Posts

அபுல் அஃலா மவ்துாதி பற்றி மணிவிளக்கில் வந்தது

Image
அபுல் அஃலா மவ்துாதி இறந்த பின் மு.லீக் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ்ஸமது  அவர்களின் மணிவிளக்கு மாத இதழில் வந்தது. நன்றி மணிவிளக்கு

பெண்ணுக்கு வரதட்சணை வழங்கிய திருமணம்.

Image
தீன் காஜா மைதீன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வரும் ரப்பானி மாத இதழ்.

காலத்தை உணர்ந்து தருகின்ற ஊதியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். P.J.

அந்நஜாத் பத்திரிக்கையிலிருந்து ராஜினாமா செய்த பி.ஜே. உண்மைக் காரணத்தை மக்களுக்கு கூறாமல் பொய்யான காரணத்தைக் கூறும்படி அவர் கைப்பட எழுதிய கடிதம் http://mdfazlulilahi.blogspot.com/1990/01/blog-post.html என்ற பிளாக்கில் உள்ளது. அந்நஜாத் துவங்குவதற்கு முன்பே பிரச்சனை வந்து விட்டது. அதற்குரிய ஆதாரம்தான் பி.ஜே. 17-01-1986 இல் துபைக்கு எழுதிய கீழ் காணும் கடிதம். இதைப் படித்தால் அந்நஜாத்திலிருந்து ராஜினாமா செய்த பின், ''பத்திரிக்கையை மோசடி செய்து விட்டார் அதனால்தான் விலகினேன். நில மோசடி செய்து விட்டார் அதனால்தான் விலகினேன்'' என்று பி.ஜே. சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறெல்லாம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்பதை விளங்கலாம். துபையிலிருந்த பொதக்குடி குத்புத்தீன் அவர்களுக்கு 17-01-1986 அன்று P. ஜைனுல் ஆபிதீன் எழுதிய கடிதம். 17-1-86 பேரன்புச் சகோதரர் குத்புத்தீன் அவர்களுக்கு P. ஜைனுல் ஆபிதீனுடைய அஸ்ஸலாமு அலைக்கும். நலம், நலம் பல சூழ்க! கோவையில் நடந்த ISM மாநாட்டில் நானும் சகோதரர் ஷாஹுல் ஹமீது (அபூஅப்துல்லாஹ்) அவர்களும் கலந்து கொண்டோம். நிகழ்ச்சி...

மதரஸா நிர்வாகிகள் சிந்திப்பார்களா?

Image
தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் உள்ளன. அவற்றில் ஆண்டுக்கு 150 பட்டதாரிகள் உருவாகிறார்கள். ஆண்டுக்கு 150 பட்டதாரிகளை உருவாக்க 5 மதரஸாக்கள் போதும். ஆக 25 மதரஸாக்களில் சமுதாயத்தின் பணம் வீணாக விரயம் ஆகிக் கொண்டிருக்கிறது. மதரஸா நிர்வாகிகள் சிந்திக்காமல் இருப்பது ஏன்? இந்த ஆய்வுக் கட்டுரையை படித்த பிறகாவது மதரஸா நிர்வாகிகள் சிந்திப்பார்களா?

காயல்பட்டிணத்தில் முபாஹலா என்ற சத்தியப் பிரார்த்தனை ஏகத்துவம் நிலைநாட்டிய சத்திய முபாஹலா

காயல்பட்டிணத்தில் பி.ஜே.வுக்கும் ஜலீல் முஹைதீனுக்கும் முபாஹலா நடந்து முடிந்தவுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்த ரெட் ஸ்டார் சங்கத்தினர் ஒரு பிரசுரத்தை வெளியிட்டனர். 28.9.85 தேதியிட்ட அந்தப் பிரசுரம் தங்களுடைய பார்வைக்குத் தரப்படுகின்றது. கண்ணியத்திற்குரிய முஸ்லிம் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்! நமதூரில் சமீப காலமாக நடந்து வரும் குத்பியத் எனும் முஹிய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரழி) அவர்களின் நாமத்தை ஆயிரம் முறை இருட்டிலிருந்து நினைவு கூரும் , திக்ரு அங்கீகரிக்கப்பட வேண்டியவையா ? நிராகரிக்கப்பட வேண்டியவையா ? என்ற பிரச்சனை பாமர மக்களைக் குழப்பிக் கொண்டிருந்தது. அங்கீகரிக்கப்பட வேண்டியது என்ற தரப்பில் ஜனாப். ஹாஜி. எம்.இசட். ஜலீல் முஹிய்யித்தீன் அவர்கள் பல கூட்டங்கள் வாயிலாகவும் பிரசுரங்கள் வாயிலாகவும் பொது மக்களுக்கு அறிவித்ததோடு , இதை யாரும் நிராகரிப்பார்களேயானால் தன்னுடன் முபாஹலா எனும் சத்தியப் பிரார்த்தனைக்கு வரலாம் என சவால் விட்டிருந்ததை நம்மூர்வாசிகள் அறிந்ததே! மேற்கூறிய குத்பியத்தை நிராகரித்து , ஜனாப் ஜலீல் முஹிய்யித்தீன் அவர்களின் முபாஹலா சவாலை , தொண்டியைச் ச...