது. இந்த விவகாரமும,; விமர்சனமும் குறப்பிட்ட ஒரு எல்லையை மீறவே, நான் எஸ்.கே. மாதிரி பொறுமை காக்கவில்லை. அமர்வில் இருந்த டாக்டர், அம்சா-கபீரை நோக்கி கேட்டேன். இந்த நோட்டீஸை ஷபுரூப் திருத்தியது யார்? என்று. நான்தான் என்றார். அந்த நோட்டீஸை போடச் சொன்னது யார்? என்று கேட்டேன். ஷஅல்-ஜன்னத் ஆபீஸில் வைத்து பி.ஜே.தான் போடச் சொன்னார் என்றார்.
மல்லாந்து கிடந்து உமிழ்வது மாதிரிதான்.
இன்னும் சொல்லப் போனால், அதன் கையெழுத்துப் பிரதியில் வார்த்தைக்கு வார்த்தை பி.ஜே. என்றுதான் இருந்தது. ரொம்பவும் அசிங்கமாக இருக்கிறது என்று கூறி இறுதியில் 'தவ்ஹீது-ஜமாஅத்' என்று ஒரு இடத்தில் போடப்பட்டு, 'பி.ஜே.' என்று போடப்பட்டதை எல்லாம் நீக்கப்பட்டது. இன்றைக்கும் அந்த நோட்டீஸைப் படித்தால் 'யார்-யார்?' என்று வரும் கேள்விக்கு அடுத்து பி.ஜே. என்று போடப்பட்டதை உணரலாம்! அறியலாம்! இப்படி 1995-லேயே 'நான்-நான்' என்பதை நிலை நாட்ட தன் புகழ் பாடும், தற்பெருமை பேசும் 'நோட்டீஸ்' போட்ட தற்பெருமைக்கு அஸ்திவாரமிட்ட நீங்கள் எஸ்.கே. மீது பழி போடுவது, மல்லாந்து கிடந்து உமிழ்வது மாதிரிதான்.
எஸ்.கே போன்ற அனுபவமுள்ளவர்கள் கூறினார்கள்.
''எஸ்.கே.யின் தவ்ஹீது எந்த அளவுக்கு இருந்தது என்றால், எந்த ஊருக்குச் சென்றாலும் எதைச் சொல்லக்கூடாது என்று சொல்கிறார்களோ எதைச் சொல்லக்கூடாது என்று சொல்வார்களோ அதைப் பேசுவது தான் என் இயல்பு'' என்று கூறி. எஸ்.கே.மவ்லூது பற்றி இப்போது பேச வேண்டாம் என்று கூறியதை பூதகரமாக ஆக்கிக் காட்டுகிறீர்கள். எடுத்த எடுப்பிலேயே மக்கள் எளிதில் ஜீரணிக்காத சப் ஜக்டை பேசக் கூடாது. முதலில் மக்களுக்கு நம்மீது நல் எண்ணம் ஏற்படவேண்டும். எனவே எந்த ஊரிலும் முதல் கூட்டம் மக்களை எளிதில் ஈர்க்கக் கூடிய வரதட்சணையைப் பற்றியதாக இருக்கட்டும் என்று எஸ்.கே போன்ற அனுபவமுள்ளவர்கள் கூறினார்கள்;. அதனால் 1986ல் இருந்து பல ஊர்களில் வரதட்சணையைப் பற்றித்தான் பேசி இருக்கிறீர்கள்.
வரதட்சணை என்ற தலைப்பில் பேசுங்கள் என்று எஸ்.கே.கூறினார்.
