வால் நீளமாக இருந்தால் நாய்க் கறியா? ஆட்டுக்கு வால் நீளமாக இருக்காதா?
நாய்க்கறியா?
ஆட்டுக்கறியா? என்ற வாதம் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே சென்னையில் பூனைக்கறி நாய்க்கறி
பிரச்சனை இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் பீதியாகி உள்ளது. சென்னையில் பிடிக்கப்பட்டதாக
சொல்வது நாய்க்கறியா? ஆட்டுக்கறியா? எது உண்மை? இரு தரப்பில் யார் உண்மையாளர்கள் என்பதை
நிரூபிக்க வேண்டியது இரு தரப்பின் பொறுப்பாகும். இது யாரையும் நம்ப முடியாத காலம். ஆகவே ஆட்டுக்கு வால் நீளமாக இருக்குமா? இருக்காதா? என்பது பற்றிய விபரம்தான் இங்கு தர உள்ளோம்.
கடலும்
அலையும் போல வானும் நிலவும் போல நகமும் சதையும் போல என்று பெரிய பெரிய அரிசியல் தலைவர்கள்
திருமண வாழ்த்துக்கள் கூறியதை கேட்டு இருக்கிறோம்.
அப்படிப்பட்ட காலத்தில் அலை இல்லாத கடலும் உண்டு என்று மேலப்பாளையத்திலிருந்து வெளியான தீன் காஜா அவர்களின் ரப்பானி மாத இதழில் 1984ஆம் ஆண்டு எழுதினேன். ஜீரணிக்க முடியாதவர்களை துபையிலும் கண்டேன்.
அப்படிப்பட்ட காலத்தில் அலை இல்லாத கடலும் உண்டு என்று மேலப்பாளையத்திலிருந்து வெளியான தீன் காஜா அவர்களின் ரப்பானி மாத இதழில் 1984ஆம் ஆண்டு எழுதினேன். ஜீரணிக்க முடியாதவர்களை துபையிலும் கண்டேன்.
வானும்
நிலவும் சேர்ந்தே இருக்கக் கூடிய ஒன்றல்ல என்பதை இன்றைய விஞ்ஞான உலகத்திலும் ஏற்காதவர்கள்
உள்ளனர். வானும் நிலவும் சேர்ந்து இருப்பது போல் தோன்றும் ஆனால் அவை தனித்தனியானவை பிரிந்தே இருக்கும். உங்கள் வாழ்த்துக்கு தக்கவாறே சேர்ந்து இருப்பது போல் தோன்றி பிரிந்தே வாழ்கிறார்கள்.
நகம் சதையை விட்டு அவ்வப்போது வெட்டி நீக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதை செய்து கொண்டே நகமும் சதையும் போல என்று வாழ்த்தக் கூடிய சிந்திக்காதவர்களே! சதையை விட்டு அவ்வப்போது நகத்தை வெட்டி நீக்குவது போல் கணவன் மனைவியை, மனைவி கணவனை நீக்கிக் கொண்டே இருக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடிந்ததில்லை.
நகம் சதையை விட்டு அவ்வப்போது வெட்டி நீக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதை செய்து கொண்டே நகமும் சதையும் போல என்று வாழ்த்தக் கூடிய சிந்திக்காதவர்களே! சதையை விட்டு அவ்வப்போது நகத்தை வெட்டி நீக்குவது போல் கணவன் மனைவியை, மனைவி கணவனை நீக்கிக் கொண்டே இருக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடிந்ததில்லை.
ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைத்திருக்கிறான் இறைவன் என்பார்கள். பல வேலிகளில்
புகுந்து மேயும் இயல்புடைய ஆட்டுக்குவால் நீளமாக இருந்தால் அது எங்கேயாவது மாட்டிக் கொள்ளும் ஆகவே இறைவன் அதன் வாலை சிறியதாக அமைந்திருக்கிறான் என்பார்கள்.
ஆட்டின் வால் குட்டையாக
இருக்கிறது அதனால் அதை ஆட்டிக்கொண்டேயிருக்கும். இதுக்கே இந்த ஆட்டு
ஆட்டுதே! இன்னும் நீளமாக இருந்தால் என்ன ஆட்டு ஆட்டும் என்ற கருத்தில் இவ்வாறு கூறுவார்கள்.
ஆட்டின் வால் குட்டையாக
இருப்பதால்தான் அதை ஆட்டிக் கொண்டிருக்கிறது. வால் நீளமாக இருந்தால் அதனால் ஆட்ட
முடியாது. ஆடு ஆட்டும் என்பதால்தான் அதன் வாலைக் கடவுள் குட்டையாகப் படைத்தான் என்பார்கள் ஆத்திகர்கள்.
ஆட்டின் வாலை அளந்து
படைப்பதற்குப் பதில், ஆடு ஆட்டாமல்
இருக்கும்படி ஆண்டவன் படைத்துவிட்டுப் போகலாமே! என்பார்கள் நாத்திகர்கள்.
ஆக எல்லாருமே
ஆட்டுக்கு வால் குட்டை என்றே விளங்கி வைத்துள்ளார்கள். தமிழகத்தில் உள்ளவர்கள். உள்ளூர்
மக்களைத்தான் ஒவ்வொரு ஊரிலும் பார்க்க முடியும். அரபகத்தில் ஒரே இடத்தில் பல நாட்டைவரை
பார்க்க முடியும்.
அதுபோல் ஒரே மார்க்கட்டில் பல நாட்டு ஆடுகளைப் பார்க்க
முடியும். மாட்டுக்கு நிகராக 25 கிலோ வரை இருக்கக் கூடிய ஆஸ்திரேலியா ஆடுகளுக்கு மிகச்சிறிய
வால் இருக்கும்.
5 கிலோ அளவில் உள்ள எதியோப்பிய ஆடுகளில் அரபிகள்
லிய்யே என்று சொல்லும் கொழுப்புடன் கூடிய வால் மட்டும் ஒரு கிலோ அளவில் இருக்கும்.
இதுதான் உண்மை.
இவை 5 அல்லது 6 கிலோ உள்ள அறுக்கப்பட்ட ஆட்டின் வால்கள். ஆகவே வால் நீளமாக இருப்பதால் நாய்க்கறி என்பது தவறான வாதமாகும்
https://www.youtube.com/watch?v=bcFlfjLwiyMஇவை 5 அல்லது 6 கிலோ உள்ள அறுக்கப்பட்ட ஆட்டின் வால்கள். ஆகவே வால் நீளமாக இருப்பதால் நாய்க்கறி என்பது தவறான வாதமாகும்
Comments