முஸ்லிம்கள் ஆட்சியில் முஸ்லிம் அல்லாதோர் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையா? என்பது கேள்வி.

அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றவர்கள். அங்கே கொடுமைப்படுத்தப் பட்டதாக தினமும் ஏதாவது ஒரு செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி அமைந்தது. உடனே யூதர்களையும் கிறித்தவர்களையும் முஸ்லிம்கள கொடுமைப்படுத்துகிறார்கள் என்றார்கள். இந்தக் குற்றச்சாட்டு உலக அளவில் இன்றும் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றது. இதற்கு ஹதீஸ் நுாலான புகாரியில் உள்ள வரலாற்றுச் சம்பவத்திலேயே பதில் உள்ளது.


ஒரு யூத ஆணும் பெண்ணும் ஆட்சித் தலைவரான இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல விபசாரம் செய்து இருந்தனர்.


'உங்களுடைய வேதத்தில் இவர்களுக்கு என்ன தண்டனை காணப்படுகிறது?' என்று  ஆட்சித் தலைவரான இறைத் தூதர்(ஸல்) அவர்கள்  கேட்டார்கள். அதற்கு அங்கு இருந்த யூதர்கள், 'எங்கள் மத அறிஞர்கள் விபசாரம் புரிந்தவர்களை முகத்தில் கரி பூசி, முழங் கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்யவேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்' என்றார்கள்.


இங்கே 2 விஷயங்களை நன்கு கவனிக்க வேண்டும். ஒன்று யூத குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் பொறுப்பில் இருந்தவர். சர்வ அதிகாரமும் உள்ள இஸ்லாமிய ஆட்சியின் தலைவர். இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் அவர்களது இந்துத்துவா சட்டங்களை திணிக்கிறார்களே. அதுபோல் யூத குற்றவாளிகளுக்கு இஸ்லாமிய முறைப்படிதான் தண்டனை வழங்குவேன் என்று இஸ்லாமிய சட்டத்தை திணிக்கவில்லை.  


இரண்டாவதாக அல்லாஹ்வின் துாதர் உங்களுடைய வேதத்தில் என்ன தண்டனை என்று தான் கேட்கிறார்கள். அதற்கு வேதத்தில் இருந்து பதில் சொல்லாமல் அவர்களுடைய ஆலிம்கள் உருவாக்கிய சட்டத்தைக் கூறுகின்றார்கள். எல்லா காலத்திலும் அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக பொதுமக்களை கவரும் வண்ணம் ஆலிம்கள்தான் சட்டம் இயற்றுவார்கள் சொல்வார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம். அப்படி இயற்றப்பட்டவைதான் இன்றைய பிக்ஹ் நுால்கள்.  


அப்போது அருகில் இருந்த முன்னாள் யூத ஆலிம் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே  தவ்ராத்தைக் கொண்டு வாருமாறு அவர்களிடம் கூறுங்கள் என்று கூறினார்கள்.  'தவ்ராத்' கொண்டு வரப்பட்டது. அப்போது, யூதர்களில் ஒருவர் அதில் பதிந்து  ருந் கல்லெறி தண்டனை ('ரஜ்கி') பற்றிய வசனத்தின் மீது தம் கையை வைத்து அந்த வசனத்தை 'யாருக்கும் தெரியாதபடி மறைத்தார். மேலும், அதற்கு முன் பின்னிருந்த வசனங்களை படித்துக் காட்டினார்.


அப்போது அவரிடம் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'உன் கையை எடு!' என்றார்கள். அவர் தம் கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரின் கைக்குக் கீழே இருந்தது. எனவே, அவர்கள் இருவருக்கும் தவ்ராத் வேதத்தில் உள்ளபடி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தீர்ப்பு கூறினார்கள்.. இந்த வரலாற்றுச் செய்தி இப்னு உமர் அறிவிக்க புகாரியில் 6819 ஆவதாக பதிவாகி உள்ளது.


யூதர்களோ, கிறிஸ்தவர்களோ பிரச்சனைகளை கொண்டு வந்தால் அவர்களின் வேதத்தில் உள்ளபடியே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் எங்கே கொடுமை இருக்கிறது? இஸ்லாமியருக்கு எப்படி குர்ஆனின் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டதோ அதே போல் யூத கிறித்தவர்களுக்கும் அவர்களின் வேத வசனத்தின்படியே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


தனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆட்சிக்கு சட்டங்களை சொல்லி வந்த அல்லாஹ் யூத கிறிஸ்தவர்கள் விஷயத்தில் எந்த மாதிரி சட்டங்களை சொன்னான்?


யூத கிறிஸ்தவர்கள் பொய்யையே அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்தால், அவர்களுக்கிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். இது சூரத்துல் மாயிதாவில் உள்ள 42ஆவது வசனத்தின் ஒரு பகுதியாகும்.

நன்கு கவனிக்க வேண்டும். அவர்கள் உம்மிடம் வந்தால். அதாவது வந்தால்தான். தீர்ப்பு வழங்கலாம். அல்லது உங்கள் பிரச்சனையை நீங்களே உங்களுக்குள்ளேயே பேசி முடித்துக் கொள்ளுங்கள் என்றும் விட்டு விடலாம். நான் இஸ்லாமிய ஆட்சி செய்கிறேன். நான்தான் தீர்ப்பு சொல்வேன். இஸ்லாமிய முறைப்படிதான் தீர்ப்பு சொல்வேன் என கச்சை கட்டிக் கொண்டு நிற்கச்சொல்லவில்லை அல்லாஹ். இந்த வசனத்தில் அல்லாஹ் சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறான். 


இதுதான் இந்த அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் இன்று இந்தியாவில் உள்ள தனியார் சட்டம் அதாவது சிவில் சட்டம். இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டம். இதனால்தான் பி.ஜெ.பி. போன்ற இஸ்லாமிய விரோத அமைப்புகள் சிவில் சட்டம் இருக்கக் கூடாது. பொது சிவில் சட்டம் வேண்டும் என்கின்றன. நன்கு புரிய வேண்டும். இந்தியாவில் சட்டம் இயற்றிவர்கள் மக்களுக்கு பயன் தரக் கூடிய எல்லா சட்டங்களையும் இஸ்லாத்தில் இருந்துதான் திருடி இருக்கிறார்கள். 


 முந்தைய கேள்வி 

இன்று எங்கு பார்த்தாலும் ஆக்ஸிடண்டு நடக்கிறதே ஏன்?

 அடுத்த கேள்வி 
முஸ்லிமை முஸ்லிம் இல்லை என்று கூறலாமா

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.