ஒரு ஊரிலேயே பல முறை வரதட்சணை என்ற தலைப்பில் பேசி இருக்கிறீர்கள். மேலப்பாளையத்தில் மட்டும் 5 முறை வரதட்சணை என்ற தலைப்பில் பேசி இருக்கிறீர்கள். 1987 திருச்சி நஜாத் பைரோஸ்ஹால் மாநாட்டில் 1988 கோட்டாறு மாலிக் தீனார் திடல் மாநாட்டில். மக்களை ஈர்க்க என்றே வரதட்சணை. இஸ்லாத்தில் பெண்ணுரிமை என்ற தலைப்புகள் கொடுக்கப்பட்டது. 1999 நாகூர் சின்ன மரைக்காயர் தோட்டத்தில் நடந்த மாநாட்டில் கடைசி நேரத்தில் முடிவு செய்யப்பட்ட மாநாட்டின் நிறைவுரைத் தலைப்பு மாற்றப்பட்டது. பெரிய பெரிய போலிஸ் அதிகாரிகளெல்லாம் வந்துள்ளனர். அவர்களுக்கு நம் ஜமாஅத் பற்றி நல் எண்ணம் ஏற்பட வேண்டும் எனவே அவர்களுக்கும் புரியக்கூடிய அவர்களையும் எளிதில் ஈர்க்கக் கூடிய வரதட்சணை என்ற தலைப்பில் பேசுங்கள் என்று எஸ்.கே.கூறினார்.
உங்கள் அணியை வளர்க்க உங்கள் அணி பற்றி நல் எண்ணம் ஏற்பட.
இது மாதிரியான காலகட்டத்தில் எல்லாம் எதற்கு இந்த அட்ஜஸ்மெண்ட். வரதட்சணையை விட பெரிய கொடிய பாவமன ஷpர்க் பற்றி சொல்லி விட்டீர்களா? ஷpர்க்கை ஒழித்து விட்டீர்களா? என்று விமர்சித்து விட்டு தலைமைக்கு கட்டுப்பட்டு வரதட்சனையைப் பேசினீர்கள். அமைப்பு காண்பதற்கு முன் கட்டுப் படாமல் பேசிய நீங்கள் அமைப்பு கண்ட பின் கட்டுப்பட்டு பேசினீர்கள். காரணம் அனுபவம் இல்லாதது தான். அனுபவம் இல்லாமல் இப்படி விமர்சித்துக் கொண்டிருந்த நீங்கள் இன்று அனுபவ சாலி ஆகி விட்டீர்கள். அதனால்தான் உங்கள் அணியை வளர்க்க உங்கள் அணி பற்றி நல் எண்ணம் ஏற்பட ஊருக்கு ஊர் வரதட்சணை ஒழிப்புக் கூட்டம் போடச் சொல்கிறீர்கள்.
இப்போது இதைவிட கொடிய ஷpர்க் ஒழிந்து விட்டதா?
மன்னிக்கவும் கூட்டம் என்று போட்டால் கலந்து கொள்ள மாட்டீர்களே. ஏன் என்றால் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்து விட்டீர்கள். எனவே சிறிய கூட்டமாக இருந்தாலும் அதை மாநாடு இஜ்திமா என்று போட்டால்தான் கலந்து கொள்வீர்கள். ஆக வரதட்சணை ஒழிப்பு மாநாடு என்று உங்கள்; அணி சார்பில் நடத்தி வருகிறீர்கள். நடத்தப்படும் பெயர் எதுவாகவும் இருக்கலாம் நிகழ்ச்சி நடத்துபவர்கள் உங்கள் அணியாக இருக்க வேண்டும். ஆக இப்பொழுது ஊருக்கு ஊர் வரதட்சணை ஒழிப்பு மாநாடு நடத்துகிறீர்களே இப்போது இதைவிட கொடிய ஷpர்க் ஒழிந்து விட்டதா? இல்லை என்று நீங்களே சொல்கிறீர்கள்.
அனுபவத்தில் கிடைத்த அறிவுப் பூர்வமான செயலா?
நிரந்தர நரகில் -ஷpர்க்கில் இருந்து மீட்க கிராமம் கிராமமாக முடுக்கி விடப்படும் பிரச்சார பணிக்கு வாரி வாரி வழங்குங்கள் என்று கேட்கிறீர்களே. இதன் மூலம் இன்றும் ஷpர்க் ஒழிய வில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் நீங்கள், வரதட்சணை தலைப்பு போடுவது அட்ஜெஸ்மெண்டா? அனுபவத்தில் கிடைத்த அறிவுப் பூர்வமான செயலா?
