Posts

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் எது முதல் வசனம்?

Image
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்   என்று   திரு குர்ஆனில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தின்   ஆரம்பத்திலும் உள்ளது. அல்லாஹ்வின் பெயரால் துவங்க வேண்டும் என்பதற்காக உள்ளதா ? அல்லது அந்தந்த அத்தியாயத்தைச் சார்ந்த   முதல் வசனமாக அது உள்ளதா ? ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் எது முதல் வசனம் ? பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்று எல்லாரும் சொல்கிறோம் .  இது திரு குர்ஆனில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தின் முதல் வசனம் ஆகும். இந்த உண்மையி ன் விபரத்தை பெரும்பாலான மக்கள் விளங்காமல் இருக்கிறோம் . இதற்கு இந்த கேள்வியே சான்று.   இந்தக் கேள்வி ஏன் வருகின்றது ? எல்லா ஆயத்களுக்கும் வசன எண் போடப்பட்டு உள்ளது . பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதில் வசன எண் போடப்படவில்லை. பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பது அத்தியாயத்தைச் சார்ந்த வசனம் என்றால் அதற்கும் நம்பர் போட்டு இருக்க வேண்டுமே. எனவே எந்த ஒரு காரியத்தை துவங்கினாலும் பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்று சொல்லித்தான் துவங்குகிறோம் . அது போலத்தான் ஒவ்வொரு சூராவையும் . – அத்தியாயத்தையும் துவங்கும்பொழுது பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்...

இதுவரை எத்தனை விதமான குர்ஆன் தர்ஜுமாக்கள் தமிழிலில் வந்துள்ளது? அவற்றில் சிறப்பானது எது?

Image
இது நமக்கு வந்துள்ள கேள்வியாகும் .  தொழுகைக்குப் பின்னால் ஒரு சாரார் மனிதர்களால் எழுதப்பட்ட நுால்களை படிப்பதை வழக்கமாக ஆக்கி விட்டார்கள். மனிதர்களால் எழுதப்பட்ட மற்ற நுால்களைப் படிப்பதைவிட அல்லாஹ்வின் வேதத்தைப் படிப்போம். அதுவே சிறந்தது . இந்த அடிப்படையில் உருவானதுதான் திருமறைக் குர்ஆனின் மொழி பெயர்ப்புகளை படிப்பது என்ற வழக்கம். அதுவும் விளக்கம் இல்லாமல் அப்படியே படிப்பது என்பது நடைமுறையில் உள்ளதாக ஆகி விட்டது.   நடைமுறையில் உள்ளதை கண் மூடித்தனமாகப் பின் பற்றுவதையே தக்லீத் என்கிறோம் .  எனவே நாமும் தக்லீத் செய்து   விளக்கம் இல்லாமல் குர்ஆனை படித்துக் காட்டுவது என்ற நிலையில் இருந்து மாறி இருக்கிறோம் . விளக்கங்களையும் விபரங்களையும் பார்த்து வருகிறோம். மேலும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திட்டமும் வைத்திருக்கிறோம் அதில் முதலாவதாக வந்துள்ளது இந்தக் கேள்வி. ஒன்பது விதமான தர்ஜுமாக்களும் 4 விதமான தப்ஸீர்களும் தமிழிலில் வந்துள்ளது . குர்ஆன் தர்ஜுமாக்கள் என்றாலே சிறப்பானதுதான் அதிலும் சிறப்பானது எது என்பதுதான் கேள்வியாக உள்ளது . திரு மறைக் குர்ஆன் வசனங்களை...

அதிர்கிறது கலக்குகிறது. கொந்தளித்த உலமாக்கள்...கோர்ட்டுக்கு போய் உள்ளார்கள்.

ஒரு ஊர் பள்ளியில் சம்பள பணத்தையும் சர்வீஸ்(?) பணத்தையும் கணக்கு முடித்து பெற்றுக் கொண்டார் ஒரு ஆலிம்.  பிறகு ஜும்ஆ பிரசங்கம் செய்தார். அந்த மவுலவியின் உரையால் மண்டைகள் உடைந்து, சண்டைக்களம் காண வைத்தது. ஆதாரங்களுடன் பேஸ் புக்கில் பார்தோம். இன்னொரு ஊர் மவுலவிகள் பிரச்சனை. அதிர்கிறது   கலக்குகிறது.   கொந்தளித்த   உலமாக்கள்.. .. தொடரட்டும் என் ஆலிம் சமூகத்தின் புரட்ச்சி....!   ஆலிம்களின் த லை மை எடுத்து இருக்கும் முடிவு   1. பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு எதிராக மாவட்ட ஆட்ச்சியாளரிடம் மனு கொடுத்து விட்டார்கள்.  2 பள்ளிவாசல்   நிர்வாகத்துக்கு எதிராக பிட்நோட்டிஸ் அடித்து ஜும்வில் கொடுப்பத ற்கு  தயாராக உள்ளது  3. பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு எதிராக   கோர்ட்டுக்கு செல்கிறார்கள்.  இதனால் பள்ளி நிர்வாகிகளை அதீதமான கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது . இப்படி வாட்ஸப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. உடன் பிறந்தவர்களான இரண்டு ஆலிம்கள் நடு ரோட்டில் சண்டையிட்டார்கள். சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டார்கள். காரித் துப...

நாய் நக்கினாலும் மரணம் தான்!

Image
1400 ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகம் சொன்ன செய்தி இன்று உண்மை படுத்தும் மருத்துவர்கள்! நாய் வாய் வைத்த பாத்திரத்தை 7முறை கழுவாமல் பயன்படுத்த வேண்டாம் என்று நபிகள் நாயகம் (அவர்கள் மீது சாந்தி உன்டாகட்டும்) அவர்கள் 1400ஆண்டுகளுக்கு முன் சொன்ன செய்தி இன்று உண்மை படுத்தும் மருத்துவர்கள் ராணி வார பத்திரிகையில் நாய் நக்கினாலும் மரணம் என்ற தலைப்பில் வந்துள்ளது எத்துணை உண்மை மார்க்கம் இஸ்லாம் அல்லஹு அக்பர்! http://mdfazlulilahi.blogspot.ae/2017/07/blog-post_18.html 

மஸ்ஜிதுர் ரய்யான் தலைவர் A.A. இப்றாஹீம் ஆலிம் இல்லத் திருமணம்

மஸ்ஜிதுர் ரய்யான் தலைவரின் அன்பு அழைப்பு بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ கண்ணியத்திற்குரியீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு திருமண அழைப்பிதழ் இன்ஷா அல்லாஹ் ஷவ்வால் பிறை 14 ஹிஜ்ரி 1438 (09-07-2017) ஞாயிற்றுக் கிழமை காலை 10-30 மணி அல்லாஹ்வின் அருளால் , ஏயன்னா அப்துல் காதர் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பேரப்பிள்ளைகளான எங்கள் மக்களின் நிக்காஹ் , மேற்குறிப்பிட்ட தேதியில் 39, வெள்ளை கலீபா ஸாஹிபு தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது . இனிமையான இந்த இல்லற வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொண்டு மாநபி வழி நின்று மணமக்களுக்காக துஆச் செய்து எங்களை மகிழ்விக்க அன்புடன் அழைக்கிறோம் . மணமக்கள் I. முகைதீன் அப்துல் காதர் D.E.E.E, S/O A.A. இப்றாஹீம் மஹ்ழரீ S. சுமையா B.Com. D/O K.N. சேக் மைதீன் அவ்வண்ணமே விரும்பும்                      அன்புடன் ...