பி.ஜே. 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தஃவா பணி.
இது மாதிரியான குற்றச் சாட்டை அன்று நீங்கள் கூறவே இல்லை.
எ.ஜி.முஹம்மது மீது நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் பொறுப்பில் இருந்த காலத்தில் அல்ல. அதிலும் குறிப்பாக 2000 க்குப் பிறகுதான் இது மாதிரியான குற்றச்சாட்டுகள் கூறுகிறீர்கள். நீங்கள் கமாலுத்தீன் மதனியிடம் நேரில் கூறியதாக சொல்லி உள்ளீர்கள். 1997 ல் ஒரு கடவுளா பல கடவுளா? என்ற ஜாக் சார்பான வால் போஸ்ட்டர் தமிழ் நாடு முழுவதும் ஒட்டப்பட்டது. அதுபோல் திருச்சியிலும் ஒட்டப்பட்டது. அதையொட்டி வால் போஸ்ட்டர் ஒட்டியதற்காக எ.ஜீ முஹம்மது கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவருக்காக ஜாக் எந்த முயற்சியும் செய்யவில்லை என்றுதான் அன்று நீங்கள் குற்றம் சாட்டினீர்களே தவிர, இது மாதிரியான குற்றச் சாட்டை அன்று நீங்கள் கூறவே இல்லை.
முதல் பைலா தயாரிக்கும் போது நீங்கள் கூறினீர்கள்.
ஜாக் அமைப்பு ரீதியாக செயல்படவில்லை ஜாக்கில் உறுப்பினர்கள் சேர்ப்பதில்லை என்று இப்பொழுது குற்றம் சாட்டி வருகிறீர்கள். இஸ்லாத்தின் அடிப்படை அமீர் முறைதான். ஜாக் என்பது அமீர் என்ற அடிப்படையில் இயங்கும் அமைப்பு. எஸ்.கே. அதன் அமீர் ஆவார். பை-லா செயலாளர் பொருளாளர் ஷ{ரா, உறுப்பினர் சேர்த்தல் இவை யாவும் அரசு அங்கீகாரத்திற்காக ரிஜிஸ்ட்டர் பண்ண உள்ளவைதான். இப்படி 1988 ல் ஜம்இய்யத்து தஃவதில் இஸ்லாமிய்யாவில் வைத்து முதல் பைலா தயாரிக்கும் போது நீங்கள் கூறினீர்கள்.
ஜாக் என்பது நிர்வாக வசதிக்காகத்தான் என்றும் பேசினீர்கள்.
அமைப்பு வளர ஆர்வமுடன் செயல்பட உறுப்பினர் முறை அவசியம் என்று எங்களைப் போன்றவர்கள் நீண்ட நாளாக வலியுறுத்தி வந்தார்கள். அப்பொழுதெல்லாம் இவர்கள் அரசியலில் இருந்து வந்தவர்கள். அரசியல் கட்சி மாதிரி ஜாக்கை நடத்த எண்ணுகிறார்கள். என்று உறுப்பினர் சேர்ப்பதை எதிர்த்து வந்தவர்களில் முதல் ஆள் நீங்கள். இதற்கு முத்தாய்ப்பாக 1994 ஏப்ரல் 2 ஆம் தேதி ஜே.ஏ.கியூ.ஹெச். பிரதிநிதிகள் மாநாட்டில் மேலே சொன்னவைகளை விரிவாகப் பேசிய நீங்கள். குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்று விளங்கி எஸ்.கே.யை அமீராக ஏற்றுக் கொண்டால் போதும். ஜாக்கில் உறுப்பினராக ஆக வேண்டியதில்லை. ஜாக் என்பது நிர்வாக வசதிக்காகத்தான் என்றும் பேசினீர்கள்.
ஆரம்பத்தில் நீங்கள் கட்டுப்பட்டீர்கள்.
உங்கள் இனத்தவர்களுக்கு - குறிப்பாக உங்களுக்கு அமைப்பு முறை தெரியாததாலும், இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக உருவான ஜாக், அமைப்பு ரீதியாக வளர வேண்டும் என்ற அக்கறை உங்களுக்கு இல்லாததாலும், ஜாக் முறையான அமைப்பாக வளர்வதற்கு தடையாக இருந்தீர்கள். அன்று நீங்கள் வலியுறுத்திக் கூறிய அமைப்பு முறைதான் இன்று ஜாக்கில் நீடிக்கிறது. த.மு.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கும் அமைப்பு முறையாக செயல்படவும் தடையாக இல்லாமல் ஆரம்பத்தில் நீங்கள் கட்டுப்பட்டீர்கள், ஒத்துழைத்தீர்கள், வளர்ச்சியில் அக்கறை செலுத்தினீர்கள்.
கமாலுத்தீன் மதனியைப் பலஹீனப்படுத்த.
காரணம். அது உங்களைக் காப்பாற்றிக் கொள்ள கண்ட அமைப்பு. அது வளர்ந்தால்தான், பெரிய மக்கள் சக்தி உங்கள் பின்னால் இருப்பதாக காட்டினால்தான் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்பதால் எல்லா வகையிலும் ஒத்துப் போனீர்கள். அன்று எங்களைப் போன்றவர்கள் ஜாக்கில் உறுப்பினர் சேர்க்கும் முறையை கொண்டு வர வலியுறுத்தியது. தவ்ஹீது ஜமாஅத்தைப் பலப்படுத்த. இன்று நீங்கள் ஜாக்கில் உறுப்பினர் சேர்க்க வலியுறுத்துவது கமாலுத்தீன் மதனியைப் பலஹீனப்படுத்த.
