ஹாமித் பக்ரி ஐ.எஸ்.ஐ. உளவாளி. பி.ஜே.பி க்காரன் சொல்லவில்லை பி.ஜே. சொல்லி உள்ளார்.

2.12.2002.ல் ஹாமித் பக்ரி போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்ற செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான உடனேயே எங்களுக்கும் ஹாமித் பக்ரிக்கும் சம்பந்தமில்லை என அதிகாரிகளுக்குத் தெரிவித்தது பி.ஜே. கட்சி. 

இப்படி பி.ஜே. கட்சி கூறி இருப்பதை கேள்விப் பட்டவர்களெல்லாம் நம்ப மறுத்தார்கள். அவர்களுக்குப் பதிலடியாக எங்களுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என பகிரங்கமாக அறிவிப்பும் செய்தது பி.ஜே. கட்சி. 

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார் என்றச் செய்தி; வெளியானதுதான் தாமதம், நாங்கள் விசாரித்த அளவில் அவருக்கு தொடர்பு இருக்கிறது. ஆகவே அவருக்காக நாங்கள் போராட மாட்டோம் என்று அறிவித்து ஹாமித் பக்ரிக்கு தீவிரவாதி முத்திரையையும் குத்தி விட்டார்கள். பி.ஜே.கட்சியினர். 

தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்று விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கடமைமிகு காவல் துறையின் கடமை. அது சரியா தவறா என்று தீர்ப்புக் கூற வேண்டியது கனம் கோர்ட்டாருக்கு உள்ள உரிமை.

கூட்டமைப்பு மவுலவிகள் மூலமும் அறிவிக்கச் செய்துள்ளார்கள்.

7.12.02. சனிக்கிழமைதான் ஹாமித் பக்ரியை போலீஸாரே கோர்ட்டில் ஆஜர் படுத்தியுள்ளார்கள். அதற்கு முன்பாகவே இந்த 2 துறைகளின் பணிகளையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக ஹாமித் பக்ரிக்கு தீவிரவாதி முத்திரை குத்தி, நாங்கள் விசாரித்ததில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என தீர்ப்பாகக் கூறி உள்ளார்கள் பி.ஜே.கட்சியினர். 

இதை T.V,  பத்திரிக்கை பி.ஜே. கட்சி பிரச்சார மேடைகள் என அவர்களிடம் உள்ள எல்லா மீடியாக்கள் மூலமும் வெகு வேகமாக அறிவித்தார்கள். மேலும் 6.12.02 பெருநாள் குத்பா மற்றும் ஜும்ஆ உரைகளிலும் ஹாமித் பக்ரியுடன் கைகோர்த்திருந்த கூட்டமைப்பு மவுலவிகள் மூலமும் அறிவிக்கச் செய்துள்ளார்கள்.

பி.ஜே. கட்சியின் ஆரம்ப காலக் கொள்கைதான் இது.

இது பி.ஜே. கட்சி காட்டிக் கொடுக்கும் வேலை செய்கிறது என்ற குற்றச்சாட்டை உண்மைப் படுத்தி, பி.ஜே. அணியின் தற்போதைய சுய ரூபத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து விட்டது. 

ஆனால்; மண்டலங்கள் மூலம்; பதவி பெற்ற பி.ஜே.கட்சியின் யு.ஏ.இ. பொறுப்பாளர்களோ தலைமைக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்ட ஆளுக் கொருவிதமான விளக்கங்களையும் நாளுக்கொருவிதமான சந்தர்ப்ப வாதங்களையும் கூறி மக்களை பலவிதமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

தீவிரவாத குற்றச் சாட்டுக்களுக்கு எதிராக போராடாது என்பது பி.ஜே. கட்சியின் ஆரம்ப காலக் கொள்கைதான் இது. இப்பொழுது ஒன்றும் பக்ரிக்காக புதிதாகக் கூறவில்லை|| என்று சமாளித்து உள்ளார்கள் மண்டலப் பொறுப்பாளர்களில் சிலர்.

