பீ.ஜேயை மீண்டும் தலைவராக்கும் முயற்சியா? சிறைவாசிகள் விடுதலைக்காக பத்ருப்போர் அறிவிப்பார்களா?
பீ.ஜே.யை என்னைப் போல் அணு அணுவாக அடையாளம் காட்டியது
யாரும் கிடையாது. எனது இன்றைய செயல்பாடுகளை தவறாக விளங்கிய சகோக்கள். பீ.ஜேயை
மீண்டும் தலைவராக்கும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று எழுதி உள்ளார்கள். சிறைவாசிகளுக்கு
பீ.ஜே. மட்டும் தனித்து நின்று துரோகம் செய்தார் என்று சிறைவாசிகள் எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள். காட்டிக் கொடுக்க வேண்டும் என்று துாபம் போட்டவர்கள் யார்? யார்?
என்பதையும். அவர்களது செயல்களையும் கடுமையாக விமர்சித்து அடையாளம் காட்டிய நாம் அவ்வப்போது
மெயில்கள் மற்றும் நோட்டீஸ்கள் போட்டதையும் சிறையில் இருந்தவர்கள் அறிய
மாட்டார்கள்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் மொத்தம் 2400
அரசு தரப்பு சாட்சிகளில் 50 பேர்கள்தான் முஸ்லிம்கள். சாட்சி சொல்ல வந்த பெரும்பாலான இந்து சகோதரர்கள், அதிகமான
பாதிப்புகளுக்குள்ளாகிவிட்ட முஸ்லிம் சிறைவாசிகள் மீது இறக்கப்பட்டு தங்களுக்கு
சரியாக நினைவு இல்லை என்று கூறி விட்டனர். கோவை சம்பவத்தின்போது பொறுப்பில் இருந்த
இன்ஸ்பெக்டர் முரளி அவர்கள், சம்பவம் நடந்தது உண்மை. 6 வருடம் ஆகி
விட்டது. எனவே யார் என்று எனக்கு அடையாளம் காட்டத் தெரியவில்லை மறந்து விட்டது
என்று கூறி விட்டார்.
https://www.youtube.com/watch?v=tv2yObd8Onw&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=tv2yObd8Onw&feature=youtu.be
1873 வருட சாட்சிகள் சட்டம் பிரிவு 10ன்
கீழ் சாட்சி சொன்ன 1067
வது சாட்சியான ம.ஜ.க. மாநில
நிர்வாகி PJயின் ரகசிய துாதர் A.S. அலாவுத்தீன் நானா, 1225வது சாட்சியான NTF அதிபர் பீ.ஜே. ஆகியோர் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் போலீஸ் தரப்பு
சாட்சியாக. 26-02-2004ல் சாட்சி சொன்னார்கள். அப்பொழுதே அவர்களை தெளிவாக
அடையாளம் காட்டினோம். பிரச்சனைகளை சந்தித்தோம். கெட்ட வார்த்தைகளால் திட்டப்பட்டோம்.
26-02-2004ல் போலீஸ் தரப்பில் சாட்சி சொன்ன பீ.ஜே. TNTJவின் மாநில தலைவராக வந்துதான் சாட்சி சொன்னார். அதே மாதிரி
போலீஸ் தரப்பில் சாட்சி சொன்ன ம.ஜ.க. மாநில நிர்வாகி A.S.
அலாவுத்தீன் நானா TNTJவின் மாநில பொதுச் செயலாளராக
வந்துதான் சாட்சி சொன்னார். கோர்ட் கூண்டுக்குள் நின்ற சிறைவாசிகளான
முஸ்லிம் சகோதரர்களை இவர்கள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை.
இவர்கள் சாட்சி கூறியதும் போலீஸ்
அதிகாரிகளெல்லாம் இவர்களிடம்
கை குலுக்கி நன்றி
கூறினார்கள். போலீஸ் படை புடை சூழ வழி அனுப்பி
வைத்தார்கள். இதை எழுதியதால்
வந்த வசைவுகள் கொஞ்சம் அல்ல.