நடத்தப்பட இருந்த போராட்டங்களை கிடப்பில் போடச் செய்தீர்கள்.
மேலப்பாளையத்தில் 1986 முதல் தவ்ஹீது ஜமாஅத் பெயரால்; சமுதாய சேவைப்பணிகள் செய்து வருகிறோம். குறிப்பாக பித்ராவை வசூலித்து வழங்கும் பணியை தவ்ஹீது ஜமாஅத் சார்பில் 1986 லேயே துவங்கினோம். காரணம் மக்கள் தவ்ஹீதின் பால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக. கறுப்புத் துண்டை தோளில் போட்டுக் கொண்டும், பண உதவிகள் செய்கிற மாதிரியும் போஸ் கொடுத்த நீங்கள். சமுதாய சேவைப்பணிகளை தவ்ஹீது ஜமாஅத் சார்பில் செய்ய ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக இன்று பெரும்பாலான தவ்ஹீதுவாதிகளிடம் வசூலித்து த.மு.மு.க. பெயரில் வினியோகிக்கும் பித்ராவைக் கூட அன்று ஜாக் சார்பில் செய்ய நீங்கள் ஆர்வம் காட்டவில்லை. இன்றும் தவ்ஹீது அமைப்பு சார்பில் சமுதாயச் சேவைப் பணிகள் செய்தால் த.மு.மு.க. பாதிக்கப்படும் என்ற கவலையில்தான் உள்ளீர்கள். குறிப்பாக கூட்டமைப்பு சார்பில் 2001 ஜனவரியில் முஸ்லிம்களின் கோரிக்கைகளை முன் வைத்து வஃக்பு வாரியம் முன்- தலைமைச் செயலகத்திற்கு முன் நடத்தப்பட இருந்த போராட்டங்களை கிடப்பில் போடச் செய்தீர்கள்.
இதுவும் வேறு விதமான பத்திரிக்கை என்று சமாளிக்கப் போகிறீர்களா?
த.மு.மு.க.வின் செயல்பாடுகளை உணர்வில் பக்கம் பக்கமாக எழுதியும் மேடைகளில் முழங்கியும் வந்த நீங்கள், ஜாக்கின் சேவைகளை செயல்பாடுகளை அல் ஜன்னத்தில் போட்டால் விளம்பர நோக்கம் என்று விமர்சித்தீர்கள். இன்று உங்கள் பெருமையை நிலை நாட்ட ஜும்ஆவைக் கூட கூட்டமைப்பு நிகழ்சியாக செய்தி வெளியிடுகிறீர்கள். பிர்தவ்ஸியாவின்; கம்யூட்டர் பயிற்சி விளம்பரத்தில் உருவப் படம் போட்டதை மார்க்க விரோதமாக சித்தரித்தீர்கள். உணர்வில் உருவப் படம் போடப் படுவதைக் கேட்டதற்கு அது வேறு விதமான பத்திரிக்கை என்றீர்கள். இப்பொழுது கூட்டமைப்பு கைப்பற்றி உள்ள பத்திரிக்கையில் உருவப் படம் போட்டு விட்டீர்களே! இதை நீங்கள் ஒரு சந்தர்ப்ப வாதி என்பதற்கு ஆதாரமாகக் கொள்ளவா? அல்லது இதுவும் வேறு விதமான பத்திரிக்கை என்று சமாளிக்கப் போகிறீர்களா?
நீங்கள் கூட பொருளாளரிடம் கணக்கு கேட்கவில்லை.
மேலும் அன்வர் பாயை வைத்து அரங்கேற்றி வருவது. செயலாளர் பொருளாளருக்குத் தெரியாமல் ஜாக் பணத்தை எஸ்.கே. தொழிலில் முதலீடு செய்தார் என்பது இப்பொழுது; சற்று வித்தியாசமாக சொல்லி உள்ளீர்கள். அமீர் என்றால் முழு அதிகாரம் படைத்தவர் என்று 1994ல் நீங்கள் விளக்கியபடி, ஜாக்கில் உள்ளவர்கள் அமீர் முறையை ஏற்று உள்ளனர். அந்த அடிப்படையில் செயலாளர் பொருளாளர் என்பது நாட்டு நடப்புக்காக உள்ளதுதான். இதை அறிந்துதான் ஆரம்பத்தில் டிராமாவுக்காக கணக்கு கேட்ட நீங்கள் கூட பொருளாளரிடம் கணக்கு கேட்கவில்லை. அமீர் என்ற முறையில் கமாலுத்தீன் மதனி இடம்தான் கணக்குக் கேட்டீர்கள்.
அடுத்த உதவிகளை அவர் மூலம் செய்கிறார்கள்.
எனவே செயலாளர் பொருளாளரிடம் சொல்லாமல் செய்ய முழு அதிகாரம் உள்ளது. இது மாதிரியான பொருளாதாரத்தை வழங்குபவர்கள் செயலாளர் பொருளாளரை முன்னிறுத்தி கொடுக்கவில்லை. எஸ்.கே.யை முன்னிறுத்திதான் அவர் மூலமே கொடுக்கின்றனர். யார் எதற்காக கொடுக்கிறார்களோ அவர்களுக்கு உரிய ஆதாரத்தை முறையாகக் கொடுக்கிறார். அதனால்தான் அடுத்த அடுத்த உதவிகளை அவர் மூலம் செய்கிறார்கள். அவர் மூலம்தான் உதவி என்ற நிலைதானே உள்ளது.உங்கள் கூற்றுப்படி கமாலுத்தீன் மதனி சொன்னால் குராபி மதரஸாவுக்கும் உதவி வழங்கும் அளவுக்கு நிறுவனங்கள் உள்ளன என்றால். அந்த அளவுக்கு உதவும் நிறுவனங்களின் நம்பிக்கையாளராகத்தானே அவர் உள்ளார். அவரைப் பற்றி வண்டி வண்டியாக எவ்வளவு குற்றச் சாட்டுக்கள் எழுதி அனுப்பப் பட்டாலும். இன்றைக்கும் அவர் அங்கீகாரம் இருந்தால்தான், அவர் மூலம்தான் உதவி என்ற நிலைதானே உள்ளது.