பொய் என்று வாதித்தது பி.ஜே. கட்சி.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்தது. உடனே தீவிரவாதி முத்திரை குத்தி மதுரை மாவட்ட பி.ஜே.கட்சியின் அப்போதைய தலைவர் சீனீ நைனா முஹம்மது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப் பட்டதாகக் கூறப்பட்டது அவருக்காக போராட்டங்கள் நடத்தியது பி.ஜே.கட்சி. 

கொடுங்கையூரில் வெடி குண்டுகளுடன் சிலர் பிடிக்கப் பட்டார்கள். பிடித்த குண்டுகளைச் சட்டமன்றம் வரை கொன்டு போய்;க் காட்டினார்கள். T.V,  மற்றும் பத்திரிக்கைகளிலும் பயங்கரமான ஆயுதங்கள் என்று ஆதாரங்களுடன் பட்டியல் போட்டுக் காட்டினார்கள். அப்போது அதை எதிர்த்து பொய் என்று வாதித்தது பி.ஜே. கட்சி.

அது கலைஞர் ஆட்சியில். இந்த அம்மா கடுமையாக இருக்கும்

இப்படியெல்லாம் கடந்த காலத்தில் தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக போராடிய பி.ஜே. கட்சி. இப்பொழுது எதுவும் நடக்காத நிலையில் எந்த ஆதாரமும் காட்டப்படாத நிலையில் திட்டமிட்டதாகக் கூறித்தான் பக்ரி கைது செய்யப்பட்டுள்ளார். 

இவருக்காக போராட மாட்டோம். என்று அறிவித்து தீவிரவாத குற்றச் சாட்டுகளுக்கு எதிராக பி.ஜே. கட்சி என்றும் போராடியது இல்லை என்று கூறுவது முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது மாதிரிதானே?; இப்படிக் கேட்டதும் அது கலைஞர் ஆட்சியில். இந்த அம்மா கடுமையாக இருக்கும்|என்று வேறு ஒரு பொறுப்பாளர் சமாளித்து உள்ளார்.

இவர்களை அந்த அம்மா மாற்றி விட்டார்.

எளிமையான நிலை என்றால் விளம்பரத்திற்காக போராடி லாபம் சம்பாதிப்பார்கள். கடுமையான நிலை என்றால் அவர்கள் சார்பாகவும் மேலும் கூடுதலாக 2 தீவிரவாத முத்திரை குத்தி விடுவார்கள் என்று தான் மண்டலப் பொறுப்பாளர் கூற்றிலிருந்து விளங்க முடிகிறது. 

மேலும் தொடர்ந்த அந்தப் பொறுப்பாளர், அதனால்தான் இப்படி பாலிஸியாக போக வேண்டி உள்ளது. இல்லை என்றால் எல்லாத்தையும் புடிச்சி உள்ளே போட்டு அமைப்பைத் தடை செய்து விடும் அந்த அம்மா|| என்றும் கூறி உள்ளார். மஞ்சள் துண்டு கருணாநிதி என்று இவர்களால் விமர்சிக்கப் பட்டவரை கலைஞர் என்று கண்ணியத்துடன் கூறும் அளவுக்கு இவர்களை அந்த அம்மா மாற்றி விட்டார் போலும்.

பி.ஜே. கட்சி துவங்கிய பின்னர்தான்.

R.S.S. அலுவலக குண்;டு வெடிப்பு நடந்தது யார் ஆட்சியில்.? அந்த வழக்கில் உள்ளவர்கள் குடும்பங்களுக்கு உதவிட நிதி வசூலித்தது யார்? வழக்கு நடத்த வக்கீல் வைத்தது யார்? என்று கேட்டால். அது பி.ஜே. கட்சி துவங்கும் முன் உள்ளது. பி.ஜே. கட்சி துவங்கிய பின் ஜனநாயக வழி மட்டும்தான் என்கிறார் ஒரு மண்டலப் பொறுப்பாளர். 

