நடிகர் திலகம் சிவாஜிக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் -விரயமாகும் மக்கள் பணம்
நேற்று முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் "நடிகர் திலகம் சிவாஜிக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் " என்று அறிவித்துள்ளார். இந்த மணிமண்டபத்தை அரசின் சார்பாக, மக்கள் வரிப்பணத்தை கொட்டி, உருவாக்குவதால், மக்களுக்கு என்ன இலாபம்? அவர் தலை சிறந்த நடிகர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அந்த நடிப்பதற்காக அந்தக்காலத்தில் மிகப் பெரிய ஊதியத்தை சிவாஜி, பெற்றுள்ளார். அந்த ஊதியத்தை தயாரிப்பாளர்கள் மக்கள் திரைப்படம் பார்ப்பதற்கு கொடுத்த பணத்தின் மூலம் தான் கொடுத்துள்ளார்கள். அவரின் உழைப்பிற்கு, அப்போதே மக்கள் தக்க சண்மாணம் வழங்கி விட்ட நிலையில், மீண்டும் சிவாஜிக்கு மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கி மணிமண்டபம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்ன, அவர் தேச விடுதலைக்காக வெள்ளையனிடம் குண்டடிபட்டு இறந்தாரா? இன்று நாட்டுக்காக பாடுபட்ட வ.உ.சி யின் வாரிசுகள் கூலி வேலை செய்து பிழைத்துக் கொண்டு இருக்கின்றனர். ...