காபி ரைட் உரிமை கொண்டாடிய மீடியா வேர்ல்டு மிகுந்த பொருட் செலவு செய்ததாகக் கூறியது உண்மையா?

பொதுக்குழுவினரே சிந்தியுங்கள். ஜமாஅத்திற்கு வருமானம் தரக் கூடியதை தனியாருக்கு திருப்பியது சம்பந்தமாக அல்தாபி அவர்கள் 2018ல் குற்றச்சாட்டு கூறி உள்ளார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னால் 2008ல் இதே குற்றச்சாட்டை  ஹாமீன் இபுறாஹீம் கூறி இருந்தார். அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தக் குற்றச்சாட்டைக் கூறி தட்டிக் கேட்டவன் நான்அதிரை தாருத் தவ்ஹீத்மதுக்கூர் தவ்ஹீது ஜமாஅத்தார்கள் உட்பட பலர் சாட்சி.
முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட் இரண்டுமே .மு,மு..வுக்குரியது என்பது தனி விஷயம். பி.ஜே. எதை செய்ய மாட்டேன் என்று சொல்கிறாரோ அதைச் செய்து விட்டார் அல்லது செய்யப் போகிறார் என்று அர்த்தம்

முஸ்லிம் மீடியா டிரஸ்ட் சம்பந்தமாக இந்த வீடியோவில் என்ன சொல்லி உள்ளார் பாருங்கள். https://www.youtube.com/watch?v=vpnaw6ev7uc&t=85s

தான் பிஸ்னஸ் பண்ண நினைத்தால் அதை தனதாக்கிக் கொள்ள முடியும் என்று கூறும் பி.ஜே. எப்படி காய்கள் நகர்த்தி மூன் மீடியா கிரியேஷன் என தனதாக்கினார்? என்ற வரலாற்றைப் பாருங்கள்.

4 அல்லது 5 (லட்சம்) ரூபாய் தனியாக துாக்கின மாதிரி கிடைக்கும் என்கிற உண்மையை இந்த வீடியோவில் பி.ஜே. சொல்லி உள்ளார். ஆனால் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் சார்பாக ஒளிபரப்பப்பட்ட இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நஷ்டம் என்று பாக்கரும் பி.ஜ.யும் சொன்னார்கள்

பிறகு யார் நஷ்டம் என்று சொன்னார்களோ அதே பி.ஜே.யின் பினாமி பாக்கருடைய மீடியா வேர்ல்டு என்ற பெயரால் 08-10-1999 முதல் T.V.ல் ஒளிபரப்பத் துவங்கினார்கள்.

முஸ்லிம்மீடியா டிரஸ்ட் என்ற பொது நிறுவனத்தின் மூலம் டி.வியில் நிகழ்ச்சி நடத்தியபோது நஸ்டம். தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றால், அதை நடத்திய பி.ஜே.யின் பினாமி பாக்கரின் மீடியா வேர்ல்ட் என்ற பெயரில் மட்டும் தனியாக எப்படி நடத்த முடியும்? என்று கேட்டேன். பி.ஜே.யின் பினாமி பாக்கர் என்மீது பாய்ந்தார். 

அதிரை தாருத் தவ்ஹீத், மதுக்கூர் தவ்ஹீது ஜமாஅத்தார் சார்பில் பொது மக்களிடம் வசூலித்து பட்டுக்கோட்டை ரத்ன மஹாலில் 6-2-1999 அன்று ஒரு நிகழ்ச்சி  நடத்தினார்கள். அதைத்தான் மீடியா வேர்ல்டு சார்பானது என்று 31.12.1999முதல் T.V.ல் ஒளிபரப்பினார்கள். 

அந்த ஒளிபரப்பில் என்ன செய்தார்கள்? 'இந்த நிகழ்ச்சியை கேட்கும் பார்க்கும் அன்பார்ந்த நேயர்களே......மிகுந்த பொருட் செலவில் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கப்படுவதால் இறைவனுக்கு அஞ்சி ஆடியோவீடியோசி.டி.க்களை தனிப்பிரதி எடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேடுட்டுக் கொள்கிறோம். தேவைப்படுவோர் மீடியா வேர்ல்டு நிறுவனத்திடமே வாங்கி பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.' என்று பி.ஜே.யின் பினாமி பாக்கர் காபி ரைட் உரிமை கொண்டாடினார்.

இந்த பட்டுக்கோட்டை நிகழ்ச்சிக்கு ரிக்கார்டிங் வகைக்கு என்று பாக்கர் இருபத்தைந்தாயிரம் (25,000) ரூபாய் வாங்கி உள்ளார். அதிரை ஜமீல் காகா என்னிடம் சொன்னார். இரண்டாயிரம் (2000) ரூபாய் கொடுத்தால் உள்ளூர்க்காரன் வீடியோ பண்ணுவான் இவர்களை யார் கூப்பிட்டா? கேஸட்டை வேர தர மாட்டேங்கராங்க என்றார்.