பி.ஜே. கட்சி துவங்கிய பின்னரும் R.S.S. அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் உள்ளவர்கள் குடும்பங்களுக்கு உதவிட நிதி வசூலித்தார்கள். வழக்கு நடத்த வக்கீல் பீஸ் என்று வசூலித்தார்கள். பி.ஜே. கட்சி துவங்கிய பின்னர்தான் R.S.S.  அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் உள்ளவர்களை ஜாமீன் எடுத்தார்கள்.

1998க்குப் பிறகுதான் இந்த புதிய நிலை என்கிறார் இன்னொருவர்.


இந்து முன்னனி தலைவர் ராஜகோபாலன் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் தடாவில் கைதான பாக்கருக்காக போராட கண்டெடுக்கப்பட்டதுதான் பி.ஜே. கட்சி. முதன் முதலாக அதற்காகத்தான் கண்டன ஊர்வலமும் நடத்தியது. 

நாகூர், நாகப்பட்டிணம் ஆகிய 2 இடங்களில் பார்சல் குண்டு வெடித்தது. அப்போது டெக்னிக்காக குண்டு தயாரித்த தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு கைதானவர்தான் காரைக்கால் பெண்கள் கல்லூரியின் அன்றைய முதல்வர் பி.ஜே. கட்சியின் இன்றைய மாநில செயலாளர் ஜே.ஏஸ்.ரிபாஈ. அவருக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது பி.ஜே. கட்சி. 

இவை எல்லாம் யார் ஆட்சியில் என்று கேட்டால். 1998ல் கோவை பாட்ச்சாவுக்கு எதிராக ஒரு கேஸட் வெளியிட்டார்கள். அதற்கு(1998க்கு)ப் பிறகுதான் இந்த புதிய நிலை என்கிறார் இன்னொருவர்.

வேறுவிதமாக ஏமாற்றி வருகிறார்கள்.

தேங்காய்ப் பட்டணத்தில் குண்டு வெடித்தது. அப்பொழுது போராடினார்கள். அது 1998க்கு முன்பு நடந்ததா? அமெரிக்காவில் இரண்டு 110 மாடி கட்டிடங்கள் இடிக்கப் பட்டது. அல் காயிதா தான் என்று உலகம் முழுவதும் கூறியது அப்போது, 

இல்லை இது அமெரிக்கா போடும் நாடகம் என்று உஸாமா பின் லேடனுக்கு ஆதரவாக பத்திரிக்கையில் எழுதினார். பள்ளி வாசல்களில் பேசினார்கள்.. சிறப்பு ஆடியோ வீடியோ கேஸட்கள் சி.டி.க்கள் வெளியிட்டார்கள். இவை யாவும்  1998 க்கு முன்பா? என்று கேட்டால் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். 

கிடைத்த பதவிக்கும் அதன் மூலம் கிடைக்கும் பலனுக்கும் விசுவாசம் செலுத்தும் நோக்குடன் செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட மண்டலப் பொறுப்பாளர்களில் சிலர் ஹாமித் பக்ரிக்கு தீவிரவாதி முத்திரை குத்தி போராட மாட்டோம் என்றும் ரகசிய முயற்சி நடக்கிறது என்றும் ஒருவருக் கொருவர் முரண்பாடான விளக்கம் கூறி ஏமாற்றி வருகின்றனர். இன்னும் சில மண்டலப் பொறுப்பாளர்களோ வேறுவிதமாக ஏமாற்றி வருகிறார்கள்.

பி.ஜே.யிடமிலிருந்து எந்த தகவலும் வரவில்லை.

குற்றாலத்தில் கூட்டம் நடந்தது உண்மை. அது விடியல் வெள்ளி நடத்தியது தவ்ஹீது மவுலவிகள் விபரம் தெரியாமல் போய் கலந்து மாட்டிக் கொண்டார்கள். எனவே போராடுவோம் பி.ஜே. கட்சி போராடும் என்று ஏமாற்றி உள்ளார்கள். 