லுஹா கணக்கு ஒப்படைக்கவில்லை என்பது தனி விஷயம்.
குவைத் வாழ் மேலப்பாளையம் சகோதரர்கள் மஸ்ஜிதுர்றஹ்மானுக்காக அங்குள்ள நிறுவனத்தில் உதவி கேட்டார்கள். அந்த நிறுவனம் உங்களையோ, பக்ரியையோ, லுஹாவையோ நம்பி உதவி தரவில்லை. கமாலுத்தீன் மதனியை கூப்பிட்டுத்தான் பணத்தைக் கொடுத்து மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானுக்கு கொடுக்கக் கூறியது. இந்தப் பணத்திற்கும் கமாலுத்தீன் மதனி இடம் லுஹா கணக்கு ஒப்படைக்கவில்லை என்பது தனி விஷயம்.
இங்கேயும் மல்லாந்து கிடந்து உமிழ்ந்துள்ளீர்கள்.
அவரை குறை கூறும் உங்கள் அணி நிலை என்ன? குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் போய் அவரை குறை கூறி அங்கீகாரத்தைப் பெற்றார்கள். உங்கள் அணியை நம்பி உதவினார்கள். அந்த உதவி நின்றது ஏன்? உதவியவர்கள் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக உங்கள் அணி இல்லை என்பதுதானே காரணம். இங்கேயும் மல்லாந்து கிடந்து உமிழ்ந்துள்ளீர்கள்.
ஒரு மாயயை இதில் ஏற்படுத்தி உள்ளீர்கள்.
எஸ்.கே.யாரிடம் கொடுத்தாரோ அவரிடம் தன் பெயரில் எழுதி வாங்கவில்லை. ஜாக் பெயரில்தான் எழுதி வாங்கி உள்ளார். ஜாக்குக்காக என்று எஸ்.கே. சொல்லாது இருந்தால் இந்த அன்வருக்கு தெரியாது. ஜாக்குக்காக யாரோ கொடுத்ததை எஸ்.கே. தன் பெயரில் முதலீடு செய்து விட்ட மாதிரியும். சம்பந்தப்பட்டவர் வந்து கேட்கும் போது சமாளித்த மாதிரியும் ஒரு மாயயை இதில் ஏற்படுத்தி உள்ளீர்கள்.
உங்களால் மோசடியாளர் என்று நிரூபிக்க முடியவில்லை.
ஆதாரம் என்பது வவுச்சரும் ஆதாரம் தான். சம்பந்த பட்டவரிடமிருந்து எழுதி வாங்குவதும் ஆதாரம் தான். வவுச்சரை விட சம்பந்தப் பட்டவரிடம் பத்திரத்தில் எழுதி வாங்கி இருப்பது தான் கூடுதலான பலன் தரும் ஆதாரம். இதை வைத்து மோசடியாளராக காட்ட. என்னிடம் வவுச்சர் வாங்கினியா நீ என்று அன்வர் கேட்கிறார். எஸ்.கே.யை மோசடியாளராகக் காட்ட விரும்பும் உங்களால் மோசடியாளர் என்று நிரூபிக்க முடியவில்லை. அதனால் எதுவும் நடக்கும் என்று கூறி முடிக்கிறீர்கள்.
உத்தம புத்திரனுக்கு போன் போட்டுக் கேட்டேன் ரசீது வரவில்லை.
அமீர் முறையை ஏற்றுக் கொண்ட அமைப்பில் செயலாளர் பொருளாளருக்குத் தெரியாமல் செய்ததாக கூறி விமர்சிக்கும் உங்கள் நிலை என்ன? கூட்டமைப்பு என்பது அமீர் முறை அல்ல என்று தெளிவு படுத்தப்பட்ட அமைப்பு. அந்த அமைப்புக்கு 2000 டிசம்பரில் ஜெயா. டி.வி. ஸஹர் நேர நிகழ்ச்சி வகைக்கு. துபை ஐ.ஏ.ஸி. சார்பாக 35ஆயிரம் ரூபாயும். ஜகாத் வகை பணம் 10 ஆயிரமும். ஆக 45 ஆயிரம் ரூபாய் உத்தம புத்திரன் ஷம்சுல் லுஹா மூலம் நான் அனுப்பிக் கொடுத்தேன். ரசீது வரவில்லை. இதை பல முறை உத்தம புத்திரனுக்கு போன் போட்டுக் கேட்டேன் ரசீது வரவில்லை.