ஒரு திட்டம் வகுக்கிறோம்.
மவ்லிது பற்றி பேச வேண்டாம் என்று எஸ்.கே. சொன்னது பற்றி விமர்சித்துள்ளீர்கள். 1994-ல் நீங்கள் கூறும் 'ராஜினாமா' கடிதம் கொடுத்த 20-தாம் நாள் டிசம்பர்- 17,18. மேலப்பாளையம் 'ஜாக்' சார்பில், இரண்டு நாள் தொடர் நிகழ்சி. ஏற்கனவே 08-10-94-ல் 'இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய என்ற தலைப்பில் நாட்டு நடப்பை பேசியதால், மக்களால் கவரப்பட்டு இருந்தீர்கள். எனவே முதல் நாள் அரசியல் பேச வேண்டும். இரண்டாம் நாள் அப்துர்-ரஹ்மான் பிர்தவ்ஸி பேசுகிறார் என்ற அறிவித்து விட வேண்டும் என்று ஒரு திட்டம் வகுக்கிறோம்.
திட்டம் என்ன?
அந்த திட்டப்படி 'இந்திய மதச் சார்பின்மை-ஓர்-ஆய்வு' என்று பேசுகிறீர்கள். பேசி முடித்ததும், திட்டமிட்டபடி பெரும்பாலான மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பி.ஜே, நாளையும் பேசுவார் என்று அறிவிப்பு செய்தேன். தயாராக இருந்த 'பி.ஜே. இன்றும் பேசுகிறார்' என்ற வால்போஸ்டர் 18-ம் தேதி அதிகாலை 2,மணிக்கு ஒட்டுகிறோம். திட்டம் என்ன? அப்துர்-ரஹ்மான் பிர்தவ்ஸி மவ்லிது பாட வேண்டும், நீங்கள் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்!
அப்பொழுதே பத்திரிக்கை பெயர்கள் எழுதப்பட்டது.
இந்த இரண்டு நாள் நிகழ்சி பல தூர நோக்குடன் நடந்தது. அந்த இரண்டு நாளும் பல முக்கிய பிரமுகர்கள் மேலப்பாளையத்தில் முகாமிட்டிருந்தார்கள். அப்பொழுதே புதிய அமைப்பு பெயர், வார-இதழ் பெயர் பற்றியெல்லாம் ஆலோசனை நடத்தப்பட்டது. புதிய பத்திரிக்கையில் 'மஸாயில்' சொல்லக் கூடாது என்று சிலர் சொல்ல வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். நான், 'ஹிக்மத்' தாக ஒரு கேள்விக்கு இந்த மத்ஹபு இப்படி கூறுகிறது ! இந்த மத்ஹபு இப்படி கூறுகிறது!! இப்படி நான்கு மத்ஹபுகளின் 'மஸாயில்'களையும் போட்டு விட்டு, 'குர்ஆன்-ஹதீஸ் உடையவர்கள் இன்ன இன்ன ஹதீஸ், ஆயத்கள்படி இப்படி கூறுகின்றனர் என்று போடனும் என்றேன். அப்பொழுதே பத்திரிக்கை பெயர்கள் எழுதப்பட்டது.
உங்களுக்குப் பதிலாக பக்ரியை விளக்கம் கூறும்படி கூறிவிட்டீர்கள்.
இந்த நிலையில் இரண்டே இரண்டு பேர் மட்டும் ஷநேற்று கூட்டமும் பேச்சும் நன்றாக இருந்தது. பி.ஜே. மீது மக்களுக்கு ஒரு நல்ல 'இமேஜ்' ஏற்பட்டு விட்டது. எனவே இன்றைய மவ்லிது விளக்கக் கூட்டத்தில் பி.ஜே. பேசக் கூடாது என்றனர். இதை ஏற்றுக் கொண்டு, பேச மாட்டேன் என்றீர்கள். உங்களுக்குப் பதிலாக பக்ரியை விளக்கம் கூறும்படி கூறிவிட்டீர்கள்.