குற்றாலத்தில் விடியல் வெள்ளி கூட்டம் நடத்தியதாக கூறுகிறீர்கள். அவர்களில் யாருமே கைது செய்யப்படவில்லையே எல்லாமே கூட்டமைப்பில் உள்ள தவ்ஹீது மவுலவிகள் தானே கைதாகி உள்ளார்கள் என்று கேட்டதற்கு சரியான பதில் இல்லை. 

சரி போராடும் என்றீர்களே என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு. நோன்பாக இருப்பதால் போராடவில்லை. டிசம்பர் 6 முடியட்டும், பெருநாள் முடியட்டும் என்று சில நாள் ஏமாற்றினார்கள். அப்பொழுதும் போராட்டம் தமிழ் நாட்டில் தானே. இங்கிருந்து தந்தி பேக்ஸ் ஈ-மெயில்கள் அனுப்புவது வழக்கம் தானே. அதை ஏன் செய்யவில்லை. என்று கேட்டதற்கு. பி.ஜே.யிடமிலிருந்து எந்த தகவலும் வரவில்லை என்றனர்.

தமிழக முஸ்லிம்களின் உணர்வை அது வெளிப்படுத்தவில்லை.

பி.ஜே. பாக்கர், போன்றவர்கள் தீவிர வாத முத்திரை குத்தி கடந்த காலங்களில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் உடனடியாக தந்தி பேக்ஸ் ஈ-மெயில்கள் மூலம் எதிர்ப்பைக் காட்டுங்கள்; என்று வெளிநாட்டில்; பணிபுரிபவர்களையும் தூண்டி விட்டு தங்களை காத்துக் கொண்டவர்கள்தான் பி.ஜே. அணியினர். 

அப்படிப்பட்டவர்கள் பக்ரி விஷயத்தில் ஏன் அறிக்கை வெளியிடவில்லை என்று கேட்டதற்கு பதில் கூறமுடியாமல் மவுனமானவர்கள். பிறகு திடீர் ஞானோதயம் பெற்று உணர்வு வரட்டும் என்றார்கள். இப்பொழுது அவர்களிடம் அது இல்லை என்ற பொருளில் சொன்னார்களோ என்னவோ? உணர்வு வார இதழும் வந்தது. ஹாமித் பக்ரி என்ற பெயரே இல்லாமல் வந்தது. மக்கள் எதிர் பார்த்த உணர்வாக அது வரவில்லை. தமிழக முஸ்லிம்களின் உணர்வை அது வெளிப்படுத்தவில்லை.

மக்கள் மண்டலப் பொறுப்பாளர்களை விரட்டினர்.

எனவே ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்ட உடன் விண் T.V.  யில் பேட்டிக் கொடுத்தது ஏன்? உணர்வில் விளம்பரம் போட்டது ஏன்? பெண்கள் கல்லூரிகளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று பி.ஜே. இப்பொழுது அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? 

விதி 2 பிரிவு ஊ வில் இஸ்லாத்தின் அடிப்படையில் செயல்படுவதே நோக்கமாகும் என்று ஒரு பைலாவும். பிறகு இஸ்லாத்தின் அடிப்படையில் செயல் படும் என்ற வாசகத்தை முற்றிலுமாக நீக்கி விட்டு அடுத்த பைலாவும். இப்படி அடிக்கடி பைலா, மற்றும் கொள்கையை மாற்றும் தலைமைக்கு,

அப்பாவி மக்களை கொல்வதும் பிற மத வழிபாட்டுத் தலங்களை தகர்ப்பதும் மார்க்கத்திற்கு முரணானது என்று தெரியும் போது. குர்ஆன் ஹதீஸ்கள்தான் மார்க்கம் என்ற கொள்கை உடைய தவ்ஹீது ஜமாஅத் தலைவராக இருந்த ஹாமித் பக்ரிக்கு இது தெரியாதா? அவருக்காக ஏன் போராடவில்லை என்று மீண்டும் கேள்விக் கணைகளால் மக்கள் மண்டலப் பொறுப்பாளர்களை விரட்டினர்.