உங்களுக்கு எந்த தேதியில் ரசீது போட வேண்டும்
6-மாதம் ஆகியும் வராதது பற்றி உங்களிடம் கூறினேன். உங்களிடமிருந்து (அதாவது துபையிலிருந்து) பணம் வரவில்லை என்று அன்வர் பாய் (கூட்டமைப்பு பொருளாளர்) கூறுகிறார். நீங்கள் அனுப்பி 6-மாதம் ஆகியும் ரசீது வரவில்லை என்கிறீர்கள் என்று கேட்டீர்கள். இதை ஒட்டி நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதி பிறகுதான் ரசீது அனுப்பித் தருவதாகவும், தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்தும் ஈ -மெயில் வருகிறது. பிறகு காயல்பட்டிணம் கல்விச் சங்கத்திலிருந்து 3 முறை போன் வருகிறது. முதலில் ''பணம் கிடைத்தது பக்ரி சென்னையில் உள்ளார். வந்ததும் பதில் தருவார். 2வது ''பக்ரி இலங்கையில் உள்ளார்; வந்ததும். பதில் தருவார்'' 3 வது முறையாக ''உங்களுக்கு எந்த தேதியில் ரசீது போட வேண்டும்'' என்று கேட்டார்கள். கேட்டது கூட்டமைப்பு செயலாளரோ, பொருளாளரோ அல்ல. கல்விச் சங்கத்தை சார்ந்தவர்கள்.
பிற அமைப்புகளைப் பார்த்து கேள்வி கேட்பதற்கும் யோக்கியதை வேண்டும்.
பொருளாளர் உட்பட மற்ற நிர்வாகிகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ. குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சிக்கு என்று வந்த பணத்தை 6 மாதம் ஆகியும் பில் போடாமல் வைத்திருக்க முடியும். 6 மாதத்திற்குப் பின் எந்த தேதியில் வேண்டுமானாலும் பில் போட்டுத் தர முடியும் என்றால், பணம் கொடுத்தவர் கேட்காவிட்டால் பில் போடாமலும் இருக்க முடியும் அப்படித்தானே. அப்படியானால் இது போன்ற பணங்களின் கதி என்ன? என்னமும் நடக்க வாய்ப்பு உள்ளதா? இல்லையா? இப்படி பிற அமைப்புகளைப் பார்த்து கேள்வி கேட்பதற்கும் யோக்கியதை வேண்டும்.
பிறர் மீது ஆதாரமற்ற செட்டப் ஊழல் புகார் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.
தலைவர் பதவியையே விரும்ப மாட்டேன் என்று விளம்பரத்திற்காக அடிக்கடி கூறிக் கொள்ளும் நீங்கள்தான் முஸ்லிம் டிரஸ்ட்டின் ஆயுட்கால தலைவராக இருக்கிறீர்கள். அந்த முஸ்லிம் டிரஸ்ட்டுக்கு 2000 ஜுலை முதல் டிசம்பர் வரையிலான வாடகைப் பணம் 30,000 ரூபாய் என் மூலம் கொடுக்கப்பட்டது. ஆறு மாதம் ஆகியும் வழக்கம் போல் ரசீது வரவில்லை. தேவைப்பட்டதால் கேட்ட பிறகு பழைய தேதியில் ரசீது போட்டுத் தந்தீர்கள். அதுவும் இதே கால கட்டத்தில்தான் நடந்தது. 6 மாதம் கழித்து பழைய தேதியில் ரசீது போடும் அளவுக்கு உள்ள நீங்கள்தான் பிறர் மீது ஆதாரமற்ற செட்டப் ஊழல் புகார் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.
எட்டாப் பழத்திற்கு கொட்டாவி விட்டு ஏமாந்து.
உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம். சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம். இது மாதிரியெல்லாம் அரசியல் வாதிகள் மக்களை ஈர்க்க, ஈர்த்து ஏமாற்ற புதிய புதிய முழக்கங்களைச் செய்வார்கள் என்று நீங்கள்தான் விமர்சிப்பீர்கள். அது போல வெளிநாட்டவர்களிடமோ வெளிநாட்டு நிறுவனங்களிடமோ உதவி பெற மாட்டோம். இப்படி ஒரு புதிய முழக்கத்தை செய்து விட்டு. இது எங்கள் பழைய கொள்கை. ஜாக்கிலிருந்து வெளியேற இதுவும் ஒரு காரணம் என்றும் சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு கூறிவருகிறீர்கள். எட்டாப் பழத்திற்கு கொட்டாவி விட்டு ஏமாந்து சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்கிற மாதிரிதான் உங்களின் இந்தக் கூற்று.
இனியும் அனுப்ப ஏற்பாடுகள் செய்வது ஏன்?
இன்றைக்கும் கூட்மைப்பு மவுலவிகள் வெளி நாட்டை நோக்கி தவம் கிடப்பது ஏன்? வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய பணங்களை தடுத்து நிறுத்தி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது ஏன்? நோண்பில் தராவீஹ் பெயரால் வசூலுக்கு போவதாக பிற மவுலவிகளை விமர்சித்த நீங்கள். தப்ஸீர் பெயரால் நோண்பில் ஏஜெண்டுகளை அனுப்பியது ஏன்? இனியும் அனுப்ப ஏற்பாடுகள் செய்வது ஏன்? வீட்டின் உள்ளே இருந்து பொருளை ஒருவன் எடுத்துப் போட அதை வெளியில் நிற்பவன் எடுத்தால் 2 பேரும் திருடர்கள் இல்லை, அதாவது வீட்டினுள் இருந்து எதுவும் எடுக்கவில்லை என்ற மஸாயிலா?
அஹ்மது அல் அஹ்மது சுலைமான் குனைனி போன்ற அரபிகளிடம் உதவி கேட்டு லுஹா மற்றும் இன்னொரு மவுலவி இடம் கூறி அரபியில் கடிதம் அனுப்பச் செய்தீர்களே என்ன பணி செய்வதற்காக?