மதுக்கூர் ஹாஜா சொன்னார் இது என்ன அண்ணே அநியாயமக இருக்கிறது இருபத்தைந்தாயிரம் (25.000)மும் வாங்கிட்டு கேஸட் தர மாட்டேங்கராங்க. நிகழ்ச்சிக்காக வசூல் செய்தவர்களிடம் கேஸட் தருகிறோம் என்று சொல்லி வசூலித்தோம் நிகழ்ச்சியை நடத்த நாங்க ரூம் ரூமாக ஏறி இறங்கி வசூல் செய்தோம். முதலில் தயாரிப்பு மீடியா வேர்ல்டு என்று போட்டார்கள். இப்பொழுது மிகுந்த பொருட் செலவுகள் செய்ததாகவும் கூறி பிரிண்ட் எடுக்கக்கூடாது என்று உரிமை கொண்டாடுகின்றார்களே என்னவென்று கேளுங்கள் என்றார். 

உடனே கேட்டேன் பாக்கரும் பி.ஜே.யும் எனக்கு எதிராக வெறி கொண்டு பேசினார்கள். திருவாரூர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டபோது மீடியா வேர்ல்டு கேமராவுக்கு என்று எழுபத்தைந்தாயிரம் (75,000) ரூபாய் கேட்டுள்ளார் பாக்கர். திருச்சி நிகழ்ச்சிக்கு மொத்த செலவில் 25 விழுக்காட்டிற்கு மேல் இங்கிருந்துதான் அனுப்பப்பட்டது என்றார் திருச்சி யூசுப். 

ஆக ஒவ்வொரு ஊர் நிகழ்ச்சிக்கும் பீ.ஜே.யின் பினாமி பாக்கர் கேமரா வகைக்கு என்று 25 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வாங்கிய விபரங்களை எல்லோரும் சொன்னார்கள்.

இப்படி நிகழ்ச்சி நடத்திய ஊர் மக்களிடம் பணம். LKS கோல்டு ஹவுஸ் அக்பர்ஷா போன்ற தங்க கடை அதிபர்களிடம் விளம்பரப் பெயரால் பணம் வாங்கி விட்டு T.V.யில் மீடியா வேர்ல்டினால் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்படுகிறது. ஆகவே காப்பி எடுக்காதீர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் என்று பி.ஜே.யின் பினாமி பாக்கர் மிரட்டினார். எல்லா கேசட்டுகளிலும் ஆரம்பத்திலும் முடிவிலும் இந்த மிரட்டல்  விளம்பரம்தான் இருந்தது.

பாக்கரும் கேமராவுக்கென்றும் போக்கு வரத்துக்கு என்றும் பணம் வாங்கி விடுகின்றார். டி.வி நிகழ்ச்சிக்கு நிறைய விளம்பரங்கள் உள்ளன. இதற்க்குப் பிறகும் என்ன ஏராளமான பொருட் செலவு என்கின்றார் பாக்கர்! இதில் மீடியா வேல்டுக்கு என்ன செலவு இருக்கிறது. இது பச்சை பொய்யில்லையா? முத்துப்பேட்டை தீன், பெங்களுர் சுலைமான்(கர்நாடகா KNTJ) மற்றும் பேட்டை அப்துல் கப்பார் போன்றவர்கள் கேட்டார்கள். நான் கடுமையாக விமர்சித்து எழுதினேன்.

உடனே, அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் காப்பி ரைட் உரிமை கொண்டாடவில்லை ராயல்டி வாங்கவில்லை என்று பி.ஜே. பெயரால் உணர்வில் செய்தி போட்டார்கள். 

அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் காப்பி ரைட் உரிமை கொண்டாடவில்லை ராயல்டி வாங்கவில்லை. என்று பி.ஜே. கறுப்பு சட்டை போட்டுக் கொண்டு பேசிய வீடியோ மற்றும் எழுத்து வடிவிலும் பி.ஜே. சார்பில் T.V. யில் ஒளிபரப்பினார்கள்
https://www.youtube.com/watch?v=baxNHr4Gh9Y


வீடியோ சி.டி.க்களிலும் போட்டு நமது கூற்றைப் பொய்ப்படுத்தினார்கள். பி.ஜே.யும் அவரது பினாமி பாக்கரும். (யாரிடமாவது இந்த கறுப்பு சட்டை வீடியோ இருந்தால் போட்டு விடுங்கள்)

பதிவு உரிமை மீடியா வேல்டுக்கே மீறி பதிவு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒவ்வொரு ஆடியோ, வீடியோ சி.டி. கவர் மீது லேபில் ஒட்டி இருந்தார்கள் அல்லவா அதை காப்பி எடுத்து அனுப்பினேன்வியாபார நோக்கில் உருவான மீடியா வேர்ல்டு பொய்யர்களால் விக்கவும் முடிந்ததில்லை கக்கவும் முடிந்ததில்லை


இப்படி பொது நிறுவனத்தை மோசடி செய்து தனியார் நிறுவனத்தை வளர்ப்பதை கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா? அல்லாஹ்வுக்காக கொள்கைக்காக என்றுள்ளவர்கள் பொதுக்குழுவில் தட்டிக் கேட்பார்கள்.  அல்லாஹ்வின் அருளைப் பெறுவார்கள்.

தவ்ஹீது வியாபாரிகள், தவ்ஹீதை பிழைப்பாக ஆக்கி விட்டவர்கள், கமிஷனுக்காக, வருவாய்க்காக தவ்ஹீதுக்கு வந்தவர்கள் கேட்க மாட்டார்கள். அவகளது செயல்கள் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபத்தைதத்தான் பெற்றுக் கொடுக்கும்


Comments

Unknown said…
Salam

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.