உட்கார்ந்து கொண்டு பேசுகிற மாதிரி மேடையை அமைத்து.
இது பற்றி நானும் அப்துர்-ரஹ்மான் பிர்தவ்ஸியும் ஆலோசனை செய்தோம். பிர்தவ்ஸி கூறினார் 'நாம் வற்புறுத்தினால் போய் விடுவார். எனவே ஆளை மேடைக்கு கொண்டு வந்து விடுங்கள் அது உங்கள் பொறுப்பு. மேடைக்கு வந்து விட்டால் நான் பேச வைத்து விடுவேன். நான் உட்கார்ந்து கொண்டு பேசுவேன். ஒரு பக்கம் பக்ரியும் ஒரு பக்கம் பி.ஜே.யுமாக உட்கார வைத்து விடுங்கள். 2தடவை பக்ரி இடம் விளக்கம் கூற கொடுத்து விட்டு பிறகு பி.ஜே. இடம் மவ்லிது கிதாபை கொடுத்து விடுவேன் அதற்கு வசதியாக உட்கார்ந்து கொண்டு பேசுகிற மாதிரி மேடையை அமைத்து விடுங்கள் என்றார்.
பிளான் படி நடந்தது.
பத்திரிகையிலிருந்து போட்டோ எடுக்க வருவார்கள் ஆரம்பத்திலேயே எடுக்க வைத்து விடுகிறேன் அது வரை சிறிது நேரம் நின்று பேசுங்கள் என்றேன். உங்கள் இடம் இன்றும் நீங்கள் பேசுவதாக வால் போஸ்ட்டர் ஒட்டி விட்டோம். மக்கள் எதிர் பார்ப்பார்கள். எனவே பிர்தவ்ஸி பேசி முடித்தபின் நீங்கள் இஸ்லாமும் ஏனைய மார்க்கங்களும் என்ற தலைப்பில் பேசுங்கள் என்று கூறி மேடைக்கு கொண்டு வந்து விட்டேன். பிளான் படி நடந்தது.
மவ்லிது பற்றி பேச மாட்டேன்.
எஸ்.கே. மவ்லிது பற்றி பேச வேண்டாம் என்று சொன்னது கொள்கை நலன் கருதி. ஜமாஅத்தின் வளர்ச்சி பாதித்து விடக்கூடாது என்பதற்காக. அறியாமையில் இருக்கும் மக்களின் நிலை கருதி கூறினார். நீங்கள் ஒப்புக் கொண்ட நிகழ்சியில் மவ்லிது பற்றி பேச மாட்டேன் என்று மறுத்தது, உங்கள் இமேஜ் பாதித்து விடக்கூடாது என்பதற்காக. இப்படிப்பட்ட நீங்கள்தான் எஸ்.கே. மவ்லிது பற்றி இப்போது பேச வேண்டாம் என்று கூறியதை பூதகரமாக ஆக்கி விமர்சித்துள்ளீர்கள்.
கமாலுத்தீன் மதனி வெளியிடவில்லை.
நீங்கள் உட்பட கூட்டமைப்பு மூத்த மவுலவிகளெல்லாம் பொய் சத்தியம் செய்யக் கூடியவர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். அதனால் நீங்கள் மறுக்கும் எதற்கும் கூட்டமைப்பு மூத்த மவுலவிகளைப் பார்த்து சத்தியம் செய்யுங்கள் என்று என்னைப் போன்றவர்கள் கூற மாட்டோம். கமாலுத்தீன் மதனியை பொய் சத்தியம் செய்யக் கூடியவராக சித்தரித்துள்ளீர்கள். ஆனால் உங்கள் உள்ளமோ கமாலுத்தீன் மதனி பொய் சத்தியம் செய்ய மாட்டார் என்று உறுதியாக நம்புகிறது. அதனால்தான் த.மு.மு.க. ஒரு நாடகம் என்று நீங்கள் கூறியதை பதிந்துள்ள கேஸட்டை கமாலுத்தீன் மதனி வெளியிடவில்லை என்று
Comments