அது மாதிரி ஹாமித் பக்ரிக்கு ஏன் செய்யவில்லை.

13.12.02 வெள்ளியன்று துபை அமர்வில் பேசிய காஜா பிர்தவ்ஸி. மேலப்பாளையம் தொடர் கொலை வழக்கில் கைதாகிய லுஹாவை சட்டப்படி 3 மாதம் கழித்து மீட்டது த.மு.மு.க.தான் இது யாருக்கும் தெரியாது. இப்பொழுதுதான் நான் கூறுகிறேன். 

அது போல் ரகசியமாக பி.ஜே.தான் பக்ரியை 3 மாதத்தில் வெளியில் எடுப்பார்| என்று உறுதி கூறி உள்ளார். விபரம் தெரிந்தவர்கள் சட்டம் தெரியாத இவரது உரையைக் கேட்கும்போது வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டனர். லுஹா கைதின் போது த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது உணர்வில் பக்கம் பக்கமாக 3 வாரங்கள் தொடர்ந்து கண்டித்து எழுதினார்கள். அது மாதிரி ஹாமித் பக்ரிக்கு ஏன் செய்யவில்லை என்ற சந்தேகம் உரையைக் கேட்ட ஆரம்ப கால உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

அல்லாஹ் நாடினால் மன்னிக்கலாம்.

இறுதியாக அறிவிப்பு செய்த பொறுப்பாளர் உரிமை : 07, குரல் : 13. டிச 06-12 உணர்வு வார இதழ் பக்கம் 2 ல் பி.ஜே.யின் சார்பில் வந்த 2 முக்கிய அறிவிப்புகளும் பக்ரிக்காக வந்தது அல்ல. அது எதேச்சையாக வந்த விளம்பரம் என்று அறிவிப்பு செய்தார். மேலும் பக்ரியை வெளியில் எடுக்க ரகசியமான முயற்சிகள் செய்து வருவது போன்ற நம்பிக்கையை ஊட்டினார். 

இன்னும் சிலர் அந்த விளம்பரங்கள் விடியல் வெள்ளிக்காக போட்டது என்றும் ஏமாற்றினார்கள். கெட்டிக் காரனின் புழுகு எட்டு நாளில் என்பது போல அடுத்து வந்த உணர்வு இவர்களின் கூற்றுக்கு மரண அடியாக இருந்தது. ஆக பொறுப்பாளர்கள் கூறி வருவது அத்தனையும் பொய்களே என்று நிரூபனமாகிவிட்டது. 

இந்த விஷயத்தில் மண்டலப் பொறுப்பாளர்களோ ஆதரவாளர்களோ அப்பாவிகளாக இருந்து பி.ஜே. தந்த தகவலை அப்படியே நம்பி கூறி இருந்தார்கள் என்றால் அதுவும் தவரே. அல்லாஹ் நாடினால் மன்னிக்கலாம்.


அல்லாஹ்வின் சாபம் இறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பதவி தந்த பி.ஜே.க்கு விசுவாசத்தைக் காட்டும் வகையில்; மண்டலப் பொறுப்பாளர்களே உருவாக்கிச் சொல்லி இருப்பார்கள் என்றால், பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளதால், அல்லாஹ்வின் லஃனத்து இவர்கள் மீது இறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அதுமட்டுமல்ல, உணர்வுள்ள முஸ்லிம்களும் இந்த பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று துஆச் செய்யத் தயங்க மாட்டார்கள். உதவ கடமைப் பட்டவர்கள் தங்களது கோழைத்தனத்தால் எதுவும் செய்யாமல் இருக்க ரகசியமாக உதவுகிறார்கள் என்று பொய் கூறி ஏமாற்ற எண்ணினால் அவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சிலோனுக்குப் போய் பாக்கிஸ்தான் தூதரகம் சென்றார்.