தமிழ் நாட்டில் பணியாற்ற முன் வந்துள்ளதே கொள்கை உணர்வுதான்.
கமாலுத்தீன் மதனியைக் கொச்சைப்படுத்த இப்பொழுது புதிய புதிய முழக்கமிடும் நீங்கள், பொருளாதாரம்தான் நோக்கம் என்றிருந்தால், கூடுதல் வருவாய் தரக் கூடிய அரபு நாட்டுப் பகுதியில் தாயி-யாக பணியாற்றி இருப்பார்கள். தமிழ் நாட்டில் பணியாற்ற முன் வந்துள்ளதே கொள்கை உணர்வுதான் என்று கமாலுத்தீன் மதனி பற்றி பாராட்டிக் கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட நீங்கள்தான், இன்று சவூதி தரும் பணத்திற்கு என்று கொச்சைப் படுத்தவும் செய்கிறீர்கள்.
சவூதி சம்பளத்திற்காக ட்ரிம் தாடியிலிருந்து நீள தாடிக்கு மாறிய.
சவூதி பணம் தந்தால் வாங்குவது, ஹராமா? என்று எழுதிய, பேசிய நீங்கள்தான் ஜம்யிய்யத்து- தஃவதுல்-இஸ்லாமிய்யா மதனிகள் மட்டுமே அங்கம் வகிக்கும் அமைப்பு என்று கூறி காரணமும் கற்பிக்கிறீர்கள். சவூதி சம்பளத்திற்காக ட்ரிம் தாடியிலிருந்து நீள தாடிக்கு மாறிய லுஹா, ஸைபுல்லாஹ் போன்றவர்களும், அஹ்மது அல் அஹ்மது வருகிறார் என்ற உடன் தாடியை வெட்டாது நீட்டி வைத்த லுஹா போன்றவர்களும் உங்களது அணியில்தான் இருக்கிறார்கள்
ஆலிம்கள் மட்டுமே அங்கம் வகிக்கக் கூடிய தவ்ஹீது பிரச்சாரக் குழு என்று ஒரு அமைப்பு துவங்கினீர்களே! அதன் நோக்கம் என்ன? அதன் பெயரால் 3 நாள் பயிற்சி முகாம் நடத்தப் போவதாக வசூலித்தீர்களே! பயிற்சி முகாம் என்ன ஆயிற்று?
ஹாமித் பக்ரி, ஸைபுல்லாஹ் ஹாஜா பொறுப்பு ஏற்று குவைத் சென்றார்கள்.
அடுத்து துவங்கிய இஸ்லாமிய கல்விச் சங்கம். அதன் நிலை என்ன? அதிலும் ஆலிம்கள் மட்டுமே அங்கம் வகித்தீர்கள். இதையும் பின்னால் இருந்து இயக்கியது யார்?. வழக்கம் போல் பினாமித் தலைவராக- டைரக்டராக ஹாமித் பக்ரியை பொறுப்பு ஏற்கச் செய்தீர்கள். உங்களின் கொள்கை(?)ப்படி வெளிநாட்டவர்களிடமோ வெளிநாட்டு நிறுவனங்களிடமோ உதவி பெறும் அமைப்பில் இருக்க மாட்டீர்கள். எனவே உங்களின் ஆலோசனைப்படி ஹாமித் பக்ரி, ஸைபுல்லாஹ் ஹாஜா பொறுப்பு ஏற்று குவைத் சென்றார்கள்.
குவைத்தில் கல்விச் சங்க கிளை அமைத்தார்கள்.
அங்கே இஹ்யாத் துராஸ் என்ற நிறுவனத்தில் கமாலுத்தீன் மதனியைப். பற்றி குறைகளைச் சொன்னார்கள். உங்களைப் பற்றி பெருமைகளை எடுத்து வைத்தார்கள். அல்முபீன் ஆக்கங்களை காட்டினார்கள். நீங்கள் செய்வதாகக் கூறிய தஃவாப் பணி பற்றி தயாரித்து சென்ற ஆவணங்களைக் காட்டினார்கள். இவற்றையெல்லாம் அந்த நிறுவனம் நம்பியது. அதனால் உங்கள் மூலம் (அதாவது இஸ்லாமிய கல்விச் சங்கம் மூலம்) தமிழ் நாட்டில் பள்ளிகள், மதரஸாக்கள் கட்ட தஃவாவில் ஈடுபடும் தாயி-களுக்கு சம்பளம் கொடுக்க முன் வந்தது. குவைத் வாழ் தமிழக மக்களிடமும் வசூல் செய்ய குவைத்தில் கல்விச் சங்க கிளை அமைத்தார்கள்.
இனி பி.ஜே. தலைமையிலான முஸ்லிம் டிரஸ்ட் தஃவாப் பணி செய்யாது.
பிறகு யு.ஏ.இ.வந்தார்கள். மாற்று மதத்தவர்களை இஸ்லாத்திற்கு அழைக்கும் தஃவா பணியை முஸ்லிம் டிரஸ்ட் செய்து கொண்டிருந்தது. அதற்கு உரிய 65-ஆயிரம் ரூபாய் கொடுத்து தஃவா பணியை கல்விச் சங்கத்திற்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்று அதன் தலைவர் பி.ஜே.சொன்னார். எனவே நாங்கள் முஸ்லிம் டிரஸ்டுக்கு 65-ஆயிரம் கொடுத்து தஃவாப் பணியை வாங்கிக் கொண்டோம். இனி பி.ஜே. தலைமையிலான முஸ்லிம் டிரஸ்ட் தஃவாப் பணி செய்யாது என்று ஹாமித் பக்ரியும் ஸைபுல்லாஹ் ஹாஜாவும் யு.ஏ.இ. முழுக்க எல்லா கூட்டங்களிலும் பேசினார்கள்.