இந்த PJ (இன்றிலிருந்து சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால்)
ஒரு ‘ரகசிய கேள்வி பதில் நிகழ்ச்சி’ நடத்தினார். அதில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள்
கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் ‘நீங்கள் தான் கோவை சகோதரர்களை ஜிகாத் செய்யத்
தூண்டினீர்கள்’ என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ளதே என்று ஒரு
இளைஞர் கேள்வி கேட்டார்.
அதற்கு பீ.ஜே. அளித்த
பதில் ‘ஆம்! நான் தான்
அன்று அவ்வாறு சொன்னேன் என்பது உண்மைதான். ஆனால்
நான் அன்று சொன்னதெல்லாம் தவறு என்று நான் தர்ஜுமா எழுதுவதற்காக குர்ஆனை ஆய்வு
செய்தபோது தான் எனக்குத் தெரிய வந்தது. இப்பொழுது தான் ஜிஹாத் பற்றி நாம் முன்பு சொன்னது அனைத்தும் தவறு என்று புரிந்தது’ என்றார்.
இப்படிக் கூறியவர் நல்லவர் என்றால் அவரது பத்வாவால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி இருக்க வேண்டும் என்ன செய்தார்? அரசு தரப்பு சாட்சியாக
அல்லவா ஆகி விட்டார். அன்று நாம் இந்த
உண்மையை வெளியிட்டபொழுது இதை பொய்ப்படுத்தியவர்கள் ததஜக்கள்தான். குறிப்பாக இன்று ததஜ தலைமைப் பொறுப்பில்
உள்ள ஆலிம்கள் தான்.
நாம் எழுதிய எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2010ல் ஆன்லைன் பீ.ஜே.யில் வன்முறைக்கும் ஜிஹாதுக்கும் உள்ள வேறுபாடு
குர்ஆனைத் தமிழாக்கம் செய்வதற்காக நான் ஆய்வுகள் செய்த போது தெளிவாகத் தெரிந்தது....
முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்கு வன்முறை தடையாக நிற்கிறது
என்பது எனக்குத் தெரிந்த பின் அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று பீ.ஜே. எழுதி, அவருக்காக பொய் சாட்சி சொன்னவர்கள்
மூஞ்சில் கரியை பூசினார்.
இதே மாதிரியான கேள்வி இன்றும் ததஜவில் உள்ள தவ்ஹீது
மவுலவிகளிடம் அன்று கேட்கப்பட்டது. அதற்கு தவறாக ஜிஹாதை துாண்டி பேசி விட்டோம்
என்று வருந்தினார்களா? என்றால் இல்லை. ஜிஹாதை துாண்டி பீ.ஜே.யும் நாங்களும்
பேசியதால்தான் சிறைக்கு போனீர்கள் என்றால் உங்களுக்கு மூளை எங்கே போனது என்று
ஜும்ஆவில் கத்தினார்கள். அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்கள்.
பீ.ஜே. போன பிறகு சிறைவாசிகள் மீது பாசம் வந்து எங்களை விடுதலை செய்யுங்கள் என்றா சொல்கிறோம். எங்களையும் விடுதலை செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம் என்று கோஷம் போடுகிறார்கள். இவர்கள்தான். சிறைவாசிகளுக்காக ஏன் போராடக் கூடாது என்று பக்கம் பக்கமாக எழுதியும் பேசியும் பணம் பெற்றவர்கள்.
பழையதை மறந்து விடுவோம் இவர்களது புதிய கோஷம் உளப்பூர்வமானது என்றே வைத்துக் கொள்வோம். எது எதற்கெல்லாமோ பத்ருப்போர் அறிவித்தவர்கள். திரு குர்ஆன் மநாட்டில் சிறைவாசிகள் விடுதலைக்காக பத்ருப்போர் அறிவிப்பார்களா?
Comments