70 -74 அரபு மொழியில் ஒரு எழுத்தே இரண்டு எழுத்துக்களாக ஆவது எப்படி?
கத்தி என்ற வார்த்தை தனித்து வரும்போது கத்தி எனும் ஆயுதத்தை குறிக்கும் ஒரு பொருள் தரும். கத்திரி( கத்தரி) என்றால், வெட்டு - கத்திரிகோல் கத்திரிக்காய் ஆகிய பொருள்கள் தரும். கத்திரி வெயில் என்றால் சூரிய வெப்பத்தின் தாக்கத்தை குறிக்கும். https://mdfazlulilahi.blogspot.com/2021/04/70-74.html கத்தியால் கொன்றான் என்றால் நேரடி பொருள் கொள்வோம். கத்திப் பேசியே கொன்றான் என்றால் இலக்கிய சொல்லாக ரசிப்போம். ஒரு மூலச் சொல் வெவ்வேறு அமைப்பை எடுக்கும்போது வெவ்வேறு அர்த்தங்கள் வரும் என்பதை புரிய வைக்கவே இந்த விளக்கம். இதை பிற மொழியினராக இருந்து பார்த்தால் கடினமானதாகவும் குழப்பம் போலும் தோன்றும். இது மாதிரி தான் யஃலுான, யுஃலுான, யஃதலி மூன்றும் ஒரு மூலச் சொல்லில் இருந்துதான் வந்திருக்கின்றன. வெவ்வேறு அமைப்பை எடுக்கும்போது வெவ்வேறு அர்த்தங்கள் தந்துள்ளன. அரபு மொழியில் ஒரு எழுத்தே இரண்டு எழுத்துக்களாக ஆவது...