அதற்குரிய கூலி அல்லாஹ்வால் மட்டுமே தர முடியும்.
ஒருத்தராவது ஏங்க! தஃவாப் பணி என்பது வியாபாரப் பொருளா? பி.ஜே. தலைமையிலான முஸ்லிம் டிரஸ்ட் விற்கவும், நீங்கள் வாங்கவும். நீங்கள் வாங்கி விட்டதால், இனி அவர்கள் தஃவாப் பணி செய்ய மாட்டார்கள் என்கிறீர்களே. தஃவாப் என்பது மார்க்கப் பணிகளில் ஒன்றாகும். மார்க்கப் பணி என்பது அமல் ஆகும். அமல் என்பது அல்லாஹ்விடம் மட்டுமே நன்மையை நாடி செய்யக் கூடிய ஒன்று. உடலால் ஆன அமல்களாகட்டும். பொருளால் ஆன அமல்கள் ஆகட்டும். எவ்வளவு செலவு செய்தாலும் அதற்குரிய கூலி அல்லாஹ்வால் மட்டுமே தர முடியும்.
மார்க்க பணியை விற்பனை செய்ய ஆதாரம் உள்ளதா?
யாரும் வந்து கேட்டால் அதற்கு உரியதை வாங்கி கொடுத்து விடுவோம் என்று செய்ய மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா? குர்ஆன் ஓதி முடிச்சு போட்டு விற்பவர்களை கேவலமாக விமர்சித்தீர்களே! அதைவிட இது மகாக் கேவலம் இல்லையா? செய்யும் பொழுது அந்த நோக்கம் இல்லை. செய்து முடித்த பின்; பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விட்டது. அதை ஒட்டியாவது ''இது மாதிரி மார்க்கப் பணி செய்தேன். எனக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விட்டது.. எனவே அந்த பணிக்கு நான் செய்த செலவுக்குரியதை தந்து நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். என்று மார்க்க பணியை விற்பனை செய்ய ஆதாரம் உள்ளதா? எதற்கெல்லாமோ குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கேட்கக் கூடிய தவ்ஹீதுவாதிகள் உங்களை தக்லீது செய்வதால் இது பற்றிக் கேட்கவில்லை.
தஃவாப் பணிக்கு என்று வசூலித்த பணங்கள் எங்கே போயிற்று?
மாற்று மதத்தவர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பது எல்லோர் மீதும் உள்ள பொறுப்புதான். வாழ் நாளெல்லாம் செய்ய வேண்டிய பணிதான். அதை த.மு.மு.க செய்தால் அதோடு சேர்ந்து செய்ய வேண்டியதுதானே! நீங்கள் எல்லோரும் த.மு.மு.க.வின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தானே! அப்படி இருக்க ஏன் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற தனி அமைப்பு கண்டீர்கள். யாராவது ஒரு ஆள் கேட்டார்களா? யாருமே எந்தக் கேள்வியும் கேட்க வில்லை. தஃவாப் பணி, தஃவாப் பணி என எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டுதான் உதவிகளை அள்ளி வழங்கினார்கள். அந்தத் தஃவாப் பணியும் என்ன ஆயிற்று? தஃவாப் பணிக்கு என்று வசூலித்த பணங்கள் எங்கே போயிற்று?
அபூதாவூது Nஷர்- திட்டம் என்ன ஆயிற்று? எங்கே அபூ தாவூது?
அதுபோல உங்கள் ஆலோசனைப்படி அபூதாவூது வெளியிட Nஷர்- திட்டம் அறிவித்தார்கள். இது மாதிரி பல Nஷர்த் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயனற்றுப் போனது. பலர் ஏமாந்திருக்கிறார்கள். இருந்தாலும்; தவ்ஹீது ஆலிம்கள் சொல்கிறார்கள் என்று நம்பி ஆர்வமுடன் பலர் அபூதாவூது Nஷர்த்திட்டத்தில் சேர்ந்தார்கள். அந்த Nஷர்- திட்டம் என்ன ஆயிற்று?
"அவர்களும் தவ்ஹீது பிரச்சாரத்தில் பங்கெடுத்தார்கள் என்பதால் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு. மதனிகள் அமைப்பு, காசுக்காக உள்ள அமைப்பு. செயல்பாடுகளை காசாக்குவதற்காக உள்ள அமைப்பு என்று குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி உள்ளீர்கள். மதனிகள் மட்டுமே இருக்கும் "ஜம்இய்யா அது உங்கள் பாணியில் சவூதி சம்பளம் வாங்குவோர் சங்கம் என்றே வைத்துக் கொள்வோம். அங்கே கொடுப்பவன் சம்பள வகை என்றே கொடுக்கிறான். அதைத்தான் வாங்குகிறார்கள். இதை மார்க்கத்தில் "ஹராம் மாதிரி சித்தரிக்கிறீர்கள்.
லுஹா எத்தனை பேருக்கு அபிடவிட் எடுத்துள்ளார்?