எது எப்படியோ பி.ஜே.யின் சுய ரூபம் தெரியாத பெரும்பாலானவர்கள் பக்ரி விஷயத்தில் பி.ஜே. மீதே தவக்குல் வைத்துள்ளனர். உண்மையிலேயே பி.ஜே.யின்; நிலை என்ன என்பதை அறியத் தருவது நமது கடமையாகும். 

8.12.02. காயல் பட்டிணம் கூட்டத்திற்கு சென்ற பி.ஜே. இடம் பக்ரிக்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று பக்ரி ஊர்வாசிகள் கேட்டுள்ளார்கள். அதற்கு பி.ஜே. கூறிய பதில் என்ன தெரியுமா? 

ஹாமித் பக்ரி ஐ.எஸ்.ஐ. உளவாளி. இப்படி அத்வானி சொல்லவில்லை, உமா பாரதி சொல்லவில்லை பி.ஜே.பி க்காரன் யாரும் சொல்லவில்லை பி.ஜெய்னுல் ஆப்தீன் சொல்லி உள்ளார். பக்ரிக்காக எனது அணி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது. 

எனது ஆதரவாளர்களை தனது ஆதரவாளர்களாக ஆக்க ஆயற்சி செய்தார். ஹஜ்ஜுக்கு போகிறேன் என்று சில பேரை சந்தித்து வந்துள்ளார். சிலோனுக்குப் போய் பாக்கிஸ்தான் தூதரகம் சென்றார். 3 மாதங் களுக்கு முன்பே அவரை நாங்கள் நீக்கி விட்டோம் என்று கூறி உள்ளார்.

இந்த வார உணர்வில் கூட உங்களுடன் ஹாமித் பக்ரி.

;காவல் துறையே அவர் மீது கூறாத குற்றச் சாட்டைக் கூறுகிறீர்கள். யாரை நீக்கினாலும் பத்திரிக்கையில் அறிவிப்பு செய்வீர்களே பக்ரியை நீக்கியதாக எப்பொழுது எந்த பத்திரிக்கையில் அறிவிப்பு செய்தீர்கள் என்ற கேள்வி உட்பட பல குறுக்கு கேள்விகளுக்கு பி.ஜே.யால் பதில் சொல்ல முடியவில்லை. அவருக்காக போராட மாட்டோம் என்று மறைமுகமாக அறிவித்துள்ள இந்த வார உணர்வில் கூட உங்களுடன் ஹாமித் பக்ரி அப்துல் மஜீத் உமரி பேசுவதாக விளம்பரம் வந்துள்ளதே என்று கேட்டதற்கு அது என் பார்வைக்கு வராமல் வந்து விட்டது என்று சமாளித்துள்ளார்.

சுத்தமான பொய்களில் இதுவும் ஒன்று.

ஹாமித் பக்ரியை நீக்கி விட்டதாக பி.ஜே. சொல்கிறார். மண்டலப் பொறுப்பாளரோ இமாம் அலி ஜனாஸாவை வாங்கியதிலிருந்து பக்ரிக்கு போலீஸ் தொந்தரவு இருந்தது அதனால் அமைப்புக்கு பாதிப்பு வரக் கூடாது என்று பக்ரி தானாகவே ராஜினாமா செய்து விட்டார் என்று கூறுகிறார்கள். 

ராஜினாமா செய்த செய்தி தவ்ஹீது மடலில் பிரசுரமாகி உள்ளதாக காஜா பிர்தவ்ஸி கூறி வருகிறார். இமாம் அலி இறந்தது 2002 செப்டம்பர் 29 ம் தேதி. அன்றுதான் திட்டமிட்டபடி ஸைபுல்லா ஹாஜா கூட்டமைப்பு தலைவராகவும் ஹாமித் பக்ரி மேலாண்மைக் குழுவுக்கும் உயர் பதவி பெற்றார்கள். 

