தா.தா.சாவின் அப்பாஸ் அலி ராஜினாமா!!​!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்..........
  மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி அவர்கள் அந்த பொறுப்பிலிருந்து விலகல்.பார்க்க பிப்ரவரி 28 மார்ச் 6 பக்கம் 4 (பொதுக்குழு தீர்மானம்)

       சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்  ஒரு சந்தேகம் சகோதரர் அப்பாஸ்அலி அவர்கள் ஒரு அமைதியான ஆள்.இவரை மேலப்பாளையம் இஸ்லாமியக்கல்லூரியிலிருந்து விடுவிக்கப்பட்டு மதுரையிலுள்ள பெண்கள் கல்லூரியில் ஆசிரியராகவும் முழு பொறுப்பாளராகவும் நியமித்தார்கள்.என்ன காரணமோ தெரியவில்லை சில மாதங்களில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்.அவர் மதுரை பெண்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் மேலப்பாளையம் ஆண்கள் கல்லூரியில் ஆசிரியராக சேர்க்கப்படுகிறார்.இந்த இடைப்பட்ட காலமுதல் பொதுக்குழு நடந்து முடிந்த இன்றுவரை சுமார் ஒருவருட காலமாக எந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லை குறைந்த பட்சம் தெருமுனைப் பிரச்சாரத்திலாவது கலந்துகொண்டாரா?இல்லை? காரணமென்ன?

          மேலாண்மைக் குழுவிலிருந்து ராஜினாமா செய்தது வேலைப்பளுதான் காரணம் என்று சொல்லுகிறார்.அப்படி என்ன வேலைப்பளு உள்ளது. அவர் ராஜினாமா செய்தாரா?அல்லது ராஜினாமா செய்யவைக்கப்பட்டாரா? இவரைவிட வேலைப்பளு நிறைந்த ததஜ வின் மாநில பொறுப்பில் உள்ளவர்கள் இல்லையா? ஏன்  நிரந்தர தலைவராக இருக்கக்கூடிய பீஜேயே வேலைப்பளுவை காரணம் காட்டாமல் உடும்புப்பிடியாக இருக்கும்போது, போயும் போயும் அப்பாஸ் அலியா வேலைப்பளுவால் மேலாண்மைக்குழு உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்தார்?யார் காதில் ததஜவினர் பூச்சுட்டுகின்றனர்.கேப்பையில் நெய்வடிகிறதென்றால் கேட்பவர்களுக்கு மதி எங்கே போனது?அட நீங்க வேறே நம்ம ததஜவினரே அப்படித்தாங்க!அண்ணன் கருப்பை இல்லை இது வெள்ளை என்றாலும் நம்பக்கூடிய செம்மறி ஆடுகள்தானே!       மேலாண்மைக்குழுவுக்கும் வேலைப்பளுவுக்கும் என்ன பொருத்தம்? எப்போதாவது ஒருதடவை மேலாண்மைக்குழு கூடும்போதுதான் போகவேண்டியது வரும். இவர் ராஜினாமா செய்ததின் காரணமென்ன?

         மதுரை பெண்கள் கல்லூரியில் சேர்ந்து சில மாதங்களிலே அதைவிட்டும் விடுவிக்கப்பட்டது,மீண்டும் மேலப்பாளையம் ஆண்கள் இஸ்லாமியக்கல்லூரியில் சேர்த்தது,இதற்கிடையில் அவரை எந்த பொதுக்கூட்டத்திலும் போடாததும்,பின்பு மேலாண்மைக்குழுவிலிருந்து ராஜினாமா செய்ய வைத்ததும் புரியாத புதிராக உள்ளது. இந்த மர்ம முடுச்சு அவிழும் காலம் இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் வரும்.
                                      இப்படிக்கு
                                  காதிர் கனி எம் ஐ சி 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.