கல்விச் சங்கத்தின் நோக்கம் என்ன? தஃவா பணி என்று கூறி வசூல் பண்ணி சென்றார்கள். இப்பொழுது "செட்டப்-கேஸட் வெளியிட்ட மாதிரி வசூலுக்காக ஏதோ ஒரு கிராமத்தில் மண் தரையில் இருக்கிற மாதிரியெல்லாம் 2 கேஸட்கள் கொண்டு வந்து காட்டினார்கள். இனி கிராமம்- கிராமமாக நடக்கும் தஃவா பணியை பதிந்து அனுப்ப என்று ஒரு வீடியோ கேமராவும் வாங்கிச் சென்றார்கள். தஃவா வுக்கு என்று வாங்கிய அந்த கேமரா, 01-04-2000-க்குப் பிறகு இது வரை எத்தனை கிராமத்தில் உங்கள் பணிளை பதிந்துள்ளது? அபிடவிட் பணி லுஹா உடையது என்றார்கள். லுஹா எத்தனை பேருக்கு அபிடவிட் எடுத்துள்ளார்?
உங்கள் நோக்கம் வசூல்.
மவுலவிகள் மட்டுமே உள்ள அமைப்பு. மவுலவிகளுக்கு சம்பளம் கொடுக்க துவங்கப் பட்ட அமைப்பு என்று கல்விச் சங்கம் பற்றி நான் உங்களிடம் விமர்சித்தேன். அதனால் கல்விச் சங்கத்தின் ஒரிஜினல் தலைவரும், ஒரிஜினல் டைரக்டருமான உங்கள் ஆலோசனைப்படி மவுலவி அல்லாத என்னையும் என்னைப் போன்றவர்களையும் கல்விச் சங்கத்தில் சேர்ப்பதாக கூறினார்கள். உங்கள் நோக்கம் வசூல். சில நிபந்தனைகளைக் கூறினேன். ஏற்றுக் கொண்டார்கள்.
அப்பொழுதும் முறையாகவே எழுதித் தந்தேன்.
கல்விச் சங்கத்தில் நான் கண்ட குர்ஆன் ஹதீஸுக்கு முரணான செயல்களைச் சுட்டிக் காட்டினேன். இல்லை என மறுத்தார்கள். நான் கூறிய குற்றச் சாட்டுக்கள் இருந்த போதிலும் இல்லை என மறுத்தது, இனி செய்ய மாட்டார்கள் என்பதற்கு உரிய உத்தரவாதமாக அதை நாம் எடுத்துக் கொண்டோம். பிறகு துபை ஐ.ஏ.ஸி.க்கு பரிந்துரை கடிதம் எழுதிக் கேட்டார்கள். அப்பொழுதும் நீங்கள் விரும்பியபடி எழுதி தரவில்லை. அதாவது கிராமம் கிராமமாக பணி செய்கிறீர்கள் என்று எழுதவில்லை. அப்பொழுதும் முறையாகவே எழுதித் தந்தேன்.
அந்த கல்விச் சங்கம் எங்கே?
17.09.2000. தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் நான் அறிய கல்விச் சங்கத்திற்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வந்துள்ளது. அது என்ன வகைக்கு என்று வந்தது. அது எப்படி செலவு ஆனது. அதை உங்கள் ஆதரவு மவுலவிகளுக்கு சம்பளம் என்ற பெயரால் பங்கு வைத்து கொடுத்துள்ளீர்கள் என்பது எனது குற்றச் சாட்டு. இல்லை என்றால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்தக் கணக்கை வெளியிடுங்கள். மிகுந்த சிரமத்துடன் வெளிநாடுகளுக்கு எல்லாம் வந்து அறிமுகம் செய்த அந்த கல்விச் சங்கம் எங்கே?
பினாமித் தலைவர் பக்ரி அறிவித்து விட்டார்.
பக்ரி ரமழான் இரவுகளின் சிறப்புக்களை எத்தனை முறைப் பேசி இருக்கிறார். அல்லாஹ்விடம் அழுது வேண்ட வேண்டிய இரவுகளில் ஒரு இரவை கடந்த ஆண்டு உங்கள் முன் வீணடித்தார். உங்கள் வாழ்க்கையில் யாரையும் பேசாத பேச்சை பேசியதாக நீங்களே கூறி உள்ளீர்கள். உங்கள் முன் விடிய விடிய அழுது புலம்பியதற்கு. இறுதியில் அவரை மன்னிப்பதற்கு பகரமாக கல்விச் சங்கத்தைக் கலை என்றீர்கள். கல்விச் சங்கம் கலைக்கப் பட்டு விட்டதாக பினாமித் தலைவர் பக்ரி அறிவித்து விட்டார்.
மானம் கப்பலேறும் முன் இரவோடு இரலவாக கலைத்து விட்டீர்கள்.
பக்ரி ஒரிஜினல் தலைவராக இருந்தால் அவருக்கும் கல்விச் சங்கத்திற்கும் இந்தக் கதி ஏற்பட்டிருக்குமா? உண்மையியிலேயே இது தஃவாவுக்காகத்தான் என்று துவங்கப்பட்டிருந்தால் கலைக்கக் கூறி இருப்பீர்களா? இக்லாஸுடனானதாக இருந்தால் அவர்தான் கலைத்து விட்டதாக அறிவித்திருப்பாரா? உங்கள் அணி மவுலவிகளின் வருவாய்க்காகத் தஃவா என்ற பெயரால் துவங்கினீர்கள். போட்ட திட்டம் நிறைவேறவில்லை. சாயம் வெளுக்கத் துவங்கிவிட்டது மானம் கப்பலேறும் முன் இரவோடு இரலவாக கலைத்து விட்டீர்கள்.
இன்னொரு மவுலவி வெளி நாட்டுக்குப் போய் வசூல் வேட்டையாடுகிறார்.
இந்த இரவுத் தகவல்களைக் கூறிய லுஹா இதையொட்டியுள்ள இன்னொன்றையும் கூறினார். கலைத்து விட்டதாக பக்ரி அறிவித்ததும் கலைக்கப் படவில்லை. கல்விச் சங்கத்திற்கு பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் ஆக்கி விட்டு ஹாமித் பக்ரியும் ஸைபுல்லாவும் போய் விட்டார்கள். எனவே நிதி தாருங்கள் நாங்கள் உண்மையான தஃவாப் பணி செய்வோம் என்று கூறி இன்னொரு மவுலவி வெளி நாட்டுக்குப் போய் வசூல் வேட்டையாடுகிறார் என்று.
ஹராமான முறையில் பங்கு போடுவீர்கள்.
இமாம்களை கண் மூடித்தனமாக பின் பற்ற மாட்டோம் என்று உறுதி எடுத்த தமிழக தவ்ஹீது வாதிகளில் பெரும்பாலோர். முன் அனுபவமுள்ள நிர்வாகிகளின் பேச்சைக் கேட்காமல், உங்களைப் போன்ற மேடைப் பேச்சாளர்களை கண்மூடித்தனமாக ஆதரிப்பதால் இப்படி கூத்தடித்துக் கொண்டிருக்கிறீர்கள். முறையாகப் பிரச்சாரப் பணிக்கு என்று தருவதை வாங்கமாட்டோம் என்று வரட்டுக் கவுரவம் பேசுவீர்கள். ஹலாலான அதை வாங்குபவர்களை அடிமையாக சித்தரித்து கீழ்த்தரமாக விமர்சிப்பீர்கள். பிறகு தாருல் ஹதீஸ், பிரச்சாரக்குழு, கல்விச் சங்கம், மதரஸா,கிராமம் கிராமமாக முடுக்கி விடப்படும் பணி பள்ளி வாசல் கட்டிடப் பணி இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பெயரில் வசூலித்து ஹராமான முறையில் பங்கு போடுவீர்கள். கேட்டால் வார்த்தை விளையாட்டால் சத்தியம் செய்வீர்கள்.
கியாமுல் லைல் பெயரால் பணம்.
இமாமத் பணிக்கு சம்பளம் வாங்குவது ஹராம் என ஊருக்கு உபதேசம் செய்வீர்கள். வேறு பணிகளின் பெயரால் உங்கள் அணி மவுலவிக்கு பள்ளிவாசல் பணம் கிடைக்க வழி செய்வீர்கள். ஜமாஅத் செலவில் வசூலுக்குப் போனால் கிடைக்கும் அன்பளிப்பு ஹராம் என்று ஊருக்கு உபதேசம் செய்வீர்கள். உங்கள் அணி மவுலிகள் ஜமாஅத் செலவில் போய் தங்கள் சேப்பை நிரப்பிக் கொண்டு வருவதை கண்டு கொள்ள மாட்டீர்கள். தராவீஹ் தொழுகைக்கு பணம் வாங்குவதை விமர்சிப்பீர்கள் உங்கள் அணி மவுலிகள் கியாமுல் லைல் பெயரால் பணம் வாங்குவதை கண்டு கொள்ள மாட்டீர்கள். இதுதானே உங்கள் அணி நிலை.
நீங்கள்தான் தற்பெருமை பேசி உள்ளீர்கள்.
நான்தான் அறிமுகப்படுத்தினேன் இப்படி சொல்லலாமா? நான் என்ற பெருமை கொண்டாடுகிறார். இப்படி பெருமை கொண்டாடுகிறவர்களுக்கு என்ன இருக்கு என்று அல்லாஹ்வை பயந்து கொள்ளனும். இப்படி கமாலுத்தீன் மதனி பற்றி விமர்சித்துள்ளீர்கள். அப்படி விமர்சித்த நீங்கள், நான் எனது 20-வருட வாழ்கையில் இப்படி சொன்னது கிடையாது என்று சொல்கிறீர்கள். அப்படி சொல்லிவிட்டு அதே தொடரில் தற்பெருமை பேசுகிறீர்கள். இப்படி தற்பெருமையை முஸ்லிம் ட்ரஸ்டில் மட்டும் சொல்வில்லை. பல இடங்களில், பல கூட்டங்களில் சொல்லிக் காட்டி இருக்கிறீர்கள். இதைக் கேட்டவர்கள். இதைத்தான் அந்த ஊரில் சொல்லிக் காட்டினாரே! இதைத்தான் அந்த ஊரில் சொல்லிக் காட்டினாரே! என்று பேசிக் கொள்கின்றனர். அதாவது நீங்கள் தான் தற்பெருமை பேசி உள்ளீர்கள் என்று உணர்ந்து கொண்டனர்.
நான் நான் என்பதுதானே?
தமிகத்தில் எழுச்சியை ஏற்படுத்திய கோட்டாறு முனாழராவில் கமாலுத்தீன் மதனி, ரஹ்மதுல்லா இம்தாதி பி.ஜே. ஆகிய 3 பேரும்தான் கலந்து கொண்டீர்கள். அப்படி இருக்க முனாழராவில் அவர்களின் பங்கு என்ன? என்று கேட்டுள்ளீர்கள். இதற்கு என்ன அர்த்தம். லுஹா உங்களைப் பற்றி கூறியது போல நான் நான் என்பதுதானே?
Comments