ஆகவே காஜா பிர்தவ்ஸி போன்றோர் கூறி வரும் சுத்தமான பொய்களில் இதுவும் ஒன்று. இதை கொள்கைக்காக அமைப்பு பணிகளில் ஈடுபாடுடையவர்கள் விளங்கிக் கொண்டார்கள்.

இமாம் அலி ஜனாஸாவைப் போய் வாங்காதீர்கள்.

காஜா பிர்தவ்ஸியின் அண்ணன் ஷம்சுல் லுஹா டிசம்பர் 6 அன்று ஜும்ஆ வில் ஹாமித் பக்ரி அப்துர் றஹ்மான் ஷிப்லி போன்றவர்களை தீவிரவாதிகள் என்று பெயர் வாரியாக அறிவித்து பி.ஜே. அணி அவர்களுக்காக போராடாது என்று டிக்லர் பண்ணி உள்ளார். இமாம் அலி ஜனாஸாவைப் போய் வாங்காதீர்கள் என்று பி.ஜே. கட்சி சொன்னதாகவும் மீறிப் போய் பக்ரி வாங்கியதாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பக்ரி சார்பில் இலங்கை சென்று வந்தவர்களில் ஒருவரான ஷம்சுல் லுஹா.

29.09.02. அன்று மதுரையில் நடந்த அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு மாநில கூட்டத்தில் இமாம் அலிக்காக நாம் செய்யாவிட்டால் யார் செய்வார்கள். அல்லாஹ் இருக்கிறான் என்று காட்ட வேண்டும்  இப்படி பி.ஜே. பேசினார். அதனால்தான் இமாம் அலி ஜனாஸாவுக்கு பெருங் கூட்டம் கூடியது. இந்த வகைக்காக கூட்மைப்பில் 50,000 ரூபாய் வசூல் ஆனது பெரிய கிப்ட் என்று மேலப்பாளையம் மஸ்ஜிதுர் றஹ்மானில் 4.10.02. அன்று ஜும்ஆவில் கூறி பெருமைப் பட்டுள்ளார் பக்ரி சார்பில் இலங்கை சென்று வந்தவர்களில் ஒருவரான ஷம்சுல் லுஹா.

அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று கூறி மறுக்கச் சொல்லுங்கள்.

குர்ஆன் ஹதீஸ்களுக்கு மட்டுமே கட்டுப் படுவோம் என்ற அடிப்படை கொள்கையிலிருந்து விலகி விட்டவர்கள். பி.ஜே. தலைமையில் உள்ள கட்சிக்கும் பக்ரி தலைமையிலுள்ள கூட்டமைப்புக்கு மட்டுமே கட்டுப் படுவோம் என்று கொள்கையை மாற்றிச் சென்று விட்டவர்கள். உலக ஆதாயத்திற்காக தங்கள் வார்த்தை ஜாலத்தால் சத்தியம் செய்து கூட மறுக்கலாம். 

குறிப்பாக காயல் பட்டிணத்தில் பிஜே. இப்படி கூறவே இல்லை என்றும் மறுக்கலாம். எதை மறுத்தாலும் எப்படி மறுத்தாலும் அதில் அவர்கள் பொய்யர்கள் என்றால் அவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று கூறி மறுக்கச் சொல்லுங்கள்.

வழக்கு நடத்த முடியாமல் பிச்சை எடுக்கும் அளவுக்கு ஆளாக்கியவர்கள் யார்?

