நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்
புயல் காற்று அடிக்க ஆரம்பித்து நாலா பக்கங்களில் இருந்தும்
அவர்களை அலைகள் வந்து மோதி "நிச்சயமாக நாம் (அலைகளால்) சூழ்ந்து
கொள்ளப்பட்டோம்; (இதிலிருந்து தப்ப நமக்கு யாதொரு
வழியுமில்லை)" என்று அவர்கள் எண்ணும் சமயத்தில் (நம்மை நோக்கி "எங்கள்
இறைவனே!) இதிலிருந்து நீ எங்களை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு
என்றென்றும் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்" என்று கலப்பற்ற மனதினராக
அல்லாஹ்வை வழிபட்டு (மிக்கத் தாழ்மையுடன் அழுது கூக்குரலிட்டுப்)
பிரார்த்திக்கிறார்கள். 10:22.
(தமிழாக்கம் அப்துல் ஹமீது பாகவி)
புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு
இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு
விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத்தூய்மையுடன் அவனுக்கே
உரித்தாக்கி "இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம்'' என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர். (தமிழாக்கம் அறிஞர்கள் குழு)
17:69. கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று
நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்துவிடாது
தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
(தமிழாக்கம் அப்துல் ஹமீது பாகவி)
உங்களுக்கு எதிராகப் புயல் காற்றை அனுப்பி நீங்கள் (அவனை)
மறுத்ததால் உங்களை மூழ்கடிக்க மாட்டான் என்று அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் நமக்கு எதிராக உங்களுக்கு அதில் உதவுபவரைக் காண மாட்டீர்கள். (தமிழாக்கம் அறிஞர்கள் குழு)
29:40. அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின்
காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். அவர்களில் (ஆது மக்களைப் போன்ற) சிலர் மீது
நாம் கல்மழை பொழிந்தோம். அவர்களில் (ஸமூது மக்களைப் போன்ற) சிலரை இடிமுழக்கம்
பிடித்துக் கொண்டது. அவர்களில் (காரூன் போன்ற) சிலரை நாம் பூமியில்
ஆழ்த்திவிட்டோம். அவர்களில் (ஃபிர்அவ்ன், ஹாமான் போன்ற) சிலரை (கடலில்)
மூழ்கடித்தோம். அல்லாஹ் இவர்களுக்கு அநீதி செய்யவில்லை. எனினும், அவர்கள் (அனைவரும்) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். (தமிழாக்கம் அப்துல் ஹமீது பாகவி)
29:40. ஒவ்வொருவரையும் அவரவரின் பாவத்துக்காகத் தண்டித்தோம். அவர்களில்
சிலர் மீது கல் மழையை அனுப்பினோம். அவர்களில் வேறு சிலரைப் பெரும் சப்தம்
தாக்கியது. அவர்களில் சிலரைப் பூமிக்குள் உயிருடன் புதையச் செய்தோம். அவர்களில்
சிலரை மூழ்கடித்தோம். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைப்பவனாக இல்லை. மாறாக அவர்கள்
தமக்குத் தாமே தீங்கிழைத்தனர். (தமிழாக்கம் அறிஞர்கள் குழு)
உங்கள்மீது (எதிரிகளின்) படைகள் (அணியணியாக) வந்த சமயத்தில்
(புயல்) காற்றையும் உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம்
ஏவினோம். (அச்சமயம்) நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருந்தான். 33:9. (தமிழாக்கம் அப்துல் ஹமீது
பாகவி)
நம்பிக்கை கொண்டோரே! உங்களிடம் கூட்டுப் படையினர் வந்தபோது
அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்! அவர்களுக்கு எதிராகக்
காற்றையும், நீங்கள் காணாத படையினரையும்
அனுப்பினோம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக488 இருக்கிறான். (தமிழாக்கம் அறிஞர்கள் குழு)
41:13. (ஆகவே,
நபியே! இவ்வளவு தூரம் அறிவித்த)
பின்னும் அவர்கள் (நம்பிக்கை கொள்ளாது) புறக்கணித்தால், நீங்கள் கூறுங்கள்: "ஆது, ஸமூது என்னும் மக்களுக்கு ஏற்பட்ட இடி
முழக்கம் போன்றதொரு இடி முழக்கத்தையே நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை
செய்கின்றேன்." (தமிழாக்கம் அப்துல் ஹமீது பாகவி)
41:13. அவர்கள் புறக்கணித்தால் "ஆது மற்றும் ஸமூது சமுதாயத்திற்கு
ஏற்பட்ட இடி முழக்கம் போன்ற இடி முழக்கத்தை உங்களுக்கு எச்சரிக்கிறேன்'' என்று கூறுவீராக! (தமிழாக்கம் அறிஞர்கள் குழு)
41:16. ஆகவே, நாம் அவர்கள் மீது (வந்த வேதனையின்)
கெட்ட நாள்களில் கொடிய புயல் காற்றை அனுப்பி, இழிவு தரும் வேதனையை இந்த உலகத்திலேயே
அவர்கள் சுவைக்கும்படி செய்தோம். (அவர்களுக்கு) மறுமையிலுள்ள வேதனையோ, (இதனைவிட) இழிவு தரக்கூடியதாகும். (அங்கு எவராலும்) அவர்கள் உதவி செய்யப்பட
மாட்டார்கள். (தமிழாக்கம் அப்துல் ஹமீது பாகவி)
41:16. எனவே இவ்வுலக வாழ்க்கையிலேயே இழிந்த வேதனையை அவர்களுக்குச்
சுவைக்கச் செய்வதற்காக கெட்ட நாட்களில்381 அவர்கள் மீது கடும் புயல் காற்றை
அனுப்பினோம். மறுமையின் வேதனை (இதை விட) மிகவும் இழிவுபடுத்துவது. அவர்கள் உதவி
செய்யப்பட மாட்டார்கள். (தமிழாக்கம் அறிஞர்கள் குழு)
77:1, 2. தொடர்ந்து அனுப்பப்படுபவை (காற்றின்) மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக!379 & 26 (தமிழாக்கம் அறிஞர்கள் குழு)
77:3. (மேகங்களை பல திசைகளில்)
பரப்பிவிடுபவர்களின் மீதும் சத்தியமாக! (தமிழாக்கம் அப்துல் ஹமீது பாகவி)
77:4. (உண்மை,
பொய்களுக்கிடையில்) தெளிவாகப்
பிரித்தறிவிப் பவை(களாகிய வேதங்)களின் மீதும்,
(தமிழாக்கம் அப்துல் ஹமீது பாகவி)
77:3, 4. பரப்பி விடுபவை மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும்
சத்தியமாக!379 & 26 (தமிழாக்கம் அறிஞர்கள் குழு)
77:5,6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹீயின்
மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக! (தமிழாக்கம் அப்துல் ஹமீது பாகவி)
77:5, 6. மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப்
போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக!379 & 26 (தமிழாக்கம் அறிஞர்கள் குழு)
77:7. உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும். (தமிழாக்கம் அறிஞர்கள் குழு)
Comments