இப்படி இதை மறுத்து பி.ஜே.ன் கைப்பட எழுதிய பிரசுரம் வெளியிடச் சொல்லுங்கள். ஏன் இவ்வளவு கடுமையாக அணுகச் சொல்கிறோம்? கோவை பாட்சாவின் குடும்பங்களே நாசமாகியது, சீனி நைனா முஹம்மதுவின் குடும்பம் சீரழிந்தது, இப்படி தமிழகத்தில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் சிறையில் வாட, அவர்களின் வீடு வாசல்கள் மட்டுமன்றி மனைவி மக்கள் நகைகளை விற்றும் வழக்கு நடத்த முடியாமல் பிச்சை எடுக்கும் அளவுக்கு ஆளாக்கியவர்கள் யார்?

இன்று பக்ரி நாளை உங்கள் குடும்பத்தவராகக் கூட இருக்கலாம்.

அரங்கம் அந்தரங்கம் (ரகசியம்) என்ற இரட்டை நிலை இஸ்லாத்தில் இல்லை. இது காசடிக்க செய்யும் மோசடி என எதிர் அமைப்புகளை விமர்சிப்பார்கள். தாங்கள் மட்டும் அரங்கம் அந்தரங்கம் (ரகசியம்) என்ற இரட்டை நிலையைச் சொல்வார்கள். 

கண் மூடித்தனமாக தலைமைக்குக் கட்டுப்படுதல் அமீர் மாயைகள் இஸ்லாத்தில் இல்லை என்பார்கள். தாங்கள் மட்டும் அமைப்பு தலைமை எனக் கூறி இஸ்லாத்தை இரண்டாம் பட்சமாக கருதச் செய்வார்கள். ரகசியமாக உதவுதல் என்பது இவர்களின் ரகசியமான வசூலுக்காகத்தானே தவிர உதவுவதற்காக அல்ல. இனியும் அநியாயங்களை கண்டு கொள்ளாமல் இருந்தால் இன்று பக்ரி நாளை உங்கள் குடும்பத்தவராகக் கூட இருக்கலாம்.

இப்பொழுது நீங்கள் சிறையில் இருப்பதாக சற்று கற்பனை செய்துப் பாருங்கள். உங்கள் மனைவி மக்கள் நிலை எப்படி இருக்கும். கற்பனைக்கே கண்களில் நீர் தேங்குகிறது என்றால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் நிலை? 

மேடை கிடைத்ததும் தோல் தட்டி மீசையை முறுக்கி வெறியூட்டி பேசுவதும். பிரச்சனை என்று வந்து விட்டால் தொடை நடுங்கி ஓடி ஒழிவதுமாக உள்ளவர்களை இனியும் ஆதரித்தால், மேலும் சமுதாயம் பாதிக்கப்படும். 

அது மட்டுமல்ல, அவர்கள் செய்தவற்றை அங்கீகரித்து விட்டோம் என்ற அடிப்படையில் அவர்கள் செய்த செய்கின்ற பாவத்தில் நாம் பங்கு கொள்ள நேரிடும். இந்த தீமைகளிலிருந்து அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பாற்றுவானாக ஆமீன்.

வெளியீடு:- அனைத்து தவ்ஹீது ஜமாஅத் மேலாண்மைக் குழு உறுப்பினர். மற்றும் குர்ஆன் ஹதீஸ்களுக்கு மட்டுமே கட்டுப் படுவேண்டும் என்ற அடிப்டைக் கொள்கையில் உறுதியுடன் இருக்கும் தவ்ஹீதுவாதிகள்.

குறிப்பு:- சமுதாய நலனில் அக்கரை கொண்டோர் இதைப் பிரதிகள் எடுத்து வினியோகிக்கவும்.
ஹாமித் பக்ரி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் த.மு.மு.க.வுக்கும் சம்பந்தமில்லை. என்பதை ஜவாஹிருல்லாஹ்வின் அறிக்கை உறுதி செய்து விட்டது. ஹாமித் பக்ரி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுளுக்கு முழு பொறுப்புதாரி  பி.ஜே.தான் என்பதை பி.ஜே.யே ஒப்புக